Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வீரகேசரி வார இதழுக்காக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வழங்கிய செவ்வி.

Featured Replies

கே. இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட முடியாது. அது ஓர் இறைமையுள்ள அரசு. எனவே ஒரு வரையறைக்குள்தான் இந்தியா செயல்பட முடியுமென காங்கிரஸ் பேச்சாளர் அபிஷேக் சிங்வி கடந்த 15ம் திகதி கூறியிருக்கிறாரே?

பதில் : கடந்த கால சம்பவங்களை அறியாமல் அபிஷேக் சிங்வி தன்னுடைய ஆசைகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.இந்திய அரசு இலங்கை நாட்டு இறையாண்மையில் தலையிட முடிhயாது என்றால் எந்த அடிப்படையில் ராஜீவ் அவர்கள் இந்திய அமைதிப்படையை அங்கு அனுப்பினார்? இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எப்படி ஏற்படுத்தினார்? வடக்கு கிழச்கு மாகாணங்கள் ஒரே பகுதியாக இருக்க வேண்டும் என்கிற கருத்;தை அந்த ஒப்பந்தத்தில் எப்படிப் பதிவு செய்தார்?

இந்த வரலாறு எல்லாம் தெரியாத அபிN|க் சிங்வி இன்று சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்தக் கருத்;தை வெளியிட்டுள்ளார் என்று தான் கருத வேண்டியுள்ளது. அவருடைய கருத்தை எண்ணி வருந்துவதா? அல்லது சிரிப்பதா? என்று தெரியவில்லை.

கே. இலங்கையில் நடக்கும் போர் அதன் உள்நாட்டுப பிரச்சினை எனவும், இதில் தலையிட இந்தியாவுக்கு உரிமை இல்லை எனவும் கூறப்படுகிறதே?

ப : இலங்கையில் நடப்பது உள்நாட்டு விவகாரம் என்றால், எதற்காக மஹிந்தவும் அவருடைய சகாக்களும் உலக நாடுகளிடம் ஆதரவு கேட்டு கையேந்துகிறார்கள். அண்மையில் கூட அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்த இலங்கையின் வெளிநாட்டமைச்சர் அங்கேயும் புலிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று எதற்காக கோரிக்கை விடுத்தார்? இதுதான் உள்நாட்டு விவகாரம் ஆயிற்றே... அவர்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டியது தானே? அவர்களுக்குள் மோதிக் கொள்ள வேண்டியது தானே.

இன்றைக்கு அமெரிக்கா, கனடா, சீனா, பாகிஸ்தான் , இந்தியா உள்ளிட்ட பலவேறு நாடுகளிடம் ஆயுதங்களை வாங்கி, குவித்துக் கொண்டிருப்பதுடன் அந்தந்த நாட்டு இராணுவ அதிகாரிகளைக் கொண்டு இலங்கை இராணுவம் பயிற்சி பெறுவதும் எதற்காக? இதையெல்லாம் மூடி மறைத்து விட்டு தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று குரல் எழுப்பும் போதேல்லாம் 'உள்நாட்டு விவகாரம்' என்று தட்டிக்கழிக்கப் பார்க்கிறாhகள்.

குறிப்பாக இந்திய அரசு தமிழ் இனத்திற்கு எதிராக பச்சைத் துரோகத்தைச் செய்து வருகிறது. இது உள்நாட்டு விவகாரம் என்றால் வவுனியா இராணுவத் தளத்தில் காயம் பட்டார்களே இரண்டு இந்திய அதிகாரிகள் அவர்களுக்கு அங்கே என்ன வேலை? இது உள்நாட்டு விவகாரம் என்றால், இந்தியா ராடர் கருவிகளை அனுப்பியிருப்பதாக இந்திய அரசே ஒப்புக்கொண்டிருக்கிறதே அது என்ன வியாபாரமா? அல்லது இராணுவ உதவியா?

தமிழர்களை அழித்தொழிக்க வேண்டும் என்பதற்காக சிங்கள இன வெறியர்களுக்கு இந்திய அரசு துணை போகிறது என்பதை அபிஷேக் சிங்வியின் இந்தப் பேட்டி உறுதியாக்குகிறது. இதை எந்த வகையிலும் அனுமதிக முடியாது.

