Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இவர்களுக்கு என்ன சொல்லப் போகின்றீர்கள்..?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குழந்தைகள் எல்லோரும் வெள்ளையுள்ளத்துடனேயே பிறக்கின்றார்கள். பின் அவர்களது வாழ்நிலையை மாற்றி விடுவதில், சூழலுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு செவ்வியில், தமிழர்களுக்காகப் போராட வேண்டுமெனும் எண்ணம் தோன்ற, தனது நான்காவது வயதில் இலங்கையில் நிகழ்ந்த இனக்கலவரமும் ஒரு காரணம் என்று சொன்னார். இளவயதுகளில் மனதில் பதிந்து விடும் நினைவுகள் எளிதில் மறைந்துவிடுவதோ, மறக்கப்படமுடிவதோ இல்லை.

தற்போது ஈழமண்ணில் நிகழ்ந்துவரும் இனப்படுகொலையைச் சர்வதேசங்கள் எவ்விதம் கணிக்கின்றதோ தெரியாது ஆனால் ஈழத்தின் இளைய சமூகம் புலத்திலும் புலத்திற்கு வெளியிலும் சிறிலங்காவின் இனப்படுகொலையாகவே உள்வாங்கிக் கொள்கிறது என்பது உண்மை. அதைவிடவும் இப்போது நடைபெறும் போரில் இன்றளவும் அதிகளவு பாதிப்புக்குள்ளாவதும் இளைய சமூகமே. உயிரிழப்புக்கள் , பெற்றோரை இழந்தல், உடன்பிறந்தோரை இழத்தல், உற்றாரை இழத்தல், உடலுறுப்புக்களை இழத்தல், என்பனவற்றால் அதிகம் உளவியல் பாதிப்புக்குள்ளாகும் இந்த இளைய தலைமுறை, அதிலிருந்து மீள்வதென்பது அவ்வளவு இலகுவானதல்ல.

யுத்தம் முடிந்தபின் முன்னெடுக்கப்படும், சீரிய நடவடிக்கைகளால் அவற்றையெல்லாம் சீர்படுத்திவிடலாம் எனக் கூறுவோர்களுக்கு ' சிறிலங்காவில் இதுவெல்லாம் வெறும் வெத்து வேட்டு வாசகங்களே ' என ஒரு வாசகத்தில் பதில் சொல்லிவிடலாம். ஏனெனில் சிறிலங்காவின் இன்றளவும் கடந்த கால அரசியல் நகர்வுகள் ஈழத்தமிழர்களுக்குக் கற்றுத் தந்த பாடமது. 58 கலவரத்தின் பின் எத்தனை கலவரங்கள் ஈழத்தமிழர்க்கு எதிராக சிறிலங்காவில் நடைபெற்றுவிட்டது. எத்தனை இனவிரோத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டவிட்டன. அவற்றுக்கான மாற்று சரியாக வழங்கப்பட்டிருக்கிறதா? அவ்விதம் வழங்க்கப்பட்டிருந்தால் இத்தகைய உள்நாட்டு யுத்தம் உருவாகியிருக்க முடியுமா? இத்தகைய கேள்விகளுக்கு யாரிடமும் சரியான தெளிவான பதிலில்லை. சிறிலங்கா அரசு வெற்றிச் செய்திகளின்அறிவில் சிங்கள மக்களை கட்டிவைத்திருக்கும் அதேவேளை இந்திய அரசின் துணையில் சர்வதேசங்களைச் சமாளித்து வருகிறது. இந்திய பெருவணிகச் சந்தைவாய்ப்பின் மயக்கத்திலும், ஆசிய வல்லரசாதிக்கப் போட்டி ஆர்வத்திலும் அக்கறைகொண்டுள்ள சர்வதேசத்திற்கும், இந்தியாவிற்கும்,

இந்த நிலையில் ஈழத்தின் இன அழிப்பு உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதற்கு எதிராக உலகின் பல பாகங்களிலும், ஈழத்தின் இளைய தலைமுறை தன்னெழுச்சியாக எழுந்து, உடனடிப் போர்நிறுத்தத்தை வலியுறுத்தித் தொடர் போராட்டங்களை நடாத்துகிறது. இதுவரையில் இந்த இளையவர்களின் போராட்டத்திற்கு ஒரு சில முன்னெடுப்புக்களைத் தவிர, வேறெந்த தீர்க்கமான பதிலோ, காத்திரமான செயற்பாடோ சர்வதேசங்களால் இதுவரை வழங்கப்படவில்லை. புலம்பெயர் தேசங்களில் வாழும் இந்த இளைய தலைமுறையில் பலர், ஈழத்துக்கு வெளியே பிறந்து வளர்ந்தவர்களாக இருந்தபோதும், ஈழம் குறித்த அவர்களது அக்கறையை இதற்கு முன் சர்வதேசம் உணர்ந்து கொள்ள வாய்ப்பிருக்கவில்லை. இப்போது போராட்டத்தைத் தொடர்ந்திருக்கும் இளைய தலைமுறை தாங்கள் வாழும் நாடுகளின் சட்ட அமைவுகளுக்கு அமைவாக, மனிதாபிமானக் கோரிக்கைகளுடன், முன்னெடுத்திருக்கும் இப்போராட்டங்களை, போராட்டம் நடைபெறும் நாடுகள் அலட்சியம் செய்யவோ மறுதலித்துவிடவோ முடியாது. ஏனெனில் அந்த அளவிற்கு இப்போராட்டங்கள் குறித்து இந்நாடுகளில், ஊடகங்களினதும், மக்களினதும், கவனத்தைப் பெற்றிருக்கிறது.

