Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராசராசன் ரசித்த பாடல்கள்

Featured Replies

அறியாத வயதில் இலங்கை வானொலியில் கேட்ட பாடல் இது. 1980 களின் (எனது) ஆரம்ப காலத்துக்கு என்னை இழுத்துச் செல்லும் பாடல். பாடலைக் கேட்கின்றபோது ஏதோ ஒரு மயக்கம் என்னுள் உண்டாகிறது. தரிசனம் (1970) என்ற படத்துக்காக L. R. ஈஸ்வரி மற்றும் T. M. சௌந்தரராஜன் பாடியது.

இது மாலை நேரத்து மயக்கம்

  • Replies 58
  • Views 22.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இராமாயணம் எனக்குப் பிடிக்காதுதான், ஆனால் இந்தப் பாடல் ஏனோ எனக்குப் பிடித்துப் போனதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. சாவித்திரி என்ற படத்தில் மெல்லிசை மன்னர் M. S. விஸ்வநாதன் அவர்களின் இசையில் வாணி ஜெயராம் பாடிய பாடல் இது.

வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்

http://www.youtube.com/watch?v=LQUns_4XXC8

  • தொடங்கியவர்

இந்தப் பாடல் முடிவல்ல ஆரம்பம் (1984) என்ற படத்தில் இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் P. ஜெயச்சந்திரன் பாடியது. இப் பாடலின் இசையமைப்பில் இளையராஜா அவர்கள் கிட்டாரை அபாரமாக பயன்படுத்தி இருப்பார். கிட்டார் இசையும் பாடகர் ஜெயச்சந்திரனின் குரலும் என்னை மட்டுமா தாலாட்டுகின்றது?

பாடி வா தென்றலே ஒரு பூவை தாலாட்டவே

http://www.youtube.com/watch?v=gmmyHgH8Izw

Edited by ராசராசன்

  • தொடங்கியவர்

அடுத்த பாடல் நெஞ்சமெல்லாம் நீயே (1983) என்ற படத்தில் சங்கர்-கணேஷ் இசையமைப்பில் வாணி ஜெயராம் பாடிய பாடல். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மிகச் சிறந்த பாடகியான வாணியை, இளையராஜா ஏனோ அதிகம் கண்டுகொள்ளவில்லை என்ற மனக்குறை எனக்கு எப்போதும் உண்டு. வாணியின் நெகிழவைக்கும் குரலும் அற்புதமான வயலின், தபேலா இசையும் இப் பாடலை கேட்பவர்களின் நெஞ்சங்கள சொல்லாமல் அள்ளிப் போகும். :)

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது?

  • தொடங்கியவர்

இந்தப் பாடல் என் உயிருக்குள் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல். என் அன்புக்குரியவளை 1996 இல் நான் முதன்முதலில் சந்தித்த நினைவுகளை மீட்டிச் செல்லும் பாடல் இது. என் அன்புகுரியவளுக்கு மிகவும் பிடித்த பாடல் இது.

ஏதோ நூறு ஜென்மம் ஒன்று சேர்ந்து வந்த சொந்தம்

வாழும் காலம் யாவும் துணையாக வேண்டும் என்றும்

காலம் தந்த பந்தம் காதல் என்னும் கீதம்

ஜீவனாக கேட்குதே சேர்ந்து இன்பம் கூட்டுதே

வராத காலம் வந்து சேர்ந்ததே

பாடலின் ஆரம்ப இசையும் காட்சியும் அருமை. இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் உருவான ஆனந்த ராகம் (1982) என்ற படத்தில் S. ஜானகி மற்றும் K. J. ஜேசுதாஸ் பாடியது. :)

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் விருப்பப் பாடல்கள் மிக நன்றாக இருக்கின்றன. நீங்கள் கொடுக்கும் வர்ணனைகளும் ஒரு அர்த்தத்தைக் கொடுக்கின்றன.

