Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழப் பிரச்சினையைத் தொடாமல் பிரசாரம் செய்ய முடியாத நிலை

Featured Replies

ஈழப் பிரச்சினையைத் தொடாமல் பிரசாரம் செய்ய முடியாத நிலை

கே.ஜி.மகாதேவா

இந்தியாவின் பதினைந்தாவது பாராளுமன்றத்தின் தேர்தல் முடிவுகள் இன்னும் ஆறு நாட்களில் அறிவிக்கப்படும் நிலையில், மத்திய அரசின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகும் இறுதிக்கட்ட தமிழ்நாடு வாக்களிப்பு இவ்வாரம் பதின்மூன்றாம் திகதி அரங்கேறுகிறது! பொதுக்கொள்கையற்ற பதவி ஆசைக் கூட்டணிகள் நாடு பூராகவும் சிதறிக் கிடக்கும் சூழலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி, தமிழ் உணர்வாளர்களின் பன்முகச் சவாலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டிருக்கிறது!

தி.மு.க.கூட்டணியில் அங்கம் வகித்து, தமிழகத்தில் பதினைந்து தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி; முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க.கூட்டணியின் கண்டனக் கணைகளுடன், திரை உலக தமிழீழ ஆதரவு இயக்கத்தினதும் மற்றும் தமிழ் உணர்வாளர்களின் "காங்கிரஸை தோற்கடித்தே ஆகவேண்டும்' என்ற பரப்புரை பயண அதிர்வெடி எதிரொலியினாலும் கடுமையான சோதனைக்குள்ளாகியிருக்கிறது!

இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் ஐந்து கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, நான்கு கட்டங்கள் பூர்த்தியடைந்த நிலையில், இறுதிக் கட்ட வாக்களிப்பு மூன்று தினங்களில்; தமிழ் நாட்டிலும், புதுச்சேரியிலும் நடைபெறவிருக்கிறது. தமிழகத்தின் முப்பத்து ஒன்பது தொகுதிகளிலும் தொகுதிக்கு சராசரி இருபத்து ஆறுபேர் என்ற கணக்கில் எண்ணூற்றி இருபத்து நான்கு வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். இத்தொகுதிகளில் அதிகபட்சமாக தென் சென்னையில் இருபத்து ஆறுபேரும், நாகப்பட்டினம் தொகுதியில் குறைந்தபட்சமாக ஏழுபேரும் போட்டியிடுகின்றனர். ஒரே ஒரு பாராளுமன்ற தொகுதியைக் கொண்ட புதுச்சேரியில் இருபத்து எட்டுப்பேர் களத்தில் இருக்கின்றனர். இந்தியப் பாராளுமன்றத்தின் அனைத்து தொகுதிகளினதும் வாக்குகள் இம்மாதம் பதினாறாம் திகதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். அடுத்தவாரம் இதழைப் படிக்கும் போது, ஆட்சிக்கட்டிலை யார் கூட்டணி அலங்கரிக்கப்போகிறது என்பதை சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம். ஒலி, ஒளி, எழுத்து என்று எல்லா வகையான கருத்துக் கணிப்புக்கும் தேர்தல் ஆணையம் பூட்டு போட்டிருக்கும் நிலையில்; காங்கிரஸ் கூட்டணி, பாரதீய ஜனதா கூட்டணி, இடதுசாரிகள் துணையுடன் அமைந்த மூன்றாவது கூட்டணி ஆகியவற்றில் ஏதோ ஒரு அணிதான் மத்தியில் ஆட்சியை அமைக்கப்போகிறது.

தமிழக நிலைமை :

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சிலதொகுதிகளில் ஐந்து முனை, ஆறுமுனை என்று போட்டிகள் தலைதூக்கினாலும், நடப்பது தி.மு.க., அ.தி.மு.க., விஜயகாந்தின் தே.மு.தி.க., பாரதீய ஜனதா ஆகியவை மோதும் நான்குமுனைப் போட்டிதான். இலங்கைத் தமிழர் பிரச்சினை, தமிழ் நாடு (பாராளுமன்றத்) தேர்தலில் எடுபடாது என்று நேற்றுவரை உரத்துக் கத்திய தலைவர்களும் அவர்களது தொண்டர்களும், இலங்கை தமிழர் பிரச்சினையை தொட்டுக் கொள்ளாமல் இன்று பிரசாரம் செய முடியவில்லை. தானாடாவிட்டாலும், மாற்றுக் கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கூறவேண்டிய கட்டாயம் இவர்களுக்கு! இலங்கைப் பிரச்சினை தமிழகத்தின் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுமோ என்பது, மிகப்பெரிய வினாவாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் இன்றைய காலகட்டத்தில், தேர்தல் முடிவையே புரட்டிப் போட்டுவிடலாம் என்பது பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது!

