Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களையே நம்பி போராடிவரும் எங்கள் தேசிய இயக்கத்திற்கு நாம் செய்துவரும் நன்றிக்கடன் இதுதானா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் எமது மக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அறவழிப்போராட்டங்கள் விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கக்கூடியவையா? அல்லது தமிழ்தேசியத்திற்கு எதிரானவர்களின் பிரச்சாரத்திற்கு ஒத்துப்போகின்றனவா?

இப்போது வரும் ஆக்கங்களையும், செயல்பாடுகளையும் பார்க்கும்போது விடுதலைப் போராட்டத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஸ்ரீலங்கா உட்பட உலகநாடுகள் எல்லாம் எதை எதிர்பார்த்தார்களோ அதற்குத்தான் நாமும் முன்னுரிமை கொடுப்பது போன்ற ஒரு தோற்றப்பாடு தோன்றியுள்ளது.

அதாவது எமது மக்களின் இன்றைய அவலத்தை நான் புரியாதவனுமல்ல, உணராதவனுமல்ல ஆனால் மக்களிடம் இருந்து விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்தும் எதிர்த்தரப்பின் செயல்பாடுகளில் தான் நாங்களும் இப்போது ஈடுபடுகின்றமாதிரி தோன்றுகின்றது.

இன்று வெளிவரும் அறிக்கைகளும், கோசங்களும் ஆக்கங்களும் விடுதலைப்புலிகள் பலவீனமாகிவிட்டார்கள,; இனிமேல் நீங்கள் தான் எமது மக்களை காப்பாற்றவேண்டும் என்ற தொனிப்பில், தமிழர்களை அழிக்கவேண்டும் என்று யார், யாரெல்லாம் துடிக்கின்றார்களோ அவர்களையே நோக்கியதாகவே உள்ளது.

இந்த செயல்பாடுகள் எல்லாம் நாம் என்ன செய்கின்றோம் என்று புரிந்துகொண்டுதான் செய்கின்றோமா?

இப்போது வெளிவரும் ஆக்கங்களிலோ அல்லது எங்களின் செயல்பாடுகளிலையோ போராட்டத்தின் நியாயப்பாடுகள் மிக குறைவாகவே முன்னிலைப் படுத்தப்படுகின்றன.

விடுதலைப்புலிகள் தான் எங்களது உண்மையான தலைமை என்ற கருத்தை நாம் இப்போது உச்சரிப்பதில்லை. இதன்பிரகாரம் எமது பொது எதிரியின் தேவையுடன் நாமும் ஒத்துப்போகின்றோமா?

கிட்டத்தட்ட 22,000 போராளிகளையும், பல்லாயிரக்கணக்கான மக்களையும், கோடிக்கணக்கான சொத்துக்களையும் இழந்து, எத்தனையோ சோதனைகளையும், வேதனைகளையும் சகித்துக்கொண்டு எமது மக்களின் விடிவுக்காக தங்களது சுகபோகங்களை எல்லாம் இழந்து, புலம்பெயர்ந்து வாழும் எங்களையே நம்பி போராடிவரும் எங்கள் தேசிய இயக்கத்திற்கு நாம் செய்துவரும் நன்றிக்கடன் இதுதானா?

அந்தந்த நாடுகளின் சட்ட திருத்தங்களிற்கு கட்டுப்பட்டுத்தான் நாம் செயல்படவேண்டும் என்ற நியாயப்பாட்டை நாம் முன்வைக்கலாம்.

ஆனால் ஜனநாயக நாடுகளிலை எங்களை கட்டாயப்படுத்தி யாரும் எதையும் எங்களுக்கு திணிக்கமுடியாது அதைப்போல் எங்களுடைய கருத்துச் சுதந்திரத்தையும் யாரும் கட்டுப்படுத்தவும் முடியாது.

மனம்வைத்தால் அதைப்போல் உண்மையான உணர்வும் இருந்தால் உந்த சட்ட திருத்தங்களாலை எங்களை யாராலும் தடுக்க முடியாது என்பது தான் உண்மை.

யாரினதும் மனதை புண்படுத்துவதோ அல்லது இங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் அமைதி வழிப்போராட்டங்களை இழிவு படுத்துவதோ எனது நோக்கம் அல்ல.

அதாவது அகதிகளை எப்படி பாதுகாப்பது என்பதுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போல் அகதிகள் உருவாகாமல் பண்ணுவது எப்படி என்பதுக்கும் அதிகம் கவனம் செலுத்த முயற்சி பண்ணவேண்டும் என்பதை கவனத்தில் கொள்வோமாக.

