Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழமும் - என் சிறு வயது போராட்டமும்

Featured Replies

தமிழகத்தின் மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருக்கும் ஒரு மிகப் பெரிய தொழிற்சாலைக்கு அருகில் சாலையில் அதிவேகமாக விரையும் வாகனங்களை வேடிக்கை பார்த்தபடி இந்த வாகனங்கள் எங்கே செல்கின்றன கேள்வியுடன் அந்த ஊர் அன்றிருந்தது...

********************************************************************************

********

வருடம் 1983. அதே ஊர். ஈழத்தில் கறுப்பு ஜுலை படுகொலைகளைக் கண்டித்து முழு கடையடைப்பு நடைபெற்ற நாளிற்கு முந்தைய நாள் மாலை நேரம் ஊரின் விளையாட்டு மைதானத்தில் , மைதானம் என்றால் பெரிய கற்பனைகள் வேண்டாம் அந்த ஊரின் மிக அகலமான தெரு அது அவ்வளவே , கையில் ஹாக்கி மட்டைகளுடன் விளையாட கூடுயிருந்தனர் சில சிறுவர்கள், மீண்டும் ஒரு விளக்கம் ஹாக்கி மட்டை என்றால் பிரபலாமான வேம்பையர் ஹாக்கி ஸ்டிக்குகள் அல்ல, ‘ ட ’ வடிவத்தில் இருக்கும் பலமான மரக்கிளைகள்.. என்ன ‘ட’ வின் மேல் பகுதி மட்டும் நீண்டு இருக்கும். கிட்டத்தட்ட 10 சிறுவர்கள் அனைவரும் 12 லிருந்து பதினைந்து வயதுக்குட்பட்டவர்கள்.யாருமே விளையாடும் மன நிலையில் இல்லை. காரணம், ஒவ்வொருவரின் வகுப்பாசிரியர் அவர்களிடம் தெரிவித்திருந்த செய்தி.

”நாளைக்கு பள்ளிக்கூடம் இல்லை பசங்களா’

’ஏன் டீச்சர்’

’இலங்கைல நம்மாளுங்கள கொல்றாங்க இல்ல அதை கண்டிச்சு நாளைக்கு பந்த்’ இது டீச்சர்

அதைத் தொடர்ந்து ஒரு நீண்ட விளக்கம்... என்னைப் போன்ற சிறுவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ ... ஆனால் புரிய வைக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் ஈழப் பிரச்சினை குறித்து ஒரு விளக்கம் ( நன்றி கவுரி டீச்சர்) .. இது ஒவ்வொரு வகுப்பிலும் அந்த வகுப்பாசிரியர்களால் விளக்கப்பட்டிருந்த்து பிறகு தான் தெரிய வந்தது.

விளையாட்டு மைதானத்தில் கூடி இருந்த சிறுவர்களில் முதலில் திரியைக் கொளுத்தி போட்டவன் கொட்டாய் ( பட்டப் பெயர்கள் மட்டுமே இங்கு குறிப்பிடப்படும்).

” டே ... நம்ம ஆளுங்கள சிங்களவனுங்க கொல்றானுங்களாம்... டீச்சர் சொன்னாங்க”

‘ ஆமாடா... எங்க டீச்சரும் சொன்னாங்க’ இது குள்ள சரவணன்

இந்த கொட்டாயும் குள்ள சரவணனும் தான் வயதில் மூத்தவர்கள் அப்போது 15வயதிருக்கும் அவர்களுக்கு ... மற்ற அனைவரும் 12 அல்லது 13 வயது நிரம்பிய சிறுவர்கள் ... அவர்களது அடிப்பொடிகள்..

‘ஆமாண்ணா எங்க டீச்சரும் சொன்னாங்க” இது கூடியிருந்த அடிப்பொடிகள் அனைவரும் ஒருவர் மாற்றி ஒருவர் சொன்னது.... அந்த அடிப்பொடிகளில் கோழி என்ற பட்டப் பெயரைக் கொண்டிருந்த அடியேனும் ஒருவன் ( அந்த பட்டப் பேரெல்லாம் மறைந்துவிட்டது.. இப்போ நான் புலேந்திரன் ) இதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்த போது தான் நொட்டையன் சொன்னான்.... ’ கொட்டாயண்ணா நோட்டீஸெல்லாம் ஒட்டி இருக்காங்கண்னா’