சாதாரணமாக விடுதலைப் புலி என்றோ தமிழ் ஈழம் என்றோ வாவிட்டு கருத்து வெளியிட பயந்த நிலைப்பாடு மறைந்து இன்று பாராளுமன்ற தேர்தல் பிரசார மேடைகளில் ஈழத் தமிழர் பிரச்சினைதான் கட்சிப் பேச்சாளர்களின் முக்கிய கருப்பொருளாக முன்நிலைப்படுத்தப்பட்டு, பட்டிமன்றம் நடத்தி தலைவர் தீர்ப்பளிப்பது போல, ஈழத் தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனித் தமிழ் ஈழம் தான் என்ற குரல் தமிழகத்தின் பட்டிதொட்டி எல்லாம் ஒலித்து உலகத் தமிழர்களின் பெரும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. தேர்தலின் போது ஈழத் தமிழர் ஆதரவு சுவரொட்டிகள், பதாகைகள் ஆகியவற்றுக்கு தேர்தல் ஆணையம் கடுமையான தடைபோட்டிருந்தாலும் சி.டி,எஸ்.எம்.எஸ்., இணையத் தளம், தனியார் தொலைக்காட்சிகள் மூலமாக தெளிவான பிரசாரம் தமிழக மக்களின் கூடுதல் கவனத்தை (இலங்கைப் பிரச்சினை) பெற்று, மக்களின் வீடுகளுக்கே கொண்டு சென்றுவிட்டது. இணையத்தளங்களில் வெளியாகும் வன்னிக் கொடுமைக் காட்சிகள், தமிழர் அவலம், தமிழக அரசியல்வாதிகளின் சுயரூப கட்டுரைகள் தமிழக மக்களுக்கு வன்னியின் உண்மைநிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. வாட்டி எடுக்கும் அக்கினி வெயிலில் அலையாமல், வீட்டின் நான்கு சுவர்களுக்குள்ளிலிருந்து உண்மைநிலை அறிய இணையத்தளங்கள் பேருதவி புரிந்திருக்கின்றன என்பது மக்களின் பொதுக்கருத்து.

முகம்மாறும் காங்கிரஸ் :

