Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலிவுட்டின் விருது விவகாரத்தில் நாம் எவ்வாறு தோற்கடிக்கப்படுகிறோம்? நாம் செய்ய வேண்டியது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலிவுட்டின் விருது விவகாரத்தில் நாம் எவ்வாறு தோற்கடிக்கப்படுகிறோம்? நாம் செய்ய வேண்டியது என்ன?

சமீபத்தில் வந்துகொண்டிருக்கும் IIFA விழாவிற்கான எதிர்வினைகள் சற்று நம்பிக்கையை அளித்தாலும், இத்தகைய போராட்டத்தில் நம் நோக்கத்தின் ஆழத்தையும், போராட்டத்தின் தேவையையும் சரிவர புரிந்து கொள்ளாமலேயே நாம் அனைவரும் இருப்பதாகத் தோன்றுகிறது.

மே17 இயக்கத்தில், இந்த விழாவினைப் பற்றிய கட்டுரையை முடித்த பிறகு நடந்த விவாதத்தில் IIFA விழாவை இலங்கையிலிருந்து மாற்றுவதற்கான கட்டாயத்தை பல்வேறு அமைப்புகளிடத்தில் எடுத்துச்செல்வதன் மூலமாக, அவர்களையும் பங்கேற்கச் செய்வது காலத்தின் அவசியம் என முடிவெடுத்தோம். இவ்விழாவிற்கான எதிர்ப்புப் போராட்டத்தை மே17 இயக்கம் மட்டுமே சொந்தமாக்கிக் கொள்ளாமல், அனைத்து போராளி இயக்கங்கள் வழியாகவும் போராட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என முடிவெடுத்தோம். தற்போது இதற்கான போராட்டங்கள் மைய நோக்கத்திலிருந்து விலகிச் செல்ல ஏற்றவாறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய தருணத்தில் நமது மைய நோக்கமான “விழாவை இலங்கையில் நடத்தாதே” என்ற பாதைக்கு போராட்டத்தை நகர்த்த வேண்டியுள்ளது. அதற்கான சில விளக்கங்களையும்,தெளிவுகளையும் அனைவருக்கும் தெரியப்படுத்துவது மே17 இயக்கத்தின் கடமையாகிறது.

IIFA விழாவின் ஒருங்கிணைப்பாளர்கள் மிக புத்திசாலித்தனமாக நமது போராட்டத்தை எதிர்கொள்கிறார்கள். அதில் ஒரு தேர்ச்சியையும், கவனத்தையும் காண்பிக்கிறார்கள். “நாம் தமிழர்” இயக்கத்தின் மும்பை போராட்டத்திற்கான பத்திரிக்கை செய்திக் குறிப்பை prresspp preநாம் அவர்களுக்கு வழங்கிய போதும், அதன் அமைப்பாளர் சீமானிடம் பேசிய போதும், “விழா இலங்கையில் அல்லாமல் வேறு நாட்டில் நடத்தப்பட வேண்டும் என்பதே தமிழர்களின் கோரிக்கை” என்பதை உணர்த்தியிருந்தோம்.

அமிதாப்பச்சனின் வீட்டிற்கு முன்னே “நாம் தமிழர்” இயக்கத்தினர் நடத்திய போராட்டம் இந்தியாவின் அனைத்து பத்திரிக்கை,செய்தி நிறுவனங்களால் கவரப்பட்டபோது, மிகத் தெளிவாக எதிர் அமைப்பு செய்திகளை நகர்த்தினார்கள். அமிதாப்பச்சனின் வீட்டிற்கு முன்பான போராட்டத்தின் காரணம் அவர் IIFA விழாவின் தூதுவராக இருப்பதுதான். அவரும் போராட்டக் குழுவினரிடம் பேசும்படி IIFA நிறுவனத்தின் தலைவர்களை பணித்தார். அவர்களும் கோரிக்கைகளை கேட்டுவிட்டுச் சென்றனர்.