கொட்டாய் உடனே சொன்னான் ‘ நாமளும் ஒட்டுவொம்டா’. கொட்டாய்க்கு எப்படிதான் அந்த யோசனை தோன்றியதோ தெரியவில்லை ... ’ எல்லாரும் ரஃப் நோட்டுல இருக்க காலி பேப்பர கிழிச்சு கொண்டாங்கடா..டேய் கோழி .. நீயும் நொட்டையனும் எல்லாப் பேப்பர்லயும் ’’சிங்களன் ஒழிக.. தமிழ் வாழ்க’’ நு எழுதி நாளைக்கு கொண்டாங்கடா ...ஃபேக்டரி ஷெட்ல இருக்க எல்லா லாரிலயும் நாளைக்கு ஒட்டுவொம்... 15 வயது கொட்டாய் ஆணையிட அவனைவிட வயது குறைந்த நொட்டையனும் கோழியும் அதை ஏற்றுக் கொண்டனர். குள்ள சரவணனுக்கு நோட்டிஸ்களை ஒட்ட பசை தயாரிக்க ஆணையிடப்பட்டது... சுள்ளாணி என்ற நண்பனுக்கு கறுப்புக் கொடி தயாரிக்கும் பணி.... பந்த் தினமான மறு நாள் காலை 10 மணிக்கு மாரியம்மன் கோவிலுக்கு வந்துவிட வேண்டும் என்ற தீர்மானத்தின் பேரில் சபை கலைந்தது.

வீட்டில் எழுதினால் பிரச்சினை வருமோ ( அம்மா கிட்ட பயம்தான்) எனக் கருதி ஆறுமுகம் மாமா ( நம்ம செல்ல மாமா) வீட்டில் உட்கார்ந்து கோழியாகிய நான் நண்பர்கள் கொடுத்த வெற்று தாள்களிலும் அவை தீர்ந்த பின்பு எனது கணித நோட்டின் காலிபக்கங்களை கிழித்தும் ... சிறுவர் சபை தீர்மானத்தின்படி ‘ சிங்களன் ஒழிக... தமிழ் வாழ்க ‘ என எழுதிக் குவித்தது இன்றும் நினைவில் இருக்கிறது.

காலை 11 மணிக்கெல்லாம் அனைவரும் அவரவருக்குரிய பணியை நிறைவு செய்து மாரியம்மன் கோவிலில் ஆஜர். சுள்ளாணியால் தான் கறுப்புக்கொடி தயார் செய்ய முடியவில்லை... வந்தார் நம் அணியின் உப தலைவர் குள்ள சரவணன்... எங்கோ சென்றான்... கறுப்பு ரிப்பன்கள் 4 கொண்டு வந்தான் .. இரண்டு இரண்டாக அவை வெட்டப்பட்டு சிறு குச்சிகளில் கட்டப்பட்டன... கறுப்புக் கொடி தயார்...

கையால் எழுதப்பட்ட நோட்டீசோடு நானும் பசை நிரம்பிய ( பசை என்றால் பழைய சோறு என்பதை நினைவில் கொள்க) பாத்திரத்தோடு சரவணனும் முன்னால் செல்ல... ஊர்வலம் பத்துப் பன்னிரெண்டு பேருடன் ஆக்ரோசமாக மாரியம்மன் கோவிலில் இருந்து கிளம்பியது.. நோட்டீசில் எழுதப்பட்ட வாசகம் சிறுவர்களின் குரலாக ஓங்கி ஒலித்தது...

’சிங்களன் ஒழிக... தமிழ் வாழ்க’

ஊருக்குள் ஊர்வலம் வந்த போது... பெற்றோர்கள் யாரும் தடையாணை பிறப்பிக்கவில்லை... புன்னகை... பெரும் புன்னகை... கை அசைத்தல்... நாங்கள் ஊர்வலம் போவதைக் கண்டு ஒரு மகிழ்ச்சி கலந்த பெரும் சிரிப்பு... அவ்வளவே...

நெடுஞ்சாலையை அடைந்த ஊர்வலம் நடுரோட்டில் நடை போட்டது... வேறு சில பள்ளித் தோழர்களும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்... ‘ சிங்களன் ஒழிக... தமிழ் வாழ்க’ ஆக்ரோச கோஷத்துடன்... ஊர்வலம் ஃபேக்டரியில் வெளியூர்களுக்கு பொருள்களை ஏற்றி செல்லும் லாரிகள் நிற்கும் தரிப்பிடத்தை நோக்கி வேகமாக சென்றடைந்தது.

முதலில் நின்றது ஒரு வட இந்திய லாரி... சிங்கோட லாரி... இங்குதான் வந்தது மிகப் பெரிய குழப்பம்.. குழப்பத்தை தொடங்கியது கூட்டத்தில எவனோ ஒருத்தன்... டேய் இந்த சிங்கானுங்கதான் நம்ம ஆளுங்களை கொல்றாங்க... இவன் லாரில ஒட்டுங்கடா ( சிங்கு... சிங்களன் ---- அப்புறம் கொஞ்ச நாள் லாரி ஷெட்டுக்கு வரும் வட இந்திய சிங்கானுங்களை முறைத்துக் கொண்டே சென்றது தனிக் கதை )... எல்லோரும் அணித்தலைவர்களான கொட்டாய் மற்றும் குள்ளயனைப் பார்க்க... ஆமாம்டா கோழி ... ஒட்றா இவன் லாரில என்றான் அவன் என்னைப் பார்த்து.. லாரியின் முகப்பு விளக்கு இருக்கும் இடத்திற்கு மேலே ஒட்டப்பட்ட்து எங்களது முதல் நோட்டீஸ்... ‘ஹோ ’ என்ற உற்சாக கத்தல் ... சிங்களனை வென்றது போல அப்படி ஒரு மகிழ்ச்சி... ஒவ்வொரு லாரியாக ஒட்டி முடித்து எங்கள் அன்றைய போராட்டம் முடிந்த்து....

