Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் இன்னும் ஏமாறுவார்களா? அல்லது ஏமாற்றுபவர்களுக்கு ஏமாற்றத்தைக்கொடுப்பார்களா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்கள் இன்னும் ஏமாறுவார்களா? அல்லது ஏமாற்றுபவர்களுக்கு ஏமாற்றத்தைக்கொடுப்பார்களா?

இன்றைய சூழ்நிலையில் தமிழர்கள் இத்தேர்தலை எவ்வாறு அணுகவேண்டும்?

இதற்கு கடந்தகால செயற்பாடுகளைக் கருத்தில் கொள்ளவேண்டியது மிகவும் முக்கியமானதொன்றாகும். மிகவும் சுருக்கமாகச் சொல்லப்போனால்

சுதந்திரத்தின் பின் (1948)

வெள்ளையன் வெளியேற்றத்தின் பின் என்பது சுதந்திரத்தின் பின் என்று சொல்வதைவிட பொருத்தமாக இருக்கும். ஏனெனில் வெள்ளையக் காலத்தில் இருந்த சுதந்திரம் இன்று அணுவளவும் இல்லை.

தமிழர்களின் உரிமைகளை இலங்கை ஆட்சிக்கட்டில் வருபவர்கள் மாறி மாறி நசுக்கத்தொடங்கியமை அதன் பின் அகிம்சைப் போராட்டத்தில் தமிழர்களுக்கு அடி உதை பேச்சுவார்த்தை என்ற ரீதியில் கைச்சாத்திடலும்இ நடைமுறைக்குக் கொண்டுவராமல் கிழித்தெறிதலும் நடைபெற்றன. இதில் ஏமாந்த தமிழ் பாராளுமன்ற எம்.பீக்கள் தமிழரின் ஒற்றுமையை ஒரே அணியில் சேர்ந்து எமது ஒற்றுமையின் பலத்தை காட்டுவதால் தான் ஏதாவது பெறமுடியும் என்ற நோக்கில் கூட்டணி அமைத்தனர். இப்படியாக காலம் காலமாக சிங்களம் தமிழனை எலும்புத் துண்டுக்காக வாலாட்டும் தமிழரை அரவணைத்து ஏமாற்றிக் கொண்டு வந்தான்.

சிங்கள அரசுகள் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழனின் உரிமையைப் பறிப்பதில் அவர்கள் மிகவும் ஒற்றுமையாகவே செயல்பட்டனர். ஆனால் தமிழரோ ஒருவரின் திட்டத்தை விமரிசிப்பதுஇ கொச்சைப்படுத்துவது போன்ற செயல்களால் தமிழரிடையே இன்று சரியான ஒற்றுமை கட்டியெழுப்பப்படவில்லை.

உலகில் தன் சட்டத்திறமையால் செல்வாக்கு பெற்றிருந்த ஜி. ஜி பொன்னம்பலம் காலத்தில் அவருடைய செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழருக்கு ஒரு குறைந்தளவிலான தீர்வைக்கூட பெற்றிருக்கமுடியும்இ ஆனால் தமிழ் அறிவாளர்கள் என்று சொல்லக்கூடிய தமிழ்க் கூட்டணி எம். பீக்கள் அவருடன் ஒத்துப்போகாத காரணத்தால் நான் இதைப் பெற்றுக்கொடுத்தாலும் இவர்கள் என்னை ஓரம் கட்டுவார்கள் என்ற உண்மையை அவர் உணர்ந்திருந்ததால் இவ்விடயத்தில் அதிக அக்கறை செலுத்தவில்லை.

தமிழ் எம்இபீக்களும் காலம் காலமாகத் தங்கள் வாரிசுக்கள் தான் எம். பி. பதவியில் இருக்கவேண்டும் என்ற சுயநலக்கொள்ளையாலும்இ கூட்டணி காலத்தில் "தனிஈழம்" என்ற கொள்ளை முன்வைக்கப்பட்டாலும் இவர்களின் மனதில் அக்கொள்கையானது உதட்டளவில் தான் இருந்தது. அடிமனதில் இருந்து உதித்த எண்ணம் அல்ல. இந்தக் கொள்கையைத் தமிழ் மக்களிடம் சொல்லி சொல்லி தங்கள் பதவிக்காலத்தை ஓட்டிவிடலாம் என்ற எண்ணக்கருவே குடிகொண்டிருந்தது.

தந்தை செல்வா உரிமைப்போராட்டத்தை ஓரளவாவது கரிசனையுடன் நடத்தியிருந்தாலும் சிங்களவர் உரிமை கொடுக்கப்போவதில்லை என்பதை உணர்ந்தபடியினால் 'தமிழரை இனிக்கடவுள் தான் காப்பாற்றவேண்டும்" என்ற வாசகத்துடன் அவர் காலமும் முடிவிற்கு வந்தது.

எம் பீக்கள் தமிழ் இளைஞர்களை தங்கள் நலனுக்காக சில கொலைகளுக்கு பாவித்து பின்னர் கைவிடப்பட்டதும்இ அதன் பின் கல்வித்தரப்படுத்தல் வந்ததும் இளைஞர்கள் கொதித்தெழுந்தனர். தமிழ் எம் பீக்களும் எம்மை ஏமாற்றுகின்றனர் என்ற எண்ணக்கருவால் விளைவாக எழுந்ததே ஆயுதப்போராட்டம்.

தமிழர்களின் சொத்துக்கள் வருடா வருடம் சிங்களவரால் சூறையாடப்பட்டுஇ மானபங்கப்படுத்தப்பட்டு வருவதால் இனிமேலும் சிங்களவருடன் பேசிப் பிரயோசனம் இல்லை என்ற கொதிப்பால் ஆயதப் போராட்டம் அதிதீரமாக வலுவடையத் தொடங்கியதுஇ தமிழ் இளைஞர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றது.

