Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அகதிகள் விவகாரத்தில் அந்நிய எதிர்ப்பு உணர்வும் ஒரு வகை 'மறதி' நோயும் ஆசியாவில் பரவுகின்றது: மனித உரிமைகள் காப்பகம் விசனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடைக்கலம் தேடி வருவோர் விவகாரத்தில் அவுஸ்ரேலியாவின் அணுகுமுறையானது - அகதிகளின் உரிமை விடயத்தில் ஆசியா தழுவிய ரீதியிலான அந்நிய எதிர்ப்பு உணர்வு மற்றும் "மறதி" [''xenophobia and amnesia''] போன்ற ஒரு நோயை அதிகரிக்கச் செய்துள்ளதாக மனித உரிமைகள் காப்பகம் விசனம் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் காப்பகத்தின் கண்காணிப்பகத்தின் அகதிகள் தொடர்பான கொள்கை வகுப்புப் பணிப்பாளர் பில் பிறெலிக் [bill Frelick, Refugee Policy Director at Human Rights Watch] இது தொடர்பாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

கடந்த ஒக்ரோபர் மாதம் அவுஸ்ரேலியப் பிரதமர் கெவின் ரூட் [Prime Minister Kevin Rudd] மற்றும் இந்தோனேசிய அரச அதிபர் சுசிலோ பம்பாங் யுட்ஹோயோனோ [President Susilo Bambang Yudhoyono] ஆகியோருக்கு இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டை அடுத்து - சிறிலங்காவில் இருந்து அடைக்கம் தேடி அவுஸ்ரேலியா நோக்கி படகில் சென்று கொண்டிருந்த இலங்கையர்கள் இந்தோனேசியாவில் தடுக்கப்பட்டனர்.

அகதிகளுக்கான சர்வதேசச் சட்டத்தை நிந்தனை செய்யும் வகையில் ஆசிய நாடுகள் செயற்படத் தொடங்கிவிட்டன.

தம்மைத் தமது சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் என்ற கெஞ்சும் அகதிகளின் விண்ணப்பத்தைப் புறக்கணிக்கும் வகையில் அவை தமக்கிடையில் இருதரப்பு உடன்பாட்டுக்கு வந்துள்ளன என்று இன்ரநஷனல் ஹெரோல்ட் ரிபியூன் [international Herald Tribune] இதழில் பில் பிறெலிக் எழுதியுள்ளார்.

“ஆசியாவை ஒரு வைரஸ் ஆட்கொண்டுள்ளது. அகதிகளின் அடிப்படை உரிமைகள் தொடர்பாகக் கடைப்பிடிக்கப்படும் மிகையான அந்நிய எதிர்ப்பு உணர்வும், மறதியும் இதன் அறிகுறிகளாகும்.

கடந்த ஒக்ரோபரில் படகு அகதிகளை இடைமறித்து அவுஸ்ரேலியாவும் இந்தோனேசியாவும் முதலில் இந்த நோய்க்கு அடி பணிந்து போயின.

அவுஸ்ரேலியப் பிரதமர் கெவின் ரூட் தொலைபேசி மூலம் இந்தோனேசிய ஜனாதிபதி யுட்ஹோயோனோவுக்கு விடுத்த வேணடகோளை அடுத்து - அவுஸ்ரேலியா நோக்கி மரப்படகில் சென்று கொண்டிருந்த 200-இற்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் அகதிகளை இந்தோனேசியக் கடற்படை பிடித்து 'மெராக்' [Merak] துறைமுகத்தில் தடுத்து வைத்துள்ளது.

கிறிஸ்மஸ் தீவில் [Christmas Island] தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இன்னொரு தொகுதி அகதிகள் தமக்கான வசதிகளை மூன்று நாட்கள் புறக்கணித்திருந்த நிலையில் நாளை வியாழக்கிழமை குடிவரவு அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளனர்.

'மெராக்' தமிழ் அகதிகள் விவகாரம் அணுகப்படும் முறையானது - இரு வாரங்களுக்கு முன்னர் - 20 உகுர்ஸ் மக்களை [Chinese Uighurs] கம்போடியா சீனாவுக்கும், 4000 ஹமங் அகதிகளை [Hmong asylum seekers] தாய்லாந்து லாவோசுக்கும் கட்டாயமாகத் திருப்பி அனுப்பியதைப் போன்று ஒரு வன்முறை நடவடிக்கையாகவே உள்ளது.

அகதிகள் தொடர்பான பிராந்திய அணுகுமுறையில் உள்ள குறைபாடுகள் நீக்கப்படுவதற்குப் பதிலாக, அகதிகளை மிகமோசமாக அணுகுகின்ற போக்கே ஆசியாவில் கையாப்படுகின்றது.

அடைக்கலம் தேடி வருவோரைப் பசுபிக் நாடுகளுக்கு அனுப்பும் முன்னைய ஹொவாட் அரசாங்கத்தின் கொள்கையை இப்போதைய ரூட் அரசாங்கம் மாற்றியுள்ள போதும், கிறஸ்மஸ் தீவில் அவர்களைத் தடுத்து வைக்கின்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறது.

கிறிஸ்மஸ் தீவில் உள்ள தமிழர்கள் தாம் அதிகமான காலம் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறுகின்றனர்.

78 பேர் ஆறு மாதங்களுக்கு மேலாக அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் உள்ள 4000 தமிழர்கள் கடந்த ஞாயிறு தொடக்கம் நூலக, இணைய மற்றும் உடற்பயிற்சி வசதிகளைப் புறக்கணித்தனர்.

நேற்று இவர்கள் சிற்றுண்டிசாலையையும் பறக்கணித்திருந்தனர் என்றும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.

http://www.puthinappalakai.com

அடைக்கலம் தேடி வருவோரை அணுகும் முறையில் - ஆசியா தழுவிய ரீதியிலான அந்நிய எதிர்ப்பு உணர்வும், "அம்னீசியா" போன்ற ஒரு வகை 'மறதி' நோயும் அதிகரிப்பதாக மனித உரிமைகள் காப்பகம் விசனம் அடைந்துள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdJ04a40mA45p52cd2ePdZAA33dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.