Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துரோகத்துக்குப் பட்டாடை - நீங்களுமா சுபவீ?

Featured Replies

சில பத்தாண்டுகளுக்கு முன்பு ஆரம்பப் பள்ளிகளின் தமிழ்ப் பாடத்தில் இடம்பெற்ற ஒரு சுவிஸ் நாட்டுக் கதை உண்டு. ‘ரிப்வான் விங்கிள்’ என்ற பெயருடைய வேட்டைக்காரன் களைத்துப்போய் ஒரு மரத்தடியில் தூங்கி விடுகிறான். நீண்ட தூக்கத்துக்குப் பின் விழித்துப் பார்க்கும் போது தன் ஆடைகள் யாவும் இற்றுக் கந்தலாகிப் போயிருப்பதையும் முகத்தில் நரைத்துப் போன நீண்டதாடி இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைகிறான்.

அவன் அருகில் துருப்பிடித்த நிலையில் அவனது துப்பாக்கி கிடக்கிறது. ஆனால் எப்போதும் அவனோடு இருக்கும் பிriயமான நாயைக் காணவில்லை. சிரமப்பட்டு எழுந்து தனது கிராமத்தை நோக்கிச் செல்கிறான். அவனது கிராமம் நகரம் போல் காட்சியளிக்கிறது. எப்படியோ தனது வீடு இருந்த இடத்தைக் கணித்து நடக்கிறான். மாறிப் போயிருக்கும் அவ்வீட்டில் வசிப்பவர்களிடம் அவன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும்போது எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன கொள்ளுத் தாத்தாவா? என்று வியப்புறுகின்றனர்.

நீண்ட சோம்பலில் கிடந்து திடீரென விழித்துக் கொள்ளும் இக்கிழவனைப் போல் ஈழம் பற்றிய உணர்வே மரத்துப் போய் மங்கிவிட்ட கலைஞர் கருணாநிதி அவர்கள், ஈழ ஆதரவு எழுச்சி மடை திறந்த வெள்ளமாய்ப் பாயக் கண்டு விழித்துக் கொண்டவர் போல் இருக்கிறார். கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக தில்லியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு சிங்களப் பேனவாத அரசுக்கு எல்லாவிதமான ஆயுதங்களும் உபகரணங்களும் படையாட்களும் அள்ளிக் கொடுத்து சிங்கள இன வெறி கொண்ட இலங்கை அரசின் இராணுவ வெறியாட்டத்துக்கு வலுச் சேர்த்து விட்டது.

மறைந்த பேராசியர் ரேன் முகர்ஜி அவர்கள் இந்திராவைப் பற்றிக் குறிப்பிடும் போது ‘எல்லாம் தெரிந்த சீமாட்டி ஒன்றுமறியாதது போல் பாவனை செய்கிறார்’ என்றார். நான்கு ஆண்டுகளாகவே இலங்கையில் ஈழத்தமிழர் பற்றிய நிலையில், ‘மத்திய அரசின் நிலைதான் என் நிலையும்’ என்று ஓயாமல் பேசிவந்த கருணாநிதி அவர்களுக்கு இப்போது எங்கிருந்து விழிப்பு வந்ததாம்? திராவிடர் கழகத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் கலைஞர் தொலைக்காட்சிக்கு 24.10.2008இல் அளித்த பேட்டி முரசொலி நாளேட்டில் தொடர்ந்து நான்கு நாள் வெளியிடப்பட்டது. ‘எழுவோம், திரள்வோம், ஈழம் காப்போம்’ என்ற குறுநூல் வடிவில் நக்கீரன் வெளியீடாகவும் வந்துள்ளது. சிங்கள அரசின் இன அழிப்புப் போர் அதற்கு எதிரான தமிழீழ விடுதலைப் போர் ஆகியவற்றின் வரலாற்றிலிருந்து சில குறிப்புகளை சுபவீ எடுத்துக் காட்டுகிறார். தமிழகத்தில் தமிழீழ வரலாறு குறித்து மக்களுக்குக் கல்வி புகட்டும் இத்தகைய முயற்சிகள், பேட்டிகள், வெளியீடுகள் வரவேற்க வேண்டும்.