இணைவோம் தமிழராய்!

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை மைந்தன்,

உங்கள் கருத்துடன் ஒத்துப்போகின்றேன். எனக்குள்ள சந்தேகமும் இதுதான். எல்லா நாட்டிலும் பயங்கரவாதி பயங்கரவாதி என்கிற பதத்தைப் பாவித்து தமிழர் தரப்பைத் தனிமைப்படுத்துகிறார்கள். வன்னி மீது பிரயோகிக்கப்படும் அழிவு மற்றும் அடக்குமுறை தெரியாமலா அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகள் உள்ளன? அவர்களுக்குத் தேவை புலிகள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்பது. புலிகளிடமிருந்து மனித அவலத்துக்கு புலம்பெயர் தமிழரைத் திருப்பி அதன்பின் ராணுவரீதியில் நீங்கள் தோற்றீர்கள் என்னும் எண்ணம் ஏற்படும்படி பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள். நாங்களும் அதற்குள் விழுந்துவிட்டோம்.

எது நடந்தாலும் புலிகள் பக்கம் தமிழர் என்னும் உறுதியை எடுத்துக்காட்டத் தவறுகிறோம். புலிகளுக்குள் உள்ள ஓர்மத்தில் ஒரு பங்காவது நமக்கு வேண்டாமா? ஒவ்வொரு நாளும் எங்கே பின்வாங்கினார்கள் என்று கேட்டுச் எள்ளி நகையாடுகிறார்கள் எங்களில் சிலர்.

எதிரிக்கு எது தேவையோ அதை நாம் கொடுக்கக் கூடாது. இலங்கை, இந்தியா முதலான அத்தனை எதிரிகளும் புலிகளை மக்களிடமிருந்து பிரிக்க நினைக்கிறார்கள். வன்னி மக்கள் அதற்கு உடன்படவில்லை. ஆனால் புலம்பெயர் தமிழர்?

என்றுமில்லாத அளவுக்கு எங்கள் பங்களிப்புடன் தமிழர் தர்ரப்புடன் புலம்பெயர் தமிழர் இணைந்திருந்து எதிரியை முறியடிக்க வேண்டிய தருணம் இது. சிந்தித்து செயல்படுவோம்.

கீழை தேசத்தில் சீனா, பாக்கி மத்திய கிழக்கில் ஈரான், கொஞ்சம் தள்ளி துருக்கி, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா,கனடா ஒட்டு மொத்தமாக உலகமே தமிழின அழிப்பிற்கு ஆதரவும், ஆயுதமும் வழங்கி தமிழர் சுய உரிமைப்போரை "பயங்கரவாதமாக்கி" தடை போட்டு, எங்கள் அழிவிற்கு மௌன சாட்சியாக காலம் கடத்துகின்றன. இதனை தலைமை தாங்கி இந்தியா நடத்தும் போது எங்கே நியாயம் கிடைக்கும்?

நிச்சயம் கிடைக்கும். நீதியான போராட்டம் என்றுமே தோற்றது இல்லை. உலக ஒழுங்கு மாறும் கதை வல்லரசுகளின் பொருளாதார சரிவுடன் தொடங்கி விட்டது. நாளை தொடங்கும் அமெரிக்காவின் புதிய அத்தியாயம் சிங்களத்தின் அடாவடித்தனத்தை முடிவுக்கு கொடு வர நாங்கள் தான் முயற்சி செய்ய வேண்டும்.

இந்திய தேர்தலும், உலக ஒழுங்கு மாற்றமும், பொருளாதார சரிவும், எமக்காக போரிடும் அமைப்பின் எதிரியின் உச்ச இழப்புடன் நிலத்தை இழந்து, போரிடும் பலத்தை தக்க வைத்துள்ள தந்திரமும் எமக்கு பெரும் பலம்.

நம்பிக்கை இழக்காது, எமது செயற்பாடுகளை பன் முகப்படுத்துவோம், பல மடங்காக்குவோம்.

ஊர் இழப்புகள், சிங்களம் தனது முண்டுகளை இழக்கும் போது, தனது ஊரையே காப்பாற்ற சிவசங்கர் மேனனை தான் கிளிநொச்சிக்கு அனுப்ப வேண்டி வரும்.

மாற்றுக்கருத்து இல்லை, புலிகளே மக்கள், மக்களே புலிகள்.

இடம், பொருள், ஏவல் அறிந்து செயற்படுவோம்.