அமிதாப்பச்சன் இதற்கான பத்திரிக்கை விளம்பரங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு கைதேர்ந்த அரசியல்வாதியாக “ நாம் அனைவரின் உணர்வுகளையும் மதிக்க வேண்டும்” என்று ஒரு பொதுவான பதிலை அளித்தார். இவையாவும் “அமிதாப்பச்சன் இலங்கை செல்வதை தவிர்த்துள்ளார்” என்பதாக புரிந்துகொள்ளப்பட்டு அதுவே செய்தியாகவும் மாறியது. இந்தச் செய்தி தமிழகம் முழுவதும் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது. சீமான்கூட அமிதாப்பச்சனுக்கு நன்றி தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து “கமல்,ரஜினி,விஜய்…..போன்ற முன்னணி தமிழ் நடிகர்கள் விழா அழைப்பிதழை ஏற்க மறுப்பு” என்று போராட்டத்திற்கு வெற்றி கிடைப்பதாக நம்பிக்கை தரக்கூடிய செய்திகள் தொடர்ந்து வெளியாகின. இதில் கவனிக்கவேண்டியது என்னவெனில், இச்செய்திகள் போராட்டத்தின் பலனாக இல்லாமல், போராட்டம் தீவிரமாகும் முன்னரே வெளியாகின.

இங்குதான் விழாக்குழுவினர் மற்றும் அதன் பின்னுள்ளவர்களின் முன்னெச்சரிக்கை கொண்ட புத்திசாலித்தனமான நகர்வுகள் புலப்படுகின்றன. இவ்வாறான செய்திகள் வெளியானது முதல், IIFA விழாவிற்கான எதிர்ப்பின் தீவிரம் குறையத் தொடங்கியது மட்டுமின்றி, அமிதாப்பச்சன் விழாவிற்கு செல்லாமல் இருப்பது, கமல்,ரஜினி போன்றோர் செல்லாமல் இருப்பதே போராட்டத்தின் குறிக்கோளாக எதிர் தரப்பினரால் புத்திசாலித்தனமாக மாற்றியமைக்கப்பட்டது. இதனால் போராட்டமானது வலுவிழந்த நிலையில் உள்ளது. இந்தப் பின்னடைவு நாம் உணர்வுத் தளத்தில் மட்டுமே செயலாற்றக்கூடியவர்கள் என்பதையும், எளிதாய் ஏமாறக்கூடியவர்கள் என்பதையும் நமக்கு உணர்த்துகிறது. இதற்குள் கிடைத்த கால அவகாசத்தில் IIFA தனது விழா வேலைகளை கச்சிதமாக நகர்த்தத் தொடங்கி விட்டது.

இரண்டாம் கட்டமாக நாம் வெகுளிகளாக நம்மை வெளிப்படுத்திய கோரிக்கை “ தமிழக திரைப்படத் துறையினர் விழாவை புறக்கணிக்க வேண்டும்” என்பது. இவ்விடத்தில் குறிப்பிட வேண்டிய செய்தி ஒன்றுண்டு. 2006ல் IIFA விழா துபாய் நகரில் நடந்தபொழுது சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட மம்மூட்டி விழாவில் பேசியபோது, “சர்வதேசிய இந்திய திரைப்பட விழா என்று பெயரிட்டுவிட்டு, தென்னிந்திய திரைப்படங்களை நீங்கள் புறக்கணிக்கிறீர்கள். 26 தேசிய விருதுகளில் 14 விருதுகளை தென்னிந்திய திரைப்பட உலகம் பெற்றிருக்கிறது…….. மேலும் இந்தி திரைப்படங்களில் தென்னிந்திய மொழிகளை குறிப்பாக தமிழை கேலிப்பொருளாக காண்பிக்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு நான் நினைவுபடுத்த விரும்புவது, தமிழ்நாடுதான் இந்தியை முழுமையாக புறக்கணித்த மாநிலம்……..மேலும் மம்மூட்டியையும், சிவாஜிகணேசனையும் ஒரு தொலைக்காட்சி விழாவில் கிண்டல் செய்த கஜோல் மற்றும் அங்கிருந்த ஷாருக்கான்,கரன் ஜோகர் ஆகியோருக்கு நான் கேட்க விரும்புவது நீங்கள் ஏளனம் செய்ய ஏன் அமிதாப்பை தேர்ந்தெடுக்கவில்லை என்பதுதான்….” என்று மேடையிலேயே கண்டித்தார்.( இத்தகைய நிதர்சனத்தை மேடையில் சொல்லும் நேர்மை எக்காலத்திலும் நம் நடிகர்களுக்கு இருந்ததில்லை. “ நாகரீகம் கருதி “ என்று சும்மா இருப்பவர்கள் இவர்கள். http://www.hinduonnet.com/fr/2006/07/07/stories/2006070703030300.htm .) ஆக இந்தி திரைப்படத்திற்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படும் இந்த விழாவில் எந்த வருடம் தமிழ் திரைப்பட உலகம் அழைக்கப்பட்டது, அதை இப்போது புறக்கணிக்க? தமிழர்களை புறந்தள்ளிவிட்டு சிங்களத்துடன் கைகோர்க்க இந்திய ஆளும் வர்க்கம் எடுக்கும் முயற்சியில் தமிழர்களுக்கு ஏது இடம்? ஆகவே இந்தக் கோரிக்கையும் இதற்கான எதிர்வினையும் நம்மை மழுங்கடிக்கவே செய்தன. இதைத்தான் IIFA நிறுவனம் மிகக் கெட்டிக்காரத்தனமாக செய்தது.

