Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வைகோ கைது: கலைஞரின் உபாயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ கைது: கலைஞரின் உபாயம்!

[26 - October - 2008]

அபிஜித்

சமீபகாலமாக தமிழகத்தில் ஏற்பட்ட ஈழ அனுதாப எழுச்சியைக் கண்டு அரண்டு போயிருந்த தமிழகத்தின் பார்ப்பன சக்திகள் சென்றவாரம் வைகோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் உசாரடைந்துள்ளன.

தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடையான பிரதான சக்தி இந்தப் பார்ப்பனியமே என்பது 1930 களிலேயே தந்தை பெரியாரால் உணரப்பட்டது.

அதனால் தான் "பாம்பையும் பார்ப்பனனையும் கண்டால் பாம்பைக் கொல்லாதே; பார்ப்பனனைக்கொல்" எனப் பெரியார் கூறி இருந்தார். பிராமணரான ஜெயலலிதாவை ஆட்சிக்கதிரையில் நிரந்தரமாக இருத்தி அழகு பார்ப்பதே இந்தப்பார்ப்பனியத்தின் இலட்சியம். துக்ளக் ஆசிரியர் சோ,சுப்பிரமணியசாமி, ஜெயலலிதா மற்றும் பிராமணப் பத்திரிகைகளான தினமலர், ஹிந்து ஆகியவையே தமிழகத்தில் பிராமணியத்தின் எச்சமாக உள்ள 4 அம்சங்களாகும். ஆரம்பகாலத்தில் தமிழகத்தில் பத்திரிகைகள் என்றால் இந்தப் பிராமண ஆதிக்கப்பீரங்கிகள் மட்டுமேதான் என்ற நிலை இருந்தது. அதாவது தமது ஆதிக்கத்தில் வாசகர்களை வைத்துப்பூட்டி வைத்து பிராமண மேலாதிக்க நிலையை பேண இவர்கள் கடுமையாக முயன்றனர். எனினும் பெரியார், அண்ணா, கலைஞர் என அடுக்கடுக்காக தோன்றிய சீர்திருத்தவாதிகள் இந்த அடிமைத்தளையை உடைத்தெறியலாயினர்.

மிரண்டுபோன பார்ப்பனியம் தமிழகத்தின் பார்ப்பனர்களால் இயலாததை சாதிக்க கர்நாடகத்திலிருந்து இறக்குமதியான பார்ப்பனியமான ஜெயலலிதாவையும் அவரது சினிமாவையும் பயன்படுத்த முனைந்தனர். அதில் ஓரளவு வெற்றியும் கண்டனர். இன்றைய நிலையில் ஏற்கனவே இனி ஒருபோதுமே ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக வரமுடியாத அவலம் உள்ளது. இது பார்ப்பனியத்தால் ஜீரணிக்க முடியாத ஒன்றாகும்.

அப்படியானால் இருதடவை தேர்தல்களில் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றாரே அது எப்படி என்ற கேள்வி எழலாம். தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆள்வது தானே வழமை என்ற கேள்வியையும் கேட்கலாம். மாறி மாறி ஆள்வது என்பது இதுவரை நடந்தது என்னவோ உண்மைதான். இனிமேல் அது நடக்கவே போவதில்லை என்பதும் உண்மையே.

காரணம் 1991 இல் ஜெயலலிதா வென்றது ராஜீவ் கொலையில் அள்ளுண்டே. 2001 இல் வென்றது காங்கிரஸும் கம்யூனிஸ்ட்களும் கண்ணை மூடிக் கொண்டு அவரை ஆதரித்ததால் ஆகும். அந்த தேர்தலில் தி.மு.க.வானது பிஜேபியுடன் கூட்டணி கொண்டதால் சகல நடுநிலைவாத சக்திகளும் தி.மு.க.வை வெறுக்கத் தொடங்கினர். வரலாற்றில் ஒரே ஒருமுறை தான் தி.மு.க.பிஜேபியுடன் உறவு கொண்டது.

நாஸ்திகர்களான தி.மு.க.இவ்வாறு செய்தது பல மட்டங்களில் தி.மு.க.வுக்கு எதிர்ப்பை உண்டாக்கியது. வீரமணி, நெடுமாறன், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், தமிழறிஞர்கள் என பலரும் தி.மு.க.வுக்கு பாடம் கற்பிக்க சபதம் எடுத்துக் கொண்டனர். கம்யூனிஸ்ட்களோ தி.மு.க.வை வீழ்த்த கூட்டணியை உறுதியாக அமைத்துக் கொடுத்தனர். இவற்றின் ஒட்டு மொத்தப்பலனே 2001 தேர்தலில் ஜெயலலிதாவின் வெற்றியாகும். மற்றப் படி ஜெயலலிதா அந்த தேர்தலில் வெல்வார் என அவர்கூட நம்பியிருக்கவில்லை. பிஜேபியின் மதவாதத்தை சகிக்க முடியாத முற்போக்கு சக்திகள் எல்லாம் தமது பிராமண எதிர்ப்பை தற்காலிகமாக கைவிட்டு; ஜெ;விடம் சரண் புகுந்தனர்.

