Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விரக்தியும் துயரும் படிந்த கடல் மக்கள்: நாம் கேட்க விரும்பாத கதைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ramavil018.jpg

அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்பிக்கள் மாவை சேனாதிராஜா தலமையில் சுரேஷ்பிரேமச்சந்திரன், சிவஞானம் சிறிதரன் முதலியோர் வன்னி அகதிகளை சந்திக்கும் பயணம் ஒன்றை மேற்கொண்டார்கள். இந்தக் குழுவினருடன் சென்ற குளோபல் தமிழ் செய்திகளின் கட்டுரையாளர்களில் ஒருவரான நவராஜ் பார்த்தீபன் விரக்தியும் துயரும் படிந்த கடல் மக்கள் எனக் குறிப்பிடும் அல்லாறை தடுப்பு முகாமில் தடுக்கப்பட்டிருக்கும் வடமராட்சி கிழக்கு மக்களது அவலங்கள் குறித்து இந்த விபரணத்தை எழுதியிருக்கிறார்.

கடற்கரையில் வாழும் எங்கள் வாழ்க்கையை எங்களுக்கு மீளப் பெற்றுத் தாருங்கள் என்று வடமராட்சி கிழக்கை சேர்ந்த மக்கள் கண்ணீர் மல்க கேட்டார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்கள் அண்மையில் யாழ்ப்பாணம் அல்லாரை என்ற தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்கச் சென்றார்கள். தங்களை குறித்து எம்.பிக்கள் எடுத்துச் சொல்வார்கள் என்ற நம்பிக்கையில் மக்கள் கூடாரங்களில் இருந்து விரைவாக வந்து எம்.பிக்களை சூழ்ந்து கொண்டார்கள். மக்களின் முகங்களில் கணக்கெடுக்க முடியாத கோரிக்கைகள் தெரிந்தன.

இவர்களை கடல் மக்கள் என்றுதான் எனக்கு அழைக்கத் தோன்றுகிறது. போரின் காரணமாக எங்கள் மக்கள் கூடார மக்கள், படகு மக்கள் என்றெல்லாம் காலத்தால் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள்; கடலிலும் கரையிலுமாக இரவு பகலாக ஒரு காலத்தில் உழைத்துக் கொண்டிருந்தவர்கள். நிம்மதியாக அவர்கள் உழைத்த காலம் கண்ணுக்கு தெரிகிற விதமாக இல்லை. அப்படி உழைத்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஈழம்மீதான யுத்தம் ஆரம்பித்தது முதல் முப்பது வருடமாக அவர்கள் கொந்தளித்து அலைந்து கொண்டேயிருக்கிறார்கள். மக்கள் கூடியிருந்து தங்கள் மனத்துயர்களை குறிப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது ஒரு தாய் கூடாரம் ஒன்றின் பின்பக்கமாக ஒதுங்கியிருந்தார்.

ramavil010.jpg

"நான் ஒரு ஓதுக்குப் புறமாக இருக்கிறேன். எனக்கு ஒரு கால் இல்லை என்பதால் அதில் வந்து என்னால் உட்கார முடியவில்லை. ஆனால் எனது முக்கியமான கோரிக்கை ஒன்றை எனது கணவர் தெரிவிப்பதற்காக எம்.பிக்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். எனது மகனை காணவில்லை. கடலும் கரையும் சந்தையுமாக உழைத்துக் கொண்டிருந்த பிள்ளை இன்று எங்கே இருக்கிறான் என்று தெரியவில்லை. ஆனால் ஓமந்தை வரை எங்களுடன் வந்து பின்னர் பதிவு செய்வதற்காக அவனை அழைத்துக் கொண்டு போயிருந்தார்கள்"

காணாமல் போன தங்கள் பிள்ளைகளை மீட்பதற்கு அவர்கள் கடுமையான முயற்சிக்கிறார்கள். இந்த முகாமில் உள்ள அறுபதுக்கு மேற்பட்ட குடும்ங்களில் காணாமல் போன பிள்ளைகளை தேடும் படலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காணாமல் போன தங்கள் பிள்ளைகளின் புகைப்படங்களை போட்டோ பிரதிகளாக்கி அதை கைகளில் வைத்துக் கொண்டு, வரும் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கி;க் கொண்டிருப்பதுதான் அவர்களது தேடல் என்று ஒரு இளம் தாய் குறிப்பிடுகிறார்.