இந்த விழாவினை உலகமெங்கும் கொண்டு செல்ல Star Tv ஒப்பந்தம் செய்துள்ளது. கிட்டத்தட்ட 60 கோடிக்கும் மேலான மக்களிடையே இது கொண்டு செல்லப்பட இருக்கிறது. இவர்கள் இவ்விழாவிற்கான துவக்கவிழாவில் கூறியதைப் போல “ 1600 கி.மீட்டருக்கும் மேலான அழகிய கறைபடியாத கடற்கரை( Unspoilt beaches ) மற்றும் மிகச் சிறந்த வரலாற்றுப் பின்ணணி உள்ள நாடு” என்று இலங்கையை உலகிற்கு காட்ட இருக்கிறது, Vijay Tvயின் தாய் நிறுவனமான Star Tv இந்த தமிழர் விரோத விழாவை பரந்த அளவில் கொண்டுசெல்ல நம் ஆதரவு இணையதளங்கள் கூட முக்கியத்துவம் தரவில்லை என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்று.

இந்த விழாவின் அடிப்படை அபாயத்தை நாம் அறவே மறந்துபோனதே மிகப்பெரும் அவலம். விருது வழங்கும் நாட்களின் இரண்டாம் நாள் ஜூன்4,2010 அன்று FICCI-IIFA சர்வதேச வணிகமையம் நடத்தப்படுகிறது. இதில் நூற்றுக்கணக்கான நிறுவனத் தலைவர்கள் கலந்துகொண்டு வணிக ஒப்பந்தங்களில் கையெழுத்திட இருக்கிறார்கள். இதன்பின்னர் ஈழத்தமிழனின் தலையெழுத்து முற்றிலுமாக மாறப்போகிறது. சிறு,பெரு வணிக நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள் அன்னியர்களால் ஈழம் முழுவதும் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன. இவை ஈழத்தமிழர்களை போராட்ட குணமற்ற நடுத்தர வர்க்கமாக மாற்றுவது மட்டுமில்லாமல், அவர்களின் உழைப்பையும் இயற்கை வளத்தையும், பொருளாதாரத்தையும் உறிஞ்சப்போகிறது. இதற்கு பதிலாக கேளிக்கைகளும், பொழுதுபோக்குகளும் நிரப்பப்பட போகின்றன. புலம்பெயர் தமிழர்களின் பொருளாதார மூலதனத்தை மையப்படுத்தி