இதன் தொடர்ச்சியை எழுதமுன் பிராந்திய வல்லரசான இந்தியாவின் பிராந்திய நலன் சார்ந்த கொள்கையைத் தெரிந்திருப்பது முக்கியமாகும். இந்தியாவின் தென் பகுதியில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய ஒரே ஒரு நாடு இலங்கை. இலங்கையை முழுமையாகத் தனது கைக்குள் வைத்திருக்கவேண்டும் அல்லது அங்கு பிரச்சனையை நிலையாக வைத்திருக்கவேண்டும் என்ற அவர்களை அமைதியாக அல்லது ஒற்றுமையாக இருக்க அனுமதித்தால் இலங்கையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் இருந்து இழக்க நேரிடும். ஆகையால் இலங்கையை எமது கைக்குள் எடுக்கவேண்டும் அல்லது எமக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகள் ஆட்சிக்கட்டில் இருக்கவேண்டும். இத்துடன் தமிழர் பிரச்ச்னைக்கு தமிழர்களுக்கு ஆதரவளிப்பதால் பிரச்சனையை வலுவடையச் செய்து காலம் காலமாக இலங்கையில் மற்றைய நாடுகள் கால்பதியாது பார்த்துக்கொள்ளலாம். இதனால் இந்தியாவின் தென்பகுதி பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாத ஒரு பகுதியாக வைத்துக்கொள்ளலாம் என்ற பிராந்தியக்கொள்ளை நேரு காலத்திலிருந்தே அவர்களது புத்தகத்தில் இருக்கின்றதுஇ இதை ஒரு புராணமாக வைத்துத்தான் இந்திய அரசியலாளர்கள் ஆட்சிக்கட்டில் வரும்பொழுது இலங்கை தொடர்பான அரசியல் விடயங்களில் முடிவெடுப்பார்கள்.

இப்போது சொல்லுங்கள் இந்திராகாந்தி இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்காது என்று கூறும் பலர் இன்னும் இருக்கின்றனர். புலிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்த வாய்பாய் ஆட்சிக்கு வந்தபோது தனிஈழத்தைப் பெற்றுக்கொடுக்க முனைந்திருக்கலாம். ஏன் செய்யவில்லை. அரச நாற்காலியில் இருந்துவிட்டால் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ஆக வேண்டும். அதனால் இப்பிரச்சனையை அவரால் கிடப்பில் தான் போடமுடிந்தது. மேற்கூறப்பட்ட விடயம் தான் இவரின் கைகளைக் கட்டிப்போட்டது.

இலங்கை இரண்டாப்பிரிந்தால் என்ன நடந்திருக்கும்? என்று யோசித்தால் இரண்டு ஆட்சி மையங்கள் இலங்கையில் இருக்கும்போது இந்தியாவின் பாதுகாப்பு மிகவும் அச்சம் நிறைந்ததொன்றாக மாறிவிடும். தமிழர்களுக்கு தனிஈழம் பிரித்துவிட்டால் சிங்களம் இந்தியாவிற்கு ஒரு பரம எதிரியாகி அங்கு வேறொரு வல்லரசு நிரந்தரமாக குடியிருந்துவிடும். அதை இவர்களால் கட்டுப்படுத்த ஏதும் செய்யமுடியாது. இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிரந்தரமான தொன்றாகிவிடும். தங்களுக்கு அடிவருடும் ஈழத்தமிழர்களை வைத்து உரிமைப்போராட்டத்திற்கு எண்ணெய் விடுவதன் மூலம் சிங்களத்திற்கு பிரச்சனை நிரந்தரமாக்குவதன் மூலம் அங்கு ஒரு வல்லரசும் காலூன்றாது பாதுகாத்துக்கொள்ளலாம் என்ற எண்ண அடிப்படையில் தான் தமிழருக்கு நாங்கள் உதவி என்ற கபடத்தனம் இதுவரை இருந்து வந்தது.

தமிழருக்கு தனிஈழம் கிடைத்தால் இந்தியாவுடன் தான் உறவை வைத்திருப்பார்கள். ஆனால் சிங்களத்தைக் கட்டுப்படுத்தமுடியாது.

இப்போது எண்ணுங்கள் இந்தியா உங்களுக்கு உரிமைகளை எப்போதாவது வாங்கித்தருமா? இனிமேலும் நடக்கப்போகும் விடயமாக இருக்குமா? இந்தியா மாநிலங்களாக உடைந்தால் மட்டுமே தமிழரின் உரிமையைச் சிங்களத்திடம் இருந்து வென்றெடுக்கமுடியும்.

அடுத்த விடயமானது மேற்குலகங்களின் பிராந்திய நலனை அலசிப்பார்க்கும்போது சர்வதேச கடற்பரப்பு என்பது இலங்கையைத் தாண்டியே இருக்கின்றது. சர்வதேச கடற்பரப்பில் செல்லும் கப்பல்கள் இலங்கையைத் தாண்டிய தென்பகுதியைக் கடக்கும் பொழுது அங்கு நிலை கொண்டுள்ள வல்லரசின் சோதனைக்கு உட்படுத்தப்படும் நிலை உருவாகும். இலங்கையில் சீனா கால் பதித்தால் மேற்குலக வல்லரசுகளின் ஆயுதவிற்பனையும்இ கொண்டு செல்லலும் மட்டுப்படுத்தும் நிலையை எதிர்கொள்ளவேண்டிய நிலைமை உருவாகும். அவர்களுக்குச் சினேகப+ர்வமான ஒரு வல்லரசு இடம் பிடிக்குமானால் அவர்களின் செயலுக்குத் தடையிராது. இந்த மனப்பாங்கில் தான் இந்தியாவும்இ அமெரிக்காவும் கூட்டாக தமிழர்களுக்கு தமிழீழம் எப்போதும் அனுமதிக்கப்N;பாவதில்லை. உரிமைகளுக்காக பேசலாம் என்ற தீர்க்கமான முடிவு ஒன்றைக் கூட்டாக அறிவித்தார்கள். அப்போது சொல்லுங்கள் யாரும் தமிழரின் நிரந்த தீர்வுக்கு ஆசி வழங்குவார்களா? அமெரிக்காவோஇ இந்தியாவோஇ ஐரோப்பிய ஒன்றியமோ சீனா இலங்கையில் கால் பதிப்பதை என்றும் விரும்பவில்லை.