புலம்பெயர் இளையோர் எத்தனைபேர் களமுனைக்கு செல்ல தயார் அவ்வாறு தயாரானால்

1.நோர்வேயில் குடியுரிமை பெற்றோர் உங்கள் நாட்டு சட்டப்படி நோர்வேயில் இராணுவப்பயிற்சி எடுங்கள்

2.உங்கள் குழந்தைகளை வெவ்வேறு விதமான பொருளாதார , இராணுவ, அரசியல், சமூக படிப்புகளை படிக்க வையுங்கள்.

3.இளையோரை கனடா , லண்டன், என நாடுகளில் இருந்து ஒன்று திரட்டி ஏதாவது ஆபிரிக்க நாட்டில் வைத்து ஈருடக படையணிக்கான அதிதீவிர பயிற்சியை வழங்கி

களமுனைக்கு இறக்கலாம்

புலம்பெயர் இளையோரைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. அவர்களிடையே தேசியம் , தமிழீழம் தொடர்பான சிந்தனை உள்ளது. ஆனால் வீடுகளில் அதற்கானதோர் களவமைவு இன்மைகாரணமாகவே இந்த நிலை. முதலிலே பெற்றோர்கள் பிள்ளைகளிடம் தேசிய உணர்வை ஊட்டி வளர்க்கும்போது மட்டுமே இது சாத்தியமாகும். நீண்டகால நோக்கிலான சிந்தனை. அண்மையில் நான் அவதானித்த விடயமொன்று, ஒரு பெண்பிள்ளை தாயோடு, தான் எப்படியாவது கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு போகவேண்டும் என்று வாதாடுவதையும், தாயார் அங்கு போகவிட முடியாது படம் எடுத்து விடுவார்கள் பின்னர் நாட்டுக்குப் போவது ஆபத்து என்று கூற, நாங்கள் குடியுரமை பெற்றவர்கள்தானே பிறகேன் பயம் என்ற கேள்வி. இளையோரிடம் உணர்வு, விடுதலைவேட்கை, நாடற்றவராய் போய்விடுவோமா என்ற அங்கலாய்ப்பு யாவும் உள்ளது. இவற்றை குவிமையப்படுத்தும், திட்டங்களும், நேரமொதுக்கி உழைக்கும் போது மட்டுமே பயனடைய முடியும். ஒவ்வொரு வீடுகளிலும், வெளியில் செல்லும் போதும், உள்ளே வரும்போதும் பார்க்கக் கூடியவாறு எமது தாயகத்தினது படத்தையும், தேசியத்தலைவரது படத்தையும் வைக்கவேண்டும். எங்களது பிள்ளைகளுக்காக மட்டுமல்ல எமக்காகவும் கூட. ஆக்கபூர்வமான சிந்தனைகள் செயலுருவாகட்டும். வெற்றி நமதே.

*** இதற்கு கொஞ்சம் விளக்கம் தர முடியுமா? யார் யார் அழிக்க நிக்கிறார்கள்? அதற்கான ஆதாரங்கள்?

இன்று வெளிவரும் அறிக்கைகளும், கோசங்களும் ஆக்கங்களும் விடுதலைப்புலிகள் பலவீனமாகிவிட்டார்கள,; இனிமேல் நீங்கள் தான் எமது மக்களை காப்பாற்றவேண்டும் என்ற தொனிப்பில், தமிழர்களை அழிக்கவேண்டும் என்று யார், யாரெல்லாம் துடிக்கின்றார்களோ அவர்களையே நோக்கியதாகவே உள்ளது.

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

***

'வல்வை அண்ணா,

மக்கள் எல்லாம் மக்கள் எல்லாம் பிரபாகரன் பக்கம், மக்கள் படை என்றைக்கும் அவன் பக்கம் தான் நிற்கும்". தற்போது அவதியுறும் மக்களை முன்னிலைப்படுத்த வேண்டிய சூழ்நிலை. தலைவரும் அதையே தான் சொல்கின்றார் போராளிகளுக்கு நிலம் காக்கும் பொறுப்பும் மக்களையும் காக்கும் பொறுப்பும் இப்போதுள்ள நிலையில் பெரும் பொறுப்பு அல்லவா?! இனி எந்த மானத்தமிழ் உயிர்களையும் இழக்க எங்களுக்குச் சம்மதமில்லை. 'எங்களின் ஏகபிரதிநிதிகள் "விடுதலைப்புலிகளே" என்பது தமிழனை விட உலகமே அறியும். முக்கியமாக அழிக்கத்துடிக்கும் சிங்களம் அறியும்!

