Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்கு தமிழ் பேசும் இளம் பெண்களுக்கு தென்னிலங்கை ஆடைத் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு???

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"வடக்கு கிழக்கு யுவதிகளுக்கு ஆடைத்தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்" இது அண்மையில் வெளிவந்த ஒரு அறிவிப்பு. இதற்கென அவர்கள் தென்னிலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறார்கள். இத்தனைக்கும் ஒரு முறை இலங்கையில் ஆடைத்தொழிற்சாலைகள்இ அவற்றின் ஏற்றுமதித்துறையும் இப்போது என்ன நிலைமையில் இருக்கிறதென்று அவதானிப்போமா?

தேர்தல்கள் முடிவடைந்தாயிற்றுஇ அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு விட்டார்கள்இ இணக்க அரசியலுடன் வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்யவென தமிழ் அமைச்சர்கள் இ பிரதியமைச்சர்கள் கூட புறப்பட்டு விட்டார்கள். போரின் வடுக்களை சுமந்த எம் வன்னி உறவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மீள்குடியேற்றம் செய்யப்படுகிறார்கள்.

எமது வன்னி உறவுகள் எப்போதும் அவர்களது சொந்த கையை நம்பி வாழ்ந்தவர்கள். இதனாலோ என்னவோ இம் மக்கள் மீது அமைச்சர்களுக்கு அலாதி பிரியமும் அக்கறையும்.

"வடக்கு கிழக்கு யுவதிகளுக்கு ஆடைத்தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்படும்" இது அண்மையில் வெளிவந்த ஒரு அறிவிப்பு. இதற்கென அவர்கள் தென்னிலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறார்கள். இத்தனைக்கும் ஒரு முறை இலங்கையில் ஆடைத்தொழிற்சாலைகள்இ அவற்றின் ஏற்றுமதித்துறையும் இப்போது என்ன நிலமையில் இருக்கிறதென்று அவதானிப்போமா?

அண்மைய காலங்களில் பத்திரிகைகளில் பரவலாக பேசப்பட்ட விடயம் புளுP + வர்த்தக சலுகை. புளுP என்பது ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் வர்த்தக முன்னுரிமையாகும். இவ்வுரிமை வழங்கப்பட்ட நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதித் தீர்வையின்றி பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து இச் சலுகையை இலங்கை கடந்த 2005 ம் ஆண்டின் நடுப்பகுதியில் பெற்றுக்கொண்டது. இதனால் இலங்கைக்கு 3 பில்லியன் டொலர் வருமானம் ஆண்டுதோறும் கிடைத்து வந்தது. இதனால் சுமார் 1 லட்சம் தென்னிலங்கை மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. ஆடை உற்பத்திகளில் சுமார் 60மூ ஐரோப்பிய ஒன்றியத்திற்கே ஏற்றுமதி செய்யப்பட்டது. இப்படியான ஒரு வர்த்தக சலுகையானது இலங்கை போன்ற நாடுகளிற்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. எனினும் இச்சலுகையை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியாது. புளுP + சலுகையை பெறவேண்டுமானால் முக்கியமாக 27 சர்வதேச உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டு பின்பற்ற வேண்டும். அதில் முக்கியமானது இலங்கைக்கு கசப்பாய் இருக்கும் மனித உரிமைகளிற்கு மதிப்பளிக்கிற விடயம். இதனால் அச் சலுகை இலங்கைக்கு நிறுத்தப்பட்டாயிற்று.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் ஆடை தொழிற்சாலைகள் மூடப்பட்டுக்கொண்டிருக்க மறுபக்கம் புளுP + வரிச்சலுகை நிறுத்தம். ஆறு வருடத்திற்கு முன்னர் 800 ஆக இருந்த ஆடைத்தொழிற்சாலைகளின் எண்ணிக்கை இப்போது வெறும் 200 ஆக இலங்கையில் குறைந்துள்ளது. 70000 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர். எஞ்சியிருக்கும் தொழிலாளர்கள் கூட கிழமைக்கு 5 நாள் வேலையும் சனிக்கிழமை அரை நாள் வேலைக்காக நாள் தோறும் 1 மணி நேர வேலையை அதிகம் செய்கின்றனர். மாதச்சம்பளமோ வெறும் 10000 மட்டுமே. இதில் உணவுக்கு 1ஃ3 அதுவும் சோறும் மரக்கறியும் உண்டால் மட்டுமே. மீன் முட்டை பற்றி நினைக்க கூட முடியாது. 1ஃ3 பங்கு தங்குமிடத்திற்கும் போய்விடும்.

