Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமக்காக நாம்.....! ஈழத்தமிழன் ஒருவனின் குமுறல்..!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம்மை நாம்தான் காப்பாற்ற வேண்டும் என பன்னாட்டு சமூகம் சொல்கிறதா? நேற்று முன்தினம் 300 பேர். நேற்று 46 பேர். (தமிழ்வின்). இன்று உலக நாடுகளிடம் இருந்து அறிக்கை வரும் என எதிர்பார்த்தோம். எதுவுமில்லை. போதாக்குறைக்கு இலங்கை வந்து போன பிரணாப் முகர்ஜி "உப்பிடி ஒரேயடியா பொசுக்காதேங்கோ, கொஞ்சம் கொஞ்சமாக செய்யுங்கோ அப்பிடி எண்டால்தான் கொஞ்சம் கதை அமரும்" எனபது போல வந்து சொல்லிவிட்டு போகிறார். வந்த மனுஷன் ஒரு கண்டன அறிக்கை கூட விடேல்ல பாருங்கோ.

என்னதான் இருந்தாலும் தமிழ் எம்.பி க்களை சும்மா சந்திச்சு, வேணாம் பார்த்திட்டு கூட போயிருக்கலாம். அதை கூட செய்யல மனுஷன். இதுக்கிடைல அவர் விடுதலைப் புலிகளை அழிச்சுப்போட்டு ஒரு அரசியல் தீர்வை முன் வையுங்கோ எண்டு கூட சொல்லிப்போட்டு போயிருக்கிறார். யாருடன் அந்த தீர்வு பற்றி கதைப்பார்கள்?. யாருக்கு அந்த தீர்வு? இனி நீங்கள் என்ன சொன்னாலும் அந்த சோனகிரி தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளுவினம், எண்ட மாதிரி கதை போகுது.

சரி, தமிழகத்துல இருந்து இதை வன்மையாக கண்டிக்கிறோம் என ஒரு கண்டன அறிக்கை. ம்கூம். ஒரு எழுத்து, ஒரு குரல் கூட வரலை. எல்லா இணையங்கள், எல்லா வலைப்பூக்களும் அந்த அழுகுரலை, அவலக்குரலை, ஒளிப்படங்கள், எல்லாம் பிரசுரித்தும் இன்னமும் எதுவும் நடக்கவில்லை. இன்றும் கூட தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பதற்கேற்ப புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் உறவுகள்தான் கண்டன போராட்டங்கள், அறிக்கைகள், உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள் என மனம் தளராமல், தளர்ச்சி என்பது இல்லாமல் தொடர்ந்தும் போராடி வருகிறார்கள்.தமிழகத்தை சேர்ந்த ஈழத்தமிழ் ஆதரவு அரசியல்வாதிகள் எல்லாம் சிறிது காலத்திற்கு முன்பு , ஆயுதம் ஏந்துவோம், எமது உயிரைவிடக்கூட தயாராக இருக்கிறோம், அப்பிடி இருக்கிறோம், இப்பிடி இருக்கிறோம் என எத்தனை வீர வசனங்களை முழங்கித்தள்ளினார்கள். அய்யா உங்கள் இந்த ஆதரவைத் தான் அங்கே குண்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும் எம்தேசத்து உறவுகள் எதிர்பார்த்து நம்பி இருந்தனர்.

உங்கள் உயிர் வேண்டாமையா! உங்கள் ஆயுதம் தாங்கிய கரம் வேண்டாமையா!! ஒரு அறிக்கை கூடவா விட துப்பில்லை. அவ்வளவு மோசமாகி போய்விட்டோமா ஈழத்தமிழர் ஆகிய நாம்?

தமிழக அரசையோ, மத்திய அரசையோ கவிழ்க்க எந்த விதத்திலும் துணை போக மாட்டோம். ஆனால் ஈழத்தமிழருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம். இது மருத்துவர் இராமதாசு அய்யாவின் நிலைப்பாடு. யோசித்து பாருங்கள் அவரின் இந்த நிலைப்பாட்டால் என்ன பலன் விளைந்தது. எதை நாம் கண்டோம். இதையே இராமதாசு அவர்கள் தன் மகனை இராஜினாமா செய்ய வைத்து, முன் மாதிரியாக இருந்தால் நாம் அவரைப் போற்றியல்லவா இருப்போம். என்ன வேண்டுமானலும் செய்ய வேண்டாமையா எங்களுக்கு. உங்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின் படி உங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்யுங்கள். அது போதும். ஏனய்யா பயப்படுகிறீர்கள். இன்னும் 5 மாதம் கூட இல்லாத பதவிக்காலம். இதை கூட உங்களால் விட்டுத்தர முடியவில்லை. எப்படி ஐயா உயிரைத் தரப்போகிறீர்கள். சிறிலங்கா இராணுவத்தளபதி நல்லாத்தானய்யா சொல்லி இருக்கிறான். அதுக்கு பிறகும் உங்களுக்கு சூடு வரலையே. ஆக உங்கள் ஈழத்தமிழருக்கான ஆதரவு சாப்பிட்டுவிட்டு பீடா சாப்பிடவது போலத்தான்.