Edited by இணையவன்
மேற்கோள் காட்டப்பட்ட கருத்தும் பதில் கருத்தும் நீக்கப்பட்டுள்ளன. - இணையவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜயா குறுக்கை போவானே!

உங்கள் பெயருக்குத்தக்கமாதிரி, நோக்கமும், சிந்தனையும்கூட குறுக்கைதான் போகின்றன என்பதை உங்களது கருத்துமூலம் அறியக்கூடியதாகவுள்ளது.

இன்று எமது மக்களை அழிப்பதிற்காக எதிரிக்கு யார், யாரெல்லாம் உறுதுணையாக உள்ளார்கள் என்பதை நீங்கள் அறியாதவரா?

அதை ஏன் என்னுடைய வாயால் அறிய முயலுகின்றீர்கள்?

இன்று தாயகப்பகுதிகளில் எமது மக்களின் அவலங்களை பொருட்படுத்தாது, ஸ்ரீலங்கா பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட நிலஅபகரிப்புக்களின் பின்பு வெளிவந்த உலகநாடுகளின் அறிக்கைகளை நீங்கள் அறியாதவரா?

அல்லது அதன்பின்பு அவர்களினால் மேற்கொள்ளப்பட இருக்கும் திட்டங்களையாவது நீங்கள் அறியாதவரா?

இன்று எங்களால் மேற்கொள்ளப்படும் இந்த அமைதிவழிப்போராட்டம் யாரை நோக்கியதாக இருக்கின்றது இதையும் நான் சொல்லித்தான் நீங்கள் அறிய வேண்டுமா?

ஜயா என்னில் நீங்கள் கோபப்படுவதை விட்டிட்டு அதிகப்படியான வேலைத்திட்டங்களை எமது மக்களை(நோக்கியதாக) விழிப்படையச் செய்யக்கூடியதாக வழிவகுங்கள் இதுதான் எனது எதிர்பார்ப்பு.

அதாவது விடுதலைப்புலிகளை தடைசெய்துள்ள நாடுகளின் சட்டத்தின் உண்மை நிலையினை எமது மக்களிற்கு தெளிவுபடுத்தி, அவர்களின் பயத்தை நீக்கி தமிழ்த்தேசியம் நோக்கியதாக நகர்த்த முயற்சி எடுங்கள்.

எங்களது மக்களின் மனங்களில் மட்டுமன்றி சர்வதேசநாடுகளிற்கும், எங்களது தலைமை விடுதலைப்புலிகள் தான் என்பதையும், எங்களது பிரச்சினைக்கு ஒரே தீர்வு தமிழீழம்தான் என்பதையும் உறுதியுடன் மனம் தளராது நிலைநிறுத்துங்கள்.

புலம்பெயர்ந்த நாடுகளில் விழிப்புக்குழுக்களை உருவாக்கி எமது மக்களை தனிப்பட்ட முறையில் அணுகி எமது இனத்தின் நீண்ட நோக்கத்தின் தேவையை தெளிவு படுத்தமுடியும். ஆனால் எங்களது அணுகுமுறையில் மாற்றமும், அனுபவமும் அவசியமாக கடைப்பிடிக்கவேண்டும்.

இணைவோம் தமிழராய்!

Edited by Valvai Mainthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வல்வை மைந்தன்,

உங்கள் கருத்துடன் ஒத்துப்போகின்றேன். எனக்குள்ள சந்தேகமும் இதுதான். எல்லா நாட்டிலும் பயங்கரவாதி பயங்கரவாதி என்கிற பதத்தைப் பாவித்து தமிழர் தரப்பைத் தனிமைப்படுத்துகிறார்கள். வன்னி மீது பிரயோகிக்கப்படும் அழிவு மற்றும் அடக்குமுறை தெரியாமலா அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகள் உள்ளன? அவர்களுக்குத் தேவை புலிகள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்பது. புலிகளிடமிருந்து மனித அவலத்துக்கு புலம்பெயர் தமிழரைத் திருப்பி அதன்பின் ராணுவரீதியில் நீங்கள் தோற்றீர்கள் என்னும் எண்ணம் ஏற்படும்படி பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள். நாங்களும் அதற்குள் விழுந்துவிட்டோம்.