ஒப்பளவில் குறுகிய நேரத்திற்குட்பட்டத் தொலைக்காட்சிப் பேட்டிகளிலோ, குறுநூல்களிலோ ஒரு நீண்ட வரலாற்றை - அதில் நிறைந்திருக்கும் உண்மைகளைப் பதிவு செய்திட இயலாததுதான். வரலாற்று உண்மைகளை நன்கறிந்த சுபவீ போன்றவர்கள் அவற்றில் சிலவற்றை மட்டும் மறைக்கவோ திரிக்கவோ கூடாது என்பதே நம் எதிர்பார்ப்பு. சுபவீ அவர்கள் தமிழ்த் தேசியத்திலும் இன்னும் கூடுதலாகவே தமிழீழ ஆதரவிலும் ஆர்வம் கொண்டவர். தமிழ் மக்களிடையே ஈழ ஆதரவு உணர்வு மங்காமல் காத்ததில் அவரது பரப்புரைக்கும் பங்குண்டு என்பதை யாராலும் மறுக்க இயலாது. தமிழீழ ஆதரவுக்காகவே பொடாச் சிறை ஏகியவர் அவர்.

அவரது பாசத்தில் பழுது காண்பது நம் வேலை இல்லை. ஆனால் உண்மைகளைக் காண விடாமல், கண்டாலும் வெளியே சொல்ல விடாமல் பாசம் கண்ணை மறைத்து விடக் கூடாதே என்பது நம் கவலை. இக்குறுநூலில் ‘நன்றி’ என்ற செய்தியில் அவரே ‘என்றும் என் பாசத்துக்குய தலைவர் கலைஞர்’ என்கிறார். துரோகங்களையும் வஞ்கச் சூழ்ச்சிகளையும் திசை திருப்பும் இழிவான தந்திரங்களையும் தாண்டி இன்று தமிழீழ ஆதரவு அலை எழுந்து கொண்டிருக்கும் வேளையில் பச்சைத் துரோகத்துக்குப் பட்டாடை சுற்றும் வேலையை சுபவீ செய்யக் கூடாது. எளிதில் உணர்ச்சி வயப்படுவதும் பிறகு மறந்து விடுவதுமான தமிழினத்தின் பலவீனத்தைப் பயன்படுத்திப் பதவி அரசியலில் குப்பை கொட்டி வருகிற ஒருவரைப் புனிதராகக் காட்ட முயலக் கூடாது. போராட்ட வரலாற்றை இழந்துவிட்டு அரசியல் வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவரைத் தூக்கிப் பிடித்து நிறுத்த முயலக் கூடாது.

சுபவீ இக்குறு நூலின் நோக்கம் பற்றி எழுதியுள்ள செய்தியில் இரு அம்சங்களைக் குறிப்பிடுகிறார். ஒன்று ஈழச் சிக்கல் என்னவென்றே தெரியாமல் (ரிப்வான்விங்கிளைப் போல்) தூங்கிக் கொண்டிருக்கும் தமிழர்களை எழுப்புவது. மற்றொன்று ‘தூங்குவது போல நடிப்போரை (இந்திரா பற்றி முகர்ஜி குறிப்பிட்டது போல்) ஒன்றும் செய்ய முடியாது என்பதை விளக்குவது.’ ஆனால் இந்நூலைப் படித்து முடிக்கும்போது இவ்விரு நோக்கங்களுமே நிறைவேறவில்லை என்ற ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஆனால்... ஒரு குவளைப் பாலில் ஒரு சொட்டு நஞ்சு, இல்லையில்லை, ஒரு குவளை நஞ்சில் ஒரு சொட்டுப் பால் என்ற எண்ணமே மேலோங்குகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழீழ மக்களுக்கும் சேர்த்துச் செய்யும் இந்தத் ‘தீங்கை’ நாம் கண்டு கொள்ளாதிருக்க முடியாது. இந்த நமது நோக்கத்துக்காக இக்குறுநூலில் உள்ள இரண்டொரு செய்திகளை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