கே : இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவிகைள வழங்குவது குறித்து?

ப : இலங்கை அரசை விட இந்திய அரசுதான் தமிழீழம் அமையக்கூடாது என்பதிலே தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறது. இதற்காகவே சிங்கள ஆட்சியாளர்களுக்கு தொடர்ந்து இராணுவ உதவிகளை செய்து வருகிறது. இந்தியாவின் எதிரி நாடுகளான பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுடன் இலங்கை அரசுக்கு உறவு இருக்கிறது என்பது தெரிந்த பிறகும், இந்த நாடுகளிடம் இராணுவ உதவிகளைப் பெறுகிறது என்று தெரிந்த பிறகும், ஆத்திரப்படாமல், வலிந்து வலிந்து இந்திய அரசு சிங்களவர்களுக்கு உதவி செய்கிறது. ஆகவே இவர்களின் நியாயம் சிங்களவர்களின் நியாயம்தான். சிங்களவர்கள் ஆரிய பரம்பரையைச் சார்ந்தவர்கள் என்ற ஒரு கருத்துள்ளது. ஆகவே இவர்களின் நியாயம் ஆரிய நியாயம். சிங்களவர்கள் வட இந்தியாவிலிருந்து சென்றவர்கள் என்ற கருத்தை சிங்களவர்களின் பாடப் புத்தகங்களே கூறுகின்றன. ஆகவே இந்திய அரசின் நியாயம் வட இந்திய இரத்தப் பாசத்தின் அடிப்படையிலான நியாயம். எனவேதான் இந்த இராணுவ உதவியைச் செய்கிறார்கள் என்று நம்புகிறேன்.

கே. தேர்தல் காலம் என்பதால் தான் இலங்கைத் தமிழர்களுக்காக திடீரென்று இப்போது தமிழக அரசியல கட்சிகள் குரல் எழுப்புவதாகக் குகூறப்படுகிறதே? அதிலும் குறிப்பாக தி.மு.க. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தானே ஈழத்தமிழர்களுக்காக பகிரங்கமாகவும், பெரியளவிலும் குரல் கொடுத்துள்ளது?

ப : இது காழ்ப்புணாச்சியின் அடிப்படையில் சொல்லப்படுகிற ஒரு கருத்து. ஈழத் தமிழர்களை ஆதரிப்பதால் தமிழகக் கட்சிகளுக்கு லாபம் என்று கருதினால் அ.தி.மு.க.வும் ஆதரிக்கலாமே? விஜயகாந்தின் தே.மு.தி.கவும் ஆதரிக்கலாமே? இவர்களுக்கு எல்லாம் நட்டமாகிவிடும், ஆனால் தி.மு.க. உள்ளிட்ட இதர கட்சியினருக்கு மட்டும் லாபம் ஆகிவிடுமா?

இயல்பான, இனமான உணர்வின் அடிப்படையில் இந்தக் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம், சிங்கள ஆட்சியாளாகளின் கண்மூடித்தனமான ஈவிரக்கமில்லாத இனப்படுகொலையே ஆகும்.

தற்போது வன்னிப் பகுதியில் வாழும் சுமார் 3லட்சம் தமிழ் மக்களை திட்டமிட்டே பட்டினி போட்டு வதை செய்வதுடன், கிபீர் விமானங்கள் மூலம் குண்டு விச்சுத் தாக்குதல்கள் நடத்தியும், குடியிருப்புபகளையும் வழிபாட்டுத் தலங்களையும் அழித்து வருகிற கொடுமையுடன் குழந்தைகள், முதியவர்கள் என அப்பாவித்தமிழ் மக்களை எல்லாம் கொன்று குவித்து வருகிறது சிங்கள இராணுவம்..