எது நடந்தாலும் புலிகள் பக்கம் தமிழர் என்னும் உறுதியை எடுத்துக்காட்டத் தவறுகிறோம். புலிகளுக்குள் உள்ள ஓர்மத்தில் ஒரு பங்காவது நமக்கு வேண்டாமா? ஒவ்வொரு நாளும் எங்கே பின்வாங்கினார்கள் என்று கேட்டுச் எள்ளி நகையாடுகிறார்கள் எங்களில் சிலர்.

எதிரிக்கு எது தேவையோ அதை நாம் கொடுக்கக் கூடாது. இலங்கை, இந்தியா முதலான அத்தனை எதிரிகளும் புலிகளை மக்களிடமிருந்து பிரிக்க நினைக்கிறார்கள். வன்னி மக்கள் அதற்கு உடன்படவில்லை. ஆனால் புலம்பெயர் தமிழர்?

என்றுமில்லாத அளவுக்கு எங்கள் பங்களிப்புடன் தமிழர் தர்ரப்புடன் புலம்பெயர் தமிழர் இணைந்திருந்து எதிரியை முறியடிக்க வேண்டிய தருணம் இது. சிந்தித்து செயல்படுவோம்.

இதில்தான் நாங்கள் தெளிவடையவேண்டும்.

ஜயா குறுக்கை போவானே!

உங்கள் பெயருக்குத்தக்கமாதிரி, நோக்கமும், சிந்தனையும்கூட குறுக்கைதான் போகின்றன என்பதை உங்களது கருத்துமூலம் அறியக்கூடியதாகவுள்ளது.

இன்று எமது மக்களை அழிப்பதிற்காக எதிரிக்கு யார், யாரெல்லாம் உறுதுணையாக உள்ளார்கள் என்பதை நீங்கள் அறியாதவரா?

அதை ஏன் என்னுடைய வாயால் அறிய முயலுகின்றீர்கள்?

நீங்கள் எழுதுபவற்றை பார்த்தால் அவை பற்றிய நான் அறிந்தவை குழப்பமாக இருக்கிறது. ஆனபடியால் நீங்களே விளக்கமாக சொல்லிவிடுங்கள் யார் யார் என்று.

இன்று தாயகப்பகுதிகளில் எமது மக்களின் அவலங்களை பொருட்படுத்தாது, ஸ்ரீலங்கா பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட நிலஅபகரிப்புக்களின் பின்பு வெளிவந்த உலகநாடுகளின் அறிக்கைகளை நீங்கள் அறியாதவரா?

அல்லது அதன்பின்பு அவர்களினால் மேற்கொள்ளப்பட இருக்கும் திட்டங்களையாவது நீங்கள் அறியாதவரா?

தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொண்டால் நல்லம் எல்லாரும் அறிந்து கொள்ளலாம்.

இன்று எங்களால் மேற்கொள்ளப்படும் இந்த அமைதிவழிப்போராட்டம் யாரை நோக்கியதாக இருக்கின்றது இதையும் நான் சொல்லித்தான் நீங்கள் அறிய வேண்டுமா?

நான் அறிந்தவரை தமிழ்நாடு அதன் ஊடாக இந்தியா, இந்திய மத்தய அரசு நோக்கி நேரடியாக குறைந்த அளவிலும், பெரும்பாலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகமாக இருக்கம் மேற்குலகம் (குறிப்பாக அமெரிக்கா பிரித்தானியா கனடா ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, அவுஸ்ரேலியா) நோக்கி நடத்தப்படுகிறது. உங்களிற்கு மேலதிகமாக தெரிந்தால் சொல்லவும்.

ஜயா என்னில் நீங்கள் கோபப்படுவதை விட்டிட்டு அதிகப்படியான வேலைத்திட்டங்களை எமது மக்களை(நோக்கியதாக) விழிப்படையச் செய்யக்கூடியதாக வழிவகுங்கள் இதுதான் எனது எதிர்பார்ப்பு.

அதாவது விடுதலைப்புலிகளை தடைசெய்துள்ள நாடுகளின் சட்டத்தின் உண்மை நிலையினை எமது மக்களிற்கு தெளிவுபடுத்தி, அவர்களின் பயத்தை நீக்கி தமிழ்த்தேசியம் நோக்கியதாக நகர்த்த முயற்சி எடுங்கள்.

எங்களது மக்களின் மனங்களில் மட்டுமன்றி சர்வதேசநாடுகளிற்கும், எங்களது தலைமை விடுதலைப்புலிகள் தான் என்பதையும், எங்களது பிரச்சினைக்கு ஒரே தீர்வு தமிழீழம்தான் என்பதையும் உறுதியுடன் மனம் தளராது நிலைநிறுத்துங்கள்.