"அவன் எனது முத்த மகன். வயது பதினொன்று. அவன் வைத்தியாலைக்கு கொண்டு செல்லப்பட்டான். பின்னர் அவனுக்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. அலை அலையாக மக்கள் வந்து கொண்டிருந்த நெரிசலில் அவனைக் கண்டு பிடிக்க முடியாமல் போனது. ஆனால் அவன் சில வைத்தியசாலைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. ஆனால் அந்த ஆதாரங்களின் ஊடாக அவனைப் பெற முடியவில்லை. அவன் எங்கு கொண்டு செல்லப்பட்டான் என்று கண்டு பிடித்து தருவீர்களா"

இந்த வார்த்தைகளுக்கு என்ன பதில் சொல்ல முடியும்? நெஞ்சை அதிர வைக்கும் வார்த்தைகளுடன் கொடிய காலம் ஒன்று பதுக்கி வைத்திருக்கும் மீட்க முடியாத பதில்களுடன் முட்கம்பிகளின் நடுவில் இப்படி பலர் தங்கள் கண்ணீரை வடிய விடுகிறார்கள். எம்.பிக்களுக்கு முன்னால் இருந்த பலர் தங்கள் குரலை இப்படி வெளிப்பிடுத்தினார்கள்.

"எனது கணவனை காணவில்லை! எனது மகனைக் காணவில்லை! எனது கணவன் தடுப்பிலிருக்கிறார்! எனது பிள்ளை தடுப்பிலிருக்கிறார்! அவன் சிறிய பிள்ளை. ஆனால் ஓரு மாதம்தான் அவன் போராளியாக இருந்தான். இன்று எத்தனையோ நாட்களாக மாதங்களாக அவன் சிறையில் இருக்கிறான். அவன்; படிக்க வேண்டும். நாங்கள் உழைத்து அவனைப் படிக்க வைக்க வேண்டும்"

இந்த வார்த்தைகளுக்கு என்ன பதில் சொல்ல முடியும்? நெஞ்சை அதிர வைக்கும் வார்த்தைகளுடன் கொடிய காலம் ஒன்று பதுக்கி வைத்திருக்கும் மீட்க முடியாத பதில்களுடன் முட்கம்பிகளின் நடுவில் இப்படி பலர் தங்கள் கண்ணீரை வடிய விடுகிறார்கள். எம்.பிக்களுக்கு முன்னால் இருந்த பலர் தங்கள் குரலை இப்படி வெளிப்பிடுத்தினார்கள்.

"எனது கணவனை காணவில்லை! எனது மகனைக் காணவில்லை! எனது கணவன் தடுப்பிலிருக்கிறார்! எனது பிள்ளை தடுப்பிலிருக்கிறார்! அவன் சிறிய பிள்ளை. ஆனால் ஓரு மாதம்தான் அவன் போராளியாக இருந்தான். இன்று எத்தனையோ நாட்களாக மாதங்களாக அவன் சிறையில் இருக்கிறான். அவன்; படிக்க வேண்டும். நாங்கள் உழைத்து அவனைப் படிக்க வைக்க வேண்டும்"

கடலைப் பிரிந்து எங்களால் இருக்க முடியாது என்று குறிப்பிடும் இந்த கடல் மக்கள் இப்பொழுது பாஸ் நடைமுறையில் வெளியில் சென்று மண் ஏற்றும் வேலைக்கு செல்லுகிறார்கள். முட்கம்பிகளுக்குள் உடைந்து காற்றினால் எப்பொழுதும் எடுத்துச் செல்லப்படலாம் என்ற நிலையில் இருக்கின்றன அவர்களது கூடாரங்கள். தென்னை ஓலைகளால் வேயப்பட்ட அந்த கூடாரங்களில் எழுநூறு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் மூவாயிரம் மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ramavil014.jpg

"இந்தக் கூடாரங்களை நம்ப முடியவில்லை. தீப் பிடித்தால் எல்லாம் சரி. சுற்றி வர முட்கம்பி. காற்று மண்ணை அள்ளி எப்பொழுதும் முகத்தில் கொட்டிக் கொண்டிருக்கிறது. நான் புல்மோட்டையில் முதலில் தடுத்து வைக்கப்பட்டேன். பின்னர் செட்டிக்குளம் கொண்டு வந்தார்கள். பின்னர் எங்களை விடுவிப்பதாக சொல்லி துரையப்பா மைதானத்தில் கொண்டு வந்து விட்டு விடுவிப்பு நிகழ்வு செய்தார்கள். அது முடிந்தவுடன் கைதடிக்கு கொண்டு சென்றார்கள். பின்னர் இங்கு கொண்டு வந்தார்கள். எல்லா முகாங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டேன். இப்பொழுது இந்த முகாமில் தடுக்கப்பட்டிருக்கிறேன்"

இந்த மக்களை விடுவிக்கும் நிகழ்வு துரையப்பா மைதானத்தில் நடந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. முழுக்க முழுக்க கடலை நம்பிப் பிறந்த இந்த மக்கள் வெற்றிலைக்கேணி, தாளையடி, உடுத்துறை, மருங்கேணி, செம்பியன்பற்று போன்ற கடல் கிராமங்களைச் சேர்ந்தவர்கள். அங்குள்ள ஒரு கூடாரத்தின் முன்பாக வலையொன்றை தயாரித்துக் கொண்டிருந்தார்கள்.

