Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரு அடிமையின் கோரிக்கை!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தோழர்களே,

man.jpg

உங்களுக்கு எழுதுவதில் எனக்கு வருத்தமும் இல்லை, மகிழ்வும் இல்லை. ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எழுதுவதில் என்ன பெரிய மகிழ்வும் வருத்தமும் வந்து விடப் போகிறது. இம்முறையாவது என்னை மட்டும் இன்றி உங்களையும் அடிமை என்று ஏன் சொல்கிறேன் என்பதை உணர்வீர்கள் என்று நம்புகிறேன். உணரவில்லை எனினும் வரலாறு அவ்வாறே நம்மை பதிவு செய்யும் என்பதே உண்மை.

இன்னொரு மே மாதம் வருவதற்கான கோடை வந்து விட்டது மீண்டும். பழைய படி வேர்க்கிறது. இரவில் நாலுமுறையாது குளிக்க வேண்டியிருக்கிறது. பாலையின் வெப்பம் தகிக்கிறது சென்னை எங்கும். தொப்பிகள்,விசிறிகள், மின்விசிறி, குளிர்சாதனப் பெட்டி விற்பனை கூடி இருக்கிறது.சாலை ஒரங்களில் தர்ப்பூசனிகாய் கடைகள்,நன்னாரி சர்பத்,குளிர் மோர் கரும்புச்சாறு கடைகள் அதிகரித்து விட்டன்.கோடை விடுமுறைக்காக இரும்புக்கோட்டை முரட்டுசிங்கங்கள் முதல்எலிகள் வரை கோடம்பாக்கத்தில் காத்திருக்கின்றன. இன்னும் கொஞ்ச நாளில் கோடை ஸ்பெசல் ரயில்கள் கிளம்பும்.மீண்டும் விடுமுறை மாதம்மான மே வரப்போகிறது. ”போன வருசத்தோட வெயில் அதிகம்ல” என்ற சொற்களை இனி எல்லார் வாயும் உச்சரிக்கும்.

போன கோடை காலம் தந்த வெம்மை இன்னும் அகண்ட பாடில்லை. மின் விசிறிகளையும் மீறி மனது வேர்த்துக் கொண்டேதான் இருந்தது போன குளிர்காலத்திலும்.எத்தனைமுறை குளித்தும் மனதில்அப்பிய துக்கம் அகலவே இல்லை.சாவதற்காய் மட்டும்மே தின்றுகொண்டேஇருக்கிறோம் இன்று வரை.

என் இனம் கழுகும் புறக்கணித்த பிணங்களாய் கொட்டிக் கிடந்தது. முள்ளிவாய்க்காலில். போன மே-17க்கு மேல் இணையதளங்களில் வெளிவந்த புகைப்படங்கள், குறும்படங்கள் புகைந்து கொண்டே இருக்கின்றன. பிரிதலும் பிரிதல் நிமித்தமும் இல்லை பாலை, இறத்தலும் இறத்தல் நிமித்தமுமே பாலையும் கோடையும் என்றானது. ”என் இனம் படுகொலை செய்யப்பட்டது, செய்யப்படுகிறது. என்ற உண்மையை மின்னஞ்சல்களும்,வலைப்பூக்களும் சொல்லிக்கொண்டே இருந்தன”.பெரும் ஊடகங்கள் மானாட மயிலாட போன்று ஆடும் விசயங்களை மட்டும்மே பேசி இனப்படுகொலையை இருட்டடிப்புச் செய்தன. தமிழ் இன ஆர்வலர்கள் தனித்து விடப்பட்டார்கள் தமிழகத்தில். ஊருக்கு இளைத்த ஆண்டியானோம். தெரிந்தவர்க்கெல்லாம் மின்னஞ்சல் குறுந்தகவல் அனுப்பினோம்.கைப்பேசியில் மாற்றி மாற்றி அழுது கொண்டோம். அதுவரை நம்பாத கடவுளிடம் கூட வேண்டினோம். எல்லோரையும் நம்பினோம். எல்லோரையும் சந்தேகித்தோம்.எல்லோரையும் கெஞ்சினோம் எல்லோரையும் திட்டினோம்.

இச்சமயத்தில் தான் பிரபாகரின் எழுத்துக்களை இணையத்தில் படித்தேன். மதுரை பிரபாகர். கைப் பேசியில் பேசிக் கொண்டோம். களத்தில் நேரடியாய் தமிழ் இன ஆர்வலராய் பல அரசியல் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். ”இனப்படுகொலை நடப்பது மக்களுக்கு தெரியவில்லை இருட்டடிக்கப்பட்டது.இணையத் தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்த்திருந்தால்,இணையத்தில் இடம்பெற்ற படங்களை மக்கள் பார்த்திருந்தால் மாற்றம் இருந்திருக்கும் தோழர்” என்றார்.இருந்திருக்கலாம் என்று எனக்கும் தோன்றியது.வழக்கம் போல் ”என்ன செய்ய முடியும் நம்மால்” என்று கையாலாகத ஒரு பதிலை அவரிடம் சொல்லிவிட்டு வானத்தில் இருந்து தேவதூதன் வந்து அருள் பாளிப்பான் என்ற ரீதியில் என் வாழ்வு தொடர்ந்தது.