இதனால்தான் தமிழர் பிரச்சனை தீர்க்கப்படாமல் இழுத்தடித்து அதன் மூலம் சிங்களத்தைக் கட்டுக்குள் வைத்து இருக்கும் நிலையை இந்த நாடுகள் விரும்புகின்றன. தமிழர்கள் எவ்வளவு தான் நியாயப்பாடு இருந்தாலும் இதனைத் தீர்க்க எவரும் முன்வந்து உதவப்போவதில்லை. போராடுங்கள் என்று சம்மதம் தருவார்கள். அதுவும் ஒரு கட்டுக்குள் தான்.

இது சுருக்கமாகக் கூறப்பட்ட விடயம் ஒரு சாராம்சம். ஆனால் இதை ஒவ்வொரு தமிழனும் தெரிந்திருக்க வேண்டியது முக்கியம்.

ப+கோளத்தில் இலங்கை அமைந்திருக்கும் இடத்தை வைத்து பூகோள அரசியலில் தமிழனின்; உரிமைப் பிரச்சனைக்கு எவரும் நிரந்தரமான தீர்வுக்கோ அல்லது தமிழீழத்திற்கோ ஆதரவு எங்குமே கிடைக்கப்போவதில்லை.

தமிழீழம் அமைய சாத்தியமாக இரு காரணிகள் தான் இருக்கின்றது.

1.) இந்தியா துண்டு துண்டாக உடைந்தால் தமிழீழம் சாத்தியமாகும்.

2. இந்தியாஇ மேற்குலகம் இரு சக்திகளின் எல்லைகளை மீறி இலங்கையரசுஇ சீனாவிற்கு இடம் கொடுக்குமாயிருந்தால்இ இவர்கள் தமிழர் பிரச்சனையில் அக்கறை காட்டி தமிழீழத்தைப் பிரித்தெடுத்து அங்கு வந்து நிரந்தரமாகக் குந்துவார்கள். (இயற்கைத் துறைமுகமான திருகோணமலை இவர்கள் கைவசமாகும்.)

சரி இனி எமது போராட்டத் தொடர்ச்சிக்கு வருவோம். போராட்டம் பிரபாகரனின் தலைமையில் வெகுவேகமாக வளர்ந்தது. இதற்கும் பயிற்சிகள் கொடுத்து தமிழரைப் போரிட வைத்தது இந்தியாதான். இந்தியா தமிழ் இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து களத்திலிறக்கினார்கள். தமிழ் இளைஞர்களை எங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு சிங்களத்தின் நாணயக்கயிற்றை நாங்கள் பிடிக்கலாம் என்று இந்தியா நினைத்தது. ஆனால் நிலைமை அவர்கள் நினைத்ததுபோல் செல்லவில்லை. பல இயக்கங்களை உருவாக்கினார்கள். அவர்களைச் சண்டையிட வைத்தார்கள். (இதைத்தான் இந்தக் கருநாய் சொல்கின்றது சகோதரயுத்தம் என்று)

பிரபாகரனுக்கு அந்த வேளை இந்தியாவின் நோக்கம் என்ன என்பது தெளிவாகப் புரிந்துவிட்டது. எங்களை வைத்து சிங்களத்தை ஆட்டிப்படைப்பது தானேயொழிய தமிழர்களுக்கு உரிமை பெற்றுக்கொடுப்பது இவர்கள் நோக்கம்மல்ல. எனவே எங்கள் போராட்டத்தை நாங்களே முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று இந்தியாவைவிட்டு வெளியேறி தமிழீத்திலிருந்து கொண்டே போரிடும் நிலையைக் கட்டியெழுப்பினார். புலிகளின் வேகமான வளர்ச்சியும்இ வெற்றிகளும் மக்களின் ஆதரவும் இந்தியாவின் நோக்கங்களுக்கான திட்டமிடலில் தாக்கத்தை உருவாக்கி தலையிடியைக்கொடுத்ததுஇ

இதனால் தான் தமிழர்களின் போராட்டத்தை தொடரச்செய்யவேண்டுமெனின் தமிழ் போராளிகளை நசுக்கி பலவீனர்களாக மாற்றவேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு உதித்தது.

வடமராட்சி ஒப்ரேஷன் நடந்தபொழுது இந்தியா இலங்கையின் வானெல்லைக்குள் அத்துமீறி தமிழர்களுக்கு உணவுப்பொட்டலங்கள் போட்டு இலங்கை அரசை ஒரு மிரட்டல் மிரட்டியது. இலங்கை அரசு வெகுவாகப் பயந்துவிட்டது. அதே நேரத்தில் இலங்கையில் ஆட்சியிலிருந்த ஜெ. ஆர் ஜெயவர்த்தனாவும் ஒன்றைத் தெளிவாகப் புரிந்திருந்தார். தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் இடையிலுள்ள உறவில் விரிசல்கள் ஏற்படா விட்டால் நாம் தலையெடுக்கமுடியாது எனவும் அதற்காகச் சில வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்றும் திடசங்கற்பம் கொண்டார்.