இங்கு சர்வதேச நாடுகள் என்றால் யார்?

புலம்பெயர்ந்த நாடுகளில் விழிப்புக்குழுக்களை உருவாக்கி எமது மக்களை தனிப்பட்ட முறையில் அணுகி எமது இனத்தின் நீண்ட நோக்கத்தின் தேவையை தெளிவு படுத்தமுடியும். ஆனால் எங்களது அணுகுமுறையில் மாற்றமும், அனுபவமும் அவசியமாக கடைப்பிடிக்கவேண்டும்.

அது எமது இனத்தின் நீண்ட நோக்கத்தின் தேவை என்ன? விளங்கப்படுத்தினால் அறிந்து கொள்ளலாம்.

இணைவோம் தமிழராய்!

முதலில் வந்து குடியேறிய நாடுகளில் மனிதராக இணையும் அடிப்படையை மற்ற இனங்களில் இருந்து அறிந்தாவது அடைய முயற்சியுங்கள். அதுக்கு பிறகு தமிழராக இணையிற பக்குவம் தானாக வரும்.

நன்றி!

Edited by kurukaalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜயா குறுக்கு!

உங்கள் கருத்துக்களில் இருந்து ஒன்றுமட்டும் புரிகின்றது அதாவது நீங்கள் உண்மையை ஏற்கொள்பவர் அல்ல என்பது.

Edited by Valvai Mainthan

ஜயா குறுக்கு!

உங்கள் கருத்துக்களில் இருந்து ஒன்றுமட்டும் புரிகின்றது அதாவது நீங்கள் உண்மையை ஏற்கொள்பவர் அல்ல என்பது.

அது தெரியாமல் இருந்திருக்காது இது தெரியாமல் இருந்திருக்காது எண்றியள்.

தெரிந்ததை எழுதியிருக்கு தெரியாததை தெரியாது என்று சொல்லியிருக்கு. உங்களுக்கு தெரிந்த உண்மைகளை எழுதுங்கள் வாசித்து அறிந்து கொள்ள.

பின்வருவன பற்றி உங்களிற்கு தெரிந்தவற்றை எழுதுங்கள் அறிய ஆவலாக இருக்கிறன்.

இன்று எமது மக்களை அழிப்பதிற்காக எதிரிக்கு யார், யாரெல்லாம் உறுதுணையாக உள்ளார்கள் என்பதை நீங்கள் அறியாதவரா?

இன்று தாயகப்பகுதிகளில் எமது மக்களின் அவலங்களை பொருட்படுத்தாது, ஸ்ரீலங்கா பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட நிலஅபகரிப்புக்களின் பின்பு வெளிவந்த உலகநாடுகளின் அறிக்கைகளை நீங்கள் அறியாதவரா?

அல்லது அதன்பின்பு அவர்களினால் மேற்கொள்ளப்பட இருக்கும் திட்டங்களையாவது நீங்கள் அறியாதவரா?

இன்று எங்களால் மேற்கொள்ளப்படும் இந்த அமைதிவழிப்போராட்டம் யாரை நோக்கியதாக இருக்கின்றது இதையும் நான் சொல்லித்தான் நீங்கள் அறிய வேண்டுமா?
  • கருத்துக்கள உறவுகள்

ஜயா குறுக்கு!

உங்கள் கருத்துக்களில் இருந்து ஒன்றுமட்டும் புரிகின்றது அதாவது நீங்கள் உண்மையை ஏற்கொள்பவர் அல்ல என்பது.

நித்திரை கொள்பவனை எழுப்பலாம்

நடிப்பவனைக்கூட எழுப்பலாம்

ஆனால் இந்த மாதிரி சுயநினைவு

கபடபுத்தி

திருகுதாளம்...................?????????????

நம்ம வேலையைப்பார்ப்பதே உங்களுக்கும் அதுவராமல் இருக்கவழி

  • கருத்துக்கள உறவுகள்

QUOTE

இன்று எமது மக்களை அழிப்பதிற்காக எதிரிக்கு யார், யாரெல்லாம் உறுதுணையாக உள்ளார்கள் என்பதை நீங்கள் அறியாதவரா?

ஒட்டு குழுக்க‌ளும் மாற்றுக் கருத்து தோழர்க‌ளும் அநேகமாக முழு உலக நாடுகளும்.