‘...1956ம் ஆண்டில் சிதம்பரத்தில் இயற்றப்பட்ட தீர்மானம்...’ பிறகு ‘1958ல் ஸ்ரீ என்ற பெயரால் ஏற்பட்ட கலவரத்தை விளக்கித் தமிழகத்திலே கலைஞர் செய்த பிரச்சாரம்...’ என சுபவீ குறிப்பிடுகிறார். 50ஆம் ஆண்டுகளிலும் 60ஆம் ஆண்டுகளின் பாதியிலும் அண்ணா தலைமையிலான தி.மு.க.வின் அரசியல் தில்லி ஏகாதிபத்திய எதிர்ப்பை மையமாகக் கொண்டிருந்தது. தமிழ் உணர்வை வளர்ப்பதில் தி.மு.க. ஆக்கப்பூர்வப் பங்காற்றியது என்பதை மறுக்க முடியாது. இந்த அரசியலில் கருணாநிதிக்கும் முக்கியப் பங்கிருந்தது. சுபவீ வேறு இரு நிகழ்வுகளைப் பிற்காலத்தியவையாகக் குறிப்பிடுகிறார். ஒன்று ‘கலைஞர் சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தது.’ மற்றொன்று ‘ஈழத்தில் படுகொலை செய்து தமிழர்களை அழித்த இராணுவத்தை வரவேற்கப் போகமாட்டேன்’ என்று முதல்வராக இருந்த கருணாநிதி மறுத்ததையும் பெருமைப்படக் குறிப்பிட்டுள்ளார். முதல் நிகழ்வு நடந்ததாகக் கூறும் காலப்பகுதியில், எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வராக இருந்து எடுத்த ஈழ ஆதரவு நிலையை விடத் தனது ஆதரவு நிலை மேலோங்கியது என்பதைக் காட்டத்தான் கருணாநிதி பதவி விலகினார் என்பது அக்காலத்தைத் திரும்பிப் பார்த்து நினைவுபடுத்திக் கொள்பவர்களுக்குத் தெயும்.

எம்.ஜி.ஆர் ‘கடையடைப்பு’ என்றால் கருணாநிதி ‘ரயில் மறியல்’ எனத் தன்னிச்சையாக அறிவிப்பார். எம்.ஜி.ஆர். எல்லாம் தழுவிய ‘பொது வேலை நிறுத்தம்’ என்றால், கருணாநிதி மட்டும் ‘விமான மறியல்’ என்பார். சட்டமன்றத்துக்கு அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமைச்சர்கள் அனைவரும் கருப்புச் சட்டைதான் அணிந்துவர வேண்டும் என்று எம்.ஜி.ஆர். சொன்னால் கருணாநிதி சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறப்பதாக அறிவிப்பார். இப்படி எம்.ஜி.ஆன் ஈழ ஆதரவுச் செயல்பாட்டுக்கு ஏட்டிக்குப் போட்டியாக செயல்பட்டு, ஒன்றுபடுவது போலப் பாவனை செய்து வேற்றுமையை வெளிப்படுத்துவார்.

பாசாங்கு செய்வது, பீதி கொள்வது போல் நடிப்பது, பாவனையாக நடந்து கொள்வது, இரட்டைப் பேச்சு இவையெல்லாம் கருணாநிதி அவர்களின் அரசியல் நடைமுறையில் மேலோங்கிய தன்மைகள். ஆகவேதான் அவர் இராசதந்தி! ‘அமைதிப்படை’ என்ற பெயரால் ஈழத்தில் தமிழினப் படுகொலை புரிந்து தமிழீழத் தேசிய இராணுவமான ஈழப் புலிகளால் தோற்கடிக்கப்பட்டு அவமானத்துடன் திரும்பிய இந்திய இராணுவத்தை கருணாநிதி வரவேற்க மறுத்தது பற்றி சுபவீ பெருமையின் உச்சிக்கே போய்க் கூவுகிறார். கருணாநிதி இவ்வாறு ‘துணிவுபட’க் கூறிய காலத்தில் மத்தியில் வி.பி.சிங் தலைமையிலான (கருணாநிதி ஆதரவு) ஆட்சி நடந்து கொண்டிருந்தது. பாதுகாப்பான சூழல் நிலவியதான கட்டத்தில் இப்படிப் பேசியவர் அடுத்த சில மாதங்களிலேயே காங்கிரஸ் ஆதரவு பெற்ற சந்திரசேகர் ஆட்சிக்கு வந்தவுடன் நடுங்கிப் போய் விட்டார். ‘இந்திய இராணுவத்தை வரவேற்க முதல்வராயிருந்த கருணாநிதி ஏன் போகவில்லை?’ என்ற கேள்வி தில்லியில் கிளம்பியவுடனே அடித்தார் ஓர் அந்தர்பல்டி.

