Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“புலிகளின் பின்னர்” பின் புலி அரசியல்

Featured Replies

புலிகளின் அழிவின் பின்னதான புதிய விரக்தியும் கொந்தளிப்பும் நிறைந்த சூழலில் போராட்டங்களையும் புதிய சக்திகளின் உருவாக்கத்தையும் மட்டுப்படுத்தும் அல்லது திசைதிருப்பும் நோக்கில் பல தன்னார்வ நிறுவனங்களுக்கும் அதன் தனிநபர்களுக்கும் பாரிய நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன. மக்களின் எதிர்ப்புணர்வைத் தணிக்கும் வகையிலான அரசியலை தன்னார்வ நிறுவனங்களும் அதன் நிற்வனர்களுமே கையாட்சி செய்கின்ற நிலை உருவாகியுள்ளது.

வன்னி குறு நிலப்பரப்பில் இரண்டு நாட்களுள் மொத்த மனித genocideகுலமுமே பார்த்துக்கொண்டிருக்க 20 ஆயிரம் அப்பாவிப் பொதுமக்கள் துடிக்கத் துடிக்கக் கொன்று போடப்பட்ட போதும், உலகத்தின் அனைத்து அதிகார அமைப்புக்க்களும் அந்த மக்களுக்காகக் குரல் கொடுக்க முன்வரவில்லை.

ஜனநாயகம் குறித்தும் மனிதாபிமானம் குறித்தும் வாய்கிழியக் கூக்குரலிடும் மேற்கு நாடுகளும், அய்கிய நாடுகள் சபையும், மனிதாபிமான அமைப்புக்களும், சர்வதேச மன்னிப்புச் சபையும், மனித உரிமைகள் கண்காணிப்பகமும், அங்கும் இங்குமாக ஒரிரு கண்டனங்களோடு தம்மை எல்லைப்படுத்திக் கொண்டன. புலிகளும் அவர்களூடாகத் தமிழ் பேசும் மக்களும் நம்பியிருந்த தமிழக அரசியல் வாதிகளும், அமரிக்க ஐரோப்பிய அரசியல் வாதிகளும் ஒருசில அறிக்கைகளோடும், உணர்ச்சிப் பேச்சுக்களோடும் தம்மை நிறுத்திக்கொள்ள இலங்கை அரசு தான் திட்டமிட்ட இனப்படுகொலையை நிகழ்த்தி முடித்திருக்கிறது.

இலங்கைத் தமிழ் பேசும் சிறுபான்மையினர் நிலவும் அரசியல் அமைப்பில் நம்பிக்கை இழந்து போயுள்ளனர். உலக அதிகார அமைப்புக்களை எல்லாம் நிராகரித்து மக்கள் உணர்வுள்ள போராட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்று இலங்கையிலுள்ள அம்மக்கள் பிரிவின் முன்னோடிகள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். புலம் பெயர் தமிழர்களும், தமிழ் நாட்டின் அரசியல் முற்போக்கு சக்திகளும் இதே வகையான சிந்தனைப் போக்கினை உடையவர்களாகவே காணப்படுகின்றனர்.

இவ்வகையில் சந்தர்ப்பவாத, மக்கள் விரோத அரசியலை இனம் கண்டுகொண்ட மக்கள் கூட்டத்தின் மத்தியிலிருந்து புதிய மாற்று அரசியலின் தேவை உணரப்பட்ட நிலையில், இவ்வாறான அரசியல் தமது நலனுக்கு எதிரானது என இனம் கண்டுகொண்ட ஏகாதிபத்திய வல்லரசுகள் தன்னார்வ நிறுவனங்களிற்கு தமது நிதி வழங்கலை முடுக்கி விட்டுள்ளனர்.

மூன்றாம் துறை (3rd sector) அல்லது மாற்று துறை என உலக வங்கியால் குறிப்பிடப்படும் தன்னார்வ நிறுவனங்களின் ஆதரவில் சுவிற்சிலாந்தில் இலங்கை அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து இலங்கை அரசியலின் வரலாற்றில் மிகப்பெரிய பொருட் செலவில் மாநாடு ஒன்று நடைபெற்றிருக்கிறது.

இங்கிலாந்து கிங்ஸ்டன் என்ற இடத்தைத் தலமையகமாகக் கொண்டியங்கும் திரு.வரதகுமாரின் முகாமையின் கீழ் இயங்கும் தன்னார்வ நிறுவனமான-NGO- தமிழர் தகவல் மையத்தின் ஏற்பாட்டின் பேரிலேயே இம்மாநாடு நடைபெற்றது.

Christian Aid என்ற அமரிக்க அரசு சார் நிறுவனத்தின் நிதி வழங்கல் அனுசரணையோடு இயங்கும் தமிழர் தகவல் மையமானது, ஈழத் தமிழ்ப் பேசும் அரசியலில் மிக முக்கிய பங்காற்றும் ஒரு அமைப்பு எனக்கருதப்படுகிறது. இவ்வமைப்பின் அரசியல் பிரசன்னம் “பின் – புலி” அரசியற்தளத்தில் மிகத் தீவிரமாக அமையும் என்பது வெளிப்படை.