QUOTE

இன்று தாயகப்பகுதிகளில் எமது மக்களின் அவலங்களை பொருட்படுத்தாது, ஸ்ரீலங்கா பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட நிலஅபகரிப்புக்களின் பின்பு வெளிவந்த உலகநாடுகளின் அறிக்கைகளை நீங்கள் அறியாதவரா?

அல்லது அதன்பின்பு அவர்களினால் மேற்கொள்ளப்பட இருக்கும் திட்டங்களையாவது நீங்கள் அறியாதவரா?

முழு உலகமுமே யார் திருகோணமலையை கைப்பற்றுவது போட்டியில் இருக்கிறது அதற்காக புலிகள் பயங்கரவாதிகள் அவர்கள் தோற்கடிக்கபட வேண்டூம் அவர்கள் தோற்றால் பயங்கரவாதத்திற்கு எதிராக கிடைத்த மிக பெரிய வெற்றி என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.மக்கள் வேறு புலிகள் வேறு என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

QUOTE

இன்று எங்களால் மேற்கொள்ளப்படும் இந்த அமைதிவழிப்போராட்டம் யாரை நோக்கியதாக இருக்கின்றது இதையும் நான் சொல்லித்தான் நீங்கள் அறிய வேண்டுமா?

சர்வதேச நாடுகளை நோக்கியும் ஜ.நா வை நோக்கியும் அமைதி வழிப்போராட்டம் காணப்படுகிறது.

நல்லது ரதி.

-1- அநேகமான முழு உலக நாடுகளும் தமிழரை அழிக்க நிக்கிறது.

-2- அதற்கு காரணம் திருகோணமலையில் அவர்களிற்கு கண்.

-3- சர்வதேச நாடுகளையும் ஐநாவையும் நோக்கி எமது அமைதிவழிப் போராட்டம் காணப்படுகிறது.

எண்டு சொல்லுகிறீர்கள்.

நீங்கள் 1 ஆவத விடையத்தில் குறிப்பிடும் "முழு உலக நாடுகளிற்கும்" இறுதியில் குறிப்பிடும் "சர்வதேச நாடுகளிற்கும்" என்ன வித்தியாசம்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குறுக்கு ஜயா!

நீங்கள் நல்லவொரு விடயத்தை தெளிவுபடுத்த முனைகின்றீர்கள், தயவுசெய்து சற்றுபுரியும்படியாக சொல்லுங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காஸாப் பகுதிக்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூன் சென்று கடந்த சில வாரங்களாக இஸ்ரேலால் அழிக்கப்பட்ட இடங்களைப் பார்த்து காஸா மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். சில நாட்களில் 1000 க்கு மேற்பட்டவர்களைக் கொன்று இஸ்ரேல் நடாத்திய யுத்தம் தற்போது யுத்தநிறுத்தத்தில் வந்துள்ளது.

தினம் தினம் வன்னியில் கொத்து கொத்தாகக் கொன்று குவிக்கின்றார்கள்.. தாக்குதல்களை நிறுத்த நாதியில்லாமல் ஏன் தமிழினம் நிற்கின்றது? ஐ.நா. செயலாளர் நாயகம் ஒன்றும் வன்னியில் நடைபெறும் அவலங்களை அறியாதவர் அல்ல. குறைந்த பட்சம் ஐ.நா. மனிதவுரிமை அமைப்புக்கள் கூட வன்னியில் நடைபெறும் யுத்தத்தை நிறுத்தி மக்களைக் காப்பாற்ற எதுவும் செய்யாமல் நிற்கின்றார்கள்.. எனவே இவர்கள் எல்லாம் தமிழின அழிப்புக்குத் துணைபோகின்றார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

இன்றைய நிலையில் காசாவுக்கு அடுத்ததாக வருவது எமது அழிவுதான்

பார்ப்போம்

நம்பிக்கையுடன் உழைப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்ஸ் நான் நினைக்கிறேன் எம்மை அழிக்க முற்ப‌டும் நாடுகலுக்கெதிராக நீங்க‌ள் ஏன் ஆர்ப்பாட்ட‌ம் செய்கிறீர்க‌ள் என்று தானே கேட்கிறீர்க‌ள்?

என்னை பொருத்த‌ வ‌ரை எந்தெந்த உலக நாடுகள் எமக்கு எதிராக எம்மை அழிக்க முற்படுகிற‌தோ(மறைமுகமாக இலங்கை அர‌சுக்கு ஆயுதங்கள் வழங்கல்,பொருள் உதவி செய்தல்,போரியல் ஆலோசனை வழங்கல் என்பன.) அந்த‌ நாடுகளை மக்கள் சக்தி மூலம் எமக்கு ஆத‌ர‌வாக மாற்ற‌ல்.அதாவது அதே உதவிக‌ளை எமக்கு வழங்குமாறு செய்த‌ல்.