‘...அய்யோ நான் இந்திய இராணுவத்தை அவமதிக்கவில்லை; மாறாக, இந்திய இராணுவத்தைச் சேர்ந்த பலநூறு பேரைப் பலிகொடுத்து சோகத்துடன் வந்த நமது இராணுவத்தைப் பார்க்க வருத்தமாக இருந்தது. அதன் காரணமாகத்தான் வரவேற்கப் போகவில்லை’ என்றார். இருந்தாலும் காங்கிரசார் அவரை மன்னிக்கத் தயால்லை. பாதுகாப்பான சூழ்நிலையில் எடுக்கும் ஒரு நிலைப்பாட்டைப் பாதுகாப்பற்ற சூழலில் கைவிட்டு ஓடி விடுவது, அல்லது திருத்திப் பேசி இரட்டை வேடமிடுவது... இதுதானே நடந்தது. சுபவீ ஏன் இதனை மறைக்கப் பார்க்கிறார்? “யாழ்ப்பாணத்தில் 5 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்த போது கருணாநிதி மிகப் பெரிய கருஞ்சட்டை ஊர்வலத்தை நடத்தினார்” என்கிறார் சுபவீ (பக்கம் 47). அப்போது அவர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தார்.

அது சரி... 1996ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் என்ன நடந்தது? முதல்வரானவுடன் அவர் போட்ட முதல் ஆணை, காவல்துறை கூடுதல் பொறுப்பு வகித்த தேவாரத்தைப் பதவி நீக்கம் செய்தது, அடுத்த காயம் தோழர் மணியரசனையும் இதே சுபவீயையும் சிறைக்குள் தள்ள ஆணையிட்டதுதான். இந்தக் கைது எதற்காக? தமிழீழ மக்களுடைய விடுதலைக்கு ஆதரவு தெரிவித்து ஒரு கருத்தரங்கில் பேசியதற்காகத்தான்! என்னே கலைஞன் தமிழீழப் பற்று! கலைஞர் பின்னால் திரண்டு எழ அறைகூவல் விடுக்கும் சுபவீ இதை எப்படி மறந்தார்? அல்லது மறைத்தார்? சுபவீ குறிப்பிடும் இதே காலத்தில் முதல்வராக இருந்த கருணாநிதி செய்த மிகப் பெரிய வஞ்சகத்தை - எப்படி நம்ப வைத்துக் கழுத்தறுத்தார் என்பதை நாம் மறக்கவில்லை. அது என்ன?

95இன் இறுதியில் யாழ் மக்களின் இடப்பெயர்ச்சி நிகழ்ந்தபோது அதனையொட்டி அம்மக்கள்பட்ட துன்பங்களையும், இடைவிடாது தமிழீழ மக்கள் மீது பொழிந்த குண்டுவீச்சையும் கண்டித்துப் பொது வேலைநிறுத்தம் செய்வது, அதற்குத் தமிழக அரசின் ஆதரவைக் கோருவது என்று திராவிடர் கழகம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் முடிவு செய்தன. அம்முடிவின் அடிப்படையில் (96ஆம் ஆண்டின் முதல் மாதங்களில்) ஆசியர் வீரமணியும், பழ. நெடுமாறன் அவர்களும் கருணாநிதியைச் சந்தித்தனர். ‘பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு உண்டு’ என்று உறுதி கூறினார் முதல்வர். ‘அரசின் ஆதரவு இல்லையென்றால் வேலை நிறுத்தம் முழு வெற்றியைப் பெற முடியாது’ என்பதையும், எனவே ‘முதல்வர் இந்த வேலைநிறுத்தத்துக்கு வசதிபடும் ஒரு தேதியைக் கூறினால் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்’ என்றும் தலைவர்கள் கேட்டனர். முதல்வரோ, ‘இல்லை இல்லை, நீங்கள் குறிப்பிட்ட தேதியிலேயே நடத்தி விடலாம்’ என்று கூறிவிட்டார்.