வீட்டு வசதித் துறை (rearrreee Real Estate Industry) பெருமளவில் லாபத்தையும், ஈழப்பகுதியில் புவியியல்,கலாச்சார சீரழிவையும் கொண்டுவர இருக்கின்றன. இன்று தமிழகத்தில் பார்க்கக்கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள்,ஆழ்துளை கிணறுகள்,பாதுகாக்கப்பட்ட தொகுப்பு வீடுகள்( Gated Community ) சர்வதேசப் பள்ளிகள்,திரையரங்குகள், வணிக வளாகங்கள், மொபைல் வித்தைகள் நிரம்ப இருக்கின்றன. இந்த ஆரவாரங்களுக்கு மத்தியில் ஈழப்போராட்ட கோரிக்கைகள் இணையதளங்களில் மட்டுமே விவாதிக்கப்படுகின்ற கருத்தாகவும் மாறலாம். தமிழ் நாட்டில் கண்கூடாக கண்ட சீரழிவுகளை ஈழத்திலும் நிறைவேற்றுவதற்கான வழியே இந்த விருது வழங்கும் விழா. இதன் முக்கியத்துவத்தை நாமோ, புலம்பெயர் தமிழர்களோ இனிமேலும் உணராமல் போவது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியாகும்.

பாலிவுட்டிற்கும், FICCIக்கும் எதிரான ஒரு அடையாளப் போராட்டமோ, கூட்டமோ மேற்கத்திய நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களால் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இவ்விழாவில் மாற்றம் வர வாய்ப்புண்டு. மேற்கத்திய உலகில் நடக்கும் எதிர்வினை IIFA,Bollywood, மற்றும் FICCIக்கு பெரும் இடியாக இருக்கும். மேற்கத்திய கலாசாரத்தையும்,வணிக முறையையும்,கற்பனைத்தரத்தையும் இம்மி பிசகாமல் பின்பற்றும் இந்த நிறுவனங்கள் மேற்குலகில் நாம் செய்யும் போராட்டங்களால், விமர்சனங்களால் காயப்படுவார்கள். வெள்ளைக்காரர்களின் விமர்சனங்களும்,பணக்கார நாடுகளில் இவர்களைப் பற்றி உருவாகும் தரக்குறைவான எண்ணங்களும் இவர்கள் உயிரை உருக்குலைக்கும் சக்தி வாய்ந்தவை. இந்தியாவில், தமிழ் நாட்டில் வரும் எதிர்ப்புகளை விட மேற்குலகில் ( லண்டன்,பாரீஸ்,நியூயார்க் ) நடைபெறும் எதிர்ப்புகள் இவர்களின் வணிக நலன்கள், நற்பெயர்கள் (Brand Image) ஆகியவற்றை சிதைக்கும். மேலும் GSP+ வரிச்சலுகைகளின் தடை, இலங்கை பொருட்களின் புறக்கணிப்பு, ஐ.நாவின் விசாரணை கமிஷன், முக்கியமாக டப்ளின் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு இவைகளின் ஊடே இந்த வணிக,கலாச்சார சீரழிவு நிறுவனங்கள் கடும் எதிர்ப்புகளை எதிர்கொள்ளும். வணிக நிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்புகளை(Corporate Social Responsibility) இவைகள் தட்டிக் கழிப்பதாக அறியப்படுமெனில் முதலாளித்துவ சமூகத்தில் இந்நிறுவனங்களின் மரியாதையும், இவர்களின் நேர்மையும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகும். இவையனைத்தும் இவர்களுக்கு பெரும் பின்னடைவுகளை உண்டாக்கும்.

இலங்கை,இந்தியா ஆகிய இரு நாட்டின் வெளியுறவுத்துறைகளும் தொடர்ந்து செயல்பட்டு இலங்கை அரசை காப்பாற்ற முனையும் இந்த தருணங்களில் தமிழ்ச்சமூகம் சரியான முறையில் தன் இருப்பையும், எதிர்ப்பையும் காட்டவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. இந்த விழாவின் தீவிரத்தை உணர்ந்த SAVE TAMIL தோழர்களின் எதிர்வினை நம்பிக்கை அளிக்கிறது. போராட்டங்களில் தொடர்ந்து பங்கு பெறுவோம்.

நாம் வெல்வோம்.

திருமுருகன் காந்தி

மே பதினேழு இயக்கம்

http://meenakam.com/?p=15542

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.