தவிர, புலிகளின் அழிவின் மறு தினத்தில் ஆரம்பித்து புலம் பெயர் நாடுகளை மையமாகக் கொண்டு இலங்கைப் பாசிச அரசுட இணைந்து சமூக உதவித் திட்டங்களை மேற்கொள்ள என ஏராளமான, புலம் பெயர் அமைப்புக்கள் உருவாகிவிட்டன.

இலங்கை அரசை விமர்சிக்கும், அதற்கு எதிரான போராட்டத்தை முன்வைக்கும் இடதுசாரிகளை,ஜேம்ஸ் பிரட்ஸ் தனது கட்டுரையில் குறிப்பிடுவது போல, “கற்பனாவாதிகளாகவுக் செயற்திறன் அற்றவர்களாகவும்” விமர்சிக்கும் இப்புதிய தன்னார்வ அமைப்புக்களைச் சார்ந்தவர்கள், சில சில்லறை உதவி வழங்கல்களுக்காக இலங்கை அரசுடன் இணைந்து கொள்வதை தமது நியாயமாக முன்வைக்கின்றனர்.

அண்மையில் சுவிற்சிலாந்து நாட்டில் இடம்பெற்ற புலம் பெயர் தமிழர்களின் ஒன்று கூடலில் தன்னார்வ நிறுவனங்களின் அறியப்பட்ட முகாமையாளர்களான சுனந்த தேசப்பிரிய மற்றும் சிவகுருநாதன் ஆகியோர் பிரதம உரையாளர்களாகப் பங்கேற்றுள்ளனர்.

இலங்கையிலிருந்து இயங்கும், ஊடகவிலாளர் அமைபபுக்கள், மனித உரிமை அமைப்புக்கள் என்று அனைத்துமே தன்னார்வ நிறுவன நிதிகளிலிலேயே இயங்குகின்றன. இலங்கை பாசிச அரசின் தொடர்ச்சியான மிரட்டல்களுக்கு உள்ளாகிவரும் பாக்கியசோதி சரவணமுத்து நெறியாளராகத் தொழிற்படும் Center for policy alternative மற்றுமொரு பெரும் நன்கொடை நிதியில் இயங்கும் அமைப்பாகும். 80 களின் பின்னர் புரட்சிகர இடதுசாரி அமைப்புக்கள் வளர்ச்சியடைவதற்கான சூழல் நிர்மூலமாக்கப்பட்ட நிலையில் பாக்கியசோதி சரவணமுத்துப் போன்ற ஏகாதிபத்திய சார் மனித உரிமை வாதிகள் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

ஆக, புலிகளின் பின்னான காலப்பகுதி என்பது தன்னார்வ நிறுவனங்களின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள வேண்டிய பணியை இடதுசாரிகள் மத்தியில் முன்வைக்கிறது.

இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலையும், தொடரும் இனச்சுத்திகரிப்பும் வெறுமனே மனித உரிமைப் பிரச்சனையோ அல்லது சர்வதேசச் சட்ட வரம்புகளிற்கு உட்பட்ட போர்க் குற்றங்களோ அல்ல. இது ஒரு மக்கள் கூட்டத்தின் தன்னுரிமை குறித்த அரசியல் பிரச்சனை. புற்று நோய் போலப் பரவிக்கொண்டிருக்கும் தன்னார்வ நிறுவனங்கள் தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சனையை வெறும் மனித உரிமைப்பிரச்சனையாகவே அணுக முற்படுவதனூடாக இதன் அரசியல் பின்புலம் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது.

மறுபுறத்தில் இதற்கான மாற்று இன்னும் வெற்றிடமாக அமைந்துள்ள சூழலில் குறைந்த பட்ச எதிர்ப்பரசியலை தன்னார்வ நிறுவனங்களூடாக பல முற்போக்காளர்கள் கூட முன்னெடுக்க முனைகின்றனர். இவ்வாறான முனைப்புகளின் அபாயம் புரிந்துகொள்ளப்படுவதுடன் மட்டுமன்றி, தன்னார்வ நிறுவன அரசியலிற்கெதிரான தீவிர அரசியல் முன்வைக்கப்படவேண்டும்.

இலங்கையின் சமூக அரசியல் பகைப்புலம் என்பது தன்னார்வ நிறுவனங்களிற்கு அப்பாலான அரசியலின் தேவையை இன்று உணர்த்தி நிற்கிறது.

இந்த நிலையில் இலங்கையில் வாக்கு அரசியலிற்கு அப்பால் சமூக உணர்வோடு தமது செயற்பாட்டுத் தளத்தை உருவாக்க முனையும் இடது சாரி சக்திகளை தன்னார்வ நிறுவனங்களின் அரசியலுக்கு எதிராக முன்னிறுத்துவதும், இடதுசாரி இயக்கங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைவதும் மக்கள்சார்ந்த சிந்தனை கொண்ட அனைவரினதும் இன்றைய சமூகக்கடமையாகும். நன்றி ( NGO க்களின் பொற்காலம் - பின் புலி அரசியல் என்ற சபா நாவலன் கட்டுரையில் இருந்து)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.