அன்று ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற செய்தி கேட்டு எனது சிறு வயதில் ஈழத்திற்காக நானும் எனது நண்பர்களும் நடத்திய போராட்டத்தைய நினைக்கும் போது.... அதே ஈழத்தில் இனப்படுகொலை தீவிரமாக நடக்கும் இன்றைய காலகட்டத்தில் ... சிறுவர்களிடம் ஏன் அத்தகைய எழுச்சி இல்லை என்ற கேள்வி மிகப் பெரிதாக நிற்கிறது...

இடைப்பட்ட காலத்தில் தமிழகம் செய்த தவறு என்ன....? யார் பொறுப்பு...

*****************************************************************************

தமிழகத்தின் மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருக்கும் ஒரு மிகப் பெரிய தொழிற்சாலைக்கு அருகில் சாலையில் அதிவேகமாக விரையும் வாகனங்களை வேடிக்கை பார்த்தபடி இந்த வாகனங்கள் எங்கே செல்கின்றன என்ற அதே கேள்வியுடன் இன்றும் இருக்கிறது அந்த ஊர்.

http://www.tamilnadutalk.com/portal/index....showtopic=14979

  • கருத்துக்கள உறவுகள்

அன்று ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற செய்தி கேட்டு எனது சிறு வயதில் ஈழத்திற்காக நானும் எனது நண்பர்களும் நடத்திய போராட்டத்தைய நினைக்கும் போது.... அதே ஈழத்தில் இனப்படுகொலை தீவிரமாக

நடக்கும் இன்றைய காலகட்டத்தில் ... சிறுவர்களிடம் ஏன் அத்தகைய எழுச்சி இல்லை என்ற கேள்வி மிகப் பெரிதாக நிற்கிறது...

இடைப்பட்ட காலத்தில் தமிழகம் செய்த தவறு என்ன....? யார் பொறுப்பு...

மில்லியன் டொலர் கேள்வி இது .

சுயநல அரசியல்வாதிகளோ ...... அல்லது முக்கிய உயர்ந்த பதவிகளில் வேற்று மாநிலத்தவரின் ஆதிக்கமாகவும் இருக்கலாம் .

இடைப்பட்ட காலத்தில் தமிழகம் செய்த தவறு என்ன....? யார் பொறுப்பு...

பதில் என்ன எண்டால் சகோதர யுத்தம் பற்றி சகட்டு மேனிக்கு கதைவிடும் கலைஞர் எனப்படும் கருணாநிதி தான் காரணம்.....!!

செய்த தவறுகள்..

  • ஈழ விடுதலை போரை கோஸ்ரிகளாக பிரித்து மோத விட எண்றே பல இயக்கங்களை தோற்று வித்தது இந்திய உளவு பிரிவு... அதை MGR எதிர்த்து ஒரு அமைப்புக்கு மட்டும் உதவ முனைய அதுக்கு எதிர்மாறாக அறிந்தே அவர்கள் எல்லாரையும் வளர்த்து விடும் தவறை செய்தவர் கருணாநிதி.....

  • இந்திய இறையாண்மைக்கு அமைய பெரியார், பேரறிஞர் அண்ணா போண்றவர்களால் தோற்றப்பட்ட தமிழ் எனும் மேலோங்கிய உணர்வை சிதைத்து வேறு வளிகளில் மக்களை திருப்பியதில் கருணாநிதிக்கான பங்கு...

  • இந்திய கொலை படைகளை வரவேற்க்க போகாதவர் , அவர்களுடன் சேர்ந்து நிண்று தமிழர்களை வதைப்பதில் துணை நிற்ற பத்மநாபாவுக்கு ஆயுதங்களுடன் அடைக்கலம் கொடுத்தார், அதே பத்மநாபா தனது நண்பர் எண்று வெளிப்படையாக சொல்லியும் கொள்ளும் இரட்டை முகம்...!!

  • புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து எண்று கருணாநிதி அடித்த குத்து கறணமும், அதன் பின்னர் வைகோவை வெளியேற்றியமையும்...

  • மத்தியில் காங்கிரஸ் அரசுக்கு நிகராக வாரீசு அரசியல் நடத்துவதும் கூட ஒரு காரணம்.. பலர் வெறுப்படைந்து தனது வேலை மட்டும் பார்த்தால் போதும் சமூகம் எக்கேடு கெட்டால் எனும் நிலைக்குள் போய் விட்டனர்...!!

  • இவர் எல்லாம் ஒழுக்கமாக இருந்து இருந்தால் ஜெயலலிதா எனும் நடிகை அரசியலுக்கு தேவையே இல்லை எனும் நிலை வந்து இருக்கும்...

இண்று வரைக்கும் கலைஞருக்கு RAW வின் மீது இருக்கும் விசுவாசத்தை கட்டுரையாகவே எழுத முடியும்...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.