Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதுகாப்பான வாழ்வுக்கு போராடுவோம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புக் கட்டையொன்று காய்ந்துபோனது. ஆயினும் அதனுள் கரும்பின் சோத்தி இனிமை கிடந்தது. இனிப்பின் நறுமணத்தில் இழுபட்டு எறும்புகள் அதை மேய்த்துக்கொண்டன. விறகு சேகரித்த பெண் ஒருத்தி காய்ந்த கரும்பைத்தன் அடுப்பில் வைத்து எரிப்பதற்காகக் கொண்டு சென்றாள். கொஞ்ச எறும்புகள் கரும்புடன் கூடிவந்துவிட்டன. கரும்புத் தட்டையும் ஒருமுனை அடுப்பில் வைக்கப்பட்டது.

வெப்பம் தாழால் எறும்புகள் இறங்கி ஓடிச்சென்றன. சில எறும்புகள் ஓடுவதும் மீண்டும் திரும்பிக் கரும்பின் கட்டிக்குள் செல்வதுமாக அலைந்தது. தீயின் நாக்குகள் சுழலும் போது திரும்பி ஓடும். மீண்டும் உட்செல்லும், ஒரு சிறு காற்று வீச தீ நாக்கை நீறமாகச் சுழற்றியது. எறும்பு பரிதாபமாக உயிர்விட்டது. உயிர் உயர்ந்தது. உடமைகளைவிட உயர்ந்தது. உடமைகள் அனைத்தும் எம்மால் உருவக்கப்பட்டவை. அல்லது தேடப்பட்டவை தான். போதிய அவகாசம் இன்றித் திடீரெனப் பொழியும் எறிகணைகளால் உடுத்த உடையுடன் ஓடி வந்தாலும் எறிகணைகள் ஓயும் நேரம் மீண்டும் போய் உடமைகளை மீட்கத் துணியும் மக்கள் எறிகணையில் மாட்டிக்கொண்டு உயிர் விட்டுக்கூடும். உயிர்விட்டுமுள்ளனர்.

மேலும் நள்ளிரவில் உறக்கம் கலையாமலே எறிகணை வீச்சில் இறந்துபோவோர் அதிகம். ஏறக்குறைய பத்துப் பதினைந்து கிலோமீற்றர் தொலைவிற்குள் சுருங்கிவிட்டது. வன்னித்தமிழர் வாழ்க்கை இவர்களுடைய வாழ்வாதாரம் மட்டுமல்ல வாழ்க்கையே பறிக்கப்பட்டு வருகின்றது. நாளாந்தம் கூவிவரும் எறிகணைகள் எங்கே விழுகிறது? வன்னித் தமிழர் தம்தலைகளில்தான். எந்த நாள் மாலையிலும் எறிகணைக்குப் பலியானோர் விபரம் காயமடைந்தோர் விபரம் வரத் தவறவில்லை. ஒரே குடும்பத்தில் பல சாவுகள் இறுதிக் கடன் செய்யவும் ஆளில்லாமல் ஒட்டுமொத்தமாகச் சாவடைந்த குடும்பங்களும் உண்டு. எப்படியோ இனிமக்கள் யுத்தக்களத்திற்கும் வந்து விட்டனர். வாழ்வா? சாவா? ஒருகை பார்ப்போம் என்ற எல்லைக்கு வந்துவிட்டோம். கடல் போல சேனை வருகிறது என்றாலும் கலங்காமல் போராடப்புலிகள் சேனை இருக்கிறது. எதிரிக்கு இழப்பு ஏற்படும் போதெல்லாம் தமிழ் மக்களைத் தேடித்தாக்கியவன் தானே மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திப் பார்த்தால் புரியும் நவாலித் தேவாலயத்தையும் நாகர்கோவிலையும் யாகப்பர் தேவாலயத்தையும் இன்னும் இன்னும் எத்தனை அவலங்களை மறந்தாபோவோம். விடுங்கள் எமது வாழ்க்கைக் காலத்தில் நாம் காணாத எதையும் இனிப்புதிதாகச் சந்திக்கப் போவதில்லை. யாரும் காணமல், எவரும் தெரியாமல் களமுனைக்கு நகரும் படைகளைப் பற்றித்தான் இதுவரை கேள்விப்பட்டுள்ளோம்.

இன்று மக்கள் வழியொதிங்கி நிற்கப்பட்டப்பகலிலும் இரவிலும் கூடப் படையணிகள் நகர்கின்றன. எல்லைப்படையினர். தேசியத்துணைப்படையினர் போரணிகளுள் இணைந்து செல்லும் அழகை மக்கள் பெருமித்ததோடு நோக்குகிறார்கள். கைஅசைத்து விடைகொடுக்கப் பெரும் திரளான மக்கள் கூட்டம் திரள்கிறது. இன்னமும் வீதிகளில் விடுப்புப் பார்க்க குவிவோரும் வீண் வம்பு பேசுவோரும் கூட இருக்கத்தான் சொய்கின்றார்கள். இவ்வளவு இக்கட்டுள்ளும் மதுபானமருந்திவிட்டு போதையில் பிதற்றுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள். நாளாந்தம் பொதுச் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. அவலப்பட்டு ஓடிய மக்களின் பொருட்களை அள்ளச்செல்வோர் தமது உயிரைப்பற்றி எதுவும் கவலை கொள்வதில்லை.