இப்போதைக்கு அவசரம் மதவாதத்தை ஒழிப்பதே. பிராமணர்களை அழிப்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என இவர்கள் கருதினர். தமிழகத்தின் முற்போக்கு பத்திரிகைகள், திரையுலகில் உள்ள முற்போக்கு சக்திகள் சகலரும் பிஜேபியை ஒழிக்கும் ஒரே நோக்கத்துக்காக ஜெயலலிதாவை ஆதரித்தனர். அவர் இரண்டாம் முறையாக ஆட்சிபீடமேறிய பின்னணி இதுவே. மற்றப்படி ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்த 2 தடவையுமே அவரது சொந்தக்காலில் வெல்லவில்லை என்பதே உண்மை. உண்மையைச் சொன்னால் இந்த 2 தடவையும் வென்ற 160,134 ஆகிய தொகுதிகளை விட 1989 தேர்தலில் ஜெயலலலிதா தனித்து நின்று பெற்ற 32 தொகுதிகளும் மிக சிறந்த சாதனையாகும். காரணம் அப்போது அரசியலுக்கு அவர் புதிது. ஜானகி ராமச்சந்திரன் அணி, மூப்பனாரின் காங்கிரஸ், தி.மு.க.கம்யூனிஸ்ட் என பலமுனைப்போட்டியில் தனித்து நின்று காங்கிரசையும், ஜானகியையும் முந்தி 2 ஆவது இடத்தைப் பிடித்தார். எதிர்க்கட்சித் தலைவராகவும் வந்தார். அவரது இந்த சாதனையை பொறுக்கமுடியாத தி.மு.க.வினர் சட்டசபையில் அவரைத் துகிலுரிந்து அநாகரிகம் புரிந்தமை வரலாறு. தி.மு.க.விற்கு தான் பிஜேபியுடன் கூட்டணி வைத்தது மூலம் பெரும் தவறு புரிந்தோம் என்பது விளங்கியுள்ளது.

இனி ஒரு காலத்தில் கலைஞர் இருக்கும் வரை யாராவது பிஜேபியுடன் தி.மு.க. கூட்டணி வைக்க விரும்பாது. அத்தகைய பாரிய இழப்பு கலைஞருக்கு ஏற்பட்டது. தான் தனித்து சொந்தக்காலில் 2 முறையும் ஆட்சிபீடமேறவில்லை என்பது அம்மாவுக்கும் உறுத்தலாக உள்ளது. எனவே கூடுமானவரை தனித்து நிற்கவே ஜெ சமீப தேர்தல்களில் முயன்றுள்ளார். தான் தனித்து வெல்லமுடியும்.

தன்னுடன் சேர்வதால் ஏனைய கட்சிகளுக்கே இலாபம் என்பதை நிரூபிக்க அவர் பல தடவை முயன்றுள்ளார். ஆனால் தோற்றுத்தான் போயுள்ளார். இந்தப் பின்னணியில் இன்று தமிழகத்தில் எழுந்துள்ள ஈழ ஆதரவு அலை நிச்சயமாக தமிழகத்தின் பார்ப்பனர்கட்கு விரோதமானது என்பது தெளிவு. இந்த எழுச்சியை அடக்க ஹிந்து, தினமலர் போன்ற பத்திரிகைகள் வெகுவாக முயன்றன. ஹிந்து பத்திரிகைகள் சமீபத்தில் மாலினி பார்த்தசாரதி என்பவர் எழுதிய ்சுதமிழ் ஆதிக்க வெறிஎன்ற கட்டுரைக்கு எதிர்ப்புக் காட்டி ஈழ அனுதாபிகள் ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஹிந்துவின் 3000 பிரதிகள் தீயிடப்பட்டன. சோவும் ஜெயலலிதாவை அவசரமாக சந்தித்து அவரை ஈழப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாமெனக் கேட்டுக் கொண்டார். மறுபுறம் சுப்பிரமணியசாமி அறிக்கை மேல் அறிக்கை விட்டு வருகிறார். இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். இலங்கையின் தேர்தல்களில் சிங்கள பேரினவாதக் கட்சிகள்தான் வெற்றி பெறும்.