சங்கர்-கணேஷ் நல்ல இசையமைப்பாளர்க்ள். ஆனால் தொடர்ச்சியாக அவர்களால் நல்ல பாடல்களைத் தரமுடியவில்லை. அவர்களிடமிருந்து நல்ல பாடல்களைப் பெறுவது இயக்குனரின் திறமையிலேயே தங்கியிருந்தது என்று நினைக்கிறேன். உதாரணமாக எம்ஜியாருக்கு இந்த இரட்டையர்கள் இசையமைத்த பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக,

1) பொன்னந்தி மாலைப்பொழுது

2) நான் பாடும் பாடல் (நான் ஏன் பிறந்தேன்)

3) உனது விழியில் (நான் ஏன் பிறந்தேன்)

போன்றவை.

இதில் பொன்னந்தி மாலைப்பொழுதின் சரணத்தை எம்ஜி ஆர் அவர்களே கோர்த்ததாக அறிந்தேன். அதாவது, சங்கர்-கணேஷ் அவர்கள் போட்ட பல மெட்டுக்களில் இருந்து, பொன்னந்தி மாலைப்பொழுதை ஒரு மெட்டிலிருந்தும், அன்னத்தின் தோகை என்பதை இன்னொன்றிலிருந்தும், கொஞ்சிச் சிரித்தாள் என்னதை இன்னொன்றிலுமிருந்தும் கோர்த்ததாக அவர்கள் சொன்ன ஞாபகம்.

நினைவூட்டியமைக்கு நன்றிகள் ராசராசன்..!

  • தொடங்கியவர்

நன்றி டங்கு அண்ணா. :)

  • தொடங்கியவர்

அடுத்ததாக மத சம்பிரதாயங்களை எல்லாம் கடந்து என் நெஞ்சில் குடியிருக்கும் ஒரு பாடல். 1987 இல் நான் யாழ் இந்துவில் சேர்ந்த அந்த முதல் நாளை எனக்கு மீண்டும் மீண்டும் மீட்டித்தரும் பாடல் இது. அன்று பாடசாலை முடிந்ததும் நானும் என்னுடைய மாமாவும் யாழ் சோனக தெருவில் உள்ள ஒரு முஸ்லிம் சாப்பாட்டுக் கடைக்குச் சென்றிருந்தோம். அங்கே வானொலியில் தன் கணீரென்ற குரலில் நாகூர் E. M. ஹனீபா அவர்கள் பாடிக்கொண்டிருந்தார். ஹனீபா அவர்களின் காந்தக் குரலும் ஆர்ப்பாட்டம் இல்லாத அற்புதமான இசையமப்பும் என்னைக் கவர்ந்து கொண்டதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

இறைவனிடம் கையேந்துங்கள்

  • தொடங்கியவர்

எப்பொழுதும் பெண்களுக்கு தங்களுக்குப் பின்னாலே ஆண்களை அலையவைப்பதில் அலாதிப் பிரியம். விருப்பம் இருந்தாலும் இல்லாத மாதிரி காட்டிக் கொள்ளுவார்கள். அனுபவித்தவர்களுக்கு அந்த ஊடலின் சுகம் புரியும். அவ்வாறு அமைந்த ஒரு பாடல் இது. இரட்டையர்கள் சங்கர்-கணேஷ் இசையமைப்பில் உருவான ஒத்தையடி பாதையிலே(1980) என்ற படத்தில் வாணி ஜெயராம் மற்றும் K. J. ஜேசுதாஸ் பாடியது. தன்னுடைய வழமையான பாணிக்குச் சற்று மாறுதலாக ஜேசுதாஸ் அவர்கள் பாடிய டப்பாங்குத்து பாடல்களில் இதுவும் ஒன்று. ஒரு பெண் அதுவும் என் மனதைக் கொள்ளையடித்தவள் என் முன்னாலே நடந்து போகும்போது அவள் தூக்கிச் செல்லும் செப்புக்குடங்களைப் பார்த்து தாகத்தாலே விக்கிப்போகிறேன். :)