அதன்பின் நடந்த சார்க் மாநாட்டில் ராஜீவ்காந்தியும்இ ஜெயவாத்தனாவும் சந்தித்து பேசிக்கொண்டபொழுது ஜெ. ஆர். ஜெயவர்த்தனா ராஜீவ்காந்திக்கு சில ஆலோசனைளை முன் வைத்ததாக அறியக்கிடக்கின்றது. அது வென்னவெனில் ஜெ ஆர். ராஜீவ்காந்திக்குச் சொன்னார். நீங்கள் தமிழர்களுக்கு தமிழீழம் அமைக்க ஆதரவு வழங்குகின்றீர்கள். இதனால் உங்கள் நாட்டில் உருவாகப்போகும் பிரச்சனையை நீங்கள் சிந்திக்கவில்லையா? என்று ஒரு கேள்விக்கணையைத் தொடுத்தவுடன்இ ராஜீவ்வும் அப்படி என்ன? என்ற வினவும்பொழுது தமிழீழம் அமைந்தால் பின்னர் தமிழ்நாடும் தனிநாடு அமைக்க புறப்பட்டு இந்தியா துண்டாகும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளாமல் ஆதரவு செய்கின்றீர்கள். சற்றுச்சிந்தியுங்கள் என்று குண்டைப் போட்டுவிட்டார்.

ராஜீவ்வுக்கும் ஜெ. ஆரின் சூழ்ச்சி வாசகம் சரியெனப்பட்டது. சார்க் மாநாட்டின் பின் வாரங்கள் கழித்து சமாதான ஒப்பந்தம் விடுதலை இயக்கங்களுடன் ஆலோசனை செய்யாமல்; இந்தியாஇ இலங்கைக்குச் சென்று அவர்களிடம் துவக்குச்சோங்கால் அடியும் வாங்கி கைச்சாத்திட்டது. ஜெ. ஆரின் திட்டம் வெற்றிகரமானது. அப்போது ஜெ. ஆர் ஒரு வார்த்தையில் சொன்னார். அப்போதிருந்த உலக அரசியல் தலைவர்களில் மூத்த அரசியல் தலைவர் ஜெ ஆர் ஜெயவாத்தனா. 'என்னுடைய அரசியல் அனுபவம் தான் இன்றைய இந்தியா பிரதமர் ராஜீவ்காந்தியின் வயது. என்னுடைய அரசியல் அனுபவத்தை இங்கு காட்டுகின்றேன் என்றார்"

இதுவே தமிழ் இயக்கங்களை அடக்க சிறந்த தருணம் என்றும்இ பின் இலங்கையில் நிரந்தரமாக எமது துருப்புகளை நிறுத்திவிடலாம் என்று இந்தியா கண்ட கனவு பலிக்கவில்லை. அப்படியே இந்தியத்துருப்புகளை இலங்கைக்கொண்டு வந்து தமிழர்களுக்கும் இந்தியத்துருப்புகளுக்கும் பிரச்சனையை உருவாக்கி தமிழனையும் இந்தியாவையும் பகையாளிகள் ஆக்கிவிட்டார் அரசியல் அனுபவம் கொண்ட ஜெ. ஆர். ஜெயவாத்தனா.

பின்னர் பிரமதாஸ ஆட்சிக்கு வந்து புலிகள் மூலம் இந்தியத்துருப்புகளை இலங்கையிலிருந்து வெளியேற உதவியளித்தார். இந்தியத்துருப்புகள் நாளுக்கு நாள் அழிவதால் நாம் சமாதான ரீதியில் வந்ததால் பெரிதாக சண்டையிடமுடியாது என்று எண்ணிக்கொண்டு வெளியேறி தனது திட்டமிடலை ஆரம்பித்தது.

தமிமீழம் ஒன்றைத்தவிர எதற்கும் விலை போகாத பிரபாகரனின் விடுதலை எழுச்சி பல பரிமாணங்களிலும் விரிந்து விரைந்து விடுதலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இப்படிப் போனால் தமிழீழம் மலர்ந்துவிடும். அவர்களையும் பகைத்துவிட்டோம். தமிழீழம் மலர்ந்தால் இரு ஆட்சி மையங்களும் எமக்கு பகையாளிகளாக மாறிவிடுவார்கள் என்ற அச்சம் இந்தியாவை திகைக்க வைத்ததுஇ

பின்னர் ராஜீவ் கொலை நடந்தேறியது. ஜெ. ஆரின் அரசியல் அனுபவ ஆழமான திட்டம் இந்தியாவையும் தமிழரையும் நிரந்தர பகைமையாக்கியது. ஆனால் ராஜீவ் கொலை ஒரு திட்டமிடப்பட்ட உள்வீட்டுப்பிரச்சனை என்பது சுப்ரமணியசுவாமியின் கோட்டு விசாரணையில் தெளிவுபடுத்தியிருந்தாலும் அவருடன் எதிர்ததுக் கொள்ளமுடியாதநிலை இந்திய அரசிடம் இருந்தது.

புலிகளின் இராணுவ வெற்றிகள் தமிழீழம் அமைத்துவிடும் என்ற அச்சம் இந்தியாவிற்கு கலக்கத்தைக் கொடுத்ததுஇ சந்திரிகா காலத்தில் ஆனையிறவு வெற்றியுடன் யாழ்ப்பாணத்தை கைப்பற்றி விடுவார்கள் என்ற பயத்தால் புலிகளுக்கு தொலைபேசி மூலம் அத்துடன் நிற்காவிட்டால் நாங்கள் இல்ங்கை சார்பாக இறங்குவோம் என்று மிரட்டி புலிகளை முகமாலையுடன் நிறுத்திவிடடார்கள். புpன்னர் இந்தியா நாடு நாடாகச் சென்று இரகசியமாக புலிகளுக்கு எதிர்வலைப் பிரச்சாரங்களை செய்தது.