ஆடைத்தொழிற்சாலைகளினதும் தொழிலாளர்களினதும் நிலைமை இவ்வாறிருக்க வடக்கு கிழக்கு பெண்களுக்கு எவ்வாறு வேலை வாய்ப்பு அழிக்கப்படப் போகிறது? அதுவும் குறிப்பாய் 18 தொடக்கம் 23 வயதுப் பெண்களின் பால் அவ்வளவு அக்கறை கொள்வது ஏன்? இங்கே தான் நாம் ஒன்றைப்பற்றி சிந்திக்க வேண்டும். போர் முடிவடைந்ததும் உல்லாசப்பயணிகளின் இலங்கை நோக்கிய வருகை அதிகரிக்க ஆரம்பித்திருக்கின்றது. இதற்கு இலங்கையின் இயற்கை வனப்பு மட்டும் காரணமல்ல. அண்மை காலங்களில் "பெண்களின் சொர்க்கபுரி இலங்கை" என்று உல்லாசப்பயணிகள் சொல்லுமளவிற்கு இலங்கையில் பாலியல் தொழில் வளர்ந்திருக்கிறது. இதனால் தென்னிலங்கையின் உல்லாச விடுதிகள் தொழிலாளர்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன.

வடக்கின் வசந்தம் என்ற அபிவிருத்தித் திட்டமாம். ஏன் தெரியாமல் தான் கேட்கிறோம்இ கிழக்கின் வசந்தம் என்ற உங்களது பித்தலாட்ட நிகழ்ச்சி நிரலில் என்ன அபிவிருத்தியை செய்து கிழித்துள்ளீர்கள்? உடனே சொல்வீர்கள் எத்தனை பாலத்தைக் கட்டினோம் என்று. பாலத்தைக் கட்டி தென்னிலங்கை வர்த்தகர்களின் சுரண்டல்களுக்கு எமது தாயகத்தை பலிக்கடா ஆக்கியதே தவிர தமிழ் பேசும் மக்களுக்கு என்ன பலன் கிட்டியது? வடக்குக் கிழக்கு பெண்கள் மேல் அதுவும் 18- 23 வயதுப் பெண்கள் மேல் அவ்வளவு கரிசனையானால் ஏன் தென்னிலங்கையில் உள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் ஒன்றையேனும் வடக்கு கிழக்கில் அமைக்க முடியாதா? ஏன் அதற்குரிய வளங்கள் வடக்கு கிழக்கில் இல்லையா? இந்தியாவில் இருந்துவந்த புத்திஜீவிகள் தமிழர் தாயகப் பகுதிகளில் ஆடைத்தொழிற்சாலை அமைப்பதற்கு தகுந்த வளங்கள் இருப்பதாக தெரிவித்த சான்றுகளை நாமொன்றும் மறந்து விடவில்லை.

தமிழர்களை கூலித்தொழிலாளர்கள் ஆக்குவதிலே சிங்கள புத்த முகாமைத்துவம் செயற்படுகிறது. தமிழர் பகுதிகளில் தொழிற்சாலைகளை நிறுவினால் தமிழர்கள் முகாமைத்துவ தர வரிசையிலும் தம்மை முந்திவிடுவார்கள் என்ற பொறாமையான இழிந்த மனப்பாங்கின் வெளிப்பாடே இவை தவிர வேறெதுவும் இல்லை. 1995 ம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணம் உங்களுடைய கட்டுப்பாட்டில் தானே உள்ளது? இன்றுவரை யாழ்ப்பாணத்திலேனும் நீங்கள் செய்த அபிவிருத்தி ஒன்றையேனும் கூற முடியுமா? பாதைகளை விஸ்தரிப்பதோஇ உல்லாச விடுதிகளை அமைப்பதோஇ தமிழ் ஊடகங்களின் அனுசரணையுடன் இசைக் கச்சேரிகளை செய்வதோ ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தியாக அமைந்துவிடாது. ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி என்பது அப்பிரதேசத்தின் வேலையற்றோருக்கு வேலையளித்து பொருளாதார உட்கட்டுமான நிலையினை மேம்படுத்துவதே அன்றி அப்பிரதேச பெண்களை பாலியல் தொழிலுக்காக தென்னிலங்கைக்கு ஏற்றுமதி செய்வது அல்ல.

