Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்னார் வான் பரப்பில் இந்தியச்சிறகுகள் விரிகின்றனவா--சி.இதயச்சந்திரன்

Featured Replies

தமிழக மீனவர்கள் தினந்தோறும் கொல்லப்படும்போது, இந்திய இலங்கையின் நூற்றாண்டு கால ஆழமான உறவினை, பிரதமர் மன்மோகன் சிங் வெளிப்படுத்தியுள்ளார்.

சார்க் மாநாட்டில். இது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போலிருந்தது.

கச்சதீவை மீளப் பெற்றால், இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறல்கள் தடுக்கப்படுமென தப்புக் கணக்குப் போடப்படுகிறது.

இந்த கச்சதீவு கைமாறிய வரலாற்றை சிறிது பார்க்கலாம்.

கச்சம் என்றால் ஆமை என்றும் பொருள்படும். பச்சை நிற ஆமைகள் நிறைந்த இடமாக அத்தீவு விளங்கியதால், அதனை பச்சைத்தீவென்றே முன்பு அழைத்தார்கள்.

பின்னர் கச்சதீவாக மாறிவிட்டது.1882 ஆம் ஆண்டு முதல் இராமநாதபுரம் சேதுபதியின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சதீவு, பின்னர் கிழக்கிந்திய கம்பனியால் குத்தகைக்கு எடுக்கப்பட்டது.

பிரித்தானியரிடமிருந்த இந்தியா சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் 1974 ஆம் ஆண்டுவரை இக் கச்சதீவு இந்திய இறையாண்மைக்கு உட்பட்ட பிரதேசம்தான்.

இக் கச்சதீவுக் கையளிப்பில் ஒரு வித அரசியல் சூத்திரமும் புதைந்துள்ளது.1974 ஆம் ஆண்டில், இந்தியா பொக்ரனில் நடத்திய அணுகுண்டு வெடிப்பு பரிசோதனையில் இருந்து ஆரம்பமாகிறது இந்த கச்சதீவுப் பரிமாற்றம்.

உலக நாடுகள் பலவற்றிலிருந்து எழுந்த கண்டனங்களை தமது பிராந்திய நலனிற்குச் சாதகமாக பயன்படுத்த முயன்ற பாகிஸ்தான் அரசு, ஐ.நா. சபையில் இந்தியாவிற்கெதிராகத் தீர்மானமொன்றினைக் கொண்டு வர முயற்சித்தது.

ஐ.நா.விலுள்ள இலங்கைப் பிரதிநிதியை தம்பக்கம் ஈர்க்க, எட்டு நிபந்தனைகளுடன் கூடிய இந்திரா சிறிமா ஒப்பந்தமொன்று 1974 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் திகதியன்று உருவானது.

அணுகுண்டு பரிசோதனையால் எழுந்த எதிர் ப்பலைகளை தணிக்க, இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்ட நிலமே இந்த கச்சதீவாகும்.

அதனைத் தொடர்ந்து1976 மார்ச் 23 ஆம் திகதியன்று, மன்னார் வளைகுடா கடல் எல்லையை வரையறுக்கும் ஒப்பந்தமொன்றும் உருவானது.

புதிய உலகக் கோட்பாடு உருவாக முன்னர் நடந்த நிகழ்வுகள் இவை.

ஆகவே இலங்கையின் ஆதரவினைப் பெற, இந்தியா வழங்கிய நன்கொடையாகவும் கச்சதீவினைக் கருதலாம் அல்லது கையூட்டாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

சிங்கள தேசத்தை தனது ஆளுகைக்குள் இழுத்துவர இந்தியா மேற்கொண்ட நகர்வுகள் யாவும், தமிழ் மக்களின் நலன்களை அடகு வைத்தே முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இத்தகைய இந்திய நகர்வுகளின் படிமுறை வளர்ச்சியில் மாகாண சபைத் திணிப்பும், ஆயுத உதவிகளும் பதியப்பட்டுள்ளன.

இந்தியாவின் முழுமையான பார்வையும் அவதானிப்பும் தற்போது சிங்களதேசத்தை நோக்கித் திருப்பப்பட்டுள்ளது என்பதே சரியான கணிப்பாகும்.

தென்னாசியப் பிராந்தியத்தில் முனைப்புப் பெற்றுள்ள வல்லாதிக்க நாடுகளின் முரண்நிலைக் களத்தில், தமிழர் நலன் குறித்த மனித நேயப் பார்வை இந்தியா விற்கு அவசியமில்லாமல் போய்விட்டது.