நீங்கள் சொல்லுங்க‌ள் உலக நாடுகளீன் ஆத‌ர‌வு இல்லாமல் போராளீக‌ளாலும்,எமது மக்களீனாலும் மட்டும் த‌மிழ் தேசியம் சாத்தியமாகுமா?

உலக நாடுகள் எமக்கு ஆத‌ர‌வு அளீக்காவிட்டாலும் பர‌வாயில்லை ஆனால் இலங்கை அர‌சுக்கு உத‌வ‌ கூடாது அல்லவா?

நான் நினைக்கிறேன் நீங்கள் புலிக‌ள் முத‌லில் ஆயுத ரீதியாக பல‌ப்பட‌ வேண்டும் என்ற‌ கருத்தை கொண்டுள்ளீர்க‌ள் சரியா?

Edited by rathy

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக இதுவரை துணை போய்த்தான் இருக்கின்றனர்

இதற்கு அவர்கள் ஒருகாலத்தில் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்ஸ் அது தொடர்பாக சில கேள்விகள்;

புலிகள் பலம் பெற்ற‌ பின் தான் அதாவது இழந்த நிலங்களை கைப்பற்றீய பின் தான் போராட்ட‌ங்களையும்,ஆர்ப்பாட்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குறுக்ஸ் அது தொடர்பாக சில கேள்விகள்;

புலிகள் பலம் பெற்ற‌ பின் தான் அதாவது இழந்த நிலங்களை கைப்பற்றீய பின் தான் போராட்ட‌ங்களையும்,ஆர்ப்பாட்

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காஸாப் பகுதிக்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூன் சென்று கடந்த சில வாரங்களாக இஸ்ரேலால் அழிக்கப்பட்ட இடங்களைப் பார்த்து காஸா மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். சில நாட்களில் 1000 க்கு மேற்பட்டவர்களைக் கொன்று இஸ்ரேல் நடாத்திய யுத்தம் தற்போது யுத்தநிறுத்தத்தில் வந்துள்ளது.

தினம் தினம் வன்னியில் கொத்து கொத்தாகக் கொன்று குவிக்கின்றார்கள்.. தாக்குதல்களை நிறுத்த நாதியில்லாமல் ஏன் தமிழினம் நிற்கின்றது? ஐ.நா. செயலாளர் நாயகம் ஒன்றும் வன்னியில் நடைபெறும் அவலங்களை அறியாதவர் அல்ல. குறைந்த பட்சம் ஐ.நா. மனிதவுரிமை அமைப்புக்கள் கூட வன்னியில் நடைபெறும் யுத்தத்தை நிறுத்தி மக்களைக் காப்பாற்ற எதுவும் செய்யாமல் நிற்கின்றார்கள்.. எனவே இவர்கள் எல்லாம் தமிழின அழிப்புக்குத் துணைபோகின்றார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

இஸ்ரேல் கொலைவெறியுடன் மனித வேட்டையாடியபோது ஐயா என்ன செவ்வாய் கிரகத்திலோ இருந்தார்? கொல்லுறதும் இவங்கள்தான் பின்பு ஆறுதல் சொன்னாராம்.....

இன்னும் கொஞ்சம் ஆறுதலாக சொனடனால் கூட ஆகப்போவதொன்றுமி;லலை.

குறைந்த பட்சம் காஸா யுத்தம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. கொலைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் வன்னி நிலமைகளில் ஒரு மாற்றமும் இல்லை. சிலவேளை வன்னியில் இருப்பவர்கள் எல்லாம் வேற்றுக் கிரகவாசிகளாகத் தெரிகிறார்களா சர்வதேச சமூகத்திற்கு?

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்கரின் கேள்விகள் கிறுக்குத் தனமானவையாக இருக்கின்றன.சர்வதேச தரத்தில ஊடகங்கள் வேணும்.அப்ப தான் எங்கட பிரச்சனையை சர்வதேசத்திற்கு பரப்பலாம் என்று ஒரு பக்கம் வகுப்பெடுப்பார்.சர்வதேசம் எண்டா ஆரு எண்டும் கேட்பார்.

தானும்-----------------சாப்பிட மாட்டான் மற்றவனையும் சாப்பிட விடமாட்டான் எண்டு கிராமப் புறத்தில பழமொழி ஒண்டு சொல்லுவினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.