மாற்று அபிப்பிராயம் கொண்ட விக்ரமபாகு கருணாரட்ன போன்ற சிறுபான்மை அனுதாபிகளான நடுநிலையாளர்களால் வெல்லவே முடியாது. காரணம் இனவாதம் எடுபடுவதுதான். அதேபோல்தான் தமிழகத்தில் சுப்பிரமணியசாமியின் ஜனதாகட்சி தனித்துநின்று செல்லமுடியாது. விக்ரமபாகுவும் சுப்பிரமணியசாமியும் பெரும்பான்மையான வாக்காளர்களினால் அங்கீகரிக்கப்படாத ஒரே வகையினை சேர்ந்தவர்கள். ஒரே வித்தியாசம் விக்ரமபாகு யதார்த்தமான கொள்கைகளை பின்பற்றுபவர் என்பதுதான். சுப்பிரமணியசாமி விடும் அறிக்கைகளை இலங்கைப் பேரினவாத சிங்களப் பத்திரிகைகள் முதல் பக்கத்தில் பிரசுரிக்கின்றன. அப்படியானால் விக்ரமபாகு கருணாரட்ன வெளியிடும் அறிக்கைகளையும் முதல் பக்கத்தில் ஏன் பிரசுரிக்கக்கூடாது? விக்ரமபாகு இலங்கைத் தேர்தலில் தோற்பது சரியாயின் சுப்பிரமணியசாமி இந்திய தேர்தலில் தோற்பதும் நியாயமே. இதேவேளை, இந்திய நாட்டின் இறைமைக்கு விரோதமாக பேசியதாக வைகோவும் ம.தி.மு.க. அவைத் தலைவர் கண்ணப்பனும் சென்றவாரம் கைதுசெய்யப்பட்டனர்.

இது கலைஞரின் பழிவாங்கல் எனக் கூறப்பட்டாலும் அ.தி.மு.க.வையும் ம.தி.மு.க.வையும் சங்கடத்தில் ஆழ்த்தவே கலைஞர் பொறி வைத்துள்ளார் என கருத முடிகிறது. புலி ஆதரவாளரை கைதுசெய் என காட்டுக்கத்தல் போடும் அம்மாவுக்கு பதிலளிக்கும் விதமாக "முதலில் உன் வீட்டுகள் இருக்கும் புலியை கைதுசெய்கிறேன்" என கலைஞர் பதிலளித்துள்ளார். இப்போது ஜெயலலிதா வாயடைத்துப் போயுள்ளார். மேலும்,ஈழத்தமிழருக்கு ஆதரவு என்பது வேறு, புலிகட்கு ஆதரவு என்பது வேறு என்பதை கலைஞர் தெளிவாக விளக்கியுள்ளார். "ஈழத் தமிழரும் புலிகளும் ஒன்றேதான் வேறல்ல" என்பது உள்ளத்தில் இருந்தாலும் வெளியே அதனைச் சொல்ல இந்திய சட்டத்தில் இன்றைக்கு இடமில்லை. எனவே, அவசரப்பட்டு புலிகட்கு வெளிப்படையாக ஆதரவு காட்டுவது சமயோசிதமல்ல. முதலில் ஈழத் தமிழரையும் தமிழக மீனவர் பிரச்சினையையும் முன்வைத்து போராட வேண்டும். அதன் மூலம் இலங்கை அரசை அழுத்த வேண்டும். இலங்கைப் பிரச்சினையில் புலி ஆதரவு, புலியை ஆதரியாது ஈழத் தமிழரை மட்டும் ஆதரிப்பது, இலங்கைஅரசை எதிர்ப்பது என்ற மூன்று அம்சங்கள் உள்ளன. இந்த மூன்றையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக்கொள்ளும் தவறை பலர் புரிகிறார்கள். உதாரணமாக, இலங்கையின் பேரினவாதிகள் ஜெயலலிதா புலி எதிரி என்பதால் தமது ஆதரவாளர் என்று முடிவு கட்டுகின்றனர். ஜெயலலிதா புலி எதிரி சரிதான்.

