Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் இந்தியா தலையிடுவதற்கு தீர்க்கமான நேரம் வந்துவிட்டது என்கிறது அமெரிக்க ஏட்டின் இந்திய வெளியீடு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

SuryaNarayan.jpg இலங்கையில் இந்தியா தலையிடுவதற்கு தீர்க்கமான நேரம் வந்துவிட்டது என்கிறது அமெரிக்க ஏட்டின் இந்திய வெளியீடு

"உங்களது சர்வாதிகார ஆட்சியாளரை நீங்கள் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறை தான் மக்களாட்சி முறைமை" என முன்பொரு காலத்தில் யாரோ ஒருவர் கூறியிருந்தார்.

இலங்கையில் தமிழ்ச் சிறுபான்மையினரைப் பொறுத்தவரையில், கடந்த ஜனவரியின் இறுதிப் பகுதியில் நடந்து முடிந்திருக்கும் குடியரசு அதிபர் தேர்தலும் இது போன்றதொரு குழப்பகரமான தடுமாற்ற நிலையையே தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது.

தங்களது தாயகப் பூமியில் கொடூரத் தனமான ஒரு போர் அரங்கேறுவதற்குக் கட்டளையிட்டவர் யாரோ அவருக்கு வாக்களிப்பதா அல்லது அந்தப் போரில் களமுனையில் முனைப்புடன் படைகளை நடாத்திய ஜெனரலுக்கு வாக்களிப்பதா? ஈற்றில் தேர்தல் நாள் வந்த போது பெரும்பாலான தமிழர்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருக்க நேர்ந்ததினால், தங்களுக்குத் தீங்கிழைத்த இந்த இருவரில் யார் குறைவாகத் தீங்கிழைத்தவர் என்பதை அவர்களால் வெளிக்கொண்டு வர முடியவில்லை.

இவ்வாறாகப் பெரும்பாலான தமிழர்கள் வாக்களிப்பதிலிருந்து முடக்கப்பட்டமையானது நாட்டினது தலைவருக்கே துணைபுரிந்தது. இறுதியில், இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே அதிபர் தேர்தலை நடாத்துவதற்கு முடிவெடுத்திருந்த அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதியான வெற்றியைத் தனதாக்கி, இலங்கைத் தீவினை அடுத்துவரும் ஆறு ஆண்டுகளுக்கு ஆளும் ஆணையினைப் பெற்றார்.

இலங்கையின் தமிழர் வாழும் பகுதிகளில் தனி நாட்டினை நிறுவவெனக் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகப் போராட்டத்தினை முன்னெடுத்து வந்த, வெல்லப்பட முடியாத சக்தியாகத் திகழ்ந்த தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பினை இல்லாது ஒழித்தமையினால் சிங்களப் பெரும்பான்மையினர் அதிபர் தேர்தலின் போது மகிந்த ராஜபக்சவிற்குப் பரிசளித்திருந்தார்கள்.

ராஜபக்ச மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டிருப்பதானது, கண்ணீர் துளி போன்ற வடிவை ஒத்த இலங்கைத் தீவில் இடம்பெறும் நிகழ்வுகளில் தவிர்க்க முடியாத, ஆனால் தயக்கத்துடன் கூடிய ஒரு பங்கினை வகித்துவரும் இந்தியாவும், இலங்கைத் தமிழர்களும் தீர்க்கமான ஒரு முடிவினை எடுக்கவேண்டிய நிலைக்கு அவர்களைத் தள்ளியுள்ளது.

இவ்வாறு Forbes India இதழில் எழுதியுள்ளார். எஸ். சிறீனிவாசன். அதனைப் புதினப்பலகை-க்காகத் தமிழாக்கியவர் தி. வண்ணமதி.

எஸ். சிறீனிவாசன் தொடர்ந்து எழுதியிருப்பதாவது:

இவர்கள் தங்களது நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டு, புரையோடிப்போன தமிழர்களின் பிரச்சினைக்கு ஓர் தீர்வினை எட்டுவதற்காக 64 வயதுடைய அரசியல்வாதியுடன் பேச்சுக்களில் ஈடுபடுவது அவசியமாகிறது.

அதிகாரத்தின் உச்சத்திலிருக்கும் ராஜபக்சவினைப் பொறுத்தவரையில் தமிழர்களும் இந்தியாவும் கூறுவதைச் செவிமடுக்கவேண்டிய அரசியல் நிர்ப்பந்தம் எதுவும் அவருக்கில்லை.

புலிகளமைப்பினை அவர் தோற்கடித்துவிட்டார், தமிழர்களது வாக்குகள் இல்லாமலேயே நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக மீளவும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் மற்றும் தனது இராணுவ வழித் தீர்வுக்கான சர்வதேச ஆதரவையும் அவர் பெற்றுவிட்டார்.