இலங்கைப் பிரச்சினையை அரசியல் ஆக்க வேண்டாம் என்றும், தேர்தலில் இன்று இப்பிரச்சினை திசை திரும்பாது என்றும் குரல் எழுப்பிய காங்கிரஸ் கட்சியினர் இப் பிரச்சினைக்கு பதில் கூறவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியிருக்கின்றனர். இலங்கை இராணுவத்துக்கு இந்தியா ஆயுத உதவி செவதாகக் கூறுவது அப்பட்டமான பொய் ஆகும் என்றும் ஈழத்தமிழருக்கு எதிராக இந்திய அரசு எந்த உதவியையும் இலங்கைக்கு செயவில்லை என்றும் இன்றும் கூறும் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு; ""இலங்கைத் தமிழர் காக்கப்பட கடந்த நாற்பதாண்டுகளாக நானும், என்னைப்போல நெடுமாறனும் குரல் கொடுத்து வருகின்றோம். இன்று இலங்கைப் பிரச்சினைக்காக குரல் எழுப்பும் பலர் அப்போர் அரசியலுக்கே வரவில்லை. அப்பாவித் தமிழர்கள் இலங்கையில் கொல்லப்படுவதை நாங்கள் ஒரு போதும் ஆதரிக்கவில்லை என்று ஒரு போட்டியில் தங்கள் நிலையை அளந்து காட்டியிருக்கிறார். அப்பலோ மருந்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி இரண்டு நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில்; ""இலங்கைத் தமிழ் மக்கள் பெற வேண்டிய தமிழ் ஈழத்தை பெற்றுக் கொடுக்கும் பணியை ஏற்றுக் கொள்கின்றேன்' என்று வெளியிட்ட கருத்து டில்லியில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியதோ; காங்கிரஸ் கட்சியின் செதி தொடர்பாளர் வீரப்ப மொலி அவசர அவசரமாக வெளியிட்ட கருத்து ""கருணாநிதியின் தமிழ் ஈழம் சம்பந்தமான கருத்து தவறானது' எனும் குற்றச்சாட்டு, சென்னை மருத்துவமனையில் எதிரொலிக்க டில்லி விழிப்படைந்தது, ""இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரமான அமைதியான அரசியல் தீர்வு காண்பதையே காங்கிரஸ் விரும்புகிறது' என்று செதி வெளியிட்டதுடன்; வீரப்ப மொலி ""ஈழத் தமிழருக்கு நிரந்தரமான அரசியல் தீர்வையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம்' என்று பழைய பல்லவியை நேற்று முன்தினம் கூறினாலும், ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளா அல்லது வேறுபட்டா என்பதை தெளிவுப்படுத்தாதது தமிழ் நாட்டில் இப்பிரச்சினை எத்தனை தாக்கத்தை ஏற்கனவே ஏற்படுத்தி, விழிப்படையச் செதிருக்கிறது என்பது டில்லிக்கும் தெரிந்திருக்கிறது என்பதையே மறைமுகமாகக் காட்டுகிறது!

இவ்விதமாக தேர்தல் அரசியலுக்காக மனம் மாறும் நிலையில் தான் காங்கிரஸ் கட்சித் தலைவி திருமதி சோனியாகாந்தி இன்று சென்னை வந்து பிரசாரப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகின்றார்,

ஈழத்தமிழர் பிரச்சினை அதி முக்கிய பிரச்சினையாக உருவாகியிருக்கும் இத்தேர்தலின் காங்கிரஸுக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியவர்களில், திரை உலக தமிழீழ ஆதரவு இயக்கத்தினரின் தொடர் பிரசார பயணம் குறிப்பிடத்தக்கது. இயக்குநர் பாரதிராஜா தலைமையில் சீமான், ஆர்.செல்வமணி, மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோருடன் மாணவர்கள், அறிஞர்கள், ஆசிரியர்கள், பெண்ணுரிமைப் போராளிகள், வழக்கறிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்கள் கடந்த வாரம் நான்காம் திகதி ஈரோட்டில் ஆரம்பித்து, தினமும் பல மாவட்டத் தலைநகரங்களில் தொடர்ந்து இன்று கடலூரிலும், நாளை புதுச்சேரியிலும் நடைபெற்று முடிவாகிறது. தெருமுனை பிரசாரம், புரட்சிப் பாடல்கள் என்று விரிவுபட்டு, வன்னிக் கொடுமையை ஈழத்துக் கலைஞர்களைக் கொண்டு சித்தரிக்கும் அரைமணிநேர ஓரங்க நாடகமும் இப்பரப்புரை பயணத்தில் சிலிர்க்க வைத்தது.

பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் இயக்குநர் பாரதிராஜா; ஈழத் தமிழர் பிரச்சினையில் மௌனம் காத்து வரும் சோனியாகாந்தி சென்னைக்கு வாக்கு வேட்டைக்கு வரும்போது எல்லோர் வீடுகளிலும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டிருக்கும் என்று தொடர் சூளுரை நிகழ்த்தி வருகிறார். ""தனி ஈழம் என்று யார் குரல் கொடுத்தாலும் அவர்களை வாழ்த்துகிறோம். துரோகிகளை நாங்கள் அடையாளம் காட்டுகிறோம். கருத்துப் புரட்சியை தொடங்கிவிட்டோம். பதின்மூன்றாம் திகதி தேர்தலில் இது பிரளயமாக மாற வேண்டும்! பதினாறு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நீங்கள் வாக்களிக்க வேண்டும். வாக்கு கேட்க சோனியா வரக் கூடாது. அப்படியும் வந்து விட்டால், கறுப்புத்துணியை அணிந்து கொள்ளுங்கள். வீடுகளில் கறுப்புத்துணி கட்டுங்கள். யாராவது கேட்டால், சோனியா வரும் நாள் எங்கள் துக்க நாள் என்று கூறுங்கள்.' என்று இயக்குநர் பாரதிராஜா பரப்புரை பயணக் கண்டனக் கூட்டங்களில் ஆவேசமாகப் பேசிவருகின்றார். திரை உலகத்தினரின் பரப்புரைப் பயணம் ஒரு புறம் தமிழக மாவட்டங்களைக் கலக்க; தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் தமிழருவி மணியன், பசுபதி பாண்டியன், திருச்சி வேலுச்சாமி உட்பட தமிழ் உணர்வாளர்கள் பெருமளவில் கலந்து கொள்ளும் நாடாளுமன்ற தேர்தல் பிரசார பயணம் கடந்த முதலாம் திகதி விருது நகரில் ஆரம்பித்து தினமும் ஒரு நாடாளுமன்றத் தொகுதி வீதம் தொடர்ந்து இன்று தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் முடிவடைகிறது. இப்பரப்புரை பயணம் குறித்து பழ.நெடுமாறன் "தினக்குரலு'க்கு நேற்று முன்தினம் தெரிவிக்கையில்;காங்கிரஸ் தி.மு.க.அணிக்கு தோல்விப் பயம் ஏற்பட்டுவிட்டது. மக்கள் இவர்களுக்கு நிச்சயம் "நல்ல தீர்ப்பு' அளிப்பார்கள். ஈழத்தமிழர்களுக்கு ஆதாரவான அணிதான் வெற்றிபெறும் என்பது நிதர்சனமாகிவிட்டது. மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் ஈழத்தமிழர் பிரச்சினையிலும், இராமேஸ்வர மீனவர்களைப் பாதுகாக்கும் பிரச்சினையிலும் இனிமேல் ஒழுங்காக இருக்கும். தமிழக தேர்தல் முடிவுகள் உணர்த்தப்போகும் புதிய பாடம் இது.' என்று குறிப்பிட்டு தங்களது பரப்புரைப் பயணம், தமிழக மக்களின் மனச்சாட்சியைத் தூண்டிவிட்டிருக்கிறது, ஒரு மாற்றம் வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கிடையியே, இன்று மாலைவரும் காங்கிரஸ் தலைவி திருமதி சோனியா காந்திக்கு சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செயப்பட்டுள்ளன. தீவுத் திடலில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான மேடையில், முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியுடன் கூட்டணித் தலைவர்கள் அனைவரும் சோனியா காந்தியை வரவேற்கிறார்கள். ஈழத் தமிழர் பிரச்சினையில் பொதுப்படையாக மௌனம் சாதித்துவரும் சோனியா காந்தி இன்றைய கூட்டத்தில் தனது தொடர் மௌனத் தைக் கலைத்து ஈழத் தமிழருக்கு ஏற்பட்ட கொடுமையைக் கண்டிக்க புதிய முடிவுகள் அறிவிக்கப்படாத பட்சத்தில், இம்மாதம் பதின்மூன்றாம் திகதி தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் நடைபெறும் வாக்களிப்பின் முடிவு நிச்சயம் காங்கிரஸுக்கு சாதகமாக இருக்காது என்பதே தமிழ் நாட்டின் நடுநிலை அரசியல் விமர்சகர்களின் கணிப்பாகும். தீர்ப்பை சாதகமாக்கிக் கொள்ள சோனியாகாந்தி துணிந்து செயல்படுவாரா? வெற்றிக் கனியைப் பெறுவாரா? தமிழ் நாட்டில் காங்கிரஸ் கூட்டணி சாதிக்குமா? மத்தியிலும் காங்கிரஸ் நிலைக்குமா? என்ற அத்தனை கேள்விகளுக்கும் இன்றுதான் விடை காணும் நாள். காரணம் இன்றைய முடிவுதான் வரும் பதின் மூன்றாம் திகதி தீர்ப்பளிக்கப் போகிறது.

http://www.thinakkural.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.