Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழினமும் ஒற்றுமையின் நிலைப்பாடும் - சாண்டில்யன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினமும் ஒற்றுமையின் நிலைப்பாடும் - சாண்டில்யன்

ஒற்றுமை என்பது, ஒரு குடும்பத்தின் / சமுதாயத்தின் / இனத்தில் வாழும் அங்கத்தவரினது கூட்டு முயற்சி. முதலாவதாக, ஒற்றுமை என்ற எண்ணம் / பார்வை, குடும்பத்திலிருந்துதான் உதிக்கவேண்டும். பிள்ளைகளை பெற்றோர் சரியாக வளர்த்தாலும், பிள்ளைகளுடைய வளரும் சூழல் நிலைகள் அவர்களைப் பாதிக்கலாம்.

ஒற்றுமையின்மை என்பது ஒரு இனத்தின் அங்கத்தவரிடம் எப்படி உருவாகின்றது / உதிக்கின்றது. இவைகளை அடையாளம் கண்டு, அப்படியான காரணங்களை எமது எண்ணத்திலிருந்து அழித்துவிட்டால், எமது எண்ணத்தில், எமது பழக்க வழக்கங்களிலிருந்து ஒற்றுமையின்மை என்ற குணாதிசியங்கள் முற்றாக அழிந்து விடும்.

தொழில் நுட்ப குறைகளை, மூலக் காரண ஆராய்வு செய்து, அவைகளை நிவிர்த்தி செய்து இயந்திரங்களை சரியாக இயங்கச் செய்வார்கள், பொறியியலாளர்கள். இதை ஆங்கிலத்தில் -–Root Cause Analysis - என்று கூறுவார்கள்.

ஒற்றுமையின்மைக்குரிய காரணங்கள் யாவை?

1. முதலாவதாக நான் என்ற அகந்தை. – Egoism

2. அதிகாரத் துஷ்பிரயோகம்.

3. மற்றவர்கள் அளவளாவும் பொழுது, காது கொடுத்துக் கேட்கும் தேர்ச்சித் திறமையின்மை. – Lack of Listening Skill.

4. காது கொடுத்துக் கேட்கும் தேர்ச்சித் திறமை இருந்தாலும், மற்றவர் கூறுவதை விளங்கும் திறமையின்மை. understand with pure reasoning.

5. மற்றவருக்கு தெளிவாக ஒரு கருத்தைக் கூறும் திறமையின்மை. Inability in communicating clearly, structurally & constructively.

6. கேட்பவரிடம் இருக்கும் தெளிவுள்ள சிந்தனை. Clear mind

7. கூறுபவர் சரியாக, தெளிவாகக் கூறினாலும், அதை ஏற்றுக்கொள்ளாமை. நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது. Inability to accept other person’s correct statement / reasons, because of egoism.

8. இருவருடைய கருத்துமே சரி என்றாலும் ஒருவராவது விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை. Give and take policy.

9. ஒருவரிடமோ அல்லது இருவரிடம் இருக்கும் எதிர் மறை எண்ணங்கள். Negative thinking.

10. ஆக்க பூர்வமற்ற செயல்கள். Destructive actions.

11. குத்தல், வசை பாடும் சிந்தனைனைகள் – Destructive Critisism.

12. எண்ணற்ற அளவு திறமைகள் இருந்தாலும், தாழ்வு மனப்பான்மையோடு வாழ்வது. Inferiority Complex.

13. இருவருமே ஒருவரை ஒருவர் மதிப்பும் மரியாதையும் இல்லாமல் பழகுவது.

அடுத்ததாக பணநாயகங்கள், அதாவது, செல்வந்தர்கள், ஒரு ஏழையோ, அல்லது பண வசதி படைத்தவர் ஒரு கருத்தைக் கூறும் பொழுது, பணநாயகம் நினைப்பார் “ இவனுக்கு என்னப்பா தெரியும் முட்டாள் கதை கதைக்கிறான்”. நினைப்பது போதாமல், அதையும் கூறுவார்.

அடுத்ததாக, தமிழினத்தின், அதி முக்கியமான, சாதிப் ( தொழில் சார்ந்த ) பிரச்ச்சனை- தமிழினம் முத்திரை குத்திய ஒரு தாழ்ந்த குலத்தவர் ஒரு கருத்தைக் கூறினால், அதை ஏற்றுக்கொள்ளாமை. அந்தக்கருத்தைத் தட்டிக்களிப்பது, ஏனென்றால், கருத்தை ஏற்றுக்கொண்டால், அந்தத் தாழ்ந்த குலத்தவருக்கு பெயரும் புகழும் போய் விடுமே. இப்படிப்பட்ட குறை எமது இனத்தில் நடைமுறையில் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கின்றது. முக்கியமாக வானொலிகளில், இவர்களுடைய கருத்துக்களைத் தட்டிக்களித்து விடுவார்கள். தெளிவில்லாதவர்கள் கூறும் கருத்துக்கள் பாராட்டப்பட்டிருக்கின்றது. எனென்றால் அவர் நல்ல சாதி என்று.

அடுத்ததாக, சமய வேறுபாடுகளும் அதன் வெறியும் எமது ஒற்றுமையைப் பாதிக்கின்றது.

அடுத்ததாக, படித்த தமிழர்கள், படியாதவர்களை மதிப்பதில்லை. தொழில் சார்ந்த மனப்பான்மை அதிக அளவில் எமது இனத்தில் நிலவி,, உலவி வருகின்றது. ஆனால் ஒரு அளவில் படித்தவர்களும், டாக்டர்கள், கணக்காளர்கள், எமது இனத்தில் மன்னிக்கப்படலாம் என்று நினைக்கின்றார்கள். காரணம் என்னவோ? டாக்டரிடம் உதவி வேண்டும் அல்லவா?

