Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி மக்கள் பேரவலம்; களமுனை; இந்தியா; அனைத்துலக சமூகம்; தமிழக மக்கள்; புலம் வாழ் தமிழர்: பா.நடேசன் விரிவான விளக்கம்

Featured Replies

தற்போதைய அரசியல், இராணுவ நிலவரம், வன்னி வாழ் தமிழர் படும் அவலங்கள், உலகம் எங்கும் நிகழும் தமிழர் போராட்டங்கள், அனைத்துலக சமூகம் இயங்கும் போக்கு, இவை எல்லாவற்றிற்குப் பின்னாலும் இயங்கும் இந்தியா என பல்தரப்பட்ட விடயங்கள் தொடர்பான விரிவான விளக்கத்தினை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அளித்துள்ளார்.

அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கடந்த வாரம் ஒலிபரப்பாகிய 'செய்தி அலைகள்' நிகழ்ச்சிக்கு பா.நடேசன் வழங்கிய சிறப்பு நேர்காணல்:

தாங்கொணா துன்பங்களுக்கு ஊடாக தாயக மக்கள் அவலங்களை நாளாந்தம் சந்தித்து வருகின்றனர். தற்போது மிகவும் ஒரு குறுகிய பிரதேசத்திற்குள் ஒரு பெருந்தொகையான மக்கள் அவலப்படுகின்றனர். அவர்கள் நாளாந்தம் சந்திக்கும் அவலம் என்ன என்பதை உங்களிடமிருந்து நான் முதலில் அறிந்து கொள்ள விரும்புகின்றேன்?

தற்போதைய சூழலில் எங்களுடைய மக்கள் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஒரு சிறிய பிரதேசத்திற்குள் வாழ்ந்து வருகிறார்கள். எல்லா மக்களும் இடம்பெயர்ந்து, நிலங்களில் பதுங்கு குழிகள் அமைத்து முக்கியமாக சிறிலங்கா அரச படைகளுடைய கொடூரமான இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒரு புறம் முகம் கொடுத்த படியும் இன்னொரு புறம் பொருளாதார தடை, உணவுத் தடை, மருந்துத் தடை என பல்வேறு தடைகளுக்கும் முகம் கொடுத்தபடி ஒரு மனித அவலத்தின் உச்சத்தில் எங்களுடைய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக இரவும் பகலும் சிறிலங்கா இராணுவத்தினுடைய ஆட்லெறி எறிகணை வீச்சுக்கள் கண்மூடித்தனமான முறையில் மக்கள் செறிவாக வாழ்கின்ற குடியிருப்புகள் மீதுதான் இலக்கு வைக்கப்படுகிறது. சராசரி ஒரு நாளைக்கு சிறிலங்கா இராணுவத்தினருடைய ஆட்லெறி அதாவது பீரங்கித் தாக்குதல்கள் மூலம் 50 இல் இருந்து 100 வரையிலான மக்கள் கொல்லப்பட்டும் 200 வரையான மக்கள் காயப்பட்டும் வருகின்றனர்.

இந்த புள்ளி விபரத்தை இங்குள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் போன்ற நடுநிலையான அமைப்புகள் உலகத்திற்குத் தெரியப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்ல சில சமயம் ஆட்லெறி எறிகணை வீச்சுகள் ஒரு புறம், இன்னொரு புறம் வான்குண்டு வீச்சுகள் கூட மக்கள் குடியிருப்புகள் மீது இலக்கு வைத்து நடத்தப்படுகின்றது.

அதுமட்டுமல்ல இன்றைக்கும் காயப்படுகின்ற மக்களுக்கு உடனடியாக அடிப்படை சிகிச்சைகள் கொடுப்பதற்கு கூட மருந்துகள் இல்லை. இந்த இராணுவ நடவடிக்கை தொடங்கிய காலம் தொட்டு இன்றுவரை மருந்து தடையை உருவாக்கி மக்களை பெரியதொரு இன அழிப்பு நிலைக்கு தள்ளி இருக்கின்றது.

அதுமட்டுமல்ல உணவு ரீதியாகவும், இன்றைக்கு எங்களுடைய மக்கள் மரக்கறி உணவுகளைச் சாப்பிட்டு மாதக் கணக்காகிறது. உதாரணத்திற்கு நாங்கள் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதாவது வல்லிபுனம், தேவிபுரம் போன்ற பிரதேசத்தில் இருந்துவிட்டு இங்கே வந்த பின்னர் மக்கள் தற்போது சாப்பிடுகின்ற உணவு வெறும் சோறும் பருப்பும் அல்லது சோயா மீற் என்று சொல்லப்படுகின்ற உணவு மட்டுமே.