அதன்பின் 9 11 பிரச்சனையும் போராட்டத்தில் சிக்கல்களை எற்படுத்தியிருந்தது. பின்னர் நோர்வேயின் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தமானது புலிகளை அழிக்கும் நோக்கத்திற்காகத்தான் செய்யப்பட்ட ஒன்று. ஏனெனில் யாருடைய உதவியுமின்றி தாங்களாகவே வளர்ந்த வளர்த்தெடுக்கப்பட்ட புலிகள் இயக்கம் எப்படியான ஆயுதங்கள்இ கொள்வனவுகள்இ இருப்பிடம் ஆள்பலம் என்பனவற்றைக் கணக்கிடாது எவரும் எதிர்த்துப் போரிடமுடியாது. அத்துடன் புலிகள் ஒரு கட்டுபாடுள்ள வெற்றிகரமான இயக்கம்.

இவர்கள் அழிக்கப்படவேண்டுமெனின் இவர்களுக்குள் ஊடுருவ வேண்டும். ஊடுருவ வேண்டுமெனின் போரிட்டுக்கொண்டு செய்யமுடியாது. நோர்வேயின் சமாதான காலம் புலிகளுக்குள் ஊடுருவல் செய்வதற்கும் ஒரு இடைக்காலத்திட்டமிடலுக்காகவும் தான் பயன்படுத்தப்பட்டது. இது உண்மையில் சமாதானம் அல்ல என்பதைக் காலப்போக்கில் புலிகளும் உணர்ந்திருந்தார்கள். தொண்டு நிறுவனங்கள்

எல்லாம் புலிகளின் நிலைகளை உளவறியவே நிறுத்தப்பட்டிருந்தன.

ஏரிக்கொல்கைம் கூட இலங்கைசென்று திரும்பும் போது இந்தியா சென்று ஆலோசனை கூறிச்செல்வது

வழக்கமாக இருந்தது. அத்துடன் ஒரு பேச்சுவார்த்தை சமாதானத்திலுள்ள புலிகளைப்புறம்தள்ளி இணைத்தலைமை நாட்டிலில்லாத இந்தியாவையும் அழைத்து புலிகளுக்குத் தடையுள்ள அமெரிக்காவில் நடத்தப்பட்டது. இதற்குள் பல சூழ்ச்சிகள் நடக்கின்றன எனப்புலிகள் உணர்ந்தாலும் பேச்சுவார்த்தை யிலிருந்து விலகமுடியாத பொறிக்குள் அகப்பட்டுவிட்டார்கள். இறுதியல் நடந்தது என்ன? விலகினாலும் அடி விலகாவிட்டாலும் அடி என்கின்ற நிலையே இருந்தது.

புலிகளுடனான மாவிலாறு தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான யுத்தத்திற்கான வரையறை இங்குதான் திட்டமிடப்பட்டிருக்க வேண்டும். சமாதானப் பேச்சுவாhர்த்தையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் எதையும் அரசு நடைமுறைப்படுத்த முன்வரவில்லை. அத்துடன் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள்.

எதையும் சமாதான இணைத்தலைமைநாடுகள் அரசைச் சாட்டிற்காகவும் கண்டிக்காமல் புலிகள் பதிலாகச் செய்த விடயங்களை ஊதிப் பெரிதாகக் காட்டினார்கள். புலிகளைக்கண்டிக்கத் தொடங்கினார்கள் இவர்களுக்கு கோபத்தைத்தூண்டும் வகையான செயல்களில் ஈடுபட்டார்கள். புலிகள் தாங்கள் பொறியில் அகப்பட்டுவிட்டோம் என்று கோபத்தை அடக்கி மௌனம் காத்தனர்.

சமாதானத்துடன் போர் என்ற சமாந்திரமான நிலையை அரசும்இ இணைத்தலைமை நாடுகளும் திட்டமிட்டு புலிகள் மீது திணிக்கத்தொடங்கினார். அரசு செய்யும் ஒருதலைப்பட்சமான போருக்கு இணைத்தலைமை நாடுகள் உள்ளார்ந்த பச்சைக்கொடி காட்டப்பட்டது. சமாதானம் என்ற பெயரில் புலிகளின் கைகள் கட்டப்பட்டன. புலிகளுக்குள் பிரிவினைகளை ஏற்படுத்த தொண்டு நிறுவனங்களும்இ இணைத்தலைமை நாடுகளும் உளவு வேலைகளில் ஈடுபட்டன.

தொண்டு நிறுவனங்கள் புலிகளின் இருப்பிடங்களை அறிந்து தகவல் கொடுக்க அங்கு விமானத் ;தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தவறுதலாகவோ அல்லது தெரிந்தோ நடத்தப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இறந்த குழந்தைகளுக்காவது இணைத்தலைமை நாடுகள் இரங்கலோஇ கண்டனமோ தெரிவிக்கவில்லை என்பதில் இருந்தே இணைத்தலைமை நாடுகளின் போக்கு ஒரு பக்கம் சார்ந்த நிலையில் இருந்தததை நிரூபிக்கின்றது. புலிகளுக்கெதிராக சமாதானம் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தபட்டதே தவிர உண்மைச் சமாதானம் நடைபெறவில்லை.

சமாதான காலத்தில் போருக்குரிய திட்டங்கள்தான் வகுக்கப்பட்டன. புலிகள் போரிட்டே ஆகவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அரசு கிளிநொச்சி வரை இறுக்கும் வரை தொண்டு நிறுவன உளவாளிகள் அங்கு நிறுத்தப்பட்டும் வெளியுலக கடல் போக்குவரத்து தொடர்புளை இறுக்கும் வரையும் இருந்துவிட்டு பின்னர் அரசின் நிர்ப்பந்தத்தால் எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை வெளியேறுகின்றோம் என்ற சாட்டுப்போக்குடன் வெளியேறி அரசின் கொடூரத்தாக்குதலுக்கு பச்சைக்கொடி காட்டினார்கள். ஈராக்கில் கையாண்ட அதே போர் முறை இங்கும்; கையாளப்பட்டது.