அரசாங்கத் திணைக்களங்களில் சிங்கள புத்த மேலாதிக்க முகாமைத்துவமே பரவிக்காணப்படுவது எல்லோரும் அறிந்ததே. இன்று அந்த நிலை தனியார் நிறுவனங்களிலும் தலைவிரித்து ஆடத் தொடங்கியுள்ளது. இதற்கு வலுச் சேர்க்கும் செயற்பாடே தமிழ் பேசும் சமூகங்களை வேலை வாய்ப்பு என்ற பெயரில் கூலித் தொழிளாளர்களாக தென்னிலங்கைக்கு ஏற்றுமதி செய்வது ஆகும். அன்று மலையகத்திலிருந்த எமது உறவுகளின் (சுமார் 10 லட்சம் பேர்) பிரஜாவுரிமை பறிக்கப்பட்டபோது படித்தவர்கள் என்று தம்மைத்தாமே கூறிக்கொண்டு ஊமைகளாக இருந்த (துணை போன) மந்தைகளுக்கு ஈடு இணையில்லாதவர்கள் இன்றும் எம்மத்தியில் உள்ளார்கள். இந்த சோரம் போன செம்மறியாடுகளை நம்பிப் பலனெதுவும் கிடைக்காது.சிங்கள புத்த மேலாதிக்கம் இதனைத்தான் தொடர்ந்து செய்யப்போகிறது.

1931 ல் இருந்து இவர்களது பச்சோந்திச் செயற்பாடுகள் எமக்குத் தெரியாதவையல்ல. நம்மைக் காப்பாற்ற நாமே புத்திசாலித்தனமாக சிந்திக்க வேண்டும். இதனால் தமிழ் பேசும் மக்களே! நாம் இந்த சிங்கள புத்த மேலாதிக்க அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்கின்றோம். உண்மையிலேயே தமிழ் பேசும் மக்கள் மீதும் 18- 23 வயதுப் பெண்கள் மீதும் நியாயமான கரிசனை இருக்குமானால் வடக்கு கிழக்கில் தொழிற்சாலைகளை அமைத்து அதன் மூலம் வேலைவாய்ப்பை வழங்கிக்காட்டு. அது இலங்கையில் சிறிதுகாலத்தில் கைவிடப்படும் ஆடையுற்பத்தித் தொழிற்சாலையாக இருந்தாலும் பரவாயில்லை. நாம் அத் தொழிற்துறையை எமது கடின உழைப்பால் மேம்படுத்திக் காட்டுகின்றோம். அதை விடுத்து தென்னிலங்கையில் வேலைவாய்ப்பு என்ற போர்வையில் கூலித் தொழிலாளராக்கலாம் என்று கனவுகாணாதே. அந்த அடக்குமுறையெல்லாம் வெள்ளையர்கள் இலங்கையை விட்டுப் போனதோடு முடிந்துவிட்டது. நீ யார் எம்மை கூலிகளாக்குவதற்கு?

ஆடைத்தொழிற்சாலைக்கு என வடக்குக் கிழக்கிலிருந்து தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்பட இருக்கும் பெண்கள் கிராமங்களைச் சேர்ந்த வறுமையிலிருக்கும் பெண்களே. இவர்களால் தமிழில் மட்டுமே சரளமாக பேச முடியும். இவர்கள் ஆடைத்தொழிற்சாலையில் தான் வேலை செய்யப் போகிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும் இவர்களால் எவ்வாறு தென்னிலங்கையில் தாய் மொழியை மட்டும் நம்பி வேலை செய்ய முடியும். இன்றைய காலங்களில் வேலைக்கு சென்று வரும் பெரும்பான்மையினப் பெண்களே பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்படும் போது இவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியே. இதனை ஒவ்வொரு பொறுப்புள்ள தமிழ் குடிமகனும் யோசிக்க வேண்டும்.

ஆடைத்தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு என்ற போர்வையில் வடக்கு கிழக்கு பெண்களை தென்னிலங்கைக்கு கொண்டு சென்று அவர்களை பாலியல் தொழிலுக்கு இரையாக்கி எமது இளந்தலைமுறையை அழிப்பதே இவர்களின் நோக்கமன்றி வேறெதுவுமில்லை. இவர்களின் இந்த நாடகங்களுக்கு தமிழ் அமைச்சர்கள்இ பிரதிநிதிகளும் துணைபோவது வேதனைக்குரியதும் கண்டிக்கத்தக்க விடயமுமாகும்.

பெற்றோர்களே! வறுமை நிலை கண்டு பயந்து எமது இளந்தலைமுறையைஇ உங்கள் பிள்ளைகளை இந்த கபட நரிகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் மாட்டுப்படாமல் எச்சரிக்கையுடன் இருப்பது உங்களின் தலையாய கடமையாகும்.

இளைஞர்களே! யுவதிகளே! கண்விழியுங்கள். அநியாயத்தை தடுக்க திரண்டெழுங்கள்!. வறுமையைக் கண்டு பயந்து சோரம் போய்விடாதீர்கள்!. வறுமைக்கும் எல்லையுண்டு.

-கல்யாணி-

maanavar.samookam@gmail.com

Edited by ஆண்டவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.