ஒரு கடையை உடைத்து பொருளை எடுப்பவன் தனது பசிக்கு எடுத்துச் செல்வது பொறுத்துக் கொள்ளக்கூடியதுதான். ஆயினும் சட்டப்படி அது பிழை. அவசரமகாலம் ஏற்பட்டுவிட்டாலே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிடும் ஆயினும் ஒரு உழவு இயந்திரப் பெட்டியையே கொண்டுபோய் பொதுச் சொத்துக்களை அள்ளிச் செல்வது மண்கொள்ளை எனப்படும். மண் கௌ்ளையிடப்பட்டால் ஒருவர் அனைத்தையும் இழந்துவிடுவார். இப்போது நிலைமை என்ன? பொருட்களுக்கு பொறுப்புச் சொல்லவேண்டியவர் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டது எனக்கூறி முடித்துவிடலாம். எறிகணைபட்டு அழிவதை யாராவது எடுத்துசலெ்லட்டுமே எனச் சட்டமும் வாய்மூடியிருக்கலாம்.

ஆனால் அதை நிவாரணமாகப் பெறக்காத்திருந்த அவலப்பட்ட மக்களின் அடுப்புகளில் எரியவேண்டிய நெருப்பு அவர்களின் அடிவயிற்றுக்கு ஏறிவிடும். அதன் தாக்கம் பெரிதல்லவா? உடமைகளைக் காப்பாற்றவும் உயிரை பொருட்படுத்தவில்லை. எம்மக்கள் ஊரார் பொருளைத் தூக்கவம் உயிரைப் பொருட்படுத்தவில்லை. விசுவமடுப் பிரதேசம் எங்கும் பரவலாக எறிகணைகள் வீழ்நது கொண்டிருக்க ஆங்காங்கே ஓரிரண்டு பேர் நடமாடிக்கொண்டிருந்தாலும் அவர்கள் முகத்திலும் பிணக்களை அப்பியிருக்க, சிறு கடைகவாசலில் மிதிவண்களுடன் நால்வர் விளையாடிக்கொண்டிருந்த விடயம் இதுதான்" நான் என்ர மாமாவுக்கு கொண்டு ஒரு பத்துப் பதினைந்து வெத்திலைதான் இடுங்கினனான் இவன் தான்..." "எட நாசமாப் போவாரே வெத்திலையை ஆஞ்சியள் பரவாயில்லை கொடியை ஏன்ரா அறுத்தெடுத்த நீங்கள் உண்டாக்கப்பட்ட பாடு தெரியுமே..." "ஆனா..ஆனா... நாளைக்கு அமி வந்தா உண்டாக்கிவிடுவான் சும்மாவோ..." இப்படிப் போகிறது கதை.

முப்பது பேருக்கும் அதிகமாக நல்ல திடகாத்திரங்கள் மிதிவண்டிகளுடன் எரியிற வீட்டுல பிடுங்கிறது இலாபமென்றும் நிற்கிறார்கள். இவர்களது மனதில் எவ்வளவும் தாம் செய்யப்போகும் காரியம் தப்பென்ற எண்ணமில்லை. இப்படித் துணிந்தவர்கள் உயிரை வெறுத்துத்தானே கொண்டு வாறம் என்று வேறுடம்பம் அடித்துக்கொள்வார்கள். இந்த உயிரை வெறுத்துப் போராடத் துணிந்திருந்தால்... எத்தனையோ மக்களின் இன்னல்கள் இல்லாதொழிந்திருக்கும். வீதியோரங்கள் நிரம்பி வழியும் மக்கள் கூட்டம் உடமைகளைக் கொட்டிவைத்துவிட்டு குளிரில் விறைத்துக்கொண்டும் விழித்திருக்கவேண்யுள்ளது.

விசுவமடுவிலிருந்து முற்பகல் 2.00 மணிக்கு புறப்பட்ட வாகனம் நள்ளிரவு கடந்து 2.45 இற்கு மூங்கிலாறுப் பகுதியும் கால் பதித்தது. போரணிகள் நகர்வதற்காக இந்தக் காத்திருப்பு என்றாலும் குடிப்பதற்கு நீரோ பகல் உணவைக் கூட உண்ணமுடியாமல் ஓடி வந்தவர்களுக்கு உணவோ அளிக்க எந்தக் கடையும் இல்லை. குழந்தை குட்டிகளுடன் பேருந்தில் ஏறிய குடும்பத்தவருக்குத்த தான் போகவேண்டிய இடம் தெரியவில்லை. பொழுதுபடமுதல் போயிருவம் எண்ட நினைவில வந்திட்டன. இப்ப ஆர் கதவு திறந்து வைச்சிருக்கப் போறாங்கள். என்னைச் சேச்சடியில இறக்குங்க என்றார். "கோயில்ல படுத்திருந்துவிட்டு விடியப் போவம்" என்பதாக முடிந்தது அவர் பொழுது.

காலம் முழுதும் தமிழனுக்கு இது என்ன தலைவிதியா? இன்னமும் சோர்ந்துபோய்க் கிடக்கலாமா? நாம் எதற்காக தண்டிக்கப்படுகிறோம். நாம் ஏன் கொல்லப்படுகிறோம் என்று தெரியாமலே மடியும் சின்னஞ்சிறு குழந்தைகளின் பாதுகாப்பு யார் கையில்? அவர்களைக் காப்பாற்ற ஏன் தவறினோம். காரணங்களைக் கேட்டுக்கேட்டுக் கதறுவதில் இலாபமென்ன? நான் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று எவராவது சொன்னால் அவர் இன்னமும் சடமாகத்தான் இருக்கிறார் என்பது பொருள். பிறந்தவர்கள் என்றோ ஒருநாள் இறந்து தான் சாகவேண்டும். அந்தப் பிறப்பிற்கும் இப்பிறப்பிற்கும் இடையேயான வாழ்க்கை சுதந்திரமாக அச்சமற்றதாக அமைய பாதுகாப்பு அவசியம். அதற்காகப் போராடுவோமே...

- மாயா

Thankyou tamilkathir.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.