பொது வேலைநிறுத்தம் பற்றிய செய்திகள், அறிக்கைகள், ஊடகங்கள் வாயிலாக வெளியிடவும் பட்டது. அமைப்புகளும் வேலை நிறுத்த ஆதரவுப் பரப்புரைகளைப் பல வடிவங்களில் நடைமுறைப் படுத்தவும் தொடங்கின. வேலைநிறுத்த நாள் நெருங்கிக் கொண்டிருந்த போது நெடுமாறன் அவர்கள் வேலைநிறுத்தம் பற்றிய அரசின் அறிவிப்பு ஒன்றை முதல்வர் வெளியிடும்படி கேட்டார்; முதல்வர் ‘மதுரையில் சபாநாயகர் பழனிவேல் ராசனை சந்தித்துப் பேசுமாறு’ சொன்னார். இப்படிக் கூறிய அதே நாளில் காங்கிரசின் வாழப்பாடி ராமமூர்த்தியின் மூலமாக ‘வேலைநிறுத்த எதிர்ப்பு’ அறிக்கையை வெளியிடச் செய்தார். அடுத்து மார்க்சிஸ்ட் கட்சியும் எதிர்த்து அறிக்கை விட்டது. எதிர்ப்பு அறிக்கைகளைக் காரணமாக வைத்து, ‘பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு இல்லை’ என்ற அரசு அறிவிப்பைக் கருணாநிதி வெளியிட்டார்.

வேலைநிறுத்தத்துக்காக அறிவிக்கப்பட்ட தேதிக்கு ஓரு நாள்கள் இருக்கும் போதுதான் இந்தத் துரோகச் செயல்களைக் கருணாநிதி செய்தார். வேறுவழியின்றி ‘வேலை நிறுத்தம் நடக்கும்’ என ஆதரவு அமைப்புகள் அறிவித்தன. பா.ம.க., ம.தி.மு.க., ஆகிய கட்சிகள் அளித்த ஆதரவுடன் போராட்டம் நடைபெற்றது. வட மாவட்டங்கள் ஒன்றிரண்டில் தவிர போராட்டம் தோல்வியில் முடிந்தது. ஆனாலும் புதுவை மக்கள் முழு அளவில் வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்தார்கள். இதன் விளைவு என்ன தெரியுமா? தமிழர் விரோத, தமிழீழ விரோத எண்ணம் கொண்ட சக்திகள் எல்லாம் கேலியும் கிண்டலும் செய்தன. எல்லாவற்றுக்கும் உச்ச கட்டமாக கொழும்புவில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் சந்திரிகா, ‘தமிழ்நாட்டு மக்கள் ஈழத்தமிழர் போராட்டத்தை ஆதக்கவில்லை என்பது வெளிப்பட்டு விட்டது’ என்று மகிழ்ச்சி பொங்கக் கூறியதுடன் முதல்வர் கருணாநிதியையும் வெகுவாகப் பாராட்டினார். வரலாற்றில் இவற்றையெல்லாம் மறந்துவிட வேண்டும் என்று சுபவீ நினைக்கிறாரா?

அண்மைக்காலத்தில் அக்டோபர் 2இல் இந்தியப் பொதுவுடமைக் கட்சி ஒருங்கிணைத்த உண்ணாநிலைப் போராட்டமும், செயலலிதா அறிவித்த கண்டன அறிக்கையும் கலைஞன் உறக்கத்தைக் கலைத்தன. திடீரென மயிலை மாங்கொல்லையில் ‘ஈழம் பற்றிய தன்னிலை விளக்கக் கூட்டம்’ என அறிவித்தார். அக்கூட்டத்திலும் கூட, விடுதலைப் புலிகள் நடத்திய ‘சகோதரப் படுகொலையே ஈழ விடியலுக்கு தடை என்பது போல் நஞ்சு கக்கினார். தமிழீழ விரோத காங்கிரஸ் தலைமையைத் தனது பேச்சின் மூலம் மனம் குளிரச் செய்தார்.