"எங்களை கடலுக்கு விட்டால் எங்களுக்கு நிவாரணம் தரத் தேவையில்லை. வேண்டுமானால் அரசாங்கத்திற்கு நாங்கள் நிவாரணம் கொடுக்கிறோம். அப்படி எங்களால் உழைக்க முடியும். விரைவில் கடலுக்குச் செல்லலாம் என்ற நம்பிக்கையில் இந்த வலையை செய்து கொண்டிருக்கிறேன். இப்பொழுது நிவாரணங்களை விற்றுத்தான் மற்றப் பொருட்களை வாங்குகிறோம். அடுத்த நிவாரணம் தரும் வரையில் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். எங்களில் ஐம்பது சம்மாட்டிகள் வரை இருக்கிறார்கள். நாங்கள் பல குடும்பங்களுக்கு வேலை கொடுத்து ஒன்றாக சேர்ந்து உழைப்போம். பெண்கள் ஆண்கள் என்றில்லாமல் எல்லோருமே கடலில் தொழிலுக்குப் போய் வருபவர்கள் நாங்கள்"

ramavil008.jpg

இந்த மக்களை விடுவிக்கும் நிகழ்வு துரையப்பா மைதானத்தில் நடந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. முழுக்க முழுக்க கடலை நம்பிப் பிறந்த இந்த மக்கள் வெற்றிலைக்கேணி, தாளையடி, உடுத்துறை, மருங்கேணி, செம்பியன்பற்று போன்ற கடல் கிராமங்களைச் சேர்ந்தவர்கள். அங்குள்ள ஒரு கூடாரத்தின் முன்பாக வலையொன்றை தயாரித்துக் கொண்டிருந்தார்கள்.

"எங்களை கடலுக்கு விட்டால் எங்களுக்கு நிவாரணம் தரத் தேவையில்லை. வேண்டுமானால் அரசாங்கத்திற்கு நாங்கள் நிவாரணம் கொடுக்கிறோம். அப்படி எங்களால் உழைக்க முடியும். விரைவில் கடலுக்குச் செல்லலாம் என்ற நம்பிக்கையில் இந்த வலையை செய்து கொண்டிருக்கிறேன். இப்பொழுது நிவாரணங்களை விற்றுத்தான் மற்றப் பொருட்களை வாங்குகிறோம். அடுத்த நிவாரணம் தரும் வரையில் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். எங்களில் ஐம்பது சம்மாட்டிகள் வரை இருக்கிறார்கள். நாங்கள் பல குடும்பங்களுக்கு வேலை கொடுத்து ஒன்றாக சேர்ந்து உழைப்போம். பெண்கள் ஆண்கள் என்றில்லாமல் எல்லோருமே கடலில் தொழிலுக்குப் போய் வருபவர்கள் நாங்கள்"

தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள், மக்களின் கோரிக்கைகளை கண்ணீர் ததும்பும் கதைகளை, வலியெழும் மனத்துயர்களை கேட்டுக்கொண்டே வந்தார்கள். ஒவ்வொரு கூடாரங்களாக சென்று நிலவரங்களை பார்த்ததுடன் அங்குள்ள மக்களின் கலங்கிய துயர் வார்த்தைகளை கேட்டுக் கொண்டு நின்றார்கள். அந்த மக்களிடம் நாடாளமன்ற உறுப்பினார் மாவை சேனாதிராஜா பேசிக் கொண்டிருந்தார்.

"எங்களுக்கு வாக்களித்து எங்களை பிரதிநிதிகளாக தெரிவு செய்த எங்கள் மக்களை நாங்கள் சந்திக்க விடாமல் அரசாங்கம் தமிழ் மக்களை வதைக்கிறது. இன்றும் காலையில் உங்களைச் சந்திப்பதற்காக வந்து ஒரு மணித்தியாலம் வரை மேலிடத்து அனுமதிக்காக காத்திருக்க வைத்தார்கள். உங்களது கோரிக்கைகளை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தி அவற்றுக்கு தீர்வைப் பெற்றுத் தருவோம்"

முகாமிற்கும் சில சிறிய கடைகள் இருக்கின்றன. கூட்டறவுச் சங்கங்களும் சில தனியார் கடைகளும் உள்ளன. கொஞ்ச பொருட்களை வைத்துக் கொண்டு அந்த விற்பனை நிலையங்களை நடத்தி வருகிறார்கள். அங்கு மாமரம் ஒன்றின் கீழாக ஒரு தாய் மரக்கறி விற்றுக் கொண்டிருந்தார். தனது மரக்கறிகளை பார்த்துக் கொண்டு புன்னகைத்தபடி பேசத் தொடங்கினார்.

