Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் கடத்தல்களாம்!!!! கூறுபவர்கள், ஐக்கிய இலங்கையை கட்டி எழுப்ப வேண்டும் என்று கூறுபவர்கள்!

Featured Replies

தொடரும் கடத்தல் சம்பவங்களால் யாழ். குடாநாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்! : விஸ்வா

≡ Category: விஸ்வா, கட்டுரைகள்/ஆய்வுகள் | ≅

யாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளால் பொதுமக்கள் அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர். கடத்தல் சம்பவங்களோடு தொடர்புடைய குற்றவாளிகள் பிடிபட்டு வரும் நிலையிலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கடந்த மாதம் சாவகச்சேரியில் கப்பம் கோரி 16 வயது இளைஞன் கடத்தப்பட்டார். பின்னர், படுகொலை செய்யப்பட்ட நிலையில் அந்த இளைஞனது உடல் மீட்கப்பட்டது. அச்சம்பவம் குடாநாட்டு மக்களை பெரும் பீதியிலாழ்த்தியது. இக்கொலை தொடர்பான வழக்கு விசாரணகள் நடைபெற்று வருகின்றன.

இச்சம்பவத்தின் பின்னரும் சிலர் கப்பம் கோரி கடத்திச் செல்லப்பட்டனர். சில பெண்கள் கடத்திச் செல்லப்பட்டு அவர்களின் தங்கநகைகள் களவாடப்பட்டன. சில பெண்கள் பாலியல் வல்லுறவிற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள் கடத்தப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அண்மையில் நவாலியில் வைத்து 13 வயது சிறுவன் ஒருவனை சிலர் வாகனம் ஒன்றில் வந்தவர்களால் கடத்தப்பட்டு பின்னர் அவன் கூக்குரலிட்டதால் அவர்களிடமிருந்து தப்பி வந்துள்ளான். அச்சிறுவன் கூறிய தகவல்கள் அச்சமூட்டுவதாகவுள்ளன.

தன்னைக் கடத்தியவர்கள் தனக்கு ஏதோ மருந்தை பருக்க முற்பட்டதாகவும், ஊசியேற்ற முற்பட்டதாகவும் அவன் தெரிவித்ததோடு. அவ்வாகனத்தில் இன்னொரு சிறுவன் மயக்க நிலையில் இருந்நதாகவும் அவன் தெரிவித்துள்ளான். கடந்த 11ம் திகதி ஓட்டுமடம் பகுதியில் கணனி வகுப்பிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாவணவன் ஒருவனை கடத்த முற்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. அதே நாள் அராலியில் வைத்து 5ம் தரம் கல்வி பயிலும் மாணவியொருத்தியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடத்த முற்பட்ட சம்பவமும் நடைபெற்றுள்ளது. இவை பொதுமக்களால் முறியடிக்கப்பட்டு சிறுவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். அதனைத்தொடாந்து மூளாய் பகுதியில் வைத்து சிறுவன் ஒருவன் மீது மயக்க மருந்தை தெளித்து கடத்த முயன்ற சம்பவமும். சங்கனையில் சிறுமியொருத்தியை கடத்த முயன்ற சம்பவமும் நடைபெற்றுள்ளன. இவ்வாறான கடத்தல் சம்பவங்கள் குறித்த செய்திகள் யாழ். குடாநாட்டு செய்திப் பத்திரிகைகளில் தொடர்ந்து வந்த வண்ணமுள்ளன. இக்கடத்தல்களோடு தொடர்புடைய சிலர் பிடிபட்டுள்ள போதும் கடத்தல்கள் தொடர்ந்தவாறேயுள்ளன.

கடந்த 25ம் திகதி வடமராட்சி நெல்லிலடியைச் சோந்த 24 வயதுடைய யுவதியொருவர் வெள்ளைவானில் வந்தவர்களால் கடத்தப்பட்டார். பின்னர் இவரது நகைகள் யாவும் கடத்தயவர்களால் பறிக்கப்பட்டு அவரைக் கொலை செய்யும் நோக்கில் அவரின் கழுத்தை நெரித்துள்ளனர். அவர் மயக்கமடைந்ததும,; துன்னாலைப் பகுதியிலுள்ள பற்றையொன்றிற்குள் அவரை தள்ளியெறிந்துவிட்டுச் சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்த பின்னர் பொதுமக்களின் உதவியுடன் மீட்க்கபட்ட இப்பெண் மந்திகை மருத்துவமனையில் சோக்கப்பட்டார். இக்கடத்தலில் தொடர்புடையவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் வீடொன்றிலிருந்து அந்த யுவதியின் சைக்கிள். நகைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கடத்தல்கள் குடாநாட்டில் தொடர்ந்த வண்ணமுள்ளதால் மக்கள் பிதியுடன் நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது. பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களின் பெற்றோர் பெரும் அச்சம் கொண்டுள்ளனர். தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக அவர்களுடனேயே தினமும் பாடசாலைகளுக்கு வந்து செல்லும் நிலை எற்பட்டுள்ளது.