எமது இனத்தில் படியாதவர்களும், எம்மால் முத்திரை குத்தப்பட்ட தாழ்ந்த குலத்தவரும் ஒரு அளவில் மிகத் தெளிவோடு இருக்கின்றார்கள் என்பது எமது தாழ்மையான கருத்து.

அடுத்ததாக, தமிழர்கள் விவாதிக்கும் பொழுது, தெளிவான சிந்தனையின்றி விவாதிப்பது நடைமுறை. ஒரு சில நாடுகளில், அறிவிப்பாளர்கள், ஒலி பெருக்கி எனது கையில் என்றால், எதுவும், என்னவும் கூறலாம் என்று நினைக்கின்றார்கள். தகாத வார்த்தைகளைப் பாவிக்கலாமா? மனித குலத்தின், பண்பு, வினயம், பெருந்தன்மை, என்பதை இவர்கள் என்ன தம்மிடமிருந்து விற்று விட்டார்களா? இப்படிப்பட்டவர்கள் வானொலி நடத்துவதற்கு தகுதி பெற்றவர்களா? இவர்கள் சிந்திக்க வேண்டும்.

“சிந்தனையற்ற செயல்கள் முட்டாள் தனம்

செயலற்ற சிந்தனைகள் சோம்பேறித்தனம்” - அறிவுடையோர் கூற்று

அவுஸ்திரேலியாவில், புலம் பெயர்ந்து வந்துள்ள, பிராமணர்கள், ஆங்கிலேயர்களுக்கு சாதி என்றால் என்ன, தங்களைத் தங்களுடைய நாட்டில், மற்றவர்கள் வணங்குவார்கள் என்று கூறியிருக்கின்றார்கள். எமது தமிழர்களும் சாதியச்சொல்லி அற்ப உதவிகளைப் பெற எண்ணுகின்றார்கள்.

ஒற்றுமை, ஒற்றுமை என்பதை, வாயில் உச்சரிக்காமல், ஒற்றுமையை நடை முறையில் கொண்டு வருவதற்குரிய வழி வகைகளை வகுத்து நிறை வேற்றுவதை குறிக்கோளாக தமிழினம் ஏற்றுக் கொள்ளவேண்டுமென்பது எமது தாழ்மையான கருத்து.

ஆங்கிலேயர்களின் நாட்டில் வாழும் நாம் அவர்களிடம் கற்க வேண்டியது எண்ணுக் கணக்கற்றது / அளவில்லாதது. முன் மாதிரியான ஜனநாயக நாட்டில் ( அவுஸ்திரேலியாவில்) வாழும் நாம், இங்கு பணத்தை மாத்திரம் கொள்வதோடு மாத்திரமல்லாமல், எமது அறிவை பக்க வாட்டிலும் வளர்க்கலாமே.

ஒற்றுமையை அடைவது எப்படி?

மேலே கூறிய கருத்துகளை ஆராய்ந்து அதற்கேற்ப வாழலாமே.

1. நான் என்ற அகந்தையை விட்டுத் தள்ளுங்கள்.

2. அதிகாரத் துஷ்பிரயோகத்தைத் தவிர்க்கலாம்.

3. மற்றவர்கள் அளவளாவும் பொழுது, காது கொடுத்துக் கேட்கும் தேர்ச்சித் திறமைமையைப் பெறவேண்டும். www.mindtools.com

4. காது கொடுத்துக் கேட்கும் தேர்ச்சித் திறமை இருந்தாலும், மற்றவர் கூறுவதை விளங்கும் திறமையைப் பெறவேண்டும்.

5. மற்றவருக்கு தெளிவாகக் கருத்துக்களைக் கூறும் திறமையை அடையவேண்டும்.

6. கேட்பவர் தெளிவான சிந்தனையோடு கேட்கவேண்டும்.

7. கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் திறமை. நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது விட்டுத்தள்ளுங்கள்.

8. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை.

9. நிச்சயமான, உறுதியான எண்ணங்கள்.

10. ஆக்க பூர்வமான செயல்கள்.

11. குத்தல், வசை பாடும் சிந்தனைனைகளை விடவும்.

12. தாழ்வு மனப்பான்மையை விடவும்.

13. மதிப்பும் மரியாதையும் பண்போடும் பழகவேண்டும்.

14. அதி முக்கியமாக, புலம் பெயர்ந்த நாட்டில், சாதி மத பேதங்களை விட்டுத் தள்ளுங்கள்.

Unity in Diversity, என்பது, வேறு இனங்கள் வாழும் நாட்டில், ஒற்றுமையாக வாழவேண்டுமென்பதுதான். இந்தியாவைப் பொறுத்தவரையில், பல இனங்கள் வாழும் நாடுதான் இந்தியா. The statement “Unity in Diversity” is applicable to India. அதாவது “வேற்றுமையில் ஒற்றுமை”. மாநிலங்களில் வேற்றுமைகள் அதிகம். உணவு, உடை, கலாச்சாரம்..-----

ஆனால், ஈழத்தில் வாழும் தமிழர்கள் ஒரே ஒரு இனம் தான். வேற்றுமை என்பது இல்லை. அம்பனிலும் தமிழன்தான், குடத்தனையிலும் தமிழன்தான். இக்காரணத்தை வைத்து, புலம் பெயர்ந்த தமிழர்கள் “வேற்றுமையில் ஒற்றுமை” எனும் கூற்றை கூறுவதை தவிர்த்தால் ஒற்றுமையை வளர்ப்பதற்கு நல்லது. “வேற்றுமையில் ஒற்றுமை” என்பது ஈழத்தமிழருக்கு தேவையில்லாத கருத்து.

நன்றி, வணக்கம்

சாண்டில்யன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.