Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனரல் சரத் பொன்சேகாவை இராணுவ நீதிமன்றம் முன்னால் நிறுத்த மகிந்தர் கூட்டம் முடிவு.?

Featured Replies

அ) மரண தண்டனை வழங்கப்படலாம்

ஆ) ஊடகங்களுக்கு அனுமதி இல்லை

Gen. Fonseka to be hauled before military court

A Military Court will try retired General Sarath Fonseka on several charges of conspiracy, the Sunday Times learns. Such charges are to include an attempt to overthrow the Government and assassinate President Mahinda Rajapaksa.

This new move, as against indicting him under the normal laws of the land, came after the CID consulted Attorney General Mohan Peiris, an authoritative legal source said yesterday.

Criminal Investigations Department (CID) detectives allege that the actions of Gen. (retd.) Fonseka on the main subjects of their inquiry had their origins when he was serving as Commander of the Army. Besides allegations relating to conspiracy, they claim, that this included deals where his son-in-law reportedly benefited by way of large commissions for supplying military ware.

Gen. (retd.) Fonseka has denied any wrongdoing and has accused the Government of “taking revenge” on him. CID detectives are to question his son-in-law Danuna Tillekeratne in the coming week.

Last week, the Sunday Times reported exclusively that the arrest of Gen. Fonseka was imminent. The new turn of events, arraigning him before a Military Court, has delayed the process. However, the source said, he was still liable to arrest anytime after “the required legal procedures are in place.” Like in civil courts, all evidence will be admissible before the Military Court, the source pointed out.

However, the conduct of proceedings in a Military Court, the source said, would not be open to the media. Military Courts are legally empowered to confer death or jail sentences on those found guilty.

"CID detectives have already taken into custody 36 persons during the ongoing investigations. This week, they arrested the Cinnamon Lakeside Hotel’s Security Manager Ranjit Dayaratne. Investgators say that the manager, a retired Major in the Army, claimed that he was the one who had switched off the surveillance cameras at the hotel where more than 70 rooms had been rented to retired General Fonseka and his entourage on election night.

However, detectives have heard from members of the security detail of the former military strongman that it is they who had knocked off the surveillance cameras and thus prevented their movements along the hallways being recorded on tape. Detectives are also on the look out for three journalists who were close associates when the opposition's "common candidate" was the Commander of the Army.

http://www.sundaytimes.lk/100207/News/nws_04.html

Edited by akootha

  • தொடங்கியவர்

தமிழகத் தமிழ் தேசிய அரசியல் தலைவர்களை கோமாளிகள் என்று இகழ்ந்தவர், இன்று தானே கோமாளியாகி நிற்கிறார்.

இலங்கையில் புலிகளை அழிக்கும் இறுதிப்போரை தொடங்கி, கூடவே கணிசமான தமிழ் மக்களை அழித்த, சரத் பொன்சேகா என்ற முன்னாள் இராணுவத் தளபதி. உலகம் எப்படி கணித்திருந்தாலும், சிங்கள மக்கள் சரத் பொன்சேகாவை ஒரு மாபெரும் வீரனாக பார்த்தார்கள். யாரும் வெல்ல முடியாத போரில் தமிழரை அடக்கி வெற்றிவாகை சூடிய மகிந்த மகாராஜாவின், தானைப் படைத்தளபதியின் புகழ் பட்டிதொட்டியெங்கும் பரவி இருந்தது. நாடெங்கும் முக்கிய நகரங்களில் தென்னை மர உயர கட்-அவுட்களில் சரத், மகிந்தவுடன் சிரித்துக் கொண்டிருந்தார். ரஜனி ரசிகர்கள் போல பாலபிஷேகம் செய்யாதது மட்டுமே பாக்கி. அநேகமான கட்-அவுட்கள், போஸ்டர்களில் இவர்களுடன் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷவும் மும்மூர்த்திகளாக காணப்பட்டனர். சரத் பொன்சேகா தளபதி பதவியை ராஜினாமா செய்து விட்டு, ராஜபக்ஷ சகோதரர்களுக்கு எதிராக அரசியலில் குதிப்பதாக அறிவித்தார். உடனே நாடெங்கிலும் இருந்த போஸ்டர்களில் சரத் பொன்சேகாவின் படம் கிழித்தெறியப்பட்டது. கதாநாயகன் நகைச்சுவை நடிகராக மாறிய கதை இது.