இக்கடத்தல் சம்பவங்கள், பாலியல் வல்லுறவுகள், கொலைகளுக்குப் பின்னால் தமிழர்களே இருந்துள்ளனர். இச்சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களும் தமிழர்களாகவே இருக்கின்றனர். இச்சம்பவங்கள் திட்;டமிடப்பட்ட அரசியல் பின்னணியுடன் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் உருவாகி வரும் பாதாள உலகக் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகவே இந்நடவடிக்கைகள் பார்க்கப்படுகிற்னது என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இக்கடத்தல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் சில கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு சோதணை நடவடிக்கைகளில் இறங்கி வருவதாக யாழில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இந்நடவடிக்கை மீண்டும் யாழ்பாணம் இராணுவ பொலிஸ் கெடுபிடிகளுக்கு உள்ளாகும் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் வீடுகளில் களவு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நிலைமை இவ்வாறு இருக்க குடாநாட்டில் கடத்தல் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும், கடத்தல் தொடர்பான முறைப்பாடுகள் எவையும் தமக்கு வரவில்லை எனவும், யாழ். படைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த அத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

  • தொடங்கியவர்

இதற்கு கருத்தெழுதிய சிலரது .....

செல்வன் on April 30, 2010 2:49 am

யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நேற்று வியாழக்கிழமையும் நேற்றுமுன்தினம் புதன்கிழமையும் பாடசாலைச் சிறுவர்களைக் கடத்திச் செல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் கைகூடவில்லை.மாணவர்களை இலக்குவைத்து கடத்தல்களை மேற்கொள்ள முயல்வோரால் குடாநாட்டில் பெற்றோரும் மாணவர்களும் கல்விச் சமூகமும் பெரும் பீதியடைந்துள்ளது.

கடந்த வாரமும் இதுபோன்ற ஓரிரு சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் தென்மராட்சியில் மீசாலை மற்றும் மட்டுவில் பகுதியில் நேற்று முன்தினமும் சுன்னாகத்தில் நேற்றுக் காலையும் பாடசாலை சிறுவர்களைக் கடத்தும் முயற்சிகள் இடம்பெற்றும் அவை கைகூடவில்லை.சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் தரம் 7 இல் கல்விகற்கும் மீசாலை மேற்கைச் சேர்ந்த இரு மாணவிகள் பாடசாலைக்குப் புதன்கிழமை காலை நடந்து சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளொன்றில் வேகமாக வந்த இருவர் மோட்டார் சைக்கிளை அவ்விடத்தில் நிறுத்திவிட்டு அவ்விரு மாணவிகளையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்ல முற்பட்டபோது அவர்களிருவரும் அவர்களிடமிருந்து தப்பி அருகிலுள்ள வீட்டிற்குள் புகுந்து விட்டனர்.

இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அவ்விடத்திலிருந்து வேகமாகச் சென்று மறைந்து விட்டனர்.அன்று மாலை 4.30 மணியளவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் மட்டுவிலைச் சேர்ந்த மாணவர்கள், பாடசாலையில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் மட்டுவில் மத்தியில் வைத்து இவர்களை வெள்ளை வானொன்றில் வந்தவர்கள் கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர்.

கடத்தல்காரர்களுடன் மல்லுக்கட்டிய மாணவர்கள் அவலக்குரலெழுப்பவே அயலவர்கள் அவ்விடத்திற்கு வந்துள்ளனர். இதையடுத்து கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.இவர்களைக் கடத்த முயன்ற வானின் இலக்கத் தகடுகள் துணியொன்றால் மறைக்கப்பட்டிருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம், நேற்று வியாழக்கிழமை காலை 7 மணியளவில் சுன்னாகத்தில் தனியார் வகுப்பொன்றுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவனொருவனை வானொன்றில் வந்தவர்கள் கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர்.மாணவனின் அருகில் வான் வந்து நின்ற போது அவனின் கழுத்தைப்பிடித்து வானுக்குள் தள்ள முயற்சித்துள்ளனர். எனினும் அந்த மாணவச் சிறுவன் அவர்களை உதறித் தள்ளிவிட்டு தப்பியோடவே கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

பெருந்தொகை பணத்தைக் கோரி ஆட்களைக் கடத்தும் சம்பவங்கள் சில இடம்பெற்ற அதேநேரம், இந்தச் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி வதந்திகளும் காட்டுத் தீ போலப் பரவுவதால் குடாநாட்டு மக்கள் கலங்கிப் போயுள்ளனர்.கடந்த காலங்களில் யுத்தம் தீவிரமாக நடைபெற்ற நேரத்தில் இடம்பெற்ற மிக மோசமான சம்பவங்கள் மக்கள் மனங்களில் நிழலாடுவதால் குடாநாட்டு மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ள அதேநேரம், இவ்வாறான சம்பவங்கள் குறித்து தாங்கள் மிகவும் விழிப்புடனிருப்பதாக படைத்தரப்பும் தெரிவித்துள்ளது.