இலை - குழை அல்லது கீரை வகைகள் என எந்தவொரு சத்து உணவைக் கூட மக்கள் உண்ண முடியாத ஒரு நிலையில் இந்த 21 ஆம் நூற்றாண்டின் அதியுச்ச மனித அவலம் என்றுதான் இதைச் சொல்ல வேண்டும்.

எங்களுடைய மக்கள் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஒரு பாரிய இன அழிப்பு யுத்தத்திற்கு, பெரும் சவால்களுக்கு, நெருக்கடிகளுக்கு மத்தியில் முகம் கொடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

இந்த குறுகிய பிரதேசத்திற்குள் இத்தனை லட்சக்கணக்கான மக்கள், ஏற்கனவே இடம்பெயர்ந்து இப்போது இந்த பிரதேசத்திற்குள் இருக்கின்றார்கள். அவர்கள் எவ்வாறு தமது வாழ்க்கையை, இத்தனை அவலங்களுக்கு மத்தியிலும் நடத்தக்கூடியதாக இருக்கின்றது?

உண்மையில் எங்களுடைய மக்களுக்கு இப்போது தொழில் வாய்ப்புக்கள் இல்லை. வருமானங்கள் இல்லை. அதாவது சேமித்து வைத்த சேமிப்புகள் எல்லாம் செலவழிக்கப்பட்டு விட்டன. இருந்தாலும் எங்களுடைய அமைப்புக்கள் குறிப்பாக தமிழர் புனர்வாழ்வு கழகம் போன்ற அமைப்புக்களும் அதே போன்று நிர்வாக சேவை போன்ற அமைப்புக்களும் எங்களுடைய மக்களுக்குப் போதுமான வரை உதவி செய்கின்றார்கள்.

அதே போன்று எங்களுடைய மக்களுடைய பண்பாட்டு வாழ்க்கை முறை, இருக்கின்றவர்கள் இல்லாதவர்களுக்கு உதவி செய்கின்ற ஒரு பண்பாடு இருந்து வருகின்றது. இந்த வகையில் இருப்பவர்கள் தங்களுடைய சேமிப்புகளில் இருந்து இல்லாதவர்களுக்குக் கொடுப்பதற்கான உதவிகளையும் செய்து வருகின்றனர்.

தமிழர் புனர்வாழ்வு கழகம் போன்ற அமைப்புக்கள், தமிழீழ நிர்வாக சேவை போன்ற அமைப்புக்களும் எங்களுடைய மக்களுக்கு உணவுக் கஞ்சி அதாவது, அரிசியில் கஞ்சி காய்ச்சி ஒரு நாளைக்கு இரண்டு தடவை வழங்கி வருகின்றனர்.

எங்களுடைய மக்கள் சொல்லொணா துன்பத்திற்கு, அதாவது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பெரும் பெரும் துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அண்மைய காலங்களில் உலக உணவுத் திட்டத்தால் அனுப்பப்டுகின்ற உணவுகள் மாத்திரம் கப்பல் மூலம் எடுத்து வரப்படுகின்றன. அதிலும் எங்களுடைய மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்யக்கூடிய முறையில் உணவுகள் இங்கே வருவதில்லை.

கடந்த காலத்தில் இரண்டு முறை உணவு வந்திருக்கிறது. ஆனால் அரிசி வரவில்லை. அண்மையில் இறுதியாக வந்தக் கப்பலில்தான் அரிசி வந்திருக்கின்றது. அது கூட எங்களுடைய மக்களின் தேவையை நிறைவு செய்யக்கூடிய அளவிற்கு வரவில்லை. பெரியதொரு மனித அவலம் இங்கே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இங்கே உள்ள அரசு சார்பற்ற நிறுவனங்களைக் கேட்டால் தெரியும். அதுபோல இங்கே இடம்பெறுகின்ற மனித அவலம் இன்றைக்கு முழு உலகத்திற்கும் நன்றாக தெரிய வந்திருக்கின்றது.

தற்போது நீங்கள் இருக்கின்ற குறுகிய பிரதேசத்திற்குள் மக்கள் தங்குவதற்கான போதுமான கூடாரங்கள் இருக்கின்றனவா?

எங்களுடைய மக்களுக்கு இங்கே போதுமான கூடாரங்கள் இல்லை. இருந்தாலும் கடந்த காலங்களில் யுஎன்எச்சிஆர், ஐசிஆர்சி போன்ற அமைப்புக்கள் வழங்கிய கூடாரங்களை வைத்துக்கொண்டு மக்கள் தமது வாழ்க்கையை நடத்துகின்றார்கள்.