அப்பாவி தமிழக மக்களின் அந்த புனிதமான உணர்வுகளை மழுங்கடிக்காதீர்கள். அவர்கள் உங்களை (தமிழக அரசியல்வாதிகள்) விட எங்களை நம்புகிறார்கள். எமக்காக எத்தனையோ செய்தார்கள். அவர்களின் அந்த புனித உறவை நாம் மதிக்கிறோம். உங்கள் அரசியல் முக்கியம் என்பதை நாம் உணருகிறோம். எமக்காக உங்களின் முழுமையான ஆதரவால் உங்கள் அரசியல் வாழ்வில் எந்த களங்கமும் ஏற்படாது. எமது ஈழத்தமிழ் மக்களுக்காகத்தான் நான் எனது பதவியை துறந்தேன் என்று நீங்கள் கூறுவீர்களேயானால் அந்த தமிழக மக்கள் நிச்சயமாக அடுத்து வரும் தேர்தலில் உங்களின் இருப்பை உறுதிப்படுத்துவார்கள். ஒரு பதவிக்காக உங்களுக்கு பத்து பதவிகள் கிடைக்கும். தமிழக மக்கள் ஒன்றும் அவ்வளவு மோசமானவர்கள் அல்லர். நீங்கள் முதலில் செய்யுங்கள். கலைஞர் சொல்வாராம். பதவி என்பது எனக்கு சால்வை. ஆனால் கொள்கை,இலட்சியம் எனது வேட்டி. ஆனால் நடவடிக்கை. மாறித்தான் இருக்கிறது. எடுக்கும் முடிவுகளை சும்மா உதறித்தள்ளிவிட்டு போகிறார். (ஐயா கனகாலமா கவிதை ஒண்டையும் காணலைங்கோ சாமியோவ்...!)இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு ஒரு போராட்டம் நடாத்தியிருக்கலாமே. அல்லது இலங்கை அரசிற்கு உறைக்க கூடிய விதத்தில் ஏதாவது செய்து இருக்கலாமே. இல்லையே. உங்கள் தமிழ்நாட்டுக் கடல் மூலமாகத்தான் இராணுவ கவசவாகனங்கள் வந்தன என தினத்தந்தி நாளேடு தனது 26-01-2009 பிரதியில் படம் மூலம் புட்டுப்போட்டது. நாம் ஆயுத உதவி செய்யவில்லை என்ற மத்திய அரசின் கூற்று பொய் என்று சொல்வதை நிரூபிக்க இதை தவிர வேறு வழியில்லை.

ஆனால் தலைவன் எடுக்கும் அந்த காட்டமான முடிவால் வரும் எல்லா எதிர் விளைவுகளையும் எல்லா மக்களும் அனுபவிக்கத்தயாராக இருக்க வேண்டும். அதுதான் நியதி. காத்திருப்போம் அந்தக் கணத்திற்காக. வெல்வோம். வாழ்வோம். வரலாறாவோம்."தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"

http://irakasiyam.blogspot.com/2009/01/blog-post_29.html

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் தோத்து அழிகிறோமோ அல்லது திரும்பவும் எழுகிறோமோ எதுவாக இருந்தாலும், அது எங்களாலேயே நடக்க வேண்டும். இந்தக் கதை ஒரு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறாகும் போது, எங்கள் எஞ்சியிருக்கும் வழித் தோன்றல்கள் அதைப் படிக்கும் போது இந்தக் கதையில் தமிழ் நாட்டு முனாக் கானாக்களைப் பற்றி எதுவும் இருக்கக் கூடாது. நரி வேலை பார்த்து உண்மை ஆர்வலர்களைக் கழுத்தறுத்தார்கள் என்ற வசனம் கூட இந்த சாக்கடை அரசியல் வாதிக்கு நாங்கள் எங்கள் ரத்தத்தினால் கொடுக்கும் இலவச விளம்பரமாகத் தான் முடியும். மரணத்தை விடக் கொடுமையானது வரலாற்றில் மறக்கப் படுவது தான். அது தான் நாற்றமெடுக்கும் அரசியல் சாக்கடைக்கு நாங்கள் கொடுக்கக் கூடிய பெரிய தண்டனை.