தேசிய இனங்களிடையே நிலவும் முரண்பாடுகளை தனது ஆதிக்க அபிலாஷைகளுக்கான கருவியாக இந்தியா பயன்படுத்துவதை புரிதல் வேண்டும்.அரசியல், பொருளாதார ஆக்கிரமிப்பிற்கான இராஜதந்திர நகர்வுகளின் வெளிப்பாடுகளை "சார்க்' மாநாட்டிலும் இந்தியா புலப்படுத்தியது.

ஓர் உலகம், ஒரு கனவின் மொத்த உருவ மாக அமெரிக்கப் பேரரசு வெளிக்கிளம்புவ தற்கு முன்னர், இலங்கையை தன் வலைக்குள் வீழ்த்த, இந்தியா வழங்கிய கச்சதீவு நன் கொடைகள், இன்று பிரதிபலனை அறுவடை செய்யும் காலத்தை தொட்டு நிற்கிறது.

சிங்கள தேசத்தைத் தன் காலடியில் விழ வைக்க உபயோகிக்கப்பட்ட தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தை, அதற்கு எதிரான தளத்தில் நின்றும் இந்தியா பயன்படுத்துகிறது.

பொருளாதார ஆக்கிரமிப்பினை வெளிப்ப டையாகவும், சிங்களதேசம் விரும்பும் தமிழின அழிப்பிற்கான இராணுவ உதவிகளை மறைமுகமாகவும் கடைப்பிடிக்கும் இந்திய இராஜதந் திர இரட்டைப் பாதையானது, குறிக்கோள் எட்ட முடியாத சமாந்தரப் பயணத்தில் முடிவ டையலாம்.

சீனப் பிடிக்குள் சென்றடைந்த மியன்மாரின் எண்ணெய் வளங்களிலிருந்தும் இந் தியா பாடம் கற்கவில்லை.

தவறான பாதையில் தவறவிட்ட அனுகூலங்களை, இன்னுமொரு பிழையான பாதையில் பெற்றுக் கொள்ளலாமென முயற்சிப்பது போலுள்ளது, மன்னார் எண்ணெய் வளத்தை முழுமையாகக் கையகப்ப டுத்த இந்தியா மேற்கொள்ளும் நகர்வுகள்.

மன்னாரிலுள்ள இதில் எண்ணெய் வளம் என்பதை விட, அக்கடல் பிராந்தியத்துள் எதிரி கால் பதிக்கக் கூடாதென்பதே இந்திய வல்லாதிக்கத்தின் தேவை யாகவிருக்கிறது.

அதாவது வளப்பங்கீடு என்பதற் குமப்பால், தமது ஆதிபத்திய எல் லையோடு ஒட்டிய கேந்திர முக்கி யத்துவம்மிக்க கடல், தரைப் பிரதே சங்களில் சீனா, பாகிஸ்தானின் நிலையெடுப்பு நிகழும் வாய்ப்பினை முறிய டித்தலே இந்திய கொள்கை வகுப்பாளர்க ளுக்கு தற்போது இருக்கும் தலையாய பிரச்சி னையாகவுள்ளது.

கொழும்பில் வாடகை வண்டியில் பயணித்த எம்.கே.நாராயணனின் முதன்மையான பணியும் இதுதான்.

ஏற்கனவே கொழும்பு வட்டாரத்தில் தீவிர விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள "சீபா" எனப்படும் முழுமையான பொருளாதார இருதரப்பு உடன்பாடு சிங்கள தேசிய முதலாளி களால் நிராகரிக்கப்படும் நிலையிலுள்ளது.

இவ்வொப்பந்தம் ஊடாக ஒரு முழுமை யான பொருளாதார ஆக்கிரமிப்பினை தம்மீது இந்தியா செலுத்த முற்படுவதாக சிங்களம் அச்சமடைவதாகவும் கூறப்படுகிறது.

அதாவது பிரித்தானிய காலனித்துவ ஆதிக்கம் முடிவடைந்து 60 ஆண்டுகள் கடந்த பின் னர், இந்தியாவின் நவீன காலனி ஆதிக்கத்துள் இலங்கை அகப்பட்டு, இந்தியாவின் 27 ஆவது மாநிலமாக இணையும் நிலை தோன்றப்போவ தாக, ஜே.வி.பி. எச்ச?க்கின்றது.

வெள்ளைப்புலி நோர்வேயை வெளியேற்றி, இந்திய அனுசரணையுடன் இனப்பிரச்சி னையை தீர்க்க முடியுமென்று, முன்னர் இந்தி யாவிற்கு சாமரம் வீசியவர்கள்தான் இந்த ஜே.வி.பி.யினர்.