இருப்பினும், அவருக்கெதிரான போர்க் குற்றச்சாட்டு விசாரணை என்ற விடயம் சிறியளவில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் போர்க் குற்றங்களுக்காக ராஜபக்சவினைத் தண்டிக்கும் முனைப்புக்கள் எதுவும் ஐ.நா மன்றில் எடுக்கப்பட்டால் சீனா போன்ற நாடுகளைக் கொண்டு அதனை முடியடிப்பதற்கு ராஜபக்சவினால் முடியும்.

மறுபுறத்தில், தமிழர்களைப் பொறுத்தவரையில் பேரம் பேசும் சக்தியினை இழந்து அவர்கள் தற்போது ஓர் அடிமட்ட நிலையிலேயே இருக்கிறார்கள். புலிகளமைப்பு என்ற பக்கம் களத்திலிருந்து அகற்றப்பட்டுவிட்டது, இருக்கும் மிதவாத தமிழ் அரசியல் தலைமைகளும் பலமிழந்து நலிவுற்றுக் காணப்படுகிறார்கள். தமிழர் சார்பில், அதிபருடன் பேசுவதற்குக் காத்திரமான ஒருவரை அவர்களால் அனுப்ப முடியவில்லை.

“தமிழர்கள் குழப்பிப் போயிருக்கிறார்கள்” என அவதானிப்பாளர் ஆய்வு நிலையம் [Observer Research Foundation] என்ற அமைப்பின் சென்னைக் கிளையில் இயக்குனர் என். சத்தியமூர்த்தி தெரிவிக்கிறார்.

“தமிழர்களது பேரம்பேசும் பலம் அடிமட்ட நிலையிலேயே இருக்கிறது, உண்மையில் தங்களது பலமென முன்வைத்துப் பேசுவதற்கு அவர்களிடம் எதுவுமில்லை.” ஒரு இறுதித் தீர்வினை முன்வைக்குமாறு ராஜபக்ச மீண்டும் மீண்டும் தமிழர்களைக் கோரிவருகின்றபோதும் தமிழ்த் தலைமைகளோ எதனையும் செய்யமுடியாத நிலையிலுள்ளார்கள்.

இதுநாள் வரைக்கும் புலிகளால் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு மக்கள் குழுமத்தினைச் சேர்ந்த இவர்கள் பிரிவினைவாதம், சுயாட்சித் தீர்வுகள் தவிர்ந்த எதனைப் பற்றியும் சிந்திப்பதற்குத் தயாராக இல்லை. இந்த மக்களின் மனங்களை வெல்லுவது இலகுவான காரியமல்ல.

1991இல் இந்தியாவினது முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தியினை புலிகளமைப்புப் படுகொலை செய்ததைத் தொடர்ந்து, இலங்கையினது உள்நாட்டு விடயங்களில் வெளிப்படையான தலையீட்டினை மேற்கொள்வதிலிருந்து இந்தியா விலகியிருந்தது.

அத்துடன், இலங்கைத் தீவிலிருந்து இந்திய அமைதிப் படையினரை வெளியேற்றுவதற்காக இலங்கை அரசாங்கமும் புலிகளமைப்பும் ஓரணியில் சேர்ந்து நின்று, ஓர் அமைதி உடன்பாட்டையே கசாப்புக் கடைக்கு அனுப்பிய கசப்பான அனுபவத்தினை 1990-இல் இந்தியா பெற்றிருந்தது.

இதுபோன்ற செயற்பாடுகளால் நொந்துபோன இந்தியா இலங்கை விடயத்தில் தனது வெளிப்படையான தலையீட்டினை நிறுத்திக்கொண்டதோடு வெறுமனே திரைமறைவு தலையீட்டினை மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முன்னெடுத்து வந்தது.

ஆனால் தற்போது, இலங்கையினது இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியா ஆழமாகவும் வெளிப்படையாகவும் தலையிடவேண்டிய காலம் கனிந்திருக்கிறது.

தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் நடைமுறைச் சாத்தியமான, நம்பத்தகு உடன்பாடொன்றை ஏற்படுத்தும் திறன்கொண்ட ஒரேயொரு நாடு இந்தியாதான். ராஜீவ்காந்தியின் மத்தியஸ்தத்துடன் 1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட உடன்பாட்டுக்குப் புத்துயிர்கொடுக்க வேண்டும் என அவதானிகள் பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

இந்தியா தனது முதலாவது நகர்வினை ஏலவே மேற்கொண்டிருக்கிறது எனலாம். போரினால் சிதைந்து சின்னாபின்னமாகியிருக்கும் பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்புவதற்காக ஆயிரக்கணக்கான மில்லியன் டொலர் பணத்தினை வாரி வழங்குவதுடன் நின்றுவிடாமல், தமிழர்கள் செறிந்துவாழும் யாழ்ப்பாண நகரத்திலும் தனது துணைத் தூதுவராலயத்தைத் [consulate] திறப்பதற்கு இந்தியா முடிவெடுத்திருக்கிறது.