‘தமிழர்களின் உரிமைகளை மீட்கப் போவதாகக் கூறிப் புறப்பட்டவர்கள் சக போராளிகளைக் கொன்று தங்களிருவருக்கும் சேர்த்துக் காங்கிரீட்டில் கல்லறைகட்டி வழிபடுகிறார்கள்’ என்று பேசி மாவீரர்களைக் கொச்சைப்படுத்தினாரே, கருணாநிதி, இதை நீங்களும் ஏற்றுக் கொள்கிறீர்களா சுபவீ? அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல் அறிவிப்பைப் புரட்சியின் உச்சம் என்பதுபோல் பெருமை பேசுகிறார் சுபவீ (பக்.49-0). அதனால் இந்த விலகல் நாடகம் எப்படி முடிந்தது என்பதைப் பார்த்து உலகமே கைகொட்டி சித்தது ஒருபுறமிருக்க, இந்த விலகல் அறிவிப்பு வந்த மறுநாளே, மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன் தெளிவாக ஒன்றைக் கூறினார். ‘‘பார்த்துக் கொண்டேயிருங்கள் அந்த விலகல் கெடு தேதி நெருங்கி வரும்போதே மத்திய அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது என்று கூறி விலகல் இல்லை என அறிவித்து விடுவார்”, என்றார். அது அப்படியே நடந்தது.

தமிழீழ மக்களின் துயருக்கான உண்மைக் குற்றவாளிகளை அடையாளப்படுத்தியமைக்காக, மதிமுக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர், திரைப்பட இயக்குநர்கள் சீமான், அமீர் கைது செய்யப்பட்டனர். சோனியா - ராகுல் கூட்டணியினருக்குத் தனது விசுவாசத்தை இவ்வழியில் கருணாநிதி தெவித்துக் கொண்டார். இக்குறுநூலில் துரோகத்தை மறைக்கும் செய்திகளே மலிந்து கிடக்கின்றன. எல்லாவற்றிலும் அருவருக்கத்தக்கது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் என்ற தமிழினப்பகை வரைத் தமிழின ஆதரவாளரைப் போல் காட்ட சுபவீ செய்யும் முயற்சியே. யார் இந்த எம்.கே. நாராயணன்? இங்குள்ள நாம் என்ன சொல்கிறோம் என்பதைவிடத் தமிழீழ ஆட்சியாளர்கள் இந்த நாராயணன் பற்றி என்ன மதிப்பீடு செய்துள்ளார்கள் என்பதே முக்கியம்.

1982இலேயே இந்திய உளவுத் துறை அதிகாரியாக இந்த மலையாளி இருக்கும்போது சென்னையில் நடைபெற்ற துப்பாக்கி மோதலையொட்டி பிரபாகரன் கைது செய்யப்படுகிறார். அப்போது வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த நாராயணனுக்கு இச்செய்தி தெரிந்து விடுகிறது. அவர் அங்கிருந்தபடியே தமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குநராக இருந்த மோகன்தாசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘பிரபாகரனைப் பிணையில் விட்டு விடாதீர்கள். அவரைக் கொழும்பு விசாரணைக்கு அனுப்ப வேண்டும்’ என்று கூறி அவசர அவசரமாகத் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு ஓடி வருகிறார். இவரது இந்தச் சதி நோக்கத்தைப் புரிந்துகொண்ட மோகன்தாஸ் முதல்வர் எம்.ஜி.ஆடம் கூற, முதல்வர் அம்முயற்சியைத் தடுத்து நிறுத்தி விடுகிறார்.