அதற்காக அவர் நூறு வீதம் இலங்கை பேரினவாதத்தினதும் அரசினதும் ஆதரவாளர் அல்ல. கச்சதீவை இலங்கையிடமிருந்து பெறவேண்டும் என்பதில் அம்மா உறுதியாக உள்ளார். அது இலங்கைக்கு சார்பான கொள்கையா என்ற கேள்வியை சிங்களப் பேரினவாதிகளிடம் கேட்க வேண்டும். "எதிரிக்கு எதிரி எனக்கு நண்பன்" என்ற கோட்பாடு எல்லா இடத்திலும் பொருந்தாது. எனது எதிரியின் எதிரி எனக்கும் எதிரியாக இருக்கலாம். இதுதான் இலங்கை அரசுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையோன நட்பின் நிலை. கலைஞர் தான் ஈழத்தமிழருக்கு மட்டுமே ஆதரவு என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். புலிக்கு ஆதரவாக அவர் இருந்தாலும் அதை வெளியே சொல்ல சட்டத்தில் இடமில்லை. மற்ற கட்சியினர்க்கும் இதே புத்திமதியை கலைஞர் கூறியுள்ளார்.

இதையடுத்து பாட்டாளி மக்கள் கட்சியும் இதேவிதமாக கருத்துக் கூறியுள்ளது. தமிழகத்தின் புத்திஜீவிக் கட்சி என்று தன்னை கூறிக்கொள்ளும் பா.ம.க. இவ்வாறு கூறுவது சரியே. ஆனால், பிராமண ஆதரவு தமிழக பத்திரிகையான தினமலர் "பா.ம.க. ஈழப்பிரச்சினையில் திடீர் பல்டி" என தலையிட்டு இதனைக் கொண்டாடியுள்ளது. உண்மை அதுவல்ல, பா.ம.க ஈழப்பிரச்சினையில் எந்த பல்டியும் அடிக்கவில்லை. கொள்கை மாறவுமில்லை. சட்டத்திலும் மாட்டிக் கொள்ளாது சமயோசிதமாக நடந்துள்ளது; அவ்வளவே.

ஊடகத்துறை தனது தனிப்பட்ட நலன்களை முன்னிட்டு வாசகர்களை தவறாக வழிநடத்துவதற்கு இந்த தினமலர் தலைப்பு சிறந்த உதாரணமாகும்.

http://www.thinakkural.com/news/2008/10/26...s_page60648.htm

அட ஏனப்பு அபிஐpத் தயவு செய்து உங்களுடைய எழுத்து வன்மையின் சிறப்பின் முலமாக ஏற்கனவே எமக்கு தமிழீழம் கடைத்து விட்டது இன்றோ அல்லது நாளைக்கோ ! ஐ.நாவில் கொடியேற்ற திருவிழா மட்டும் தான் மிச்சம் இருக்கிறது ... பிறகு என்ன கோதாரிக்கு கலைஞரை குறை சொல்ல வந்திட்டியள் ??? ...

18 வருடத்திற்குப்பிறகு தமிழகத்தில ஓரு பெரிய மாற்றம் வந்து எமக்கான மிகப் பாரிய ஆதரவு எழுந்து வருகையில் உங்களது ஆய்வுக்கட்டுரையின் திறன் என்ன ??? 18 வருடத்திற்கு பின்பு ஏற்பட்டுள்ள இந்த நிகழ்விற்கு கலைஞரும் தூண்டுகோலாக இருந்து துன்பப்பட்டுக் கொண்டிருக்கிற்ன எம் உறவுகளிற்கு சிறிது மன ஆறுதலையாவது தருகிறது ...அதையை வாய்பாக பயன்படுத்தி அடுத்த கட்டமாக நாம் செய்ய வேண்டியது என்ன எவ்வாறு ? நாமும் தமிழகமும் இணைந்து செயற்பட்டு எமக்கு தேவையான விடுதலையை பெறமுடியும் என்பதன் பற்றிய கருத்துக்களை மன் வையுங்கள் நிச்சமாக நன்றாக இரக்கும் பாராட்ட வடக்கூயதாக இருக்கும் அதை விடுத்து கலைஞர் என்ன செய்தார் அவர் என்ன புடுங்கினார் என்ற கீழ்தரமான வேலைகளை நிறுத்தி ஊடக போராளிகளாக இணையுங்கள் அதை விடுத்து வெண்ணெய் திரள்கிக்ற நேரத்தில் சட்டியை ஊடைக்க முயவாதீர்கள் அதுவும் தமிழ் ஊடக போராளிகள் என்று புலம்பிக் கொண்டு.

இணையவனுக்கு ... தயவு செய்து இவ்வாறன செய்திகளை உங்களிற்கு நீக்க வேண்டும் போல தெரியவில்லையோ ?????

கறுப்பி - தயவு செய்து இன்றைய நிலமையில் இவ்வான ஓரு செய்தி இணைப்பை தவிர்த்திருக்காலம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.