Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தேர்தல் -யாரும் இங்கே சுத்தமில்லே -குமுதம் முச்சந்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தேர்தல் -யாரும் இங்கே சுத்தமில்லே

மெரீனா கடற்கரை ஓரம். அண்ணா சமாதி அருகே அமர்ந்து கொண்டிருந்தது அலப்பறை டீம். உன்னைச் சொல்லி குத்தமில்லே. யாருமிங்கே சுத்தமில்லே என்று அலம்பல் செய்து கொண்டிருந்தார் சுவருமுட்டி சுந்தரம். "குடிமகனுக்கு அலம்பலைப் பாரு. இப்போ எதுக்குய்யா அந்தப் பாட்டைப் பாடற" என அதட்டினார் சித்தன்.

"வேற என்னய்யா பாட முடியும். அண்ணா உயிரோடு இருந்தபோது இலங்கைத் தமிழருக்காக குரல் கொடுத்தாரு. ஒரு விடிவு வரும்னு சொன்னாரு. எத்தனை வருஷமாச்சு. இன்னைக்கு அவரோட கைப்புள்ள கலைஞர் ஆட்சியிலேயும் அதான் நடக்குது. எந்த காங்கிரஸ் கட்சி இலங்கைத் தமிழர் இன அழிப்புக்காக, சிங்களவனுக்கு துணை போகுதோ, அந்தக் கட்சிகூட கூட்டணி வச்சு குலாவுறாரு. அத நினைச்சேன். பாடுறேன். வேற என்னத்தை சொல்றது" என்றார் சுவருமுட்டி.

"ஆமாம். நீதான் பெரிசா இலங்கைத் தமிழர் பற்றி குமுறிக்கிட்டு இருக்கே. தமிழ்நாடு மக்கள்கிட்டே அப்படி எந்த கொந்தளிப்பும் இல்ல. வர்ற தேர்தல்ல அந்த விஷயம் முன்னிலைப்படுத்தப்படாது. அது ஒரு பிரச்சார மையமே இல்லைன்னு நம்ப தமிழினக் காவலர் கருணாநிதியே சொல்லிட்டாரு"- ஆட்டோ அன்வர்பாய்.

"அப்படிப் போடு. கலைஞர் அப்படி சொன்னதுல பெரிய சூட்சுமமே இருக்குப்பா. அதாவது அவரு அப்பிடி நினைக்குறாரு. அந்த நினைப்பு அப்படியே தமிழகத்துல இருக்கணும்னு விரும்புறாரு. அத மனசுல வச்சுதான் இப்படி ஒரு டயலாக்கை விடுறாரு"- சுவருமுட்டி.

"என்னய்யா சொல்ற. புரியற மாதிரி சொல்லுய்யா"- சித்தன்.

"என்னத்த சொல்ல. அப்புறம் குடிகாரன் சும்மா உளருறான்னு சொல்லவா. சரி விஷயத்துக்கு வர்றேன். நம்ப கலைஞரு ஒரு பெரிய திட்டத்தோட இருக்காரு. அதுக்காக உளவு வட்டாரத்தோட எல்லாம் பேசி வர்றாரு. எப்படியாவது வர்ற தேர்தல்ல இலங்கைத் தமிழர் பிரச்னை முக்கியமில்லங்கிறத மக்கள் மத்தியில காட்டணும். தொடர்ந்து அப்படி பத்தவைக்கணும். ஏன்னா வர்ற தேர்தல்ல அ.தி.மு.க அதைத்தான் பிரச்சார பலமா நினைக்குது. ஆனா மக்கள் அப்பிடி இல்லே. தி.மு.க-காங்கிரஸ் நலத்திட்டத்தை நல்ல மாதிரியா நினைக்குறாங்கன்னு சொல்ல வைக்கணும்னு திட்டம் வச்சிருக்காருப்பா"

"யோவ் சுவருமுட்டி. அதெப்படி இல்லாததை இருக்கிறதா சொல்ல வைக்க முடியுமா?"- கோபாலு.