வவுனியாமக்கள்மத்தியில்பெரும்பீதி; தடுத்துநிறுத்துமாறுசம்பந்தப்பட்டவர்களிடம்கோரிக்கை

வவுனியாவில் நடைபெறும் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் மற்றும் கப்பம் கோருவதைத் தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்;

தேர்தல் நடந்து முடிந்த கையுடன் வவுனியாவில் நடைபெற்றுவரும் சம்பவங்கள் பொதுமக்களைப் பெரிதும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளன.கடந்த 20 ஆம் திகதி வவுனியா திருநாவற்குளத்திலுள்ள ஒரு வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் வவுனியா, இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தில் நான்காம் தரத்தில் கல்விபயிலும் தனுஷா என்னும் 9 வயதுச் சிறுமி ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்தச் சிறுமியின் தாயாரும் மகா இறம்பைக்குளம் அ.த.க.பாடசாலை ஆசிரியையுமான திருமதி கௌரியாம்பிகை நெஞ்சிலும் வயிற்றிலும் கத்துக்குத்துக்கு இலக்காகி பலத்த காயங்களுடன் வவுனியா ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.

இந்தச் சம்பவமானது மாணவர் சமுதாயத்தினரையும் ஆசிரிய சமூகத்தினரையும் பொதுமக்களையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது. இந்தச் சம்பவம் நடைபெற்ற அடுத்த சில தினங்களில் (22.04.2010) வவுனியா தனியார் பஸ்தரிப்பிடத்தில் பேரூந்திற்காக நின்றுகொண்டிருந்த பெண் பயணியிடமிருந்து தங்கச் சங்கிலியைப் பறிப்பதற்கான முயற்சியும் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் பொதுமக்கள் கள்வனைப் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த 28 வயதுடைய ஒருவர் 24 ஆம் திகதி வவுனியா பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வந்த வேளையில் பத்து இலட்சம் ரூபா கப்பம் கேட்டு கடத்திச் செல்லப்பட்டார். பின்னர் பொலிஸாரின் நடவடிக்கையினால் கடத்தப்பட்டவர் வவுனியா பூவரசங்குளம் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் அரசிற்கு ஆதரவு வழங்கும் கட்சியின் உறுப்பினர்களாகவும் உள்ளனர் என்பது பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவருகின்றது. இவற்றுடன் தொடர்புடையவர்கள் யார் என்பது பொதுமக்களுக்கும் நன்கு தெரியும். பல்வேறு அனர்த்தங்களினால் பாதிப்பிற்குள்ளாகியுள்ள எமது மக்கள் சொல்லொணாத் துன்பங்களிலிருந்து தம்மை விடுவிப்பதற்கு யாராவது முன்வரமாட்டார்களா என்று ஏங்கித்தவிக்கும் இச்சூழலில் இத்தகைய சம்பவங்கள் எமது மக்களை விரக்தியின் விளிம்பிற்கே தள்ளியுள்ளன.

இதுவரை நடந்துள்ள கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், கப்பம் தொடர்பான சம்பவங்களில் வர்த்தகர்கள், மருத்துவர், அதிபர், கிராமசேவகர், தனியார் பேரூந்து உரிமையாளர், முச்சக்கரவண்டி உரிமையாளர் எனப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர். மேலும் பலர் தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பல இலட்சம் ரூபாய்களைக் கொடுத்து இன்று பெரும் கடனாளிகளாகவும் தொழிலைத் தொடர முடியாதவர்களாகவும் உள்ளனர்.

சிலர் இவர்கள் கேட்ட தொகையைக் கொடுக்க முடியாமல் தொழில், வர்த்தகம், வீடுவாசல்களைக் கைவிட்டு நாட்டை விட்டே ஓடிப்போய்விட்டனர். இவற்றுக்கு ஒரு முடிவுகிட்டாதா, இவற்றை யாரிடம் சொல்லி முறையிடுவது, “மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாகிவிட்டதே’ என்று மக்கள் தங்களைத் தாங்களே நொந்துகொண்டுள்ளனர்.

நாம் எமது உரிமைகளை ஜனநாயக வழிமுறைகளில் பெற்றுக்கொள்வதற்காகப் பெரிதும் முயற்சிகள் மேற்கொண்டுவரும் இத்தருணத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளைச் சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இனியாவது இச்சம்பவங்களுடன் சம்பந்தப்பட்ட தலைமைகள், சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடும் தமது தொண்டர்களை வெளியேற்றிவிட்டோமென்றும் அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலை பகிரங்கமாக வெளியிட வேண்டுமென்றும் அவர்கள் எம்மிடம் கேட்டுள்ளனர். தொடர்ந்தும் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எமது மக்களின் சார்பாகக் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Ajith on April 30, 2010 8:53 pm

Every one knows who is responsible for White van. Some people here still justify white van abductions, rapings and murders. They keep silent about people’s suffering in the hands of these criminals. It is unfortunate these criminals are backed by the President, ministers and military.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.