Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுபான்மை இனத்திற்குச் சொந்தமான காணிகளை பெரும்பான்மையினர் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றி வருகின்றனர் ‐ சம்பந்தன்

Featured Replies

சிறுபான்மை இனத்திற்குச் சொந்தமான காணிகளை பெரும்பான்மையினர் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றி வருகின்றனர் ‐ சம்பந்தன்

24 October 09 03:26 am (BST)

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை உள்ளிட்ட கிழக்கின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சிறுபான்மை இனத்திற்குச் சொந்தமான காணிகளையும், அரச காணிகளையும் பெரும்பான்மையினர் சட்டவிரோதமான முறையில் அரசிலுள்ள சிலரின் ஒத்துழைப்புடன் கைப்பற்றி வருகின்றனர் என்றும் இந்நடவடிக்கைகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டவிரோதக் குடியேற்றம் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் இல்லையேல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர்க்க முடியாத சில முடிவுகளை எடுக்கவேண்டி வரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கிழக்கில் அரச காணிகளில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர். இதனை அரசாங்கம் தடுக்க முயலவில்லை. நிறுத்தவும் முடியவில்லை. அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கிண்ணியா, மூதூர் பிரதான வீதியின் இரு பக்கங்களும் சுவீகரிக்கப்பட்டு அங்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் அரசாங்கத்தின் ஆதரவுடன் குடியேற்றப்படுகின்றனர்.

இராணுவ வெற்றி ஒன்றைப் பெற்று வடக்கு கிழக்கில் உள்ள எல்லாப் பிராந்தியங்களையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் பிரகடனம் செய்ததன் பின்னர், முழுமையான பாதுகாப்புரிமையுடன் செயற்படும் பெரும்பான்மைச் சமூக உறுப்பினர்களினால் அரச காணிகளில் பரவலான சட்டவிரோதக் குடியேற்றம் நடைபெறுகின்றது. அத்தகைய சட்டவிரோத குடியேற்றம் தொடர்ச்சியாக நடைபெறும் ஒரு நடவடிக்கையாக உள்ளது. அத்தகைய சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுப்பது தொடர்பில் அரசாங்கம் இற்றைவரை எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. அத்துடன், அது உடனடியாக நிறுத்தப்படாவிடின் அது பன்மடங்காக பெருகி வெற்றிடமாக உள்ள எல்லா அரச காணிகளும் இந்நாட்டின் சட்டத்தை முற்றிலும் மீறி சட்டவிரோதமாகக் கைப்பற்றப்பட்டு அங்கு சட்டவிரோத குடியேற்றம் ஏற்பட வழிவகுக்கும். அத்தகைய சட்டவிரோத குடியேற்றம் திருகோணமலை மாவட்டத்தில் நடைபெறுகின்றது.

மொறவௌ முதலிக்குளம் பிரதேச செயலகப் பிரிவில் வேப்பங்குளம் மற்றும் முதலியார்குளம் ஆகிய கிராமங்களுக்கிடையில் பன்குளம் வரையில் திருகோணமலை ஹொரவபொத்தானை வீதியின் இரு மருங்கிலும், சேருவில பிரதேச செயலகப் பிரிவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சேருவில பொலனறுவை வீதியின் இரு மருங்கிலும், தம்பலகாமம் மற்றும் கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவுகளில் மாவட்ட எல்லை வரை திருகோணமலை ஹபரண வீதியில் பல பிரதேங்களில் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் இறக்கக்கண்டி மற்றும் கும்புறுப்பிட்டி கிராமங்களில் கடற்றையை நோக்கி உள்ள பெறுமதிவாய்ந்த காணிகளில் குடியேற்றங்கள் நடைபெறுகின்றன.

திருகோணமலை நகரம் மற்றும் கிரேவெட் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விளாங்குளம். குச்சிவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இறக்கக்கண்டி. தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாலம்போட்டை மற்றும் பத்தினிபுரம் ஆகிய பகுதிகளும் திட்டமிட்ட குடியேற்றத்துக்கு உட்படுத்தப்படுகின்றன.

சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, கூனித்தீவு, நவரத்னபுரம், சூடைக்குடா, கடற்கரைச்சேனை மற்றும் சம்பூர்க்களி கிராமசேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த, வதிவிட வெள்ளாமை மற்றும் தோட்ட நிலங்களுக்கு சட்டபூர்வமாக உரித்துடைய, இடம்பெயர்ந்த, 1486 சிறுபான்மைத் தமிழ் சமூகக் குடும்பத்தினர், அவர்களின் பிரதேசங்கள் அதியுயர் பாதுகாப்புப் பிரதேசம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஒரே காரணத்தினால் தமது வதிவிடங்களுக்கும் ஏனைய சொத்துக்களுக்கும் திரும்பி இயல்பு வாழ்க்கையைத் தொடங்குவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர். இப்பிரதேசங்களில் பல பாடசாலைகளும், இந்துக்கோவில்களும் ஏனைய கட்டிடங்களும் இருந்தன. இப்பிரதேசத்திலிருந்த சகல கட்டிடங்களும் அழிக்கப்பட்டு விட்டன.

தமக்குச் சொந்தமான இந்தக் காணிகளில் இக் குடும்பங்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து அவற்றைப் பயன்படுத்தி வந்துள்ளன. நாட்டின் ஏனைய பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களுள் சிவிலியன்கள் வாழ்கின்றனர்.

பெரும்பான்மையினருக்கு சட்டம் வேறுவிதமாகப் பயன்படுத்தப்படுகிறது. திருகோணமலை உள்ளிட்ட கிழக்கின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சிறுபான்மை இனத்திற்குச் சொந்தமான காணிகளையும், அரச காணிகளையும் பெரும்பான்மையினர் சட்டவிரோதமான முறையில் அரசிலுள்ள சிலரின் ஒத்துழைப்புடன் கைப்பற்றி வருகின்றனர். இந்தச் சட்டவிரோதக் குடியேற்றம் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படவேண்டும். இல்லையேல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர்க்க முடியாத சில முடிவுகளை எடுக்கவேண்டி வரும். என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=16352&cat=1

Edited by தயா

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=65847

Eastern Province land crisis worsens with complications

By Kelum Bandara

The land disputes in the Eastern Province have become more and more complicated with the authorities concerned planning to take action against certain Divisional Secretaries for effecting transfer of the ownership of lands to some persons in the absence of their original proprietors.

For instance, there were some lands abandoned by their owners in the 1980s in Kuchchaveli, Trincomalee due to the escalation of fighting between the security forces and the LTTE. These lands have been taken over by some others with the connivance of the Divisional Secretaries during the period.

Eastern Province Land Commissioner H.W. Yasaratne told the Daily Mirror that it was illegal to sell or transfer lands abandoned by their owners due to the war situation.

“There is a circular issued in this regard. These Divisional Secretaries have acted in contravention of this circular. Owners of these lands are now returning seeking their lands only to find that they have been occupied by some others,” he said.

He said, “I will submit this information to the Commissioner General of Lands. Later, the Public Administration Ministry will be consulted to take action against those errant Divisional Secretaries.”

He also said that some people who left Trincomalee in the aftermath of the war by selling their lands, had now asked for their property back for the same price they sold.

“Those who purchased these lands have developed them. Some have even put up petrol sheds and shops. There are several court cases now filed by the original owners of these lands. Even I have been cited as a respondent,” Mr. Yasaratne said.

Meanwhile, Land Minister of the Eastern Province Wimalaweera Dissanayake said that all the three communities-Sinhalese, Tamil and Muslim- were facing genuine land problems in the East. Mr. Dissanayake pointed out that the problem had to be analysed and addressed from a moderate point of view.

“If anyone has forcibly occupied a land abandoned by its owner during the war period, he or she can be prosecuted,” he said.

http://www.pathivu.com/news/3883/54//d,view.aspx

வடக்கு - கிழக்கில் காணிகளை விற்பனை செய்வதை உடன் நிறுத்த வேண்டும் - ஜேவிபி

வடக்கு - கிழக்கு பகுதிகளில் காணிகளை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் திட்டத்தினை உடன் நிறுத்த வேண்டும் என ஜேவிவி கோரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு - கிழக்கில் காணி விவகாரம் தொடர்பில் சிறீலங்காப் பாராளுமன்றில் இடம்பெற்ற விவாத்தின் போதே ஜே.வி.பி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

வடக்கு - கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக குடியமர்த்தும் வரை காணிகளை விற்பனை செய்யக்கூடாது. முன்கூட்டியே காணிகளை விற்பனை செய்தால் இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியமர்த்தப்படும் போது பெரும் சிக்கல் எழுக்கூடும்.

வடக்கில் கொழும்பு மற்றும் கண்டியைச் சேர்ந்தவர்களே அதிகளவு காணிகளைக் கொள்வனவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by rajcan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.