Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களுக்கு நீதி தேவை – ஜனனி ஜனநாயகம்

Featured Replies

தமிழ் மக்களுக்கு நீதி தேவை – ஜனனி ஜனநாயகம்

இனப்படுகொலைக்கு ஆளாகியுள்ள ஈழத் தமிழினத்திற்கு சர்வதேச சமூகம் நீதி வழங்க வேண்டும் என இன அழிப்பிற்கெதிரான தமிழரமைப்பைச் சேர்ந்தவரும் பிரித்தானியாவின் சார்பில் ஐரோப்பிய ஒன்றியத் தேர்தலில் போட்டியிட்டவருமான செல்வி ஜனனி ஜனநாயகம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற நாடு கடந்த தமிழீழ அரசின் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இந்தக் கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

ஈழத்தில் கொல்லப்பட்ட விடுதலை வீரர்களினதும் தமிழ் ஈழ மக்களினதும் நினைவுகளோடு நாம் கூடியிருக்கிறோம் எனத் தெரிவித்த ஜனனி இலங்கையில் தமிழ் மக்கள் எவ்வாறு அடக்கப்பட்டார்கள் என்பதையும் எவ்வாறு இன அழிப்புச் செய்யப்பட்டார்கள் என்பதையும் தெளிவாக எடுத்துக் கூறினார்.

இன அழிப்பு என்பதற்கு கொடுக்கப்பட்ட வரைவிலக்கணம் ஈழத் தமிழர்களுக்கு முழுமையாகப் பொருந்துவதாகவும் இறுதி யுத்த காலத்தில் சிறிலங்கா அரசாங்கமும் படைகளும் இன அழிப்புச் செய்ததையும் குறிப்பிட்ட ஜனனி இந்த கோரத் தாண்டவம் நிறைவுற்று ஓராண்டு பூர்த்தியாகியுள்ள நிலையில் பல்வேறு நிறுவனங்களும் மனித உரிமை அமைப்புகளும் போர்க்குற்றங்கள் குறித்துப் பேச ஆரம்பித்துள்ளதையும் சுட்டிக் காட்டினார்.

வன்னி தன்னால் முடிந்த வரை போராடியதைச் குறிப்பிட்ட ஜனனி வன்னி ஒரு போதும் மண்டியிடவில்லை என்பதையும் நினைவு படுத்தினார்.

ஈழத் தமிழ் மக்களுக்காக புலம் பெயர் சமூகம் தொடர்ந்து போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன் ஈழத்தில் இழக்கப்பட்ட உயிர்கள் வீணாக இழக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இளைய தலைமுறையைச் சேர்ந்த செல்வி ஜனனி ஜனநாயகத்தின் உரை அங்குரார்ப்பணக் கூட்டத்தில் கலந்து கொண்ட வெளிநாட்டுப் பிரமுகர்கள் உள்ளிட்ட அனைவரையும் கவர்ந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

செல்வி ஜனனி ஜனனாயகத்தின் முழுமையான ஆங்கில உரையை வாசிக்க: http://www.eelamweb.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.