Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச நீதி அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது ‐ இலங்கை விவகாரத்தில் ஐநா அமைப்பின் பங்களிப்பு அதிருப்தி சர்வதேச மன்னிப்பு சபை குற்றச்சாட்டு

Featured Replies

சர்வதேச நீதி அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது ‐ இலங்கை விவகாரத்தில் ஐநா அமைப்பின் பங்களிப்பு அதிருப்தி சர்வதேச மன்னிப்பு சபை குற்றச்சாட்டு

27 May 10 05:58 am (BST)

சர்வதேச நீதி அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள ஆண்டறிக்கையில் 111 நாடுகளில் சித்திரவதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

பலம்பொருந்திய நாடுகள் தங்களது சுயலாப அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் சர்வதேச நீதியை நிலைநாட்டத் தவறியுள்ளதாக மன்னிப்புச் சபை விமர்சித்துள்ளது.

குறிப்பாக கடந்த வருடம் இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பங்களிப்பு அதிருப்தி அளிக்கும் வகையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் இதுவரையில் எவரும் தண்டிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஆற்ற வேண்டிய கடமைகளை தவறவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக இஸ்ரேலினால் காஸா பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளக்கு எதிராக எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் இடம்பெற்ற சித்திரவதைச் சம்பவங்கள் தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டுமென மேலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=24946&cat=1

  • தொடங்கியவர்

இலங்கை: சர்வதேசம் செய்த தவறு குறித்து அம்னெஸ்டி

இலங்கை, அம்னெஸ்டி, விசாரணை

இலங்கைப் போர்க்குற்றங்கள் --'விசாரணை கோராத சர்வதேச சமூகம்'

இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த போரின் இறுதிக் கட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த தவறியதாக, சர்வதேச சமூகத்தை அம்னெஸ்டி சாடியிருக்கிறது.

இந்தப் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் மீது விசாரணை நடத்தி, அவர்களை தண்டிக்க சர்வதேசம் சமூகம் தவறியதாக அம்னெஸ்டி , நேற்று புதனன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், குற்றம் சாட்டியிருக்கிறது.

அரசு தரப்பு, விடுதலைப்புலிகள் ஆகிய இரு தரப்பினருமே,

பாரிய துஷ்பிரயோகங்களைச் செய்திருக்கின்றன என்று அம்னெஸ்டியின் ஒரு அறிக்கை கூறுகிறது.

இதில், சிறார்களை கட்டாயமாக படையணிகளில் சேர்த்தது, சுமார் மூன்று லட்சம் தமிழ் பொதுமக்களை முகாம்களில் தடுத்து வைத்தது ஆகியவை அடங்கும்.

ஐ.நா மன்ற மனித உரிமைக் கவுன்சில் ஒரு சர்வதேச விசாரணையை வலியுறுத்தாதற்காக, அம்னெஸ்டி இண்டர்நேஷனல் , அந்த அமைப்பையும் விமர்சித்திருக்கிறது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/05/100527_amnestylanka.shtml

பான் கீ மூன் இருக்கும் வரை ஐ. நா. உருப்படாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.