கொழும்பு அரசியல் களத்தில் தற்போது நோர்வே இல்லை. இன்று சிங்கள தேசத்தின் இறையாண்மைக்குள் ஊடுருவ முயலும் இந்தியாவையும் அகற்றிவிட்டால், சீனாவை உள் நுளைத்து, தமது சிவப்புச் சாயத்தை அழிய விடாமல் காப்பாற்றிக்கொள்ளலாமென்பதே ஜே.வி.பி.யின் நீண்ட மூலோபாயம்.

ஆனாலும் தலைமைப் பொறுப்பில் இருக் கும் பெருந்தேசிய வாத கூட்டுகள், வேகமாக முன்னெடுக்கும் இராஜதந்திர நகர்வுகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் ஜே.வி.பி. யினால் இயங்க முடியவில்லை.

இந்திய "சீபா' விற்குள் அகப்பட்டால், சீனா வின் நிரந்தர ஆதரவு, விலகிச் சென்று விடு மென்ற அச்சம், ஜே.வி.பி.க்கும் உண்டு.

"சார்க்' மாநாட்டில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகளைப் பார்க்கிலும், பார்வையாளர்களாகக் காட்சி தந்தவர்களே பலவான்கள் என்பதை கவனிக்க வேண்டும்.

சிங்கள தேசத்தை ஏதாவதொரு அணி இழுத்துச் சென்று விடுமென்கிற அச்சத்தையே, இவ்வுலக வல்லரசாளர்களின் "சார்க்' மாநாட்டு பிரசன்னம் புலப்படுத்துகிறது.

ஐ.நா. சபை மனித உரிமைச் சபையின் உறுப்புரிமை நிராகரிக்கப்பட்டு, சர்வதேச அளவில் ஏற்பட்ட தலைகுனிவை சரிசெய்ய "சார்க்' மாநாட்டை பயன்படுத்திக் கொண்டது அரசாங்கம்.

மாலைதீவில் நடைபெறவிருந்த மாநாட்டை, 300 கோடி ரூபாய் செலவில் இலங்கையில் நடத்த அரசாங்கம் முனைந்த பின்னணியின் தாற்பரியம் இதுவாக இருக்க வேண்டும்.

ஆனாலும் அரசாங்கத்தின் எண்ணம், பயங்கரவாதத்திற் கெதிரான தீர்மானம் ஒன்றினூடாக நிறைவேறியுள்ளது.

"சீபா' ஊடாக, இந்திய ஆதிக்கத்துள் இலங்கையை இழுத் துவரும் மன்மோகன்சிங் குழுவினரின் நோக்கம் நிறைவே றவில்லை.

அதேபோன்று "பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்' ஒன் றினை இலங்கையுடன் கைச்சாத்திட இலங்கை சென்ற பா கிஸ்தானின் கனவும் நிஜமாகவில்லை.

இறுதிவரை முயன்றும் "சீபா'வை ஒப்பேற்ற முடியாமல் போன நிகழ்வு, இந்திய இராஜதந்திர தோல்வியாகவே கணிக்க வேண்டும். திருமலை எண்ணெய் குதம், மன்னார் எண்ணெய் படுக்கை, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சா லையென வட கிழக்கு பிரதேசத்தை மட்டும் தமக்களித்து, தமிழர் பிரதேசத்துள் இந்தியக் கனவினை முடக்க சிங்கள தேசம் முற்படுவதனை பிரதமர் மன்மோகன்சிங் புரிந்து கொள்வதால், முழு இலங்கையையும் தனது கட்டுக்குள் கொண்டுவர "சீபா' உடன்பாட்டினை உயர்த்திப் பிடிக்கி றார்.

இதேவேளை மன்னார் ஆகாயப் பரப்பிலிருந்து புதிய செய்தியொன்று கசிகிறது.

கடந்த சில நாட்களில், இலங்கை வான் படைக்குச் சொந் தமான இரண்டு உலங்கு வானூர்திகள் சேதமுற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னாரில் அவசரமாகத் தரையிறங்கிய ஒரு உலங்குவாணூர்தியில், இந்தியப் படையினர் பயணம் செய்ததாக சிங்களப் பத்திரிகையொன்று செய்திவெளியிட்டுள்ளது.