"அதுதானே அவரோட சாணக்கியம். அதாவது சொல்றதை ஆதாரத்தோட சொல்ற மாதிரி சொல்லணும். அதுக்காக தன்னோட மீடியாவையும் குடும்ப மீடியாவையும் களத்துல இறக்கி இருக்காரு. கிட்டத்தட்ட எல்லா தொகுதி தேர்தல் சர்வேயும் முடிஞ்சிடுச்சு.அதுல மக்கள் எல்லாம் சுபிட்சமாகத்தான் இருக்காங்க. திட்டமெல்லாம் தொண்ணூறு சதவீதம் திருப்தி. மாதம் மும்மாரி மழை பொழியிற ஆட்சிதான் இது. மத்தியில காங்கிரஸ் கூடதான் கூட்டணி வச்சிக்கிடணும். அதுதான் நம்பகமானது. மத்ததெல்லாம் கவுந்துடும்னு ஒரு பிளஸ் பாயிண்ட் முடிவு. அதுவும் மக்கள் நினைக்குறதாவே. அதோட இலங்கைத் தமிழர் விஷயத்தை அப்படி ஒன்றும் முக்கியமில்ல. அப்படியே கண்டுக்கிட்டாலும் கொஞ்சமாத்தான் கண்டுக்கிடறாங்க. காங்கிரசுக்கு இலங்கைத் தமிழர் படுகொலையில அவ்வளவா தொடர்பில்லைன்னு எல்லாம் மக்கள் சொல்றதா வரணுமாம். அப்படியே மீறி இன உணர்வு பிரச்னை இருக்குதான்னு வச்சிக்கிட்டாலும், அ.தி.மு.க.வும் ஜெ.வும் அந்த விஷயத்துக்கு விரோதின்னு மக்கள் நினைக்கிறதா வரணும். தி.மு.க.வை விட அ.தி.மு.க மோசம்னு சொல்லணும். அந்தம்மா இலங்கைத்தமிழர் விஷயத்தை இப்போ தேர்தலுக்காகத்தான் பேசுதுன்னு காட்டணும்"

"சரி. இப்படியெல்லாம் செய்தா சரிவருமா. மக்கள் ஏத்துக்கிடணுமே"- அன்வர்பாய்.

"சரியா கேட்டே. எதையும் மூடி மறைச்சு பந்தா காட்டினாதான் மவுசு. மக்களும் அதைத்தான் நம்புவாங்க. அதனால கலைஞர் நினைக்கிற அந்த கருத்துக்கணிப்பு அப்படியே அவிங்க மீடியாவுல வராது. அதுக்குன்னு உளவுக் குருவிங்கள இறக்கணும். அவிங்க சோர்ஸ் மூலமா, இப்படி ஒரு கணிப்பு. அதாவது இலங்கைத் தமிழர் விஷயத்துல தி.மு.க மேல அதிருப்திதான். ஆனாலும் மத்த விஷயத்துல பரவாயில்லைன்னு பத்த வச்சிடணும். அதுக்காக மீடியா ஆட்கள் கொஞ்சம்பேரை வச்சு தகவலை பிரச்சாரப் படுத்தணும். அப்புறம் அந்த ஈழத்தமிழர் விஷயத்துல அ.தி.மு.க.வை விட தி.மு.க பரவாயில்லைன்னு எக்ஸ்டன்ட் பண்ணணும். இப்படி படிப்படியா பேப்பர் மூலமா பத்தவச்சா அ.தி.மு.க கூட்டணி பலமில்லாம போயிடும்னு நினைச்சு இறங்கிட்டாரு. அதைத்தான் அப்படி கோடிட்டு காட்டுறாரு"

"அப்போ மீடியாவுல அப்படிப்பட்ட செய்தியெல்லாம் வரும்னு சொல்லு"- கோபாலு.

"இதுக்கு மேலயும் விவரிச்சா அப்புறம் காக்கிங்க என்னைய உரிச்சுடுவாங்க. ஏற்கனவே நான் தண்ணி பார்ட்டி. ஏதாவது உளறுவேன். தப்பு தண்டாவா பேசிட்டேனா புடிச்சு உள்ளே வச்சிடுவாங்க. தேவையா. தண்ணி இல்லாம ஒரு வருஷம் உள்ள இருக்க முடியுமா? சரி. அவிங்க எடுத்த சர்வே பத்தின உண்மைய சொல்றன் கேளுங்க. சீமான், கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் இவங்கள எல்லாம் உள்ள வச்சிருக்கிறதால தி.மு.க மேல அதிருப்தி மட்டுமில்ல, இலங்கைத் தமிழர் ஆதரவும் கூடியிருக்கு. அதுதான் உண்மை. அதே மாதிரி வைகோ, தா.பாண்டியன், திருமாவளவனுக்கு எல்லாம் இந்த விஷயத்துல மக்கள் ஆதரவு இருக்கு. இதுல திருமா தி.மு.க பக்கம் வந்துட்டதால அவிங்க தொண்டர்கள் மத்தியிலயும் தமிழ் ஆதரவாளர்கள் தரப்புலயும் பெரிய அதிருப்தி. வைகோ, தா. பாண்டியன் போன்றோரின் ஈழ ஆதரவு- காங். எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு எப்படி பதிலடி தர்றதுன்னு தலைவரு தீவிரமா யோசிக்கிறாராம்:

"அதான் ஆஸ்பிட்டல்ல படுத்துக்கிட்டு ரொம்ப ப்ரீயா யோசனை செய்து வச்சிருக்காரே. அதெல்லாம் கைகொடுக்கும். சரிப்பா. அம்மா டி.வி, அய்யா டி.வி தரப்பிலிருந்தும் சர்வே போனது என்னவாம். அதுபத்தி சொல்லாம அமுக்கிறியே"- சித்தன்.