இப்படித் தமிழீழ மக்கள்பால் வெறுப்புக் கொண்ட, குறிப்பாக புலித் தலைமை மீது ஆழமான தீரா வெறுப்புக் கொண்ட ஒருவர் உயர் பதவி பெற்றுப் பிரதமரின் ஆலோசகராகக் கொழும்புவுக்கு வந்து போவது மிகப் பெரிய ஆபத்தாகும் என்று அவர்கள் எச்சரித்தனர். தமிழீழ ஆதரவுத் தலைவர்கள் மட்டுமல்ல, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தமிழகச் செயலாளர் தோழர் தா. பாண்டியனே இந்த நபரை ஈழப் பிரச்சினையைக் கையாள விடாதீர்கள் என்று அறிவிப்புச் செய்தார். சுபவீயால் ‘ஞானஸ்நானம்’ கொடுக்கப்பட்டிருக்கும் இந்த நாராயணன்தான், சோனியாவின் நம்பிக்கைக்குரியவராக இப்போது இருந்து கொண்டு, அயலுறவுத் துறையைச் சேர்ந்த சிவசங்கர மேனனைக் கூட்டாளியாக்கிக் கொண்டு தமிழீழ விடுதலைக்கு எதிராகச் செயல்படுகிறார்.

சோனியா - ராகுல் - மன்மோகன் குழுவின் ஆலோசனைப்படி, எம்.கே. நாராயணன் - சிவசங்கர மேனன், ஏ.கே. அந்தோணி என்ற மலையாளிகள் குழு இணைந்து இந்த நான்காண்டு களில் ஈழத் தமிழர்களின் இன அழிப்புக்காக விடுதலைப் புலிகளை எப்படியும் தோற்கடித்து விடவேண்டும் என்ற வெறியுடன் செயல்படுவது உலகமறிந்த செய்தி. தில்லியில் ஆலோசனை கலந்து விட்டுச் சென்னைக்கு வந்து முதல்வர் கருணாநிதியைச் சந்திப்பது, பிறகு கொழும்புக்குப் பயணம் செய்வது, அங்கிருந்து சென்னைக்கு வந்து முதல்வரைச் சந்திப்பது, பின் தில்லி செல்வது என்ற ‘சதிப்பயணம்’ நடந்ததை சுபவீ அறிவாரா? சிங்கள இராணுவத் தளபதிகள் தில்லி வரவும் அவர்களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து இந்தியப் படைத் தளபதிகளுடன் கலந்து ஆலோசிப்பது, பின்பு இந்திய இராணுவ ஆலோசகர்கள், தளபதிகள் கொழும்பு செல்வது, தொகை தொகையான நவீன ஆயுதங்களைக் கப்பலில் அனுப்புவது... இவையெல்லாம் எம்.கே. நாராயணனின் மேற்பார்வையில் நடந்தவைதாம்!

மதுரை மாவட்டம் மேலூல் சோதனைச் சாவடியில் பிடிபட்ட இந்திய இராணுவ சாதனங்கள் நிறைந்த வாகனங்கள் தூத்துக்குடி சென்று அங்கிருந்து சிங்களக் கடற்படைக்குச் சென்றதும் அம்பலமான உண்மைதானே! 87 - 89இல் இந்தியப் படைகளுடன் புலிகள் போட்ட காலத்தில் கூட இல்லாத கடலோரக் காவல் படை இந்த இரண்டு ஆண்டுகளில் பெருகி இந்தியக் கடற்படையின் முழுபலமும் நாகை முதல் தூத்துக்குடி கடல்வரை நிறுத்தப்பட்டுள்ளதும், விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கொண்டு வந்த மூன்று கப்பல்களைத் தாக்கி மூழ்கடித்ததும் இந்தியக் கடற்படையின் உதவியுடன் நடை பெற்றதே. இன்றும் கூட கடல்புலிகளின் நடமாட்டத்தைச் சிங்களப் படைக்குக் காட்டிக் கொடுக்கும் செயலை இந்தியக் கடற்படை செவ்வனே செய்து வருகிறதே! சுபவீக்கு இதெல்லாம் தெயாதா?