அதேபோன்று தற்போது வாழ்கின்ற பிரதேசத்தில் பனைகள் நிறைய இருக்கின்றன. பனை ஓலைகளையும் பயன்படுத்த மக்கள் தொடங்கியுள்ளனர். ஏனென்றால் தற்போது மிகவும் வறட்சியான காலம்; மிகவும் வெப்பமான காலம். அவ்வாறான சூழலில் கூடாரங்களுக்குள் வாழ்கின்ற மக்கள் பெரும் சவால்களுக்கு முகம் கொடுக்க கூடிய ஒரு நிலை தோன்றியுள்ளது.

குறிப்பாக, வெப்பத்தினால் ஏற்படுகின்ற கொப்பளிப்பான் போன்ற வருத்தங்கள் தற்போது எல்லா இடமும் பரவத் தொடங்கியுள்ளன. அதேபோன்று வரும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை கூட தோன்றுவதற்குரிய அறிகுறிகள் தென்படுகின்றன. இப்படியாக எங்களுடைய மக்கள் தங்களுடைய அடிப்படை தேவைகளைக் கூட நிறைவு செய்ய முடியாத அளவிற்கு இருக்கின்றனர்.

தமிழீழ சுகாதார சேவையை எடுத்துக்கொண்டால் சேவையாளர்களுக்கு "வருமுன் காப்போம் என்ற கோட்பாடு" இருக்கிறது. உண்மையில் எங்களுடைய மக்களுக்கு இருக்கின்ற நோய்கள், வருத்தங்கள், காயங்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருந்துகள் போதிய அளவு எங்களிடம் இல்லை.

ஆகையினால், இந்த வருத்தங்கள், தொற்று நோய்கள் வராமல் தடுப்பதற்கு கருத்துரைகள், கருத்துக்களை மக்கள் மத்தியில் போய் அவர்கள் நாளாந்தம் வீடு வீடாகச் சென்று, மக்களுடைய ஒவ்வொரு குடியிருப்பாக அவர்களுக்கு சுகாதாரம் தொடர்பான கல்வி ஊட்டல்களை தீவிரமாக தமிழீழ சுகாதார சேவையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக ஏராளமான போராளிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அது மட்டுமல்ல காயப்பட்ட போராளிகள், தமது உறுப்புகளை இழந்த போராளிகளுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டு அந்த போராளிகளோடு சுகாதார தொண்டர்களும் என எல்லாரும் ஒன்றிணைந்து ஒரே சக்தியாக மக்கள் வாழிவிடங்களுக்குச் சென்று நோய்களை எவ்வாறு தடுப்பது, எவ்வாறு சுகாதாரத்தைப் பேணுவது, எவ்வாறு தொற்று நோய்கள் வராமல் தடுப்பது என்பது தொடர்பான கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். இது பெரிய அளவில் எங்களுக்குப் பயன் அளிக்கின்றது. தொற்று நோய்களில் இருந்து மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவையும் ஆற்றலையும் பெற்றுச் கொள்கிறார்கள்.

அங்கு மக்கள் பாதுகாப்பு வலயம் உருவாக்கி இருக்கின்றோமென சிறிலங்கா அரசாங்கம் கூறுகின்றது. அதில் மக்கள் பாதுகாப்பாக இருக்கலாம் என்றும் கூறுகின்றார்கள். ஆனால் உண்மையில் நிலவரம் என்ன?

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம், யுனிசெஃப், யுஎன்எச்சீஆர் போன்ற அமைப்புக்கள் சுதந்திரபுரத்தில் இருந்தபோது அந்த இடத்தை பாதுகாப்பு வலயம் என்று பிரகடனப்படுத்தி மறுநாளே அந்த இடத்திற்குச் சென்று ஐசிஆர்சி, யுஎன்எச்சீஆர் போன்ற அமைப்புக்கள் வேலை செய்த இடங்களுக்கு ஆட்லறி எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டு அங்குள்ள பணியாளர்களைக் காயப்படுத்தியதுதான் கடந்த கால வரலாறு.

அவ்வாறுதான் தற்போதும் பாதுகாப்பு வலயம் என்று பிரகடனப்படுத்திய, அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக எறிகணை வீச்சுகள் இரவும் - பகலும் இடம்பெற்று வருகின்றன.

மக்கள் கூடாரங்களில் படுத்து, நடு இரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்ற போது திடீரென்று நான்கு புறத்தில் இருந்தும் பீரங்கித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றதன. அப்போது குடியிருப்புக்களில் இருந்து எழும் மரண ஓலங்களைக் கேட்டால் மக்கள் முகம் கொடுத்து வருகின்ற மனித அவலத்தின் உச்சத்தை அங்கே கேட்கின்ற குரல்களின் ஊடாக கேட்கக்கூடியதாய் இருக்கும்.

