Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்க் கணிமைக்கு புதிய தமிழ் ஒருங்குறி(TUNE)

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்க் கணிமைக்கு புதிய தமிழ் ஒருங்குறி(TUNE)

அக்டோபர் 2, 2006 · 17

தமிழ்க் கணிமைக்குப் புதிய ஒருங்குறி முறை ஒன்று தற்போது சோதித்து உருவாக்கப்பட்டுள்ளது. . இதுவே TUNE (Tamil Unicode New Encoding) அல்லது TANE (Tamil New Encoding) என்று அறியப்படுகின்றது.அண்மையின் தமிழ்க் கணிமை ஆர்வலர் மாலன் மூலம் இதைப்பற்றி அறிந்து கொண்டேன். ஏன் அது ஆரம்பிக்கப்பட்டது இதனால் என்ன நன்மைகள் உண்டு என்று பார்ப்போம். இங்கே இது பற்றிய ஒரு சிறு குறிப்பைத்தருகின்றேன்.

ஒருங்குறி(Unicode) முறைமைக்கு ஒருங்குறி பங்காளியகம்(Unicode Consortium) அமைக்கப்பட்டது. இந்த முறைமையில்(methodology) உலகின் பிரதான மொழிகள் யாவும் அடக்கப்பட்டுள்ளன. தமிழ் இந்தி தொடக்கம் ஆங்கிலம் வரை முக்கிய மொழிகள் இதில் பயன்படுகின்றன. ஏன் இந்த வலைப்பதிவு கூட ஒருங்குறி முறைமையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பங்காளியகத்தில் இந்திய அரசு மற்றும் தமிழக அரசு அத்துடன் உத்தமம் ஆகிய ஒருவங்களும்(organizations) பங்கு வகிக்கின்றன.

IISCI முறைமையில் இருந்து ஒருங்குறி முறைமைக்கு மாறும் போது மற்றய மொழிகளைப்போல இஸ்க்கி அமைப்பையே ஒருங்குறி குறியேற்றத்தில் தமிழ் பயன்படுத்தியது. இதன் காரணமாக பலக்குமை எழுத்தாக(Complex Script) வரத்தேவையில்லாத தமிழ் மற்றைய இந்திய மொழிகளைப்போல பலக்குமை எழுத்தாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. [பலக்குமை - எளிமையாய் இல்லாமல், பலக்கியது, பலகிக் கிடப்பது, பலவாகிக் கிடப்பது, பலவிதமாய் ஊடுறுவிப் பின்னிக் கிடப்பது complexity (= many sidedness) ]

பலக்குமை எழுத்து பொதுவாக இரண்டாவது அடுக்கு(level two) மொழிகள் ஆகும். காட்டாக, இந்தி, சீனம் மற்றும் சப்பானிய மொழிகள். தமிழும் இரண்டாவது அடுக்கு மொழிகளுள் இதனால் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆங்கிலம், சேர்மன், பிரஞ்சு போன்ற மொழிகள் முதலாம் அடுக்கு(level one) மொழிகள் ஆகும்.

முதலாம் அடுக்கு மொழியாக இருப்பதனால் பல நன்மைகள் உள்ளன. அதாவது செலுத்தி(processor) தயாரிப்பவரோ இயக்கக் கட்டகமோ(Operating System) இதற்கான கோறை அடுக்கு(Core Level) ஆதரவை வழங்க தேவையில்லை. இதன்காரணமாக சில குறைந்தளவு சொவ்வறைகளிலேயே(software-சொவ்வறை) நாம் தமிழ் ஒருங்குறியைப் பயன்படுத்தக் கூடியதாக உள்ளது (MS Office, Open Office..etc). இது வருந்தத்தக்க விடயமாகும். முதலாம் அடுக்கு மொழியாக தமிழ் இருக்குமானால் ஆங்கிலம் பயன்படும் அனைத்து செலுத்தியிலும் தமிழையும் பயன்படுத்த முடியும். இதன்காரணமாக தமிழ்க் கணிமை மிகவேகமாகப் பரவும் என்பதை மறுக்க முடியாது. மக்(Mac) மற்றும் சில லினக்ஸ் (லினக்ஸ்-Linux இயக்கக் கட்டகங்கள் ஆதரவு வழங்குகின்றன). இயக்கக் கட்டகங்களில் (Operating System) இன்றும் தமிழ் ஒருங்குறி ஆதரவு இல்லாமையைக் குறிப்பிட வேண்டும்.