அனேகமானோர் ராஜபட்ச தான் இதைச் செய்தார் என்று எண்ணிக் கொண்டுள்ளனர். 2000 ஆம் ஆண்டு சமாதான காலத்தில் வரையறுக்கப்ட்ட இணைத்தலைமை நாடுகளினதும் இந்தியாவினதும் புலிகள் அழிப்புப் போர் திட்டங்கள்இ ராஜபட்ச ஆட்சியில் முடிவுக்கு வந்ததே தவிர ராஜபட்சவின் திட்டமும் அல்ல என்பதை தெளிவாக நாங்கள் புரிந்து கொள்ளவேண்டும். சமாதானம் இருக்கும்பொழுது புலிகள் மீதான போரை ஒரு தலைப் பட்சமாகத் திணித்த அதேவேளை கனடாஇ ஐரோப்பிய மற்றும் நாடுகளில் புலிகளைத்தடை செய்தமையும் இணைத்தலைமை நாடுகளின் கோரமுகத்தை வெளிக்கொணர்ந்தது.

நோர்வேயின் அனுசரணையுடனும் தான் இலங்கை அரசால் நோர்வே புலிகளுக்கு ஆதரவாக நடந்து கொள்கின்றார்கள் என்ற பசாங்குக் குற்றச்சாட்டு வைக்கப்ட்டது. இது நோர்வேயின் வெளியேற்றத்திற்கான ஒரு உடன்படாக இருந்திருக்கக்கூடும். சகல போருக்கான ஆதரவுகளையும் வழங்கி இறுதி யுத்தம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது மாத்திரமல்லாமல் தடைசெய்யப்பட்ட கொத்தணிக்குண்டுகளும்இ பொஸ்பரஸ் குண்டுகளும் யாரால் வழங்கப்பட்டன? இலங்கை அரசிற்கு அதை உற்பத்தி செய்யும் வல்லமை இருந்ததா? இல்லை. அதை எப்படிப் பாவிப்பது என்பதும் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி இல்லாது இருந்திருக்கும். இதை பாவித்தவர்கள் இந்திய இராணுவமே. இதற்கான கண்டனக்குரல்களை புலம்பெயர் தமிழ்மக்கள் தான் எழுப்பினார்களே தவிர எந்தவொரு அரசாங்கங்களும் கண்டனம் செய்யவில்லை. தமிழர்கள் எங்களைக் காப்பாற்றுங்கள் என்ற கூக்குரலுக்கு எந்தவொரு நாடும் செவிசாய்க்கவில்லை. மிருகவதைக்குக் கண்டனம் செலுத்துபவர்கள் கூட தமிழன் மிருகத்தைவிட கேவலமான கொல்லப்பட்டபொழுதும் யாரும் செவிமடுக்கவில்லை.

இறுதி யுத்தத்தில் ஏராளமான தமிழ் மக்கள் கொல்லப்படுவார்கள் என்று தெரிந்திருந்தும் தடுக்க எவரும் முன்வரவில்லை. ஏனெனில் போருக்கான திட்டம் வகுத்தபோது எவ்வளவு மக்கள் கொல்லப்படுவார்கள் என்ற வரையறை அவர்களிடம் இருந்ததென்றும் அதைமீறிச் சென்றால் மாத்திரம் தான் கண்டம் தெரிவிப்பதென தீர்மானித்திருந்தார்கள் என்றும் கூறப்படுகின்றது. போரின் இறுதியில் கொல்லப்பட்ட மக்களின் மொத்த எண்ணிக்கை இவர்களின் கணிப்பைவிட குறைவாக இருந்ததென்றும் சில இரகசிய செய்திகள் குறிப்பிடுகின்றன.

உள்நாட்டுப்போர் என்பதால் நேரடியாக பங்குபெற்ற முடியாது என்பதால் சகல இராணுவ உதவிகளும்இ பணஉதவிகளும்இ சகல இழப்பையும் ஈடுசெய்ய வெளிநாடுகள் இணக்கம் செய்து கொண்டன. கூட்டுசேராக்கூட்டணியாக நிரந்தர பகைமை நாடுகளான இந்தியாஇ பாகிஸ்த்தான்இ சீனா என 20 நாடுகள் இணைந்து ஒரு சிறிய இனத்தின் இறைமையுடைய உரிமைப் பிரச்சனையை பேசித்தீர்க்க முடியாது போர் செய்து அழித்தது இந்த உலகில் நடந்திருக்கக்கூடிய செயல்களில் இதைவிட வெட்கப்படக்கூடிய கேவலமான செயல் எதுவும் இருக்கமுடியாது.

இலங்கையின் எதிர்க்கட்சிகளுக்கும் வாயை மூடுவதற்கு இந்திய அரசால் பணங்கள் வாரி இறைக்கப்பட்டன. சமாதானம் என்பது ஒரு திட்டமிடப்பட்டசதி. ஆனால் போரானது போர்விதிகளையும் மீறிஇ தடைசெய்யப்பட்ட ஆயுதங்களும் எங்கள் மீது பாவிக்க உலக தார்மீக அரசுகள் அனுமதிக்கும் என்று எள்ளளவும் எண்ணவில்லை. இவற்றைப் பாவிக்காவிட்டால் புலிகளை இவர்களால் வென்றிருக்கமுடியாது என்பது யதார்த்தம். மாவிலாறு தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை 30இ000 மேற்பட்ட துருப்புகளை இழந்தும் 40இ000க்கும் மேற்பட்ட துருப்புக்கள் காயமடைந்தும் அதிகமான கனரக ஆயுதங்கள் அழிக்கப்பட்டும் பேரிழப்புடன் புலிகளின் கொள்கைகளும்இ புலிகளும் சரணடையாது புலிகளின் ஆயுதம் மௌனித்துத்தான் ;போர் முடிவுக்கு வந்தது.

