Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மே 2ம் நாள் நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.puthinappalakai.com/view.php?20100406100862

மே 2ம் நாள் நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களில் புலம்பெயர் தமிழ் மக்கள் பெருவாரியாக அணிதிரண்டு வாக்களிப்பதன் ஊடாக அனைத்துலக சமூகத்திற்கு காத்திரமான செய்தியை தெரிவிக்க முடியும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்க செயற்குழு இணைப்பாளர் வி. உருத்ரகுமாரன் அழைப்பு விடுத்துள்ளார்.

டென்மார்கின் மூன்று நகரங்களில் இவ்வார இறுதியில் நடைபெற்ற நாடு கடந்த அரசாங்கம் தொடர்பான விளக்கக்கூட்டங்களில் காணொலி ஊடாக நேரடியாக உரையாற்றும் போதே உருத்ரகுமாரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

டென்மார்க்கின் Herning, Velje மற்றும் Holbæk ஆகிய நகரங்களில் ஏப்ரல் 4ஆம், 5ஆம் நாட்களில் விளக்கக்கூட்டங்கள் நடைபெற்றன.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடு கடந்த தமிழீழ அரசாங்கமென்ற அரசியல் வலுமையம், ஜனநாயகப் பண்பாட்டின் உச்ச வெளிப்பாடாக எமது சமூகத்திலிருந்து வெளிப்படவேண்டுமென்ற எதிர்பார்ப்பு எமக்கு உண்டு.

இம்முயற்சியின் பலம் என்பது மக்கள் பலத்திலிருந்துதான் கட்டியெழுப்பப்படவுள்ளது. எனவே புலம்பெயர் தமிழ் மக்கள், மே 2ம் நாள் நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில், தமிழர் தாயகத்தில் வாக்களிப்பில் பங்கேற்கும் மக்களின் தொகையை ஒத்ததாக பங்கேற்று வாக்களிக்கும் பட்சத்தில் அது அனைத்துலக சமூகத்தின் அவதானிப்பினைப்பெறும்.

மே 18-19ஆம் நாட்களில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வைக் கூட்டுவதன் மூலம், ஈழத் தமிழினம் நொந்துபோன ஒரு இனமாக, அவர்களின் விடுதலை உணர்வைச் சிதைத்துவிட்டதாக கொக்கரிக்கும் சிறிலங்கா பேரினவாத அரசுக்கு தகுந்த பதிலடியைக் கொடுப்பதோடு, தமிழ் மக்களின் விடுதலை வேணவாவை உலகறியச் செய்ய முடியுமெனவும் அவர் உறுதிபடக் கூறினார்

உருத்ரகுமாரன் மக்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்

.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான பன்னாட்டு மதியுரைக்குழு சார்பில் பேராசிரியர் நடராஜா சிறிஸ்கந்தராஜா, மருத்துவர் சிவநேந்திரன் சீவநாயகம் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்க நோர்வே செயற்குழுவின் இணைப்பாளர் கில்லறி லீயோ ஆகியோரும் கருத்துரை ஆற்றினர்.

மருத்துவர் சிவநேந்திரன் சீவநாயகம் உரையாற்றுகையில்,

சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழும் உரிமையை மட்டும் உரத்துக் கேட்ட ஈழத் தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தினை சிறிலங்கா பேரினவாத அரசுடன் அனைத்துலக சமூகமும் சேர்ந்து மழுங்கடித்தன. இதற்கான அடிப்படைக் காரணங்களை நாம் ஆராய வேண்டும்.

அதேவேளையில் அடுத்து முன்னெடுக்கப்பட வேண்டியவற்றை ஆராய்ந்தறிந்து- புதிய வழிமுறைகள் - வடிவங்களைக் கையிலெடுத்து முன்னேறுவதற்குரிய முயற்சிதான் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமெனும் இம்முயற்சியாகும்.

எமது விடுதலைப் போராட்டம் பற்றி – அதனுடைய சாதனைகள் பற்றி பெருமை கொள்ளும் அதேவேளை, எம்மை நாமே சுயவிமர்சனம் செய்வதன் மூலம்தான் இம்முன்னேற்றப் பாதையில் துணிவுடன் பயணம் செய்யலாம்.

வலிமை மிக்க புலம்பெயர் சமூகமாக வாழும் நாம், எமது பொருளாதார வளத்தினையும், அரசியல் பலத்தினையும், எமது ஆற்றல் மிகு இளைய தலைமுறையினரின் ஆளுமைகளையும் ஒருங்கிணைக்கக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பின் மூலம் - அடிப்படைக் கொள்கைகளை விட்டுக்கொடுக்காது, பலம் பொருந்திய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்போம் எனவும் மருத்துவர் சீவநாயகம் அவர்கள் தனதுரையில் மேலும் தெரிவித்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான பணிகளுக்காக அமைக்கப்படவுள்ள நாடு வாரியான டென்மார்க் செயற்பாட்டுக்குழுவுடன், டென்மார்க் தமிழர் பேரவையும் இணைந்து தேர்தல் பணிகளை முன்னெடுக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளையில் கனடாவில் தேர்தல் பணியகம் திறந்து வைக்கப்பட்டது.

நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான கனடிய தேர்தல் ஆணையம் அதன் உப தேர்தல் ஆணையாளர் ஸ்பிரோஸ் பாபதனசாகிஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் அவர் பேசுகையில் நாடு கடந்த தமிழீழ அரசு என்ற கோட்பாடு வரவேற்கத்தக்கதும் நன்மை பயப்பதுமானதொரு விடயம் என்று தெரிவித்தார்

உபதேர்தல் ஆணையாளர்களில் ஒருவரான திரு.பொன் குலேந்திரன் அவர்களால் முன்வைக்கப்பட்ட சில வினாக்களுக்கு கனடிய செயற்பாட்டுக் குழுவின் ஊடகப் பிரிவு பொறுப்பாளரான திரு. ராம் சிவதாசன் பதிலளித்தார். இந்த நிகழ்வின் போது கனடாவின் நாடு கடந்த தமிழீழ அரசு தேர்தலில் போட்டியிட முன் வந்த வேட்பாளர்களிடம் அவர்களுக்கான பத்திரங்கள் கையளிக்கப்பட்டன.

பொது மக்கள், கனடாவின் தமிழ் ஊடகவியலாளர்கள், வேட்பாளர்கள் ஆகியயோருடன் கனடிய தமிழ் பேரவையின் பேச்சாளர் திரு டேவிட் பூபாலபிள்ளை, மற்றும் அதன் நிறைவேறறுப் பணிப்பாளர் திரு. டான்ரன் துரைராஜா ஆகியோர் கலந்து கொண்ட இவ்வைபவம் தேர்தல் ஆணையாளர் டாக்டர் ஆஷ்லி மொலோய் வழங்கிய வாழ்த்து உரையோடு நிறைவுற்றது.

ஈழமாக்கள் தமிழீழம் வேண்டாம் புலன் பெயர்ந்தவர்களும் வேண்டாம் என்று வாக்குசீட்டில் எழுதிவைத்து விட்டார்கள் அப்புறம் இது யாருக்கு ? பொழுது போக்குக்கிற்கா ?

மே 02 ஆம் நாள் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் பங்கு பற்றி எமது வரலாற்று கடமையை ஆற்றுவோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான பன்னாட்டு மதியுரைக்குழு சார்பில் பேராசிரியர் நடராஜா சிறிஸ்கந்தராஜாஇ மருத்துவர் சிவநேந்திரன் சீவநாயகம் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்க நோர்வே செயற்குழுவின் இணைப்பாளர் கில்லறி லீயோ ஆகியோரும் கருத்துரை ஆற்றினர்.

யார் இந்த கில்லறி லியோ?

Edited by kalaivani

ஈழமாக்கள் தமிழீழம் வேண்டாம் புலன் பெயர்ந்தவர்களும் வேண்டாம் என்று வாக்குசீட்டில் எழுதிவைத்து விட்டார்கள் அப்புறம் இது யாருக்கு ? பொழுது போக்குக்கிற்கா ?

நாட்டில் உள்ள தமிழ் மக்களை அவமதிப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அந்த மக்களுக்கு தெரியும் தங்களுடைய அரசியல் தலைமை எது என்று. இங்கை இருந்து விடும் வாய்சவடால் எல்லாம் நாட்டில் இருக்கும் மக்களிடம் எடுபடாது. இனிமேலாவது வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தாயகத்தில் உள்ள மக்களின் மன உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும். அவர்கள் சரியான ஒரு அரசியல் தலைமையை வடக்கு கிழக்கில் தெரிவு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு வெளிநாடுகளில் உள்ளவர்கள் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இருப்பதே தாயகத்தில் இருக்கும் மக்களுக்கு செய்யும் உதவியாகும். அதை விடுத்து தாயகத்தில் இருக்கும் எமது உறவுகளை மாக்கள் என விழிப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு விழித்தவர்கள் மீது நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டில் உள்ள தமிழ் மக்களை அவமதிப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

நன்றிகள் அப்புறம் ???

அந்த மக்களுக்கு தெரியும் தங்களுடைய அரசியல் தலைமை எது என்று.

சம்பந்த புராணம் பாடியது எதற்கு

இங்கை இருந்து விடும் வாய்சவடால் எல்லாம் நாட்டில் இருக்கும் மக்களிடம் எடுபடாது.
இனி இங்கே எழுதாதீர்கள்

இனிமேலாவது வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தாயகத்தில் உள்ள மக்களின் மன உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும்.

அது இல்லாமல் தான் வீதிகளில் மாதக்கணக்காக நின்றார்கள்

அவர்கள் சரியான ஒரு அரசியல் தலைமையை வடக்கு கிழக்கில் தெரிவு செய்திருக்கிறார்கள்.
டக்லஸ் ஆ

அவர்களுக்கு வெளிநாடுகளில் உள்ளவர்கள் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இருப்பதே தாயகத்தில் இருக்கும் மக்களுக்கு செய்யும் உதவியாகும்.

உங்கள் உதவி தேவையில்லை என்று சொல்லி விட்டார்கள்

அதை விடுத்து தாயகத்தில் இருக்கும் எமது உறவுகளை மாக்கள் என விழிப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு விழித்தவர்கள் மீது நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசியத் தலைவரையே விழித்தவர் வழிநடாத்தியவர் நீங்கள் சாண்டியல் குரலாக விழித்தவரும் நீங்கள் தானே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.