"எல்லாத்தையும் நான்தான் சொல்லணுமா. அப்ப குவார்ட்டர் வாங்கிக் கொடுங்க. அம்மா தரப்பு மீடியாவும் அதிரடியா சர்வேயில் இருக்கு. அது இன்னும் முடியல. அதுதவிர தனியார் மூலமாவும் எடுத்திருக்காங்க. இலங்கைத்தமிழர் ஆதரவு விஷயம் ரொம்ப லேட்டு. காங்கிரஸ் வரும்னு காத்திருந்து அதுக்காக வேண்டி போர் என்று நடந்தால் அப்பாவி பொதுமக்கள் சாவுறது சகஜம்தான்னு சொன்னது சகிக்கலை. நம்பகத் தன்மை இல்லை. இருந்தாலும் காங்கிரசுக்கு ஒரு பாடம் சொல்றதுக்காக அந்தம்மா இப்போ காலம் கடந்த ஆதரவுன்னு சொல்றதை எடுத்துக்கிடலாம்ங்கிற பதில் மெஜாரிட்டியா இருக்காம். இலவச நலத்திட்டம் கிடைச்சவங்களுக்கு சந்தோஷம். கணக்குப்படி பார்த்தா கிடைக்காதவங்க அதிகம். அதனால அது தி.மு.க.வுக்கு பாதிப்பைத்தான் தருமாம். அப்படியே பா.ம.க பத்தியும் கேட்டிருக்காங்க. எல்லா விஷயத்திலேயும் காங்கிரசை, தி.மு.க.வை நொட்டம் சொல்லிட்டு திரும்பவும் அங்கேயே போய் கூட்டணி வச்சிக்கிட்டா சரிப்படாது. கவுந்துடும்னு மெஜாரிட்டி கணக்கு சொல்லுதாம்"

"ஏம்பா. இந்த இலவசம் எல்லாம் ரொம்ப கைகொடுக்கும்னு தி.மு.க தரப்பு சொல்லுதே. நீ என்னமோ மாத்தி சொல்ற. உனக்கு தலைவர் பேர்ல கடுப்பா?"- அன்வர்.

"அடப்பாவி. உண்மையைச் சொன்னா இப்படி கவுத்துடுறியே. சரி ஒரே ஒரு உதாரணம் சொல்றேன். உங்க பக்கத்து வீட்டுக்கு கலர் டி.வி.ய கொடுத்துட்டு உன்னைய டீல்ல விட்டா என்ன செய்வே? தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடுவியா? உன் சொந்த பந்தத்தை எல்லாம் பேசி எதிரா மாத்த மாட்டே. அதுமாதிரிதான் இதுவும். அது மட்டுமில்ல. இலவசங்கள் வாங்கினதுலேயும் ஒரு சர்வே. அதுல கட்சிக்காரங்க எண்பது சதவீதத்துக்கும் மேல. அப்டீன்னா 20சதவீதம்தான் கட்சி சாராதவங்க. கூட்டிக்கழிச்சு பாரு. கணக்கு சரியா வரும். அம்புட்டு எதிர்ப்பு இருக்கிறதா அம்மா தரப்புக்கு ரிசல்ட் கிடைச்சிருக்கு. ஆனா ஒரு விஷயத்தை மறைக்க முடியாது. கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டமிருக்கே. அது தி.மு.க.வுக்குத்தான் சாதகமா இருக்கு."

"எல்லாம் சரி. அய்யா தரப்பு சர்வே என்ன சொல்லுதாம்?"- கோபாலு.

"அவிங்க வெளிப்படையா செய்திருக்காங்க. அதனால நம்ப முடியாது. ஆனால ஒரு விஷயம். ஈழத்தமிழ் ஆதரவு இருக்காம். அதுபத்திதான் டாக்டர் யோசிக்கிறாராம். சர்வேக்கு போன டீம்கிட்ட டாக்டரே நேர்ல பேசி தெரிஞ்சிக்கிட்டு வர்றாரு. காங்கிரஸ்கூட நின்னா பா.ம.க.வுக்கு இனஉணர்வு விஷயத்திலேயும் நம்பகத்தன்மை இல்லாம போயிடும்னு மக்கள் சொல்றாங்களாம்"

"ஆக அ.தி.மு.க பக்கம் போயிடப்போறாருன்னு சொல்லு"- சித்தன்.