இவ்வளவும் நடக்கும்போது மௌனம் காத்தது சர்வதேசம். ப+கோள பிராந்திய நிலைப்பாட்டில் இலங்கை அரசைத்தங்கள் கைகளுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உலக நாடுகள் அனைத்தும் நான் முந்தி நீ முந்தி என்று கொடுக்கும் நிலையால் பணம் பணமாகக் குவிந்தது.

சில நாடுகள் நிபந்தனை அடிப்படையில் தான் தருவோம் என்றவுடன் அதை நாங்கள் தருகின்றோம் என்று மற்றையநாடுகள் அறிவித்திருந்தன.

புலிகளை அழிப்பதில் முனைப்புக்காட்டி புலிகளை அழித்தொழிப்பதில் முக்கியபங்கை வகித்தது சர்வதேசமே. இலங்கை அரசாங்கம் அவர்களுடைய நாடு என்பதால் அனுமதியும்இ துருப்புக்களைக் கொடுப்பதிலும் அங்கீகாரம் வழங்குதலுக்கும்; தான் பயன்படு;;த்தப்பட்டார்கள். அத்துடன் நிறபேதரீதியாக வித்தியாசம் காணமுடியாமல் இருப்பவர்கள் இந்தியரே என்பதால் இந்தியத்துருப்புக்கள் இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயல்பட்டார்கள்.

மே மாதம் 19ம் 2009 போர் நிறைவிற்கு வந்தது. தமிழரின் உரிமைப்பிரச்சனை பற்றிய பேச்சு இடைக்கிடை அடிபட்டாலும் அது கிடப்பில் போட்ப்பட்டதே உண்மை.

தன்னிகரற்ற தனிப்பெருந்தலைவன் பிரபாகரன் தன்னைக்கொடுத்து தன் குடும்பத்தைக் கொடுத்து தமிழரின் உரிமைக்காக இறுதிவரை களத்தில் 20க்கும் மேற்பட்ட நாடுகளுடன் போர்விதிகளை அனுசரித்து நின்று போரிட்டு மறைந்தாரோஇ இல்லையோ காண்பிக்கப்பட்ட உடல் அவரது இல்லை என்பது உண்மை. எப்படி இருப்பினும் என்றும் அவரைப்பிடித்த மக்கள் மனதைவிட எதிரிகளின் மனதில் என்றும் வாழுகின்றான்.

போருக்குப் பின் இன்றைய நிலைமை இன்னொரு திசையில் பிரச்சனையை உருவாக்கி விட்டிருக்கின்றது என்பது உண்மை. இலங்கையில் சீனா நிலைகொள்வதைத் தடுக்க முற்பட்டு தமிழர் உரிமைப்போராட்டத்தை அழிக்க முற்பட்ட உலகத்தால் சீனாவின் நுழைவைத்தடுக்க முடியாமல் தோல்வியைத்தழுவி இருக்கின்றனர். இந்திய அரசால் உருவாக்கப்பட்ட தமிழர் உரிமைப்போர் அவர்களை வைத்தே அழித்தொழிக்கப்பட்டு இந்தியாவை ஓரம் கட்ட இலங்கை அரசு முனைப்பு எடுக்கின்றது. சீனாவை இலங்கைக்குள் அனுமதித்pருப்பது என்பது இந்தியாவை மட்டுமல்ல மற்றைய தேசங்களையும் பாதித்திருப்பதால் இன்று இலஙகை அரசின் மீpதான போர்குற்றப்பட்டியல் தயாரிப்பில் இறங்கியுள்ளனர். இதை தமிழர்கள் தங்கள் சார்பான என்று எண்ணினால் தமிழர்கள் இன்றும் ஏமாந்தவர்களே. போர்க்குற்றம் சுமத்தப்பட்டு ராஜபட்ச குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டால் யார் யாரெல்லாம் இதைச்செய்தார்கள் என்ற உண்மை வெளிவரலாம். இதனால் போர்குற்ற அறிக்கையைச் சமர்ப்பிப்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளன.

இதனால் தான் சர்வதேசம் ஒரு மாற்றுவழியைக் கடைப்பிடிக்க முயலுகின்றது. அது என்னவெனில் போர் முடிந்தவேளை ஆட்சியிலிருந்த ஜனாதிபதிக்கே பெரும்பான்மை இன மக்கள் வாக்களிப்பார்கள். இதனால் இவர் அமோக வெற்றியுடன் ஆட்சிக்கு வருவார். இவரை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டுமெனின் போரில் பங்குபற்றிய இராணுவத்தளபதியைப் போட்டாலே இணையாக இருக்கும் என்று சரத்துக்கு மேற்குலகமும்இ இந்தியாவும் தூண்டுதலைக் கொடுத்திருக்கலாம். சரத்தைத் தவிர யார் போட்டியில் நின்றாலும் அமோக வெற்றி ராஜபட்சவுக்கே. சரத்தை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தியது இந்தியாவும் அமெரிக்காவும் தான் என்பது அமெரிக்காவிறகு சரத் சென்று திரும்பியது ஒரு நல்ல சான்று. அத்துடன் போர் நடந்தபோது இந்தியா சென்று பேச முனைந்த தமிழர் கூட்டமைப்புடன் பேசமறுத்த இந்திய அரசாங்கம்இ இன்று அவர்களை அழைத்துப் பேசி சரத்துக்கு ஆதரவு கொடுக்குமாறு தமிழர் மத்தியில் பிரச்சாரம் செய்யுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கலாம். தமிழர் கூட்டமைப்பு இன்றும் ஏமாந்த ஏமாளிகள்.