மேலும் நச்சு வேதிப் பொருட்கள் அடங்கிய குண்டுகளையும் அப்பாவி மக்கள் மீது ஏவி வருகிறது. இப்படிப்பட்ட இந்தக் கொடூரச் சூழலிதான் தமிழ் மக்களிடையே இயல்பான கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. அரசியல் கட்சிகள் தான் இலாபம் கருதிப் போரடுகின்றன என்றால், தமிழக பள்ளி கல்லூரி மாணவர்கள் போராடுகிறார்களே. அவர்களுக்கு என்ன இலாபம்? இவர்கள் வீதிக்கு வந்து ராஜபக்ஷாவின் கொடும்பாவியைக் கொளுத்துவது எதற்காக? திரையுலகத்தைச் சார்ந்தவர்கள் இராமேஸ்வரத்தில் பேரணி நடத்துகிறார்களே அவர்கள் எல்லர்ருமே தேர்தலில் நிற்கப் போகிறார்களா? வணிகாகள் கடையடைப்புப் போரட்டம் அறிவித்தனரே அவர்கள் எந்த இலாபத்திற்காக இந்த அறப்போரை அறிவித்தனர்? இரணடு நாட்களாக வழக்கறிஞர்கள் போராட்டம் நடதினார்களே அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? ஆகவே தேர்தல் நேரம் என்பதால்தான் இங்கே தமிழகத்த்ல் இந்தக் கொதிப்பு நிலை ஏற்பட்டிருக்கிறது என்று சொல்வது, சொல்பவர்களின் அரசியல் அறியாமையை வெளிப்படுத்துகிறது.

கே : இந்திய அரசு தங்களுடன் முழுமையாக ஒத்துழைப்பதாகவும் தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து கருத்தில் எடுக்கத் தேவையில்லை என்றும் இலங்கை அரசுத்தரப்பால் கூறப்படுவது குறித்து?

ப : இந்திய அரைசு எப்போதும் தங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்ற நம்பிக்கையில்ததான் இந்தக் கருத்தை அவர்கள் வெளிப்படுத்துவதாகக் கருதுகிறேன். ஏனென்றால் தமிழீழம் அமைவதில் சிங்கள அரசு எதிராக இருக்கிறது என்பதைவிட இந்திய அரசுதான் மிகவும் அச்சப்படுகிறது, அதற்கு எதிராக இருக்கிறது. இதை சிங்களவர்களும் உணர்ந்திருக்கிறார்கள். ஆகவே வெறுமனே அறிக்கையோடும் வேண்டுகோளுடனும் இந்திய ஆட்சியாளர்கள் நின்றுவிடுவாகள். தங்களுக்கு நெருக்கடி தரமாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த யுத்தத்தை முன்னெடுப்பதில் தடங்கல் இருக்காது என்று அவர்கள் சொல்கிறார்கள். தனித்தமிழீழம் அமைந்துவிட்டால் தமிழ்நாடும் அத்தகைய பிரிவினையை எதிர்காலத்தில் கோரும் என்கிற ஒரு பயமும் அச்சமும் தேவையில்லாத வகையில் இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே தான் இந்திய அரசு ஈழத்திற்கு எதிராக அல்லது புலிகளுக்கு எதிராக தொடர்ந்து செயற்படும் என்கிற நம்பிக்கை சிங்களவர்களுக்கு உள்ளது.

கே : தமிழகத்தின் புதிய நிலைவரத்தால் இலங்கையில் யுத்தத்தை முன்னெடுப்பதற்கு தடங்கல் ஏதும் இல்லை என இலங்கை அரசின் தரப்பால் கூறப்படுகிறதே?

ப : தமிழ்நாட்டு மக்கள் கொந்தளித்து எழுந்தால் இந்திய அரசு தனது போக்கை மாற்றிக் கொள்ளும் என்று நம்புகிறோம். அந்த அடிப்படையில் தான் இப்போது அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவது என்கிற முடிவும், 21ம் திகதி மனிதச் சங்கிலி என்ற போராட்ட அறிவிப்பும் மத்திய அரசின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

கே : விடுதலைச் சிறுத்தைகளின் போரட்டம் எந்த வகையில் தொடரப் போகிறது.?