செப்புக்குடம் தூக்கிப் போற செல்லம்மா

http://www.youtube.com/watch?v=0DKqx2k5U-w

எப்பொழுதும் பெண்களுக்கு தங்களுக்குப் பின்னாலே ஆண்களை அலையவைப்பதில் அலாதிப் பிரியம். விருப்பம் இருந்தாலும் இல்லாத மாதிரி காட்டிக் கொள்ளுவார்கள். அனுபவித்தவர்களுக்கு அந்த ஊடலின் சுகம் புரியும். அவ்வாறு அமைந்த ஒரு பாடல் இது. இரட்டையர்கள் சங்கர்-கணேஷ் இசையமைப்பில் உருவான ஒத்தையடி பாதையிலே(1980) என்ற படத்தில் வாணி ஜெயராம் மற்றும் K. J. ஜேசுதாஸ் பாடியது. தன்னுடைய வழமையான பாணிக்குச் சற்று மாறுதலாக ஜேசுதாஸ் அவர்கள் பாடிய டப்பாங்குத்து பாடல்களில் இதுவும் ஒன்று. ஒரு பெண் அதுவும் என் மனதைக் கொள்ளையடித்தவள் என் முன்னாலே நடந்து போகும்போது அவள் தூக்கிச் செல்லும் செப்புக்குடங்களைப் பார்த்து தாகத்தாலே விக்கிப்போகிறேன். :D

செப்புக்குடம் தூக்கிப் போற செல்லம்மா

http://www.youtube.com/watch?v=0DKqx2k5U-w

  • தொடங்கியவர்

பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து என்ற கிராமத்துக் கலைஞர்கள் மூவரின் அற்புதமான கிராமத்துக் காவியம் முதல் மரியாதை (1985) என்ற படம். இந்தப் படத்தில் K. S. சித்ராவுடன் இணைந்து இளையாராஜா ஒரு பாடலைப் பாடியிருப்பார். பாடல் வரிகள், பாடல் காட்சி, இசையமைப்பு எல்லாமே நிறைவாக இருக்கும். இப் பாடலின் இரண்டாவது சரணத்தில், "மாசத்தில மூணு நாளு பொறுக்கணும் பொதுவாக" என்று பெண் பாடுவதாக ஒரு வரி வரும். உறவுக்கான ஆணுடைய அழைப்புக்கு, தற்போது தன்னால் உறவு கொள்ளமுடியாது என்ற பெண்ணின் நிலையை கவிஞர் விரசம் இல்லாமல் அழகாகச் சொல்லியிருப்பார். எத்தனை தரம் என் ராசாத்திக்காக அந்த நிலாவ கையில பிடிச்சு இருக்கிறன். :)

அந்த நிலாவ தான்

  • கருத்துக்கள உறவுகள்
:):D
  • தொடங்கியவர்

தமிழில் முதன்முதலாக இலக்கியத்தில் Ph.D. பட்டம் பெற்ற கவிஞர் ஒருவர் எழுதியது என்ற பெருமைக்கு உரிய பாடல். கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம் அவர்களின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அற்புதமாக இருக்கும். அந்த ஏழு நாட்கள் (1981) என்ற படத்தில் மெல்லிசை மன்னர் M. S. விஸ்வநாதன் அவர்களின் இசையமைப்பில் S. ஜானகி மற்றும் P. ஜெயச்சந்திரன் ஆகியோர் பாடியது. இசையமைப்பாளர் M. S. விஸ்வநாதன் மீண்டும் தானே மெல்லிசை மன்னர் என்பதை உறுதிப்படுத்திய பாடல் இது. கௌரிமனோகரி ராகத்தை அடிப்படையாக வைத்து இப் பாடலை உருவாக்கினார்.

நீரில் நின்றாடும்போதும் - சுடும்

நெருப்பாய் என்தேகம் ஆகும் - அது

நேரில் நீ வந்த மாயம் - இந்த

நிலைமை எப்போது மாறும் - என்

இளமை மழை மேகம் ஆனால் - உன்

இதயம் குளிர்வாடை காணும்!