ராஜபட்சவை ஆட்சியிலிருந்து தூக்குவதே இந்தியாவினதும்இ மேற்குலத்தினதும் இன்றைய குறிக்கோள். இவரை ஆட்சியிலிருந்;து தூக்கிவிட்டால் குற்றப்பத்திரிகைக்கு வேலையில்லாது போய்விடும். சரத்தின் மூலம் சீனாவை இலங்கையிலிருந்து ஓரம் கட்டலாம் என்றும் கனவு நிறைவேறுமா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்லவேண்டும். அப்படியில்லாமல் ராஜபட்ச ஆட்சிக்கு வந்தால் இவர் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டு சதாமைப்போல் தூக்குவதற்கு திட்டங்கள் வகுக்கப்படலாம். இனிவரும் காலங்கள் இலங்கை பாரிய சர்வதேச அரசியல் நெருக்கடி நிறைந்த இடமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அன்றைய உலகத்தின் அரசியல் நோக்கங்களினால் இன்று தமிழரின் ஆயுதரீதியான உரிமைப் போராட்டம் அழிக்கப்பட்டது.

உலகில் புதிதாக எடுத்துள்ள பொருளாதார நெருக்கடிகளினால் மேற்குலகம் முன்னேற முடியாத ஒரு பெரும் மந்த நிலைமையைச் சந்தித்துள்ளது. இந்தியாவும்இ சீனாவும் யார் 21ம் நூற்றாண்டின் வல்லரசு என்ற நிலையிலும்இ; பொருளாதாரத்திலும் முன்னேறும் நாடுகளாக இருப்பதால் இவர்களுடன் வர்த்தகப்போட்டியில் மேற்குலகம் ஈடுகொடுக்க முடியாதநிலை உருவாகியுள்ளது. இந்தநிலை நீடிக்குமானால் 21ம் நூற்றாண்டு நடுப்பகுதியில் மேற்குலகம் பிச்சைப்பாத்திரம் ஏந்தும் நிலைக்குத்தள்ளப்படலாம்.

இந்த நிலையை மாற்றவேண்டுமானால் ஒரு பெரிய போரை உருவாக்குவது என்பது இவர்களின் உள்ளார்ந்த நோக்கங்களாக இருக்கலாம்;. அந்தப்போர் எங்கே நடக்கவேண்டும்? முன்னர் அவர்கள் பாகிஸ்த்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையில் உருவாக்கத் தீர்மானித்தார்கள். பின்னர் உலக அரசியல் மாறுதல்களில் இந்தியாவையும்இ பாகிஸ்தானையும் நலிவடையச் செய்தால் சீனா முன்னணி வல்லரசாக வந்துவிட்டால் எங்கள் கைக்குத்திரும்பவும் வல்லரசு என்னும் பந்து வராது என்ற நிலையை உணர்ந்து கொண்டனர். இதனால் சீனாவிற்கும்இ இந்தியாவிற்கும் இடையில் இந்த 3ம் உலகப்போரை துவக்கி பாகிஸ்த்தானையும் இணைத்துவிட்டால் அணு ஆயுத வல்லமையுள்ள இவர்கள் போரில்பேரழிவைச் சந்திக்க நாங்கள் மீண்டும் வல்லரசு என்ற நிலையை அடைந்துவிடலாம் என்ற எண்ணக்கருத்துகள் சில தாமதங்களை ஏற்படுத்தியிருக்கும்.

இன்று இதன் முதற்கட்டமாக நடந்திருப்பது தமிழின உரிமைப்போர் அழிப்பு. இனிவரும் காலங்கள் இதற்கான முனைப்புகளாகவே இருக்கும். இது இலங்கையில் உருவானாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இ;லலை.

யார் தான் ஆட்சிக்கு வந்தாலும் சீனாவை இலங்கையிலிருந்து அகற்றுதல் என்ற கோட்பாடு பெரும் போரில் தான் நிறைவேறும்.

சரத் ஆட்சிக்கு வந்தால் தமிழருக்கான ஒரு நலிவடைந்த தீர்வுப்பொதியை இந்தியாவும்இ மேற்குலகமும் தள்ளி தமிழரைத் திருப்திப்படுத்த முனையும் என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழரின் முழு உரிமையும் வென்றெடுக்க வேண்டுமெனின் இருவிடயங்கள் முன்னர் நடந்தேறவேண்டும்.

இன்றைய அரசியல் நிலைப்படி இந்தியா துண்டு துண்டாக வேண்டும் அல்லது சீனாவை ஆதரிப்பவர்கள் ராஜபட்ச ஆட்சியில் இருக்க வேண்டும்.

நடக்த முடிந்த போரில் இலங்கை அரசு வெறும் பொம்மை தான்.

தமிழர் தங்கள் போராட்டங்களை இப்போதைக்கு தள்ளி வைத்து உலக அரசியல் மாற்றங்களுக்கேற்ப திட்டங்களை மாற்றி மாற்றி அமைத்து மேற்கூறப்பட்ட இரு விடயங்களிலும் அதிக கவனம் செலுத்துதல்

முக்கியபடிகளாகும் என்பதுடன் இவ்வாய்வுக்கட்டுரையை நிறைவு செய்து தமிழர்கள் பேதமின்றி ஒற்றுமைப்படுதலும் சரி சமாந்திரமாக நடக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

வலியைத் தந்தவனுக்கு அந்த வலியைத்திருப்பிக்கொடு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.