இந்த மக்களுடைய ஓலங்கள், நாளாந்தம் நிமிடத்திற்கு நிமிடம் அவர்கள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் எந்த அளவில் அந்த மக்களிடையே உளரீதியான பாதிப்பினை குறிப்பாக குழந்தைகள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது?

உண்மையில் மக்கள் நாளாந்தம் இவ்வாறான சம்பவங்களுக்கு முகம் கொடுத்து உளரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றாலும், நீண்டகால போராட்ட வாழ்வில் எம் மக்கள் இதுவரை அடைந்த இழப்புக்களை முன்வைத்து இசைவாக்கம் அடைந்திருக்கும் காரணத்தால் முதியோர் இளையோர் வேறுபாடின்றி இனி எந்த துயர் வந்தாலும் தனிநாடு அமைத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் எம்மோடு நிற்கின்றனர். நீங்கள் இங்கு வந்து கேட்டால் தெரியும். வயது போன அம்மாவைப் பார்த்துக்கேட்டால் கூட சொல்லுவார்கள்; இவ்வளவு தூரம் நாம் இழந்து விட்டோம் இனி எதனை இழந்தாவது ஒரே அடியாக அடித்து எதிரியை வெளியேற்றி நாட்டை மீட்க வேண்டும் என்று கூறும் அளவிற்கு மக்களுடைய மனநிலை தற்போது இருக்கின்றது.

அப்படியானால் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் இந்த முயற்சிகள் ஒரு எதிர்வினையினை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்கிறீர்களா?

மக்களுடைய மனங்களில் எவராலும் மாற்ற முடியாத வைராக்கிய உணர்வொன்று தோன்றியிருப்பதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. தற்போது இடம்பெறுகின்ற சண்டைகள் கூட அதை பிரதிபலிக்கின்றன. புதிதாக இணைந்துள்ள போராளிகள் கூட மிக ஓர்மத்தோடு போராடிக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த காலத்தில் சில அமைச்சர்கள் "The Matter Few Days" என்று கூறியிருந்தனர். ஆனால் நேற்றைய நாள் கோத்தபாய ராஜபக்ச இந்த போரை முடிக்கும் கால எல்லையை கூற முடியாது என்று கூறியிருந்தார்.

ஏன் என்றால் எங்களின் எதிர்த்தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருக்கின்றது, இராணுவம் பாரிய இழப்புகளையும் அழிவுகளையும் தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றது. இராணுவத்திற்கு சில நெருக்கடிகள் வந்து விட்டது என இராணுவத்திடம் இருந்தே சில தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

மும்முனைகளில் அனைத்து முனைகளிலும் இறுக்கமான ஒரு நிலையை சிறிலங்கா படையினர் மேற்கொண்டிருக்கின்றனர். இன்னும் குறுகிய காலத்தில் முற்றாக அனைத்தையும் கைப்பற்றி விடுவோம் என்கின்றனர். உண்மையில் அங்குள்ள களநிலவரம் என்ன?

களநிலவரம் தொடர்பான தகவல்களைத் தெரியப்படுத்தும் பாரிய பொறுப்பு எம்மிடம் உள்ளது. மும்முனைகளிலும் வரும் இராணுவம், எங்களின் சின்னப் பிரதேசத்தில் சூழ்ந்திருக்கின்ற இந்த இராணுவம் மட்டும்தான் சிறிலங்கா இராணுவத்தில் உள்ள சண்டையிடும் ஆற்றல் படைத்த படையணி ஆகும்.

இந்தப் படையணிகள் அண்மைய காலமாக பெரும் பெரும் இழப்புகளைச் சந்தித்த வண்ணம் இருக்கின்றனர். எமக்கு கிடைக்கும் தகவல்படி, முன்னணியில் முன்னேறிக் கொண்டிருந்த படையணிகள் தம்மால் இனி முன்னேற முடியாது என உயர் கட்டளை அதிகாரிகளுடன் முரண்படும் அளவிற்கு எங்களுடைய தாக்குதல்களும் இராணுவத்தின் இழப்புகளும் அதிகமாகி உள்ளன.

அண்மைய இராணுவத்தின் அதிகாரபூர்வ தகவல்களின்படி புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற 3 நாட்கள் சமரில் 450-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டும் 600-க்கும் அதிகமான இராணுவத்தினர் காயப்பட்டும் களமுனையில் இருந்து ஒட்டுமொத்தமாக 1,000 இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டிருக்கின்றன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.