அவரோடு பேசும் போதெல்லாம் எதுவும் செய்ய இயலா அடிமையானேன் என்ற சுய கோபம் கொல்லும். என்ன செய்ய முடியும் சொல்லுங்கள் என உடன் இருப்பவர் சமாதனம் சொல்வர்.எதுவும் செய்ய முடியாத அடிமைகள் ஆனேன் என்பதைத் தவிர எதையும் உண்ரவில்லை இந்த நாட்களில்.

muthukumar.jpg

இணையத்தின் எல்லா சன்னல்களையும் திறந்து திறந்து மூடினோம். எவர் எழுதியதையும் படித்தோம்.எங்காவது எவராவது எதாவது ஒரு சொல் சொல்லிவிடமாட்டாரா எனத் தேடித் திரிந்தோம்.உடைமையாளன் பாலை வனத்தில் விட்டுப் போன வயோதிகக் குதிரையாய் உணர்ந்தோம். நா உலர்ந்து எச்சில் மிரட்டினோம். உறங்க பயந்தோம். வலியோடு சிரிக்கக் கற்றுக் கொண்டோம். ஒற்றைக்கால் இழந்தும் ஒட்டப் பந்தயத்தில் ஓடிக் கொண்டே இருக்கிறோம். காரணத்தோடு மரணிப்பதற்கான திராணி முத்துக்குமரனுக்கும் இன்னும் சிலருக்கு மட்டுமே தானே இருந்தது. இறந்த பின் மீண்டும் நாம் எப்படி இறக்க?

போன வாரம் மதுரை போன போது பிரபாகரனைப் பார்த்தேன்.கையில் ஒரு குறுந்தகடோடு வந்தார். என்ன எனக் கேட்டேன். பாருங்கள் என்றார். போன கோடையின் துயரங்கள் மீண்டும் படர்ந்தது என் கணிணியில். ””என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்? என்றேன் பழகிப்போன இயலாமையில்.

பிரபாகர் சிரித்தார். பிரபாகர் என்னைப் போன்றவரில்லை என்பது அவருடைய சிரிப்பில் தெரிந்தது. பிரபாகர் தான் எதனால் அடிமையானோம் என்று அறிந்த அடிமை எனப் புரிந்தது.வெறும் குறுந்தகவல்கள்,மின்னஞ்சல்கள் வழி போராடாமல் களத்தில் போராடுகிறார் அவர் என்பது அவருடைய அச்சிரிப்பில் தெரிந்தது.பிரபாகர் என்ற பெயருடையவர் இப்படித்தான் சிரிப்பார் என்று தோன்றியது. அவர் எதுவும் சொல்லவில்லை.

”சரி தோழர், என்ன செய்யலாம் என நீங்கள் சொல்லுங்களேன்” என்றேன்.

அவர் நிறையச் சொன்னார். அவற்றை இங்கே பதிய முடியாது என்பதே முரண்.

ஆனால் அவர் சொன்ன ஒன்று.

”என்ன செய்யலாம் இதற்காக?”, என்றொரு புகைப்படப் புத்தகம் கொண்டு வரலாம் என்றிருக்கிறோம். பெரும் ஊடகத்தில் புறக்கணிக்கப்பட்டப் படங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்காய். உண்மையை மக்களிடம் சொல்வதற்காய். மறைக்கப்பட்ட உண்மைகளை மக்களிடம் முன் வைப்பதே தற்போதைக்கான ஒரே அரசியல். தன் இனம் அல்ல எவ்வினமும் இப்படி அழிந்தது என்பதை எவ்வினத்துக்காரனும் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்ற நம்பிக்கையின் அடிபடையில்,நம்இனம் அழிக்கப்பட்டது என்ற உண்மையைநிருபீக்க வேண்டிய துர்பாக்யத்தில். தமிழ் ஆங்கிலம் மற்றும்சில மொழிகளிலும் கொண்டு வரலாம் என்றிருக்கிறோம் வணிக நோக்கில்லாமல்,அப்புத்தகத்தில் இடம்பெறப் போகும் சிலபடங்களை தான் குறுந்தகடில் நீங்கள் பார்த்தீர்கள்” என்றார்.

பெரும் செலவை எதிர் நோக்குகிறோம்.நிதி உதவிகள் செய்யுங்கள் செய்யச் சொல்லுங்கள் என்றார். கிளம்பிப் போனார். எங்களால் இயன்ற வரை செய்தும் போத வில்லை என்பதே இன்றைய உண்மை என்பதை அவருடைய மாலை அழைப்புச் சொன்னது. இனி என்ன செய்ய எனத் தெரியாமல் இக்கடிதத்தை தொடங்கினேன்.

”என்ன செய்யலாம் இதற்காக?”, நீங்கள் சொல்லுங்களேன், என்னிடம் அல்ல, நேரடியாய் பிரபாகரிடம்மே, அவருடைய கைப்பேசிஎண் : 919486486321, மின்னஞ்சல்: praba.k865@gmail.com

நன்றி

ராம்.

என்னுடையக் கோரிக்கை இக்கடிதத்தை

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்

நன்றி: தமிழ் தேசிய தோழர் இயக்குநர் ராம் அவர்களுக்கு

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.