ப : தொடர்ந்து 11ம் திகதியிலிருந்து இன்று வரை ஒன்பதாவது நாளாக விடுதலைச் சிறுத்தைகள் மஹிந்தவின் கொடும்பாiவியை எரித்து பல்லாயிரக்கணக்கில் கைதாகி வந்துள்ளனர். 23ம் திகதி நாடு தழுவிய அளவில் ரயில் மறியல் போராட்டத்தையும் அறிவித்திருக்கிறோம். எனவே இந்திய மத்திய அரசைப்பணிய வைக்கும் வரையில் தமிழ்நாட்டு மக்கள் தெடார்ந்து போராடுவோம். இந்திய அரசு நினைத்தால் சிங்களவர்களுக்கு உதவுவதை முதலில் நிறுத்த முடியும். சிங்களவர்களுக்கு உதவுவதை நிறுத்தினாலேயே, அவர்களுக்கு ஒரு வித அச்சம் உருவாகிவிடும். எச்சரிக்கை விடுத்தால், சிங்கள அரசு இந்திய அரசுக்கு உடனடியாக பணிந்துவிடும். இனப்படுகொலையை நிறுத்தும். ஆகவேதான் இந்திய அரசின் போக்கை மாற்றுகிற முயற்சியில் தமிழக மக்கள் ஈடுபட்டு வருகிறாhகள்.

கே : தமிழீழ விடுதலைப் புலிகளைக் காபபாற்றுவதற்கே தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் முயற்சிப்பதாக இலங்கை தரப்பில் குற்றம் சுமத்தப்படுகிறதே?

ப : இது மேலேழுந்தவாரியான குற்றச்சாட்டு. தமிழீழ விடுதலைப் புலிகளைக் காப்பற்றுவதற்கு தமிழ்நாட்டு மக்கள் போராட வேண்டும் என்கிற தேவையே இல்லை. அவர்கள் தங்களைக் காத்துக் கொள்வதுடன், லட்சக்கணக்கான மக்களையும் காப்பாற்றிக் கொண்டு, பல அரசுகளை எதிர்த்துப் போரடும் அளவுக்கு 25 ஆண்டு காலமா தாக்குப் பிடித்து வருகிற அளவுக்கு, வலிமை பெற்றிருக்கிறார்கள். எனவே தமிழ்நாட்டு மக்கள் வெறும் கூச்சல் எழுப்பி, தமிழீழ விடுதலைப் புலிகளைப் பாதுகாத்து விடப் போவதில்லை. அப்பாவி மக்கள் மீது நடத்தப்படுகிற விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நிறுத்தவும், இனப்படுகொலையை தடுக்கவுமே, இந்தக் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. இது சிங்களவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இதை திசை திருப்ப முயறசிக்கிறார்கள். இனப் படுகொலையை மூடி மறைக்கப் பாhக்கிறார்கள்.

தமிழகம் கொந்தளித்திருப்பதனால், சர்வதேச அரங்கில் சிங்களவர்களின் முகத்திரை கிழிக்கப்படுகிறது. அவர்களின் இனவெறி அம்பலமாகிறது. அதனால் ஏதோ தமிழீழ புலிகளுக்கு ஆதரவாகத்தான் தமிழகத்தில் போரட்டடங்கள் நடக்கின்றன, மற்றப்படி ஈழத்தமிழ் மக்களுக்குகாக அல்ல என்பது போல ஒரு வித மாயையை உருவாக்குகிறார்கள். இங்கே நடப்பது இனப்படுகொலைதான் என்பதை தமிழக மக்களும் சர்வதேச சமூகமும் நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றன. எனவே அத்தகைய அவதூறுகளை யாரும் நம்பப் போவதில்லை.

கே : இந்தியாவில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கும் போது இலங்கைப் பிரச்சினையில் இந்தியா ஏன் தலையிட வேண்டும் என கேட்கப்படுகின்றதே?

ப : ஈழப் பிரச்சினை என்பதே இந்தியப் பிரச்சினைதான். ஈழத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் இந்தியாவில் வாழ்கின்ற தமிழ் மக்களின் ரத்த உறவினர்கள் என்பதும், தேசிய இன உறவினர் என்பதும் உலகறிந்த உண்மை. ஆகவே தமிழ் நாட்டில் வாழ்கின்ற ஆறரைக் கோடி தமிழர்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்துகிற போது, அது இந்தியாவின் பிரச்சினைதான். தமிழ்நாட்டில் இனப்படுகொலைக்கு எதிராகப் போராட்டம் நடக்கிறது என்றால் அது இந்தியாவின் சட்டத்தின் ஒழுங்கை பாதிக்கிறது. இந்தியாவின் அமைதியையும் பாதிக்கும். எனவே இது இந்தியப் பிரச்சினைதானே தவிர, வெறும் தமிழர் பிரச்சினை என்று கூறி ஒதுக்கிவிட முடியாது. எனவே இந்தியப் பிரச்சினையில்தான் மத்திய அரசை தலையிடச் சொல்லி கேட்கிறோம்.