இப்போராட்டங்களை முன்னெடுத்திருக்கும் இளையவர்களில் பலரும், இந்த யுத்தம் ஒரு இனப்படுகொலை என்பதனையும், இது ஒரு மனிதாபிமான உரிமை மீறல் என்பதையும் , உரக்கச் சொல்லி வருகின்றார்கள். ஆதலால்தான் பல இடங்களில் முன் அனுமதிபெறாமலே தொடங்கப்பட்ட இப்போராட்டங்கள் தற்போது காவற்துறை அனுமதியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனாலும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதியான ஒரு முடிவினை இந்நாடுகள் வழங்காதவிடத்தில், இந்நாடுகளின் அரசியல் மீதும், அரச இயந்திரத்தின் மீதுமான நம்பிக்கை இழக்கப்பட்டுவிடக் கூடும். இது இந்நாடுகளைப் பொறுத்தவரையில் பெரிய தாக்கம் எதனையும் ஏற்படுத்தாதென எண்ணினாலும், இந்நாடுகளின் பிரஜைகளாக இருக்கக் கூடிய இவர்களின் நம்பிக்கை இழப்பு என்பது இநத உலகில் மனிதாபிமானச் சிந்ததனை எனும் போக்கில் பாதகமானதே.

விடுதலைப்புலிகள் மீதான தாக்குதல் என்று சொல்லி, தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசு தொடுத்திருக்கும் போரை, சர்வதேச உலகத்திற்கு மனித உரிமைமீறல் என்ற வகையிலும், இனப்படுகொலை என்ற தன்மையிலும், அடையாளப்படுத்தி, ஆதாரப்படுத்திச் சொல்லி வருகின்றார்கள் இந்த இளையவர்கள். இவர்கள் சொல்கின்ற செய்தி உங்களுக்குப் புரிகிறதா? இவர்களுக்கு நீங்கள் என்ன பதில் தரப்போகின்றீர்கள் ? ஒரு விடுதலை அமைப்பின் மீது கொண்ட அதிருப்திக்காக, ஒரு இனத்தை அழிக்கும் நடவடிக்கைக்குத் துணைபோகும் இந்தியாவை இந்த இளைய சமூகம் எவ்விதம் ஏற்றுக் கொள்ளப் போகின்றது?. அகிம்சையை அகிலத்துக்குப் போதித்த நாடு என அகிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவின் இந்தப் போக்கு இனிவரும் காலத்தில் இந்த இளைய தலைமுறையின் எண்ணத்தில் எவ்விதம் அடையாளப்படப் போகிறதா?. சர்வதேசங்களின் தலைவர்கள் பேசும் மனித உரிமைகள் என்பது வெறும் மாயைதானா? எனத் தொடர்ச்சியாகப் பல கேள்விகள் இந்தப் போராட்டங்களை முன்னெடுத்திருக்கும் இளையவர்களுக்கு சர்வதேச சமூகம் சொல்லவுள்ள பதிலுக்கு முன்னாலுள்ள கேள்விகள். இவர்களுக்கு என்ன சொல்லப் போகின்றீர்கள்...?

இது இலண்டனில் நடைபெறும் தமிழர் எழுச்சிப: போராட்ட களத்தில், தீபம் செய்தியாளர்கள் பதிவு செய்து ஒளிபரப்பிய காட்சிகள். இதிற் பேசுகின்ற சிறுவர்கள் 10 வயதுக்குட்பட்டவர்கள். அதில் முதலாவரிடம் செய்தியாளர்களிடம் கேட்கப்படும் கேள்விகள் ஒரு வயது வந்தவரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஒப்பானவை. ஆனாலும் யாருடைய உதவியுமின்றி உடனுக்குடனான பதில்கள் வருகின்றன. அதைவிடவும் அவர் பதிலளிக்கும் போது காட்டும் உடல் மொழியானது இந்த உலகின் நியாயத்தை உரசிக்கேட்பதற்கச் சமனானது. அதனாற்தான் கேட்கின்றோம் இவர்களுக்கு நீங்கள் என்ன சொல்லப் போகின்றீர்கள்.

காட்சிப்படங்களுக்கு: நன்றி' தீபம்ரிவி'

- நாகன்

இக்கட்டுரையைப் பிரதி செய்து தங்கள் தளங்களில் வெளியிட விரும்புவோர் தயவு செய்து எங்கிருந்து பெறப்பட்டது எனும் ஊடக தர்மத்தினடிப்படையில், இங்கிருந்து பெறப்பட்டதைத் தெரியப்படுத்த வேண்டுகின்றோம். - நன்றி

மூலம்

Edited by forlov
முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.