இந்த பாடல் வரிகளுக்காகவே காதலிக்கத் தோன்றும். :D

கவிதை அரங்கேறும் நேரம்

http://www.youtube.com/watch?v=4aUlaKyMSt8

  • தொடங்கியவர்

என்னுடைய சின்ன வயதில் நான் மிகவும் ரசித்துக் கேட்ட பாடல் ஒன்று அடுத்ததாக வருகிறது. தீர்ப்புகள் திருத்தப்படலாம் (1982) என்ற படத்தில் சங்கர்-கணேஷ் இரட்டையர்களின் இசையிலே P. ஜெயச்சந்திரன் பாடிய பாடல் இது. கணவன் - மனைவி உறவில் விரிசல் உண்டாகி விடுகின்றது. அப்பாவி கணவன் தன்னுடைய உண்மை நிலையை தன் குழந்தைக்கு சொல்லுவதாக பாடல் அமைகிறது. அந்தக் காலத்தில் என்னை மறந்திருந்து கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று. இதில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பவர் நம்ம நடிகை மீனா. மீனாவுக்கும் எனக்கும் அகவை ஒன்று என்பது வேறு விடயம். :D

நெஞ்செல்லாம் ஒரே காயம் - நீ

தந்தாய் என்ன நியாயம்?

மருந்து நோயாகலாமா?

மனதை நீ வாட்டலாமா?

அப்படியே சோகத்தை ஜெயச்சந்திரன் எனக்குள்ளும் ஊட்டிச் சென்றுவிடுகின்றார். :D

ஒரு ஊரில் ஊமை ராஜா

http://www.youtube.com/watch?v=pNZxBGE7QvA

Edited by ராசராசன்

  • தொடங்கியவர்

அடுத்ததாக 1980 களின் ஆரம்பத்தில் இயக்க வேறுபாடுகள் இன்றி விடுதலை இயக்கங்கள் தமது பிரசாரங்களுக்காக யாழ் நகரத்து வீதிகளில் ஒலிக்க விட்ட பாடல் ஒன்று. மிக அண்மைக் காலம் வரை இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டிருந்த பாடல்களில் இதுவும் ஒன்று. சிவப்பு மல்லி (1981) என்ற படத்தில் சங்கர்-கணேஷ் இசையில் T. M. சௌந்தரராஜன் மற்றும் T. L. மகராஜன் ஆகியோர் பாடியது. அந்தக் காலங்களில் எனக்கும் மிகவும் பிடித்திருந்தது.

எரிமலை எப்படி பொறுக்கும்

http://www.youtube.com/watch?v=SpF5PgcGK7U

Edited by ராசராசன்

  • தொடங்கியவர்

மாணிக்கவாசகர் அருளிச்செய்த திருவாசகத்திலே வருகின்ற திருபள்ளியெழுச்சி பாடல் ஒன்றின் ஆரம்ப ஈரடிகளையும், இறுதி ஈரடிகளையும் இணைத்து ஆரம்பிக்கும் பாடல் அடுத்ததாக வருகின்றது.

கூவின பூங்குயில் கூவின கோழி

குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்

ஓவின தாரகை யொளிஒளி உதயத்

தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்

தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்

திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே

யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்

எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

இசைஞானி இளையராஜாவின் இசையில் மெல்லப் பேசுங்கள் (1983) என்ற படத்தில் உமா ரமணன் மற்றும் தீபன் சக்கரவர்த்தி ஆகியோர் பாடியது. பாரதிராஜாவின் இயக்கத்தில் உருவான இந்தப் படம் தான் பானுப்பிரியா, வசந்த் ஆகியோரின் அறிமுகப் படம். பாடல் வரிகள் மரபுக் கவிதை நடையிலே சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும். உமாவும் தீபனும் பாடலை அனுபவித்துப் பாடியிருப்பார்கள். இசையப் பற்றி சொல்லத் தேவையில்லை. அந்த ஆரம்பப் பாடசாலை நாள்களில் என்னைத் தாலாட்டிய பாடல் இது. :D

செவ்வந்தி பூக்களில் செய்த வீடு

வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு

வெண் பஞ்சு மேகம் நீ கோலம் போடு.

நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகிக் கொஞ்சும் கொஞ்சும்,

நித்தம் நித்தம் தித்திக்கும் முத்தம் முத்தம்

செவ்வந்தி பூக்களில் செய்த வீடு

வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு

வெண் பஞ்சு மேகம் நீ கோலம் போடு.

வானவில்லில் அமைப்போம் தோரணம்

வண்டு வந்து இசைக்கும் நாயனம்

வானவில்லில் அமைப்போம் தோரணம்

வண்டு வந்து இசைக்கும் நாயனம்

தாழம்பூவில் கல்யாண ஓலைத் தந்து

தங்கத் தேரில் ஊர்கோலம் நாளை வந்து

தாழம்பூவில் கல்யாண ஓலைத் தந்து

தங்கத் தேரில் ஊர்கோலம் நாளை வந்து

காதல் மணம் காண்போம் எண்ணம்

போல் இன்பத்தின் வண்ணங்கள் ஆஆ

செவ்வந்தி பூக்களில் செய்த வீடு

வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு

வெண் பஞ்சு மேகம் நீ கோலம் போடு.

நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகிக் கொஞ்சும் கொஞ்சும்,

நித்தம் நித்தம் தித்திக்கும் முத்தம் முத்தம்

அந்தி வந்து மலரும் தாமரை

அங்கம் எங்கும் பொழியும் தேன் மழை

அந்தி வந்து மலரும் தாமரை

அங்கம் எங்கும் பொழியும் தேன் மழை

கைகள் இரண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி

ஆடச் சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி

கைகள் இரண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி

ஆடச் சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி

நாளை வரும் காலம் என்றென்றும்

எங்களின் கைகளில்.

செவ்வந்தி பூக்களில் செய்த வீடு

வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு

வெண் பஞ்சு மேகம் நீ கோலம் போடு.

ஆரிராரோ ஆராரி ராரிரோ

ஆரிராரோ ஆராரி ராரிரோ

  • தொடங்கியவர்

அடுத்ததாக அவள் ஒரு தொடர்கதை (1974) என்ற படத்தில் மெல்லிசை மன்னர் M. S. விஸ்வநாதன் அவர்களின் இசையில் பல்குரல் கலைஞர் சாய்பாபாவுடன் இணைந்து S. P. பாலசுப்பிரமணியம் பாடிய பாடல் ஒன்று. மான்களின் மந்திரமும், முயல்களின் ஆங்கிலமும், யானைகளின் பல்லாண்டுப் பாடலும் நன்றாக இருக்கும். பாடல் வரிகள் கவிஞர் கண்ணதாசன்.

கடவுள் அமைத்து வைத்த மேடை

http://www.youtube.com/watch?v=Ocy1CDX1RMg

Edited by ராசராசன்

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடன் இணைந்து நாமும் பாடல் கேட்டு மயங்கி விட்டோம்.

  • தொடங்கியவர்

நன்றி கறுப்பி. :lol:

Edited by ராசராசன்

  • தொடங்கியவர்

ரங்கா (1982) என்ற திரைப்படத்தில் சங்கர்-கணேஷ் இசையில் மலேஷியா வாசுதேவன் மற்றும் S. P. பாலசுப்பிரமணியம் ஆகியோர் பாடிய பாடல் இது. அந்தக் காலங்களில் எனக்குள்ளே என்னையும் அறியாமல் ஏதோ ஒரு ஈர்ப்பு இந்தப் பாடல் மீது இருந்தது என்னவோ உண்மைதான். :lol:

