Jump to content

தொலைந்து போகும் தமிழனின் அடையாளங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

என்ன கமலா அங்கை பார் அது சண்முகத்தின்ரை பெட்டை போல கிடக்கு? என்னடி உடுப்பு, ஜீன்ஸ் என்ன? சேட் என்ன? ஒரு பொட்டுகிட்டையும் காணேல்லை?

அடி மாலா நீ வெள்ளவத்தைக்கு புதுசு தானே அதுதான் அப்படி. இன்னும் கொஞ்ச நாளைக்கு இருப்பாய் தானே அப்ப பார் எங்கண்டை பொடி,பெட்டையளின்ரை உடுப்பு,மேக்கப்,நாகரீகம்

எல்லாத்தையும். இப்ப பெட்டையள் எல்லாம் சாறி,பஞ்சாபி போடுறதில்லை ஜீன்ஷும், டீ-சேட்டும் தான். கேட்டால் ஏதோ கிளாமரா இருக்க வேணுமாம் எண்டுதுகள். பொட்டுக்கூட வைப்பதில்லை, வைத்தால் தமிழர் என்று கண்டுபிடிச்சிடுவங்களாம் என்ன காலம் தமிழனின் நிலையை பார்த்தியே? பொடியள் மட்டும் குறைஞ்சவங்கள் இல்லை, கட்டைக் காற்சட்டையும் அதிலையும் முன்னுக்கும்,பின்னுக்கும் கிழிச்ச்விட்டு கசங்கின சேட்டும் போட்டு,கழுத்திலை வெள்ளிசெயினும் போட்டு,காதிலை கெட்போனும் கொழுவிக்கொண்டு தங்கண்டை பாட்டிலை ஏதோ கதைச்சுக்கொண்டு திரியுதுகள். காலுக்கு கூட பாட்டா போடுறது தான் பாஷனாம்.

கமலா இதுக்கு பொடி,பெட்டையளை மட்டும் குறைசொல்ல ஏலாதடி ஏனென்றால் பார் கொழும்பிலை அதுகள் வாழவேணும் என்றால் இப்படி உருமாற்றம் செய்யத்தானே வேணும்? இல்லாட்டி பாவிமக்கள் அதுகளை பயங்கரவாதிகள் என்றெல்லே பிடிச்சுக்கொண்டு போறாங்கள். தமிழன்ரை நிலையை பார்த்தியே அடையாளங்களை தொலைத்துவிட்டு வாழவேண்டி இருக்கு.

அது சரி மாலா இது புலம்பெயர் நாட்டிலை இருக்கிற எங்களின்ரை இளம் சந்ததிகூட அப்படித்தானே இருக்கு இப்படி எல்லாரும் இருந்தால் தமிழன் என்று எப்படி நிரூபிக்கமுடியும்? நான் கனடாக்காரன்,நான் லண்டன்காரன் என்று சொல்வதே பெருமை என்று நினைக்குதுகள்,அந்தந்த நாட்டுக்கலாச்சாரத்துக்கு ஏற்ப வாழப் பழகிவிட்டுதுகள். தமிழன் என்று சொல்வதே தரம் கெட்ட செயல் என்று நினைக்குதுகள், இப்பவெல்லாம் தமிழில் பெயர் வைப்பதுகூட அரிது. இந்த நிலை தொடர்ந்தால் தமிழனின் வாழ்வின் அத்திவாரமே கோணல் மாணல் ஆகிவிடும்

இஞ்சை பார் கமலா,இதுமட்டுமல்ல எங்கடை சகலவிதமான கலை,கலாச்சாரம்,மொழி,வாழ்வியல

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.