போ என்ற எழுத்து உண்மையில் ஒரு தமிழ் எழுத்தாக இருந்தாலும் இது ஒருங்குறி முறையில் 3 எழுத்துகளாக கணக்கெடுக்கப்படும்

1. இரட்டைக்கொம்பு

2. ப னா

3. அரவு

ஆகவே ஆங்கிலத்தில் 3 எழுத்து சேமிக்கப்படும் இடத்தில் தமிழில் ஒரு எழுத்து சேமிக்கப்படுகின்றது. இதனால் தமிழில் இழைகள்(files) சேமிக்கத்தேவையான சேமிப்பகம் அதிகமாகும்.

இவ் விடயத்தை தமிழ் இணையப் பல்கலைக்கழகம், கணித் தமிழ் சங்கம், INFITT ஆகியன இணைந்து புதிய குறியேற்றம்(encoding) முறைமையைத் தீர்மாணித்தனர். இதைப் பல்வேறு இடங்களில் சோதித்தும் பார்த்து இது வினைத்திறனானது என்ற முடிவு எடுக்கப்பட்டது. பின்பு இத்தகவல் தமிழக அரசூடாக நடுவண் உள்ளுரும நுட்பியல் அமைச்சிற்கு(Central Ministry of Information Technology) அறிவிக்கப்பட்டது. அமைச்சு இத்தகவலை ஒருங்குறி பங்காளியகத்திற்கு அறிவித்தது. ஆயினும் ஒருங்குறி பங்காளியகம்(Unicode Consortium) வினைத்திறனை கணக்கில் எடுப்பதில்லை, அவர்கள் இதன் உறுதித் தன்மையை நன்கு ஆராயுமாறு கூறிவிட்டதுடன் ஒரு மாற்று வழியையும் பரிந்துரைத்தனர்.

மாற்று வழியானது ஒருங்குறியில் தனியாள் பாவனை அகரத்தில்(Private Use Area) இட்டு சோதித்துப் பார்ப்பதே (However the Unicode consortium suggested an alternate measure to put the proposed All Character scheme in Private User Area (PUA) of the Unicode space to start with). அவ்வாறே தற்போது 16 மடைக் குறியேற்றத்தை(16 bit encoding) முறைமையில் தமிழ் புதிய குறியேற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இது தற்போது சோதனை வாகையில்(testing phase) உள்ளது.

இதை பயன்படுத்திப் பார்க்க தமிழ்க்கணி ஆர்வலர்கள், தமிழ்க்கணி செலுத்தி வடிவமைப்பாளர்கள் போன்றவர்கள் வரவேற்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக இதில் உள்ள பிழைகள் தீர்க்கப்பட்டு புதிய ஒருங்குறி முறைமை தமிழிற்கு உருவாகும். இதன் மூலம் நாமும் ஆங்கிலம் மற்றும் இரோப்பிய மொழிகளைப்போல தமிழையும் பயன்படுத்தலாம். தமிழ் மொழியின் பயன்பாடு தமிழில் தற்போது இருப்பதை விட மேலும் இலகுவாகும். சொவ்வறை(software) வடிவமைப்பாளர்களுக்கும் பயனர்களுக்கும் புதிய கதவுகள் திறந்து விடப்படும் ஆகவே நீங்கள் இந்த விடயத்தை மற்றவர்களுக்குப் பரப்புவதுடன் உங்களால் முடிந்த உதவியையும் வழங்குங்கள்.

இதற்கு தற்போது எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளதையும் மறுப்பதற்கில்லை. பல நிரலாளர்கள் இது குட்டையைக் குழப்பும் முயற்சி என்றும் மற்றய இந்திய மொழிகளில் இருந்து தமிழை இது தனியாக்கிவிடும் என்பதே அவர்கள் கருத்து. அதைவிட புதிய TUNE/TANE முறைமைக்கு தமிழக அரசு தவிர இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற அரசுகளின் ஆதரவு பெறப்படவில்லை என்பது இவர்களின் வாதம்.

எது என்னவானாலும் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்று பொறுத்துத்தான் பார்ப்போமே!

[url="http://tamilit.wordpress.com/2006/10/02/26-tune-தமிழ்-கணனியியலிற்கு-வர"]http://tamilit.wordpress.com/2006/10/02/26...

Edited by vengaayam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.