பட்டுக்கோட்டை அம்மாளு

http://www.youtube.com/watch?v=z0Z0FBU3OjI

  • தொடங்கியவர்

பெண்ணுக்கு யார் காவல் (1980) என்ற திரைப்படத்தில் ரமேஷ் நாயுடு அவர்களின் இசையில் S. P. பாலசுப்ரமணியம் பாடிய பாடல் இது. பாடல் வரிகள் கவிஞர் ஆலங்குடி சோமு. இப் பாடலை நடிகர் சுருளிராஜனுக்காக அராவணியைப் போன்று தன்னுடைய குரலை மாற்றி பாலு பாடியிருப்பார். அந்தக் காலங்களில் கருத்து விளங்காத போதும் பாடகரின் குரலுக்காக் கேட்டு வயிறு குலுங்க சிரித்த பாடல் இது.

சொல்ல வெக்கமா இருக்கு சொக்கம்மா

  • கருத்துக்கள உறவுகள்
:lol::):D
  • தொடங்கியவர்

அடுத்ததாக மெல்லிசை மன்னர் M. S. விஸ்வநாதன் அவர்களின் இசையில் உருவான கமல்ஹாஸன், ஸ்ரீபிரியா நடித்த சிம்லா ஷ்பெஷல் (1982) என்ற படத்தில் S. ஜானகி மற்றும் S. P. பாலசுப்பிரமணியம் ஆகியோர் பாடிய பாடல் ஒன்று. பாடல் வரிகள் கவிஞர் வாலி. பாடல் காட்சியில் கமல் ஸ்ரீபிரியாவிடம் முத்தம் கேட்பதும், அதற்கு ஸ்ரீபிரியா மறுப்பதும், கமல் மலையில் இருந்து குதிக்கப் போவதும், பின்னர் முத்தம் கொடுக்க ஸ்ரீபிரியா இசைவதும், முத்தம் கொடுத்தபின் கமலைக் கீழே குதிக்கச் சொல்லுவதும் அற்புதம். இது போன்ற காதலர்களுக்கு மட்டுமே உரிய சில சில்மிசங்களைக் கற்றுத் தந்த படல் இது. :lol:

லுக் லவ் மீ டியர் லவ்லி பி(f)கர்

  • தொடங்கியவர்

அடுத்தாக பொண்ணுக்கு தங்க மனசு (1973) என்ற படத்தில் இசையமைப்பாளர் G. K. வெங்கடேஷ் அவர்களின் இசையில் S. ஜானகி மற்றும் S. P. பாலசுப்பிரமணியம் ஆகியோர் பாடிய பாடல் ஒன்று வருகிறது. அருமையான 70 களின் காதல் பாடல் இது. பாடலின் வரிகள் எல்லாமே இனிமை எனினும் என்னை அதிகமாகக் கவர்ந்த வரிகள் இவை:

பன்னீரில் ஆடும் செவ்வாழை கால்கள்

பனி மேடை போடும் பால் வண்ண மேனி

பனி மேடை போடும் பால் வண்ண மேனி

கொண்டாடுதே, சுகம் சுகம்

பருவங்கள் வாழ்க

அந்தக் காலங்களில் பன்னீரின் அருமையும் தெரியாது செவ்வாழைக் கால்களையும் கண்டதில்லை ஆனலும் இவ் வரிகளுக்குள்ளே மூழ்கி நனைந்த அனுபவம். இன்றும் கூட இப் பாடலை கேட்கின்றபோது வானம் தேன் சிந்துவது போன்று ஓர் உணர்வு எனக்குள்ளே. :D

