Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய பாராளுமன்றம் அவசரகால சட்டத்தை நீக்கவேண்டும்

Featured Replies

புதிய பாராளுமன்றம் அவசரகால சட்டத்தை நீக்கவேண்டும்

கொழும்பு நிருபர்

புதன்கிழமை, ஏப்ரல் 21, 2010

amnesty

இலங்கையின் போர் முடிவுற்ற பின்னர் தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்றம் அந்த நாட்டில் பலவருட காலங்களாக நடைமுறையில் உள்ள கொடுமை மிகுந்த அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டும். அவசரகாலச் சட்டத்தின் கீழேயே அந்த நாட்டில் பரவலாக மனித உரிமைகள் மீறப் பட்டும், நசுக்கப்பட்டும் வந்துள்ளன.

போர் முடிவுற்ற பின்னரான முதலாவது நாடாளுமன்றம் நாளை 22ஆம் திகதி (வியாழக்கிழமை) கூடவுள்ள வேளையில் சர்வதேச மன்னிப்புச் சபை இந்தக் கோரிக் கையை விடுத்துள்ளது; ஓங்கி ஒலித்துள்ளது. 1971ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக, இடைவிடாது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் மற்றும் அவசரகால விதிகள் என்பனவற்றைக் களைந்து மனித உரிமைகளைப் பேணும் சட்டங்களைப் புதிய அரசு உருவாக்க வேண்டும் என்று நேற்று சர்வதேச மன்னிப்புச் சபை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நீண்ட பல வருடங்களாக இலங்கையில் நடைமுறையில் உள்ள மேற்படி அவசரகாலச் சட்டம் மக்களை நீண்டகாலம் தடுத்து வைக்கவும், இரகசிய சிறைச்சாலைகளை உருவாக்கவும் வழி செய்துள்ளது. அவை மட்டுமன்றி காணாமற்போதல், சித்திரவதை செய்தல், காவலில் வைப்பட்ட வேளை மரணங்கள் நேர்தல் போன்ற சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு முரணான சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

கடந்த 30வருடங்களில் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் நீதி விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். ஆகப்பிந்தி மேற்சொன்ன கொடிய சட்டங்களை அரசாங்கம் ஊடகவியலாளர்களையும், அரசியல் எதிரிகளையும், தொழிற் சங்கங்களையும் அடக்கி ஒடுக்கப்பயன்படுத்தி வருகின்றது.

இலங்கை முன்னேறிச் செல்ல வேண்டுமானால் மக்களின் மனித உரிமைகளை மலினப்படுத்தி அவற்றை மீறி தட்டிப்பறிக்கும் இச் சட்டங்களை முற்றாகக்களைந்து. மனித உரிமை மீறல்களை ஊக்குவிக்கும் சட்ட விதிகளை நீக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசிபிக் பிராந்திய உதவி இயக்குநர் மல்கோத்ரா நேற்றுத் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், பொதுசன பாதுகாப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகள் என்பன இலங்கையின் பாதுகாப்புப் படைகள் மனித உரிமைகளை மீறத் தூண்டுதல் அளித்தும் உதவி புரிந்தும் வந்திருக்கின்றன என்றும் மல்கோத்ரா கூறினார்.

இலங்கையில் போர் முடிந்து விட்டது. ஆனால் அரசாங்கம் தனது அரசியல் எதிரிகளை நசுக்குவதற்கும் மனிதாபிமான உரிமைகளை உரிய முறைப்படி நடைமுறைப்படுத்துவதை தடுப்பதற்கும் அவசரகாலச் சட்டத்தை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது என்றும் அவர் மேலும் கூறினார். நீதித்துறை செயலற்றுப் போகும் விதத்தில் இதனை நடைமுறைப்படுத்துகின்றது. அவசரகாலச் சட்டத்தின் கீழாக விதிகளை அமைத்துள்ளது.

இப்போதுள்ள நடைமுறை நீக்கப்பட்டு அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் மல்கோத்ரா மேலும் வலியுறுத்தியுள்ளார்.

http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.