  • கருத்துக்கள உறவுகள்

எம்மை நாம்தான் காப்பாற்ற வேண்டும் என பன்னாட்டு சமூகம் சொல்கிறதா? நேற்று முன்தினம் 300 பேர். நேற்று 46 பேர். (தமிழ்வின்). இன்று உலக நாடுகளிடம் இருந்து அறிக்கை வரும் என எதிர்பார்த்தோம். எதுவுமில்லை. போதாக்குறைக்கு இலங்கை வந்து போன பிரணாப் முகர்ஜி "உப்பிடி ஒரேயடியா பொசுக்காதேங்கோ, கொஞ்சம் கொஞ்சமாக செய்யுங்கோ அப்பிடி எண்டால்தான் கொஞ்சம் கதை அமரும்" எனபது போல வந்து சொல்லிவிட்டு போகிறார். வந்த மனுஷன் ஒரு கண்டன அறிக்கை கூட விடேல்ல பாருங்கோ.

என்னதான் இருந்தாலும் தமிழ் எம்.பி க்களை சும்மா சந்திச்சு, வேணாம் பார்த்திட்டு கூட போயிருக்கலாம். அதை கூட செய்யல மனுஷன். இதுக்கிடைல அவர் விடுதலைப் புலிகளை அழிச்சுப்போட்டு ஒரு அரசியல் தீர்வை முன் வையுங்கோ எண்டு கூட சொல்லிப்போட்டு போயிருக்கிறார். யாருடன் அந்த தீர்வு பற்றி கதைப்பார்கள்?. யாருக்கு அந்த தீர்வு? இனி நீங்கள் என்ன சொன்னாலும் அந்த சோனகிரி தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளுவினம், எண்ட மாதிரி கதை போகுது.

சரி, தமிழகத்துல இருந்து இதை வன்மையாக கண்டிக்கிறோம் என ஒரு கண்டன அறிக்கை. ம்கூம். ஒரு எழுத்து, ஒரு குரல் கூட வரலை. எல்லா இணையங்கள், எல்லா வலைப்பூக்களும் அந்த அழுகுரலை, அவலக்குரலை, ஒளிப்படங்கள், எல்லாம் பிரசுரித்தும் இன்னமும் எதுவும் நடக்கவில்லை. இன்றும் கூட தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பதற்கேற்ப புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் உறவுகள்தான் கண்டன போராட்டங்கள், அறிக்கைகள், உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள் என மனம் தளராமல், தளர்ச்சி என்பது இல்லாமல் தொடர்ந்தும் போராடி வருகிறார்கள்.தமிழகத்தை சேர்ந்த ஈழத்தமிழ் ஆதரவு அரசியல்வாதிகள் எல்லாம் சிறிது காலத்திற்கு முன்பு , ஆயுதம் ஏந்துவோம், எமது உயிரைவிடக்கூட தயாராக இருக்கிறோம், அப்பிடி இருக்கிறோம், இப்பிடி இருக்கிறோம் என எத்தனை வீர வசனங்களை முழங்கித்தள்ளினார்கள். அய்யா உங்கள் இந்த ஆதரவைத் தான் அங்கே குண்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும் எம்தேசத்து உறவுகள் எதிர்பார்த்து நம்பி இருந்தனர்.

உங்கள் உயிர் வேண்டாமையா! உங்கள் ஆயுதம் தாங்கிய கரம் வேண்டாமையா!! ஒரு அறிக்கை கூடவா விட துப்பில்லை. அவ்வளவு மோசமாகி போய்விட்டோமா ஈழத்தமிழர் ஆகிய நாம்?