ராஜபக்ஷ சகோதரர்களுக்கும், சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான பனிப்போர், வன்னியில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே ஆரம்பமாகிவிட்டதாக கருதப்படுகின்றது. மகிந்தவின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சருமான கோத்தபாய ராஜபக்ஷவும், சரத் பொன்சேகாவும் ஒன்றாக இராணுவத்தில் பணியாற்றியவர்கள். 1987 ம் ஆண்டு, வடமராட்சி “ஒப்பரேஷன் லிபரேஷன்” இராணுவ நடவடிக்கையில் இருவரும் பங்குபற்றியவர்கள். இராணுவத்தில் சிரேஷ்ட அதிகாரியான சரத் பொன்சேகா கேணல் தரத்திலும், கோத்தபாய அதற்கு கீழான லெப்டினன்ட் கேணல் தரத்திலும் கடமையாற்றியுள்ளனர். மகிந்த ஜனாதிபதியான பிற்காலத்தில், கோத்தபாய பாதுகாப்பு அமைச்சராக்கப்பட்டார். சரத் இராணுவ தளபதியாக பதவி உயர்வு பெற்ற போதிலும், பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டிய நிலை உருவானது. இதனால் தாழ்வுச் சிக்கலுக்கு உள்ளான சரத், தனது மனஸ்தாபத்தை நண்பர்களுடன் பகிர்ந்திருக்கிறார். எப்படியோ நக்கல், நையாண்டி கதைகள் எல்லாம் கோத்தபாய காதுகளுக்கு எட்டின. கோத்தபாய போர் முடியும் வரை பொறுமையாக இருந்திருக்கலாம். இந்தக் காரணத்தோடு, இராணுவம் ஈட்டிய வெற்றிகளால் சரத், தனக்கு மேலே வளர்ந்து விடுவாரோ என்ற அச்சம், ஜனாதிபதி மகிந்தவிற்கு தோன்றியிருக்கலாம். போர் முடிந்த பின்னர், முக்கியமில்லாத அமைச்சர் பதவியை கொடுத்து சரத்தின் “செருக்கை” அடக்க நினைத்திருக்கலாம்.

இலங்கை இராணுவ வரலாற்றில், இராணுவ தளபதிகள் அரசியல் கருத்துக்களை கூறுவது மிக அரிது. பொதுவாக இராணுவம் பாராளுமன்ற அரசுக்கு கட்டுப்பட்ட, கீழ்ப்படிவான பாத்திரத்தையே ஏற்றிருந்தது. போரை தொடருவதா, முடிப்பதா என்பதை கூட பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுகளுக்கு அமைவாகவே செயற்படுத்தி வந்தது. ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவான நாளில் இருந்து, அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்களிடையே மாற்றம் காணப்பட்டது. பாகிஸ்தானில், அல்லது துருக்கியில் உள்ளதைப் போல இராணுவத்திற்கு கூடுதல் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்குப் பின்னர் நடந்தவைகள் அனைவருக்கும் தெரிந்த வரலாறு. தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க கூடிய அதிகாரம் பெற்ற இராணுவம், வாகரை தொடங்கி முள்ளிவாய்க்கால் துரித பாய்ச்சலில் முன்னேறியது. புஷ்ஷின் தத்துவமான “ஈடு செய்யப்படக் கூடிய இழப்பு” போன்ற வார்த்தை ஜாலங்களால், புலிகளோடு ஒரு பகுதி தமிழரையும் அழித்து முடித்தது. “யுத்தம் நீடிக்குமானால் இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மரணிப்பார்கள். அதற்காக பத்தாயிரம் பேரை பலி கொடுத்து யுத்தத்தை முடிப்பது தவறல்ல.” இவ்வாறு ஒரு அமெரிக்க பத்தி எழுத்தாளர் ஹெரால்ட் ட்ரிபியூன் பத்திரிகையில் தத்துவ விளக்கம் அளித்தார்.

