Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காசேதான் கடவுளடா!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனறு பதிவர்கள்தான் சுயாதீனமான தமது எழுத்துகளால் பன்முக அனுபவங்களை நம் தேடல்களுக்கு இரையாக்குகிறார்கள். இந்த வகையில் அமெரிக்கத் தமிழன் என்ற பதிவில் நான் சுவைத்த பதிவொன்றை இங்கு நன்றியுடம் மீள் பதிவிடுகிறேன்.

இந்தப் புலம்பெயர்வாழ்வில் நம்மவர்களால் பெறப்பட்ட அனுபவங்கள் கோடானு கோடி.

காசேதான் கடவுளடா!

அமெரிக்காவில் கோவில்களை கட்டிக்குவிக்கிறோம். கோயிலில்லாத ஊரில் குடிபுகாதே என்று சொன்னதை வேதமாக கருதி, குடிபுகுந்த ஊரிலெல்லாம் கோவில் கட்டிக்குவிக்கிறோம். கோவில்கள்தான் எங்களின் நாளைய பொலிடிகல் சென்டராக மாற்றிவருகிறோம். வாரத்தில் ஐந்து நாட்கள் வெளிநாட்டுகாரனுக்கு அர்த்த ராத்திரிகளில் ஆணி புடுங்கியும், செய்த தப்புக்கணக்கை அதிகோணலாக்கும் ஆடிட்டராகவும், ஏதோ ஒரு மருத்துவமனையில் கிழட்டு hypochondriac அமெரிக்கர்களின் கேள்விகளுக்கு பல்லைக் கடித்துகொண்டே இன்முக பதில்கள் சொல்லியும் சுயத்தை இழந்த எங்களின் இறந்த ஈகோவைத்தூக்கிநிறுத்த பிரசிடண்ட், ஜெனரல் செக்ரட்டரி, போர்ட் ஆஃப் டரஸ்டி போன்ற பதவி பந்தாக்கள் தேவைப்படுகிறது. அதற்காகவே கோவில்களை உருவாக்குகிறோம். எங்கள் ஈகோவைக்காட்டிலும் இருமடங்குடைய பிரம்மாண்ட கோவில்களை உருவாக்குகிறோம். எங்கள் மனைவிமார்கள் எங்களுக்கு தெரியாமல் அனுப்பிய பணத்தில் மாமனார்/மாமியார் நல்லி குப்புசாமி செட்டியார் கடையில் தீபாவளி தள்ளுபடியில் வாங்கித்தரும் 'காஞ்ஜிபுர' பட்டு புடைவையையும், சேட்டு மாப்பிள்ளையைப் போல இருப்போம் என்ற கனவில் வாங்கி ராமராஜன் மாதிரி எங்களை தனித்துவமாய் மிளிரச்செய்யும் குர்த்தாக்களையும் பெருமையாய் அணிந்து மற்றவர்களுக்கும் காட்ட கோயிலுக்கு போவது எங்களுக்கு அவசியமாகிறது.

அமெரிக்க கோயில்கள் ஒரு பணம் தயாரிக்கும் இயந்திரம் என்பதை பல இந்திய (படிப்பறிவில்லாத ரெசிடண்ட் இண்டியன்ஸ் என்று வாசிக்க தாழ்மையுடன் வேண்டுகிறேன்) மக்கள் அறிவதில்லை. மல்டி மில்லியன் டாலர் கையிருப்பு வைத்திருக்கும் அமெரிக்கர்களுக்கே வீட்டுக் கடன் வாங்குவது சிரமமாய் இருக்கும் இன்றைய காலகட்டத்தில்கூட கோவில் கட்ட மில்லியன் மில்லியனாய் பணம் இறைக்க அமெரிக்க வங்கிகள் வரிசைகட்டி ஏலம் கோரி நிற்பதாக ஹேஸ்யங்கள் பல உண்டு. உண்டியல் கலெக்‌ஷன் தவிர ஆயுஷ்ஹோமம், ம்மிருதுஞ்ஜய ஹோமம், கண்பத் ஹோமம், ஸ்ரீசக்ர சுதர்ஷண ஹோமம், ஸ்ரீ ஷுக்த ஹோமம், சத்யநாரயண பூஜா, வாஹன பூஜா, க்ரஹப்பிரவேஷா, அஷ்டோத்தரம், ச்ஹாலிசா, ஆரத்தி என்று பல வழிகளில் பணம் செய்து கடனை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே கட்டி முடித்துவிடுவார்கள் என்று அமெரிக்க வங்கியினர் ரிஸ்க் அனாலிசிஸ் செய்த பிறகே இந்த முடிவுக்கு வந்திருப்பார்கள் என்று உங்களுக்கு நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை. நாங்களும் கோயில் கடன் அடைபட்டதும் அதை விரிவாக்க மீண்டும் கடன்வாங்கி இன்னும் நிறைய விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்து எங்கள் பத்தியையும் கோயில் கல்லாக்களையும் விஸ்தாரமாக்குகிறோம்.