எதிர்காலத்தில் கொண்டுவரப்படும் தீர்வுக்கான தமிழர்களது ஆதரவினைப் பெறுவதற்கு இதுபோன்ற இராசதந்திர பிரசன்னம் அவசியமானது.

தனது மூலோபாய நலன்களைக் கருத்திற்கொண்டு இலங்கையில் தான் வகித்துவரும் பங்கினைப் பெரிதும் அதிகரிக்கவே இந்தியா விரும்புகிறது. தற்போது, மீள்கட்டுமான உதவிகள் மற்றும் உட்கட்டுமானத் திட்டங்கள் ஊடாக சீனா இலங்கையில் முனைப்புடன் செயற்பட்டு வருகிறது.

“இலங்கையில் எங்களது பிரசன்னத்தினை அதிகரிப்பதற்கு நாம் தவறுவோமானால், சீனாவுடனான பந்தயத்தில் நாம் தோற்றுவிடுவோம்” என ஆசியக் கற்கை நெறிக்கான மையத்தின் [Center for Asia Studies] மூத்த ஆய்வாளரான பேராசிரியர் வி.சூரியநாராயணன் தெரிவித்தார்.

தமிழர்களைப் பொறுத்தவரையில், இடம்பெறப்போகும் பாராளுமன்றத் தேர்தல்தான் தற்போது அவர்களுக்குள்ள ஒரேயோரு நம்பிக்கைக் கீற்று. அதிகப்படியான வாக்குகளைப் பெறுபவர் யாரோ அவரை அதிபராக தேர்ந்தெடுக்கும் முறைமை அதிபர் தேர்தலில் கைக்கொள்ளப்பட்டாலும், பாராளுமன்றத் தேர்தலில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையே நடைமுறையில் உள்ளது.

ஆதலினால் பொதுத் தேர்தலின்போது தமிழர்கள் குறிப்பிட்ட தொகையுடைய ஆசனங்களைப் பெறுவார்கள். அனைத்து அதிகாரங்களையும் தன்னத்தே கொண்ட ஒருவராக அதிபர்தான் இருந்தாலும், நாட்டினது அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டுவரவேண்டுமெனில் அவருக்குத் தமிழர்களது ஆதரவும் தேவைப்படும்.

puthinapalakai

சுத்த ஏமாற்றல் - பிதற்றல்.

இன்றுவரை தமிழரை கொன்று குவித்த இந்திய ஓநாய்கள், ஒரு சத உதவியையும் பல இழப்புகளை சந்தித்த ஈழ தமிழருக்கு செய்யவில்லை.

இரண்டு கிழமைக்கொருக்கா வட இந்திய பயங்கரவாதிகள் 300 / 500 மில்லியன் உதவி என்று பத்திரிக்கை அறிக்கை விடுவதோடு சரி.

உந்த பத்திரிக்கை அறிக்கை என்ற பெயரில் நடப்பது வட இந்திய பயங்கரவாதிகளுக்கு வக்காலத்து வாக்கும் முயற்சி தான்.

வட இந்திய பயங்கரவாதிகளுக்கு வக்காலத்து வாக்கும் பேர்வழிகள், உந்த பணம், எங்கு, எப்போது, யாருக்கு செலவழிக்கப்பட்டது என்ற முழு விபரத்தையும் தந்தால் நல்லது.

சுத்த ஏமாற்றல் - பிதற்றல்.

இன்றுவரை தமிழரை கொன்று குவித்த இந்திய ஓநாய்கள், ஒரு சத உதவியையும் பல இழப்புகளை சந்தித்த ஈழ தமிழருக்கு செய்யவில்லை.

இரண்டு கிழமைக்கொருக்கா வட இந்திய பயங்கரவாதிகள் 300 / 500 மில்லியன் உதவி என்று பத்திரிக்கை அறிக்கை விடுவதோடு சரி.

உந்த பத்திரிக்கை அறிக்கை என்ற பெயரில் நடப்பது வட இந்திய பயங்கரவாதிகளுக்கு வக்காலத்து வாக்கும் முயற்சி தான்.

வட இந்திய பயங்கரவாதிகளுக்கு வக்காலத்து வாக்கும் பேர்வழிகள், உந்த பணம், எங்கு, எப்போது, யாருக்கு செலவழிக்கப்பட்டது என்ற முழு விபரத்தையும் தந்தால் நல்லது.

இந்தக் கருத்துக்களை தவிர மாற்றுக் கருத்து கிடையாது.

புதுல்லியில் தமிழ் கூட்டமைப்பு தலைமை அலுவலகம். யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதுவராலயம் இது எப்படியிருக்கு. இவர்கள் சிந்திப்பதன்படி நடந்தால் நன்மைதான். புலிகள் அகற்றப்பட்டதற்கு ஒரு காரணம் வேண்டும். அந்தக் காரணத்திற்கு பலனளிக்கும் ஒரு காரியமும் வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

V. Suryanarayanan

Center for Asia Studies

suryageeth@sify.com

http://www.forbes.com/2010/02/18/forbes-india-tamils-in-sri-lanka.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.