இவை அனைத்தும் தில்லி அரசு கருணாநிதியுடன் செய்து கொண்ட ரகசிய ஒப்பந்தம் தானே! இதன் கதாநாயகனே நாராயணன்தானே! ஆனால், சுபவீயோ இந்திய சிங்களச் சதியை மூடி மறைத்து ஏதோ தமிழருக்கு சேவை செய்யாத நாராயணனை நிறுத்தப் பார்க்கிறார். தமிழீழ மக்கள் மட்டுமல்ல, உலகத் தமிழனமே இதை ஏற்காது. இந்திய அரசு அசைந்து கொடுப்பதாகவும், சிங்கள அரசு போரை நிறுத்த மன்மோகன் வலியுறுத்தியதால் இராசபட்சே நடுநடுங்கிப் போயிருப்பதாகவும் கதையளக்கிறார் சுபவீ! தமிழீழத்தின் மீதான இனப்படுகொலைப் போரை என்றுமில்லாதவாறு மிகப்பெரிய அளவில் நடத்த முழுஅளவில் பின்புலமாக நிற்பதே தில்லி மைய அரசுதானே? இந்த உண்மையை சோனியாவும், மன்மோகன்சிங்கும், கருணாநிதியும் மறைக்கலாம். நீங்களுமா சுபவீ?

வெளியுறவுக் கொள்கையில் ஈழத் தமிழருக்குச் சாதகமான மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாகக் கூறும் சுபவீ தன்னையும் ஏமாற்றிக் கொண்டு பிறரையும் முட்டாளாக்க முயல்கிறார். தமிழீழம் பிறப்பதை கொழும்பே அனுமதித்தாலும், தேசிய இன ஒடுக்குமுறையாளனாக இருக்கும் தில்லி வல்லாதிக்கம் அனுமதிக்காது என்று 1972லேயே ஈழத்துப் போராளி சிவக்குமாரன் கூறிவிட்டுச் சென்றது சுபவீக்குத் தெயாதா? கொழும்பு எண்ணெய்க் கிடங்குகள் புலிகளின் வீரமிக்க செயலால் அழிக்கப்பட்ட போது அடுத்த நிமிடமே தீயை அணைக்க நுரை அனுப்பியது நரசிம்மராவின் அரசாங்கம். ஆனையிறவைத் தகர்த்து யாழ்ப்பாணத்தைச் சுற்றி வளைத்த புலிகளிடம் சிக்கிய 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்களப் படைகளைப் பாதுகாக்கக் கப்பல் படைகளை அனுப்பியது வாஜ்பேய் அரசாங்கம்.

தமிழ்த் தேசிய அரசியலிலும் நிலைத்து நின்று போராடாமல் தமிழீழச் சிக்கலுக்கும் நேர்மையான வழியில் போராட மறுத்து பதவி வெறிபிடித்த ஒரு தலைவருக்கு, அவரது துரோகத்துக்கு வக்காலத்து வாங்கும் வேலையைச் செய்யும் சுபவீயைக் கண்டு வருந்துகிறோம். நரி செத்த பின்பு கூட அதன் கண்கள் கோழிக்கூண்டைப் பார்த்தபடி இருக்குமாம். பதவிக்காகத் தமிழீழ மக்களை மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும் விட்டுக் கொடுப்பவர்தான் கருணாநிதி. இறுதியாக, வரலாறு கருத்தரித்த தமிழீழம் என்ற குழந்தை பிறக்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் குழந்தையைக் கருவிலேயே அழிக்கும் முயற்சிதான் இப்போது இந்திய ஆதரவோடு சிங்களம் நடத்திவரும் கொடும் போர்! இதற்குக் கொள்கை வழிப்பட்ட உறுதியான போராட்டங்கள் தேவை. சிங்களத்தை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். இந்திய அரசைத் துண்டிக்க வேண்டியது நம் கடமை. இதற்குக் கொள்கை வழிப்பட்ட உறுதியான போராட்டங்கள் தேவை. மயக்கங்களும் தயக்கங்களும் இதற்கு உதவப் போவதில்லை.

http://www.keetru.com/thamizhthesam/dec08/vaigai.php

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.