ஊரிலிருந்து வரும் உறவினர்களை அழைத்து சென்று திருப்பதியைவிடவும், தில்லையைவிடவும் இங்கு அர்ச்சகர்கள் யாருக்கும் புரியாத மந்திரத்தை அழுத்தமாக உச்ச்சரிப்பதை பெருமையாய் காட்ட எங்களுக்கு கோவில் தேவை என்பதை நீங்கள் அறிந்திருக்க நியாயமில்லை. உடுப்பி உணவகத்தில் தண்ணீரின் அடர்த்தியுடன் சாம்பார் போன்ற ஏதோ ஒரு வஸ்துவுடன் 7.45 டாலருக்கு வழங்கப்படும் அதே தரத்துடன் ஏன் அதைவிட சற்றே தரமான பொங்கல், சாத்தமுது, இறக்குமதி செய்யப்பட்ட MTR பொடியில் தயாரித்த வறுத்த வேர்க்கடலை சேர்த்த பாசுமதி அரிசியில் தயாரான புளியோதரை, யாரோ கன்னட/தெலுகு பத்தகோடி சத்யநாரயணா பூஜைக்கு தயாரித்த நெய்யையும் திரட்சைமுந்திரியையும் தேவைக்கு அதிகமாக சேர்த்தும் காய்ந்த கேசரி, வழிதவறி வந்த யாரோ நார்த் இந்தியன் விட்டுச்சென்ற சின்ன பூந்தியில் செய்த லட்டு என்று எல்லாம் கலந்தடிக்கும் பாக்யத்திற்காவும் கூட கோயில் கட்டுகிறோம். ஊரில் சிவராத்திரிக்கு சன் டிவியில் திராபைப்படமான ‘சச்சின்' பார்த்துக் நீங்கள் கொண்டாடிக்கொண்டிருக்கும் அதே வேளையில் 108 சிவலிங்களுக்கு இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட சந்தன அபிஷேகமும் வால்மார்ட்டில் வாங்கிய கொழுப்பு நீக்கப்பட்ட பாலாபிஷேகமும் செய்து ஸ்ரீ ருத்ரத்தை விடிய விடிய வாய்கிழிய எமக்கு அடுத்து அமர்ந்திருப்பவரை விட சற்றே நல்ல உச்சரிப்புடனும் தெம்புடனும் பாடுவதாகா பாவ்லா செய்வதற்குக் கூட எங்களுக்கு கோயில்கள் அவசியம்தான்.

நாராயணனின் மகள் ப்ரொமிற்கு யாரோ கருப்பனுடன் வந்திருந்ததை ஸ்டார்ட்-அப் கம்பெனி CTOவின் மகனுடன் சென்ற எங்கள் அந்திம்பேரின் மகள் சொன்னதையும், சென்னைக்கு அருகே உள்ள குக்கிராமத்திற்கும் அருகிலுள்ள பட்டிக்காட்டில் நாங்கள் 7 வருடங்களுக்கு முன்பு வாங்கிய 77.29 லட்சம் பெருமானமுள்ள மனைக்கு அருகில் இருந்த அதே அளவு மனை இப்போது 3.22 கோடிக்கு விலைபோவதையும், எதிர் வீட்டு கேத்தி எங்கள் தோட்டத்து டேலியாப் பூக்களையும் எங்கள் கருங்கூந்தலை வியந்ததையும், நெப்ராஸ்காவிற்கோ வயோமிங்கிற்கோ யுனிவர்சிட்டி டீன் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்ததால் மட்டுமே மாசசூசட்ஸ் இன்ஸ்டிடியுட்டில் கிடைத்த இடத்தை மறுத்து பேச்சுலர்ஸ் டிகிரி படிக்க சென்றிருக்கும் மூத்தவன் பற்றியும், 2419 பேர் படிக்கும் பள்ளியில் 7 மாணவர்கள் உறுப்பினராக உள்ள மனக்கணிதம் மற்றும் எறும்பு சேமிப்பு டீமில் இளைய மகள் முன்னணியில் இருப்பதை பகிர்வதற்கும், சுதர்ஷனுக்கு வேலை போனதால் அவன் மனைவி அகிலா கே-மார்ட்டில் மணிக்கு 6.55 டாலருக்கு பொட்டலம் கட்டுவதை ரேஷ்மா பார்த்ததையும், ஒவ்வொரு முறையும் ரம்யா பாட்லாக் பார்ட்டிகளுக்கு தயிர்சாதத்தையே கொண்டுவரும் கஞ்சத்தனத்தையும் அதையும் கூட அவள் கணவர்தான் சமைக்கிறார் என்ற இரகசியத்தையும் உங்களிடம் தொலைப்பேசியிலா தெரிவிக்க முடியும்?