போர் முடிவடைந்து மாதக் கணக்கு கூட ஆகாத நிலையில், இராணுவத்தின் பலத்தை இரு மடங்காக்க வேண்டும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இராணுவம் என்ற மிருகத்திற்கு, இன்னுமின்னும் தீனி போட்டு வளர்ப்பதற்கான அந்த திட்டத்தை முன்மொழிந்தவர் சரத் பொன்சேகா. அதே நேரம், வட மாகாண இராணுவ முகாம்களில் கடமையாற்றும் (சிங்கள) படையினரின் குடும்பங்களை குடியேற்றும் யோசனையும் அவருடையது தான். துருக்கியில் ஏற்கனவே இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. குர்திய சிறுபான்மையின மக்கள் செறிவாக வாழும் பிரதேசத்தின் முக்கிய நகரங்களின் சனத்தொகையில், துருக்கியரின் விகிதாசாரம் அதிகம். துருக்கி இராணுவவீரர்களும், அவர்களது குடும்பத்தினருமே அங்கு சனத்தொகை பரம்பலை மாற்றியமைத்தவர்கள்.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பலம் பொருந்திய இராணுவத்தை வழி நடாத்திய நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற பெருமைக்குரியவர் சரத் பொன்சேகா. புதிதாக தோன்றிய பூதத்தை கண்டு அஞ்சிய மகிந்த ராஜபக்ஷ, “தனக்கு எதிராக இராணுவ சதிப்புரட்சி வருமென்று அஞ்சினார். இதனால் இந்திய இராணுவத்தின் உதவியை நாடினார்.” சரத் பொன்சேகாவின் ராஜினாமாக் கடிதத்தில் அவ்வாறு எழுதப் பட்டிருந்தது. (இலங்கை இராணுவத்தை மதிக்கவில்லை என்பது சாராம்சம்) அந்த தகவல் உண்மையில்லை என்று இந்தியா மறுத்த போதிலும், இலங்கை அரச மட்டத்தில் “சதிப்புரட்சி” பற்றிய எதிர்பார்ப்பு நிலவுகின்றது. இராணுவத்தில் கடமையாற்றிய சரத் பொன்சேகாவின் உறவினர்கள் திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சரத் விவகாரம் வெளிவர முன்னரே, டெயிலி நியூஸ் பத்திரிகை எச்சரிக்கை மணி அடித்தது. ஹொண்டூரஸ் நாட்டில் ஏற்பட்ட இராணுவ சதிப்புரட்சியை அரசாங்க நாளேடான டெயிலி நியூஸ் முதன்மைச் செய்தியாக பிரசுரித்திருந்தது. சில இடதுசாரி ஊடகங்களை தவிர, இதுவரை உலகில் எந்தவொரு வெகுஜன ஊடகமும் ஹொண்டூராஸ் குறித்து அக்கறைப்படவில்லை. டெயிலி நியூஸ் செய்தி, அரசுக்கான எச்சரிக்கை ஆகவே கருதப்படுகின்றது.

இதுவரை ஜனநாயக நிறுவனங்கள் பெயரளவிலாவது இயங்கிக் கொண்டிருந்தன. இனிமேல் அதற்கு இடமே இருக்கப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகாவிற்கு எதிராக இராணுவ நீதிமன்றில் வழக்குத் தொடரப்படவுள்ளது – சண்டே டைம்ஸ்

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக இராணுவ நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட உள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தல், ஜனாதிபதியை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற்றக் கொண்டதன் பின்னர் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு இராணுவ நீதிமன்றில் வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளனர்.

இராணுவத் தளபதியாக கடமையாற்றிய போது மேற்கொண்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அதிகளவு முறைப்பாடுகள் காணப்படுவதனால் புலனாய்வுப் பிரிவினர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

இதேவேளை, தாம் எந்தக் குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை எனவும், அரசாங்கம் தம்மை பழிவாங்குவதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகனிடம் எதிர்வரும் நாட்களில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்த உள்ளனர்.

இராணுவ நீதிமன்றில் மேற்கொள்ளப்படும் வழக்கு விசாரணைகள் பகிரங்கப்படுத்தப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

சிறைத்தண்டனை விதிக்கவோ அல்லது மரண தண்டனை விதிக்கவோ இராணுவ நீதிமன்றிற்கு அதிகாரம் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய மூன்று ஊடகவியலாளர்கள் பற்றிய விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

globaltamilnews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.