இச்செய்தி உண்மையாகவிருந்தால், காந்தி தேசத்தின், தோல்வியுறும் வெளியுறவுக் கொள்கையின் நீண்ட பட்டியலில் இலங்கையும் இணைந்து கொள்ளுமென்பதே சத்திய மான உண்மையாகும்.

http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/

"கச்சதீவு இலங்கையின் ஒருபகுதி பல தருணங்களில் ஒப்புக்கொண்ட இந்தியா'

கச்சதீவு இலங்கையின் ஒருபகுதி என இந்தியா பல தருணங்களில் ஒப்புக்கொண்டிருக்கிறது என இலங்கையின் முன்னாள் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு செயலர் ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

"கச்சதீவு இலங்கையின் ஒருபகுதி

பல தருணங்களில் ஒப்புக்கொண்ட இந்தியா'

அவர் எழுதி, 2003 ஆம் ஆண்டு வெளியான "கச்சதீவும் இலங்கையின் கடல் எல்லையும்' என்ற புத்தகத்தில் இதை குறிப்பிட்டுள்ளார். அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் விபரம்;

1876 க்கு முன்பு மெட்ராஸ் மாகாண நிர்வாகம் எல்லையைக் குறித்தபோது, கச்சதீவு இலங்கையை (அப்போதைய சிலோன்) சேர்ந்தது என மாகாண மதிப்பீட்டுக் குழு அறிவித்தது. 1910 இல் மெட்ராஸ் மாகாண மதிப்பீட்டுக் குழு கச்சதீவில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என இலங்கை அரசு கேட்டுக்கொண்டது. அதை பிரிட்டிஷ் இந்தியா ஏற்றுக்கொண்டது.

இதற்கிடையே, கச்சதீவில் வரிவசூல் செய்யும் ஜமீன்தாரி உரிமையை இராமநாதபுரம் மகாராஜாவுக்கு பிரிட்டிஷார் வழங்கினர். அதேநேரத்தில், ஜமீன்தாரி உரிமை என்பது இறையாண்மை அல்ல ஆதிக்க உரிமை ஆகாது எனவும் பிரிட்டிஷ் இந்திய நிர்வாகம் குறிப்பிட்டது.

1921 இல் மெட்ராஸ் மாகாணத்துக்கும் இலங்கைக்கும் இடையே பாக் ஜலசந்தி பகுதியில் எல்லை மறுவரையறை செய்யப்பட்டபோது, கச்சதீவு தங்களுக்குச் சொந்தமானது என மெட்ராஸ் மாகாண பிரதிநிதிகள் அரைமனதாகக் கோரினர். இராமநாதபுரம் மகாராஜா வரிவசூல் செய்ததை இதற்கு ஆதாரமாகக் காட்டியது. இலங்கைப் பிரதிநிதிகளின் எதிர்ப்பையடுத்து இந்தக் கோரிக்கை கைவிடப்பட்டது.

இதன் பிறகு 1923 இல் கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது என மெட்ராஸ் மாகாண நிர்வாகத்துக்கு பிரிட்டிஷ் இந்திய அரசு அறிவுறுத்தியது. இரண்டாம் உலகப் போரின்போது, கச்சதீவைப் பயன்படுத்திக்கொள்ள பிரிட்டிஷ் கடற்படை இலங்கையிடம்தான் அனுமதி கோரியது. அதேபோல் கச்சதீவில் உள்ள கத்தோலிக்க அமைப்பு, யாழ்ப்பாண கத்தோலிக்க மறைமாவட்ட கட்டுப்பாட்டின்கீழ்தான் வருகிறது. மதுரை மறை மாவட்டத்தின் கீழ் அல்ல.

1960 களில் கச்சதீவு பிரச்சினை மீண்டும் எழுந்தது. கச்சதீவில் புனித அந்தோனியார் திருவிழாவின்போது, மற்ற மதங்களைச் சேர்ந்த வணிகர்கள், கடத்தல்காரர்கள் உள்ளிட்டோர் சட்டவிரோதமாக அங்கு வரத்தொடங்கினர். இது தொடர்பாக இலங்கை அரசு இந்தியாவிடம் புகார் தெரிவித்தது. எனினும் இந்தியா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

1974 இல் இந்திய இலங்கை கடல் எல்லை குறிக்கப்பட்டபோது, கச்சதீவு பிரச்சினையை தமிழக அரசு எழுப்பியது.

இராமநாதபுரம் மகாராஜா வரிவசூல் செய்தது, பழைய டச்சுக்காரர்களின் வரைபடங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு ஆதாரமாகக் காட்டியது.

ஆயினும் இவற்றை எதிர்த்து இலங்கை வெற்றிபெற்றது. 1974 மற்றும் 1976 இல் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே எட்டப்பட்ட இரு உடன்பாடுகள், கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது என்பதை உறுதி செய்தன. எனினும், இந்திய மீனவர்கள் கச்சதீவில் வலைகளை உலர்த்திக் கொள்ளவும், புனித அந்தோனியார் திருவிழாவுக்கு வரவும் அனுமதியளிக்கப்பட்டது. ஆனால், மீன்பிடிப்பதற்கு அனுமதி தரப்படவில்லை. அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க.அரசும் இதை ஒப்புக்கொண்டது.

இவ்வாறு அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.thinakkural.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.