தமிழக அரசையோ, மத்திய அரசையோ கவிழ்க்க எந்த விதத்திலும் துணை போக மாட்டோம். ஆனால் ஈழத்தமிழருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம். இது மருத்துவர் இராமதாசு அய்யாவின் நிலைப்பாடு. யோசித்து பாருங்கள் அவரின் இந்த நிலைப்பாட்டால் என்ன பலன் விளைந்தது. எதை நாம் கண்டோம். இதையே இராமதாசு அவர்கள் தன் மகனை இராஜினாமா செய்ய வைத்து, முன் மாதிரியாக இருந்தால் நாம் அவரைப் போற்றியல்லவா இருப்போம். என்ன வேண்டுமானலும் செய்ய வேண்டாமையா எங்களுக்கு. உங்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின் படி உங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்யுங்கள். அது போதும். ஏனய்யா பயப்படுகிறீர்கள். இன்னும் 5 மாதம் கூட இல்லாத பதவிக்காலம். இதை கூட உங்களால் விட்டுத்தர முடியவில்லை. எப்படி ஐயா உயிரைத் தரப்போகிறீர்கள். சிறிலங்கா இராணுவத்தளபதி நல்லாத்தானய்யா சொல்லி இருக்கிறான். அதுக்கு பிறகும் உங்களுக்கு சூடு வரலையே. ஆக உங்கள் ஈழத்தமிழருக்கான ஆதரவு சாப்பிட்டுவிட்டு பீடா சாப்பிடவது போலத்தான்.

அப்பாவி தமிழக மக்களின் அந்த புனிதமான உணர்வுகளை மழுங்கடிக்காதீர்கள். அவர்கள் உங்களை (தமிழக அரசியல்வாதிகள்) விட எங்களை நம்புகிறார்கள். எமக்காக எத்தனையோ செய்தார்கள். அவர்களின் அந்த புனித உறவை நாம் மதிக்கிறோம். உங்கள் அரசியல் முக்கியம் என்பதை நாம் உணருகிறோம். எமக்காக உங்களின் முழுமையான ஆதரவால் உங்கள் அரசியல் வாழ்வில் எந்த களங்கமும் ஏற்படாது. எமது ஈழத்தமிழ் மக்களுக்காகத்தான் நான் எனது பதவியை துறந்தேன் என்று நீங்கள் கூறுவீர்களேயானால் அந்த தமிழக மக்கள் நிச்சயமாக அடுத்து வரும் தேர்தலில் உங்களின் இருப்பை உறுதிப்படுத்துவார்கள். ஒரு பதவிக்காக உங்களுக்கு பத்து பதவிகள் கிடைக்கும். தமிழக மக்கள் ஒன்றும் அவ்வளவு மோசமானவர்கள் அல்லர். நீங்கள் முதலில் செய்யுங்கள். கலைஞர் சொல்வாராம். பதவி என்பது எனக்கு சால்வை. ஆனால் கொள்கை,இலட்சியம் எனது வேட்டி. ஆனால் நடவடிக்கை. மாறித்தான் இருக்கிறது. எடுக்கும் முடிவுகளை சும்மா உதறித்தள்ளிவிட்டு போகிறார். (ஐயா கனகாலமா கவிதை ஒண்டையும் காணலைங்கோ சாமியோவ்...!)இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு ஒரு போராட்டம் நடாத்தியிருக்கலாமே. அல்லது இலங்கை அரசிற்கு உறைக்க கூடிய விதத்தில் ஏதாவது செய்து இருக்கலாமே. இல்லையே. உங்கள் தமிழ்நாட்டுக் கடல் மூலமாகத்தான் இராணுவ கவசவாகனங்கள் வந்தன என தினத்தந்தி நாளேடு தனது 26-01-2009 பிரதியில் படம் மூலம் புட்டுப்போட்டது. நாம் ஆயுத உதவி செய்யவில்லை என்ற மத்திய அரசின் கூற்று பொய் என்று சொல்வதை நிரூபிக்க இதை தவிர வேறு வழியில்லை.

ஆனால் தலைவன் எடுக்கும் அந்த காட்டமான முடிவால் வரும் எல்லா எதிர் விளைவுகளையும் எல்லா மக்களும் அனுபவிக்கத்தயாராக இருக்க வேண்டும். அதுதான் நியதி. காத்திருப்போம் அந்தக் கணத்திற்காக. வெல்வோம். வாழ்வோம். வரலாறாவோம்."தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"

http://irakasiyam.blogspot.com/2009/01/blog-post_29.html

இதே கோரிக்கையைத் தான் நானும் கேள்வியாக முன்வைத்தேன்.

இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் எமது மக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அறவழிப்போராட்டங்கள் விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கக்கூடியவையா? அல்லது தமிழ்தேசியத்திற்கு எதிரானவர்களின் பிரச்சாரத்திற்கு ஒத்துப்போகின்றனவா?

இப்போது வரும் ஆக்கங்களையும், செயல்பாடுகளையும் பார்க்கும்போது விடுதலைப் போராட்டத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஸ்ரீலங்கா உட்பட உலகநாடுகள் எல்லாம் எதை எதிர்பார்த்தார்களோ அதற்குத்தான் நாமும் முன்னுரிமை கொடுப்பது போன்ற ஒரு தோற்றப்பாடு தோன்றியுள்ளது.

அதாவது எமது மக்களின் இன்றைய அவலத்தை நான் புரியாதவனுமல்ல, உணராதவனுமல்ல ஆனால் மக்களிடம் இருந்து விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்தும் எதிர்த்தரப்பின் செயல்பாடுகளில் தான் நாங்களும் இப்போது ஈடுபடுகின்றமாதிரி தோன்றுகின்றது.

இன்று வெளிவரும் அறிக்கைகளும், கோசங்களும் ஆக்கங்களும் விடுதலைப்புலிகள் பலவீனமாகிவிட்டார்கள,; இனிமேல் நீங்கள் தான் எமது மக்களை காப்பாற்றவேண்டும் என்ற தொனிப்பில், தமிழர்களை அழிக்கவேண்டும் என்று யார், யாரெல்லாம் துடிக்கின்றார்களோ அவர்களையே நோக்கியதாகவே உள்ளது.

இந்த செயல்பாடுகள் எல்லாம் நாம் என்ன செய்கின்றோம் என்று புரிந்துகொண்டுதான் செய்கின்றோமா?

இப்போது வெளிவரும் ஆக்கங்களிலோ அல்லது எங்களின் செயல்பாடுகளிலையோ போராட்டத்தின் நியாயப்பாடுகள் மிக குறைவாகவே முன்னிலைப் படுத்தப்படுகின்றன.

விடுதலைப்புலிகள் தான் எங்களது உண்மையான தலைமை என்ற கருத்தை நாம் இப்போது உச்சரிப்பதில்லை. இதன்பிரகாரம் எமது பொது எதிரியின் தேவையுடன் நாமும் ஒத்துப்போகின்றோமா?

கிட்டத்தட்ட 22,000 போராளிகளையும், பல்லாயிரக்கணக்கான மக்களையும், கோடிக்கணக்கான சொத்துக்களையும் இழந்து, எத்தனையோ சோதனைகளையும், வேதனைகளையும் சகித்துக்கொண்டு எமது மக்களின் விடிவுக்காக தங்களது சுகபோகங்களை எல்லாம் இழந்து, புலம்பெயர்ந்து வாழும் எங்களையே நம்பி போராடிவரும் எங்கள் தேசிய இயக்கத்திற்கு நாம் செய்துவரும் நன்றிக்கடன் இதுதானா?

அந்தந்த நாடுகளின் சட்ட திருத்தங்களிற்கு கட்டுப்பட்டுத்தான் நாம் செயல்படவேண்டும் என்ற நியாயப்பாட்டை நாம் முன்வைக்கலாம்.

ஆனால் ஜனநாயக நாடுகளிலை எங்களை கட்டாயப்படுத்தி யாரும் எதையும் எங்களுக்கு திணிக்கமுடியாது அதைப்போல் எங்களுடைய கருத்துச் சுதந்திரத்தையும் யாரும் கட்டுப்படுத்தவும் முடியாது.

மனம்வைத்தால் அதைப்போல் உண்மையான உணர்வும் இருந்தால் உந்த சட்ட திருத்தங்களாலை எங்களை யாராலும் தடுக்க முடியாது என்பது தான் உண்மை.

யாரினதும் மனதை புண்படுத்துவதோ அல்லது இங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் அமைதி வழிப்போராட்டங்களை இழிவு படுத்துவதோ எனது நோக்கம் அல்ல.

அதாவது அகதிகளை எப்படி பாதுகாப்பது என்பதுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போல் அகதிகள் உருவாகாமல் பண்ணுவது எப்படி என்பதுக்கும் அதிகம் கவனம் செலுத்த முயற்சி பண்ணவேண்டும் என்பதை கவனத்தில் கொள்வோமாக.

இணைவோம் தமிழராய்!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=50550

--------------------

நன்றி

வல்வை மைந்தன்.

Edited by Valvai Mainthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.