கே : தமிழக முதல்வர் ஏற்பாடு செய்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கு பற்றாத கட்சிகளை இவ்விடயத்தில் எவ்வாறு அரவணைத்தச் செயல்படப் போகிறீர்கள்?

ப : அனைத்துக் கட்சி கூட்டத்;தில்; அ.தி.மு.க., ம.தி.மு.க., பாஜ.க உள்ளட் கட்சிகள் கலந்துகொள்ளாதது தமிழ் இனத்தின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவித்திருப்பதாகக் கருத வேண்டியுள்ளது. அதில் அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க. ஆகிய கடசிகள கலந்து கொள்ளாதது ஒன்றும் அதிர்ச்சிக்குரியது அல்ல. ஆனால் காலங்காலமாய் தமிழீழ விடுதலையை ஆதரித்து வருகிற ம.தி.மு.க.வும் கலந்து கொள்ளவில்ல என்பதுதான் வேதனைக்குரியது. அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருசில தலைவர்கள், கலந்து கொள்ளாத அரசியல் கட்சிகளை விமர்சித்தபோது, கடுமையாகக் கண்டித்தபோது, கலைஞர் குறுக்கிட்டு, 'அவர்கள் கலந்துகொள்ளாததற்கு காரணம் என்மீதுள்ள முரண்பாடுதானே, தவிர, ஈழத் தமிழர்களுக்கு எதிரானது அல்ல வராதவர்களும் கூட தமிழீழத்தை, ஈழத்தமிழர்களை ஆதரிக்கக் கூடியவர்கள்தான். அவர்களை விமர்சிக்க வேண்டாம்' என்று மிகப் பெருந்தன்மையுடன் குறிப்பிட்டார். ஆக எல்லோரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதிலே முதலவர் கவனமாக இருக்கிறார் என்பதை அறிய முடிந்தது. உள்ளபடியே இந்தச் சூழலில் அவர்கள் கலந்து கொள்ளாது தமிழ் இனத்திற்கு எதிராகச் செயத துரோகமாகவே கருத நேரிடுகிறது.

காவிரிநீர்ப் பிரச்சனை, சேதுக்கால்வாய்த்திட்டம் தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டங்களில் எல்லாம் கலந்து கொண்ட இந்த நான்கு கட்சிகளும் ஈழத் தமிழர் விஷயத்திலே புறக்கணிப்பு நடவடிக்கை மேற்கொண்டதை சகித்துக் கொள்ள முடியாத செயலாகவே கருதுகிறேன்.

கே : தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றா விட்டால் தமிழகத்தின் 40 நாடாளுமன்ற உறுப்பினாகளும் ராஜினாமா செய்வார்கள் என்பது உண்மைதானா?

ப : இதில் எவ்வித ஐயமும் தேவையில்லை என்று நான் கருதுகிறேன். ஏனென்றால் அ.தி.மு.க.வில் நாடாளுன்ற உறுப்பினர்கள் யாருமில்லை. ம.தி.மு.க.வில் இருவர் இருக்கிறார்கள் என்றால், அவர்களும் ராஜினாமா செய்வார்கள் என்று வைகோ உறுதியளித்திருக்கிறார். ஆகவே நாற்பது நாடாளுமன்ற உறப்பினர்களும் ராஜனாமா செய்வதற்கு எந்தத் தடங்கலும் ஏற்படாது.

ராஜ்யசபா உறுப்பினரான கனிமொழி அவர்கள் எல்லோரையும் முந்திக் கொண்டு தன்னுடைய ராஜினாமாக் கடிதத்தை முதல்வரிடம் சமர்ப்பித்திருப்பது பாராட்டுக்குரியது. ஆக மாநிலங்களைவை உறுப்பினர்களும் ராஜினாமா செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.

ஆனாலும் இந்தச் சிக்கல் எல்லாம் ஏற்படாத வகையிலே விரைந்து இந்திய அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு இனப்படுகொலையை தடுத்து நிறுத்தும் என்று நாங்கள் பெரிதும் நம்புகிறோம்.

நன்றி : வீரகேசரி வார வெளியீடு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.