இது தவிர இந்தியாவிலிருந்தும், ஈழம், கரிபியன், ஆப்பிரிக்கா, தென்கிழக்காசியா ஆகிய பகுதிகளில் இருந்தும் அவ்வப்போது விசிட்டிங் தெரபி அளிக்கும் இண்டர்நேசனல் ஆன்மிக டாக்டர்களை அழைத்து தாய்மண் பாசத்தில் நொஸ்டால்ஜிக்காய் அலையும் மாமா மாமிகளையும் அவர்களின் ஹிப்-ஹொப் நவநாகரீக Dudes and Chiksஐ வேண்டாவெறுப்பாய் அமர்த்தி சம்பந்தமே இல்லாத கதைகளை சத்சங் என்ற பெயரில் ராவி, டண்டக்கு டண்டக்கு 5-D டால்பி இசையில் பஜனை பாடவைத்து நாங்கள் பத்தி பரவசத்தில் மிதந்து ஆடும் போதே உண்டியல் குலுக்கினாலும் அதிலும் டாலர்களை சொருகி, ஏதோ சான்ஸ் போன பாடகர் இலவசமாய் பாடிக்கொடுத்த இசைவட்டு, படிக்கவே மாட்டார்கள் என்ற தைரியத்தில் எழுதிக் குவித்த பத்திக்குப்பைகள், இந்தியாவில் ஏதோ நோஞ்சான் குழந்தை கழிப்பிட வசதியற்ற கிராமத்தில் செய்த கைவினைப்பொருட்கள், பல கோணங்களில் அருள்பாலிக்கும் நான்கங்குல பித்தளை விக்கிரகங்கள் (அதவிட பெருசா இருந்தா உம்மாச்சி கண்ண புடுங்கிடும்) என்று அனைத்தையும் அநியாய விலைக்கு வாங்கிவிட்டு மாதா மாதம் எரிதங்களை அனுப்ப முகவரியையும் இமெயில் ஐடியும் கொடுத்தே டாட்டா காட்டி திருப்பி அனுப்புகிறோம்.

மற்றும் எங்கள் நிரிழிவு, இதயக்கோளாறு, சொத்து தகறாறு, திருமணம், பிள்ளைகள், நோய்கள், உறவுமுறை சிக்கல், தொழில், நீதி மன்ற விவகாரங்கள், வாஸ்த்து, பில்லி சூன்யம், மனச்சிதைவு இவ்வளவு ஏன் கான்சர் போன்ற அனைத்து மனித மலச்சிக்கலுக்கும் இஙகேயே ரெசிடண்ட் சாமியார்களையும் ஊக்குவிக்க தயங்குவதில்லை. அவ்வப்போது Little India வில் வரும் ஜார்ஜியாவைச்(?) சேர்ந்த ”டாக்டர் கமேண்டர் சித்தர் செல்வம்” மற்றும் லண்டனைச் சேர்ந்த “பீர் சையது சாஹேப்” அவ்ர்கள் எல்லாம் எங்களைப் போன்ற திக்கற்றவர்களுக்கு திசைக்காட்டும் மகர ஜோதிகளாய் அவதரித்தவர்கள் என்பதையும் எய்ட்ஸ் முதல் ENT நோய்கள் வரை சர்வ நோய் தீர்க்கும் சக்தி பெற்றிருக்கிறார்கள் என்பதையும் சத்தியமாய் நம்பும் புண்யாத்மாக்கள் நாங்கள். படித்ததாய் நம்பப்படும் நாங்கள் இவர்களை அன்றாடம் நாடி செழிப்போடும் வளமோடும் வாழ்வாங்கு வாழ்ந்து நோய்பல தீர்த்த இந்த மகான்களையும் அர்த்த புஷ்டியுடம் செழிப்படையச்செய்கிறோம்.

காசைக்கொடுத்து கடவுளை வாங்குகிறோம்!

******

நன்றி: http://usthamizhan.blogspot.com/2008/08/blog-post.html

******

வெள்ளி, ஆகஸ்ட் 1, 2008

பீர் சையது சாஹேப்:

ம்ம்..இப்ப எல்லாம் காசு இருந்தா தான் கடவுளே நமக்கு காச்சி தாறார் அகதியன் அண்ணா :o ..பிறகென்ன..இப்ப எல்லாமே வியாபரம் தான்..அதிலும் கோயில்களிள முதலீடு செய்யிறது ரொம்ப நல்லது..கெதியில பங்குசந்தை வர்த்தகத்திலையும் கோயில்கள் நிரல்படுத்தபடலாம் பாருங்கோ.. :lol:

என்னவோ...இப்படி எல்லாம் கதைத்திட்டன்..நாளைக்கு சிட்னி முருகன் கோயிலிற்கு போய் ஒரு அர்ச்சனை செய்திட்டு வரணும் பாருங்கோ..(இன்னைக்கு ஆடிபூரம் அல்லோ ஒருத்தரும் கோயிலிற்கு போகலையோ??)..

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா காசு இருக்கிறவனுக்கு கடவுள் இல்லாதவனுக்கு..அவனே கடவுள்.." :lol:

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.