"தெரியல. ஆனா அப்படித்தான் தெரியுது. இன்னமும் தி.மு.க காங்கிரசை தாக்கி அறிக்கை விடுறத நிறுத்தல. அவரோட புள்ள அன்புமணிய மந்திரி பதவிய ராஜினாமா செய்ய சொல்லிட்டதாகூட பரபரப்பு. இந்தா இப்போ ராஜினாமா செய்துடுவாருன்னு ஒரே பேச்சு. அப்புறம் பார்த்தா லாலு பிரசாத் யாதவ் கூடத்தான் காங்கிரசுக்கு பட்டை நாமம் சாத்திட்டாரு. காங்கிரசுக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தம். அதுக்காக ரயிலு மந்திரி பதவிய தூக்கியா போட்டுட்டாரு. காங்கிரஸ் கட்சிக்கு எம்.பி ஆதரவ கொடுத்து தூக்கி பிடிச்சாரு. அதுக்கு பங்கா மந்திரி பதவி. அது ஒண்ணும் காங்கிரஸ் இனாமா கொடுக்கலையே. அது மாதிரிதான் பா.ம.க எம்.பி.ங்க சப்போர்ட்டுக்கு மந்திரி பதவி. அதை ஏன் ராஜினாமா செய்யணும்னு புது வியாக்கியானம் சொல்றாங்க. எப்படியோ அய்யா அம்மா கூட்டணிதான்னு தெளிவு வந்திருக்குப்பா"

"அம்மா என்ன முடிவுல இருக்காங்களாம்?"- அன்வர்.

"அதுக்கு நான் சொல்றேன் பாரு பதிலை. இது கோட்டை வட்டார செய்தி. அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையா மாநில ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுன்னு ஏற்கனவே கொஞ்சம் கொடுத்ததுல பாக்கி இருந்துச்சு இல்ல. அதுல தாராளமா அகவிலைப்படின்னு இப்போ தி.மு.க அரசு சொல்லியிருக்கு. இது ஏற்கனவே வந்த ஸ்கீம்தான். மிச்சத்தைதான் இப்போ சொல்லியிருக்காங்க. இருந்தாலும் தேர்தல் நேரத்துல இப்படி சொன்னது அரசு ஊழியர்களின் வாக்கு வங்கிய குறிவச்சுதான் கலைஞர் செய்யறாரு. ஏதாவது சர்ச்சைய கிளப்ப முடியுமான்னு ஜெ நினைக்கிறாங்களாம்"

"அப்படி ஏதாவது பேசி அறிக்கை விட்டா உடனே கலைஞர் அரசு ஊழியர்களுக்கு நியாயமா கிடைக்கறத கூட இந்தம்மா தடுக்குது பாரு. எப்பவுமே அரசு ஊழியர்கள்னா அந்தம்மாவுக்கு எட்டிக்காய் கசப்புதான்னு பதில் அறிக்கை விட்டா பெரிய சிக்கலாயிடும்னு நினைக்குறாங்களாம்"- கோபாலு.

"சரிப்பா. நம்ப சிறுத்தை எப்படியிருக்கு?"- கோபாலு.

"அய்யோ. அதையேன் கேக்குறே. தி.மு.க.மேல அம்புட்டு பாசமா இருக்காராம். டாக்டர் ராமதாசை தேடிப்போய் நீங்களும் வந்துடுங்கோ. காங்கிரஸ் தலைமையில ஆட்சி அமைப்போம்னு சொல்றாரு போல. ஆனா வெளிநாட்டு நண்பர்கள் வட்டாரம் தமிழாதரவு வட்டாரம் எல்லாம் போட்டு அவரை காய்ச்சுக்கிட்டு இருக்கு. சிறுத்தை இப்படி படுத்துகிடுச்சேன்னு புலம்பறாங்க. ஆனால ஏதோ ஒரு திட்டத்தோடதான் திருமா இப்படி ஒரு முடிவை எடுத்துருக்காருன்னும் தொண்டர் வட்டாரம் பேசிட்டிருக்கு" என்றார் அன்வர்.

"எப்படியோ நம்ப டாக்டர் ஐயாவும். கேப்டனும் என்ன முடிவு எடுக்கப்போறாருன்னு முடிவு தெரிஞ்சவுடனே எனக்கு சொல்லுங்கப்பா. அந்த சந்தோஷத்தை குவார்ட்டருக்கு பதிலா ஆஃப்போட கொண்டாடனும்" என்றபடியே எழுந்தார் சுவருமுட்டி சுந்தரம்

-குமுதம் முச்சந்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.