தேன்சிந்துதே வானம்

http://www.youtube.com/watch?v=wSUZ9LVNPC0

  • தொடங்கியவர்

காற்றுக்கென்ன வேலி (1982) என்ற படத்தில் இசையமைப்பாளர் சிவாஜி ராஜா அவர்களின் இசையில் S. P. பாலசுப்ரமணியம் மற்றும் அனிதா ஆகியோர் பாடிய பாடல் அடுத்து வருகிறது. பாடலின் அத்தனை வரிகளுமே என்னைக் கவர்ந்தவை. அதிலும் "ஞாபங்கள் கண்ணில் இன்று முத்து குளிக்கும்", "கோதை மகள் பேரைச்சொன்னால் ராகம் இனிக்கும்" என்ற வரிகள் என்னை எங்கேயோ அழைத்துச் சென்றுவிடும். பாடல் வரிகள் பஞ்சு அருணாசலம் அவர்களுக்குச் சொந்தமானவை. நினைவுகள் பூவாகும் என் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம். :lol:

சின்ன சின்ன மேகம்

அ... அ... அ... அ...

என்னைத்தொட்டு போகும்

அ... அ... அ... அ...

நினைவுகள் பூவாகும் - கண்ணுக்குள்

கனவுகள் ஏராளம்

சின்ன சின்ன மேகம்

அ... அ... அ... அ...

என்னைத்தொட்டு போகும்

அ... அ... அ... அ...

நினைவுகள் பூவாகும் - கண்ணுக்குள்

கனவுகள் ஏராளம்

பிரிவான காதல் நெஞ்சின் சுகமான சோகங்கள்

மழைக்கால பூவின் மீது இருக்கின்ற ஈரங்கள்

கன்னி இளம் பூக்கள் கையெழுத்து கேட்கும்

உள்ளுறங்கும் சோகம் கண்திறந்து பார்க்கும்

ஞாபங்கள் கண்ணில் இன்று முத்து குளிக்கும்

நினைவுகள் பூவாகும் - கண்ணுக்குள்

கனவுகள் ஏராளம்

சின்ன சின்ன மேகம்

அ... அ... அ... அ...

என்னைத்தொட்டு போகும்

அ... அ... அ... அ...

நினைவுகள் பூவாகும் - கண்ணுக்குள்

கனவுகள் ஏராளம்

அனல் மீது பூக்கும் அந்த கொடிக்கின்று வேரில்லை

இதயத்தின் சுவரில் உந்தன் பெயரின்றி வேறில்லை

மேடைகளின் ஓரம் ஜாடை செய்யும் பூவை

பார்வைகளின் நூறு பந்தி வைக்கும் பாவை

கோதை மகள் பேரைச்சொன்னால் ராகம் இனிக்கும்

நினைவுகள் பூவாகும் - கண்ணுக்குள்

கனவுகள் ஏராளம்

சின்ன சின்ன மேகம்

அ... அ... அ... அ...

என்னைத்தொட்டு போகும்

அ... அ... அ... அ...

நினைவுகள் பூவாகும் - கண்ணுக்குள்

கனவுகள் ஏராளம்

  • தொடங்கியவர்

பூந்தளிர் (1979) என்ற படத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் S. P. பாலசுப்பிரமணியம் பாடிய அற்புதமான ஒரு பாடலை அடுத்து இணைக்கிறேன். பாடல் வரிகள் பஞ்சு அருணாசலம் அவர்களுக்குச் சொந்தமானவை. பாலு ஒவ்வொரு வரிகளையும் உருகி உருகி அனுபவித்துப் பாடி இருப்பார். இசையமைப்பில் வயலினை இளையராஜா நன்கு பயன்படுத்தி இருப்பார். அனேக இரவுகளில் தனிமையில் இப் பாடலைக் கேட்டுக்கொண்டு என் அன்புக்குரியவளின் இனிய நினைவுகளுடன் தூங்கிப் போனதுண்டு. :D

மேனியின் மஞ்சள் நிறம் வான் அளந்ததோ

பூமியின் நீல நிறம் கண் அளந்ததோ

அழகே சுகம் வளர வளர நினைவே தினம் பழக பழக

உரிமையில் அழைக்கிறேன் உயிரிலே கலந்து மகிழ

வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

என்றும் நீ இன்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி

வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.