Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கும்புறுப்பிட்டியில் வாக்கு பெட்டிகள் பறிமுதல். திருமலை தேர்தல் முடிவு அறிவித்தல் நிறுத்தம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவின் மொத்த வாக்காளர்களில் 50 தொட்டக்கம் 55% மானவர்களே சிறீலங்காவின் 2010ம் ஆண்டுக்கான சிங்கள நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் வாக்களித்துள்ளனர். வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் திணிக்கப்பட்ட இந்தத் தேர்தலில் வடக்கில் குறிப்பாக சனத்தொகை அடர்த்தி அதிகமான யாழ்ப்பாணத்தில் வெறும் 20% மக்களே வாக்களித்துள்ளனர். மிகுதிப் பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துக் கொண்டுள்ளனர்.

-----

Voting at yesterday’s Parliamentary Election ended with officials and monitors placing the voter turn-out at 50 to 55 percent.

The turn-out in the North was very low with Jaffna recording a voter turn-out of only 20 per cent. - தி ஐலண்ட்.

-----

இதற்கிடையே சர்ச்சைக்குரிய சிங்கள குடியேற்றங்கள் நிறைந்துள்ள தமிழர்களின் பாரம்பரிய நிலப்பிரதேசமான திருமலையில் கும்புறுப்பிட்டி பிரதேசத்தில் தேர்தலின் பின்னான வன்முறையின் போது காடையர் கும்பல் நேற்றிரவு வாக்குப் பெட்டிகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதால் அந்தத் தேர்தல் தொகுதியில் குறிப்பிட்ட வாக்குச் சாவடியில் பதிவான வாக்களிப்பு செல்லுபடி அற்றதாக்கப்பட்டிருப்பதோடு திருமலை மாவட்ட வாக்களிப்பு விபரங்களை வெளியிடுவதும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

The results from the Trincomalee electorate in the Trincomalee district have been temporarily suspended as a result of ballot papers from a poling booth in Kumburupitiya in the Trincomalee electorate being stolen by a gang last night.

Polling in one of the polling booths in Kumburupitiya in the Trincomalee electorate in Trincomalee had been annulled as a group had forced their way into the center and stolen most of the ballot papers.

Elections Department officials said that as a result of this incident only the results from the Seruwila and Muttur electorates in the in the Trincomalee district will be released. (- டெயிலிமிரர்)

-----

இதேபோன்று தென்னிலங்கை சிங்களப் பகுதிகளில் நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதியிலும் வாக்களிப்பு செல்லுபடியற்றதாக்கப்பட்டு மறுவாக்குப் பதிவுக்கு கோரப்பட்டுள்ளது.

-----

இதற்கிடையே சிறீலங்காவின் சிங்கள கிரிக்கெட் வீரர்கள் அரசியலில் நுழைவது நாகரிகமாக மாறி வரும் நிலையில் மாத்தறையில் தனது சொந்த ஊரில் போட்டியிட்ட சரத் ஜெயசூரியா அங்கிருந்து பாராளுமன்றுக்கு தெரிவாகியுள்ளார் என்று சிங்கள தேச ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Sri Lanka’s master batsman Sanath Jayasuriya has secured the most number of preferential votes from the Matara District by obtaining over 71,000 votes while Buddhika Pathirana has topped the preferential list from the UNP with over 50,000 votes. - டெயிலிமிரர்.

-----

சிறீலங்கா பூராவுமான இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின் படி ஆளும் மகிந்த ராஜபக்ச கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறது.

Edited by nedukkalapoovan

நாவலப்பிட்டி என்பது மஹிந்தானந்தா அழுத்கமகேயின் தேர்தல் தொகுதி. இவர் ஒவ்வொரு முறையும் இந்த தொகுதியில் பல தில்லுமுல்லுகளும் பலவந்தமான வாக்குத்திணிப்பும் செய்து வருகிறார். நாங்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருக்கும்போது இவரது கூத்துக்களை பார்த்திருக்கிறோம். இவரும் இவரது சகோதரர்களும் பண்ணும் அட்டகாசம் கட்டிலடங்காதவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.