Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனநாயகத்துக்கான தேர்தலை கண்காணிக்க மக்கள் பிரதிநிதிகளை அழைக்கின்றோம்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 2ம் நாள் நடைபெறவிருப்பது அனைரும் அறிந்ததே! இன்றைய கால கட்டத்தில் அவசியமானதும், அவசரமானதுமான நாடுகடந்த அரசின் அமைவினை தேர்தல் ஊடகா தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளை கொண்டே அமைத்திட முடிவு செய்யப்பட்டு அதற்கான தேர்தல் சர்வதேச ரீதியில் நடைபெறவிருக்கின்றது.

மே மாதம் 2ம் நாள் நடைபெறவிருக்கும் தேர்தல் தமிழர்களது வாழ்வியலில் ஒரு திருப்பமாக, ஈழத்தமிழர்கள் இதுவரை நடாத்திய போராட்டத்தின் ஜனநாயக ரீதியிலான தொடர்ச்சியாக அமையும்.நான் நீ என்ற போட்டி மனப்பான்மைக்குள் இருந்து நாம், நமது என்ற கோட்பாட்டைக் கொண்டே நாடுகடந்த அரசு செயற்ப்படவிருக்கின்றது.

இன்றைய காலத்தின் கட்டயத்தையும், நாம் ஓரணியில் திரளவேண்டிய அவசியத்தையும் நாம் உங்களுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை. 2009 மே 19ம் திகதிக்கு பின் ஈழத்தமிழினம் தொடர்ந்து தனது போராட்ட வலுவில் பின்னடைந்து கொண்டு செல்வதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

எனவே எதிர்வரும் மே மாதம் 2ம் நாள் நடைபெறும் தேர்தலில் மக்கள் பங்கெடுப்பதை உறுதி செய்வதோடு,அதில்பங்காளர்களாக வேண்டும் என அனைத்து தமிழ் அமைப்புக்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.

தேர்தல் தினத்தன்று தேர்தலை கண்காணிக்கும் கண்காணிப்பாளர்களுடன் மக்கள் பிரதிநிதிகளாகிய, ஊர் அமைப்புகள், பழைய மாணவர் மன்றங்கள், மாணவர் அமைப்புக்கள்,இளையோர் அமைப்புக்கள், முன்னாள் பணியாளர்கள் ஒன்றியங்கள் என பல்வேறு பட்ட வகையில் தமிழ்மக்களைபிரதிநிதித்துவப்படுத்தும்அமைப்புக்க

ளிடமிருந்து தொண்டர்களை எதிர்பார்க்கின்றோம்.

ஒவ்வொரு அமைப்புக்களிடமிருந்து குறைந்தது இருவரை எதிர்பார்க்கின்றோம். தேர்தல் தினமான எதிர்வரும் மே 2ம் திகதி தேர்தலை கண்காணிப்பது மட்டுமே இவர்களது பணியாகும். இதன் மூலம் எமது ஜனநாயக ரீதியிலான தேர்தலை கேள்விக்குறியாக்க நினைக்கும் அமைப்புக்கள் நபர்களுக்குரிய பதிலை நீங்களே வழங்க முடியும்.

மக்கள் மத்தியில் இருக்கும் சந்தேகங்களையும், தேர்தலின் உண்மையைத் தன்மையையும் நீங்கள் உங்கள் அமைப்புக்களூடாக தெரிவிக்க முடியும்.

எனவே தாங்கள் சார்ந்திருக்கும் அமைப்புக்களின் பிரதிநிதிகளாய் தம்மை தொண்டாராக இணைத்துக்கொள்ள விரும்பும் அமைப்புக்கள் கீழ்காணும் மின்னஞ்சல் முகவரியுடன் எதிர்வரும் 20ம் திகதி முன்னர் தொடர்பு கொண்டு தமது வரவை பதிவு செய்து கொள்ளவும்.

பதிவு செய்யும் போது தொலைபேசி இலக்கம், அமைப்பின் பெயர் ஆகியவற்றை இணைக்க தவறாதீர்கள்.

தொண்டராக இணைபவரது விபரங்கள், அவரவர் விருப்பின் அடிப்படையில் இணையத்தில் இணைக்கப்படும்.

e-mail: ELECTIONCOMMISSONER.TGTE@GMAIL.COM

Tel: 416 573 7332

Tel: 416 864 3819

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.