"இதில் ஐந்தோ, பத்தோ இலாபம் வரும். சும்மா இருந்தும் என்ன செய்வது? சும்மா இருந்தால் மனதில் எத்தனையோ யோசனைகள். அதனால் இப்படி மரக்கறி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறேன். இங்குள்ள சனங்களும் மரக்கறிகளை வாங்கி கறி சமைப்பார்கள். சிலவேளை யாரும் மரக்கறிகளை வாங்காது விட்டால் திரும்ப பாஸைக் காட்டி வெளியில் கொண்டுபோய் கொடுக்க வேண்டும்"

அல்லாரை தடுப்பு முகாம் என்பது பெரிய கிராமமம். அங்கு சுற்றிச் சுற்றி கூடாரங்கள்தான். இரண்டு பிரிவுகளாக முகாங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கழிவறைகள் நாறிக் கொண்டிருக்கின்றன. புழுதியும் காற்றுமாக அங்காங்கே மக்கள் நிலத்தில் இருந்தார்கள். இவர்களது வாழ்வை 2004 ஆம் ஆண்டில் சின்னாபின்னமாக்கியது சுனாப் பேரலை. அதிலிருந்து மீள முன்பே மீண்டும் யுத்தம் அகதிகளாக்கி இவர்களை சின்னாபின்னமாக்கியது அங்கிருந்த விதவைப் பெண் ஒருவர் பேசத் தொடங்கினார்.

" நாங்கள் நான்கு வருடங்களாக அகதிகளாக அலைந்து கொண்டிருக்கிறோம். 2006இல் யுத்தம் தொடங்கியது முதல் அலையத் தொடங்கினோம். முரசுமோட்டை, முறிப்பு, கிளிநொச்சி என்று அலைந்து கொண்டிருந்தோம். முதலில் 1990 ஆம் ஆண்டு அதற்கு முதல் பிறகு ஆனையிறவு பளைச் சண்டைகள், நாகர்கோவில் சண்டைகள் என்று எங்களது வாழ்வில் பெரும்பாலான காலங்கள் சண்டைகளும் இடப்பெயர்வுகளும் என்று போய்விட்டன. இடையில் சுனாமி அடித்தது. அந்த அடியின் காயம் ஆறுமுன்னமே பிறகு யுத்தம் அடிக்கத் தொடங்கிவிட்டது"

தங்கள் படகுகள் தொலைந்து விட்டன. அவற்றை தரைகளின் வழியாக கொண்டு சென்று இறுதியில் போன போன இடங்களில் போட்டு விட்டு சென்றதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள். வன்னிப் பெருநிலத்தின் பல்வேறு பகுதிகளில் படகுகள் சிதைவடைந்த நிலைகளில் கிடக்கின்றன. அவர்கள் மீள கடலுக்குச் சென்று தங்கள் தொழிலை ஆரம்பிப்பதைத்தான் முதல் கோரிக்கையை முன் வைக்கிறார்கள். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார் சிறிதரன் எம்பி.

"முதலில் எமது மக்கள் விடுதலைபெற்று கடலுக்குச் செல்ல வேண்டும். தங்கள் தொழிலை ஆரம்பிக்க வேண்டும். அதன்மூலம்தான் எமது மக்கள் மனத்தாலும் நலம் பெற முடியும். தொழிலும் கடலும் அந்த வாழ்க்கையும் இல்லாமல் நீங்கள் எவ்வளவு துன்பப்படுகறீர்கள் என்பதை எடுத்துக் கூறுவோம். நீங்கள் கடலிலிருந்து இடம்பெயர்ந்து அகதிகளாக முரசுமோட்டை போன்று அலைந்த இடங்களில் உங்கள் பிள்ளைகளுக்கு நான் கல்வி கற்பித்திருக்கிறேன். அதனால் உங்கள் வாழ்கையையும் வலியையும் நான் நன்கு அறிவேன்"

இப்பொழுது அந்த மக்களின் கடல் நிறையப்பேரை இழந்து விட்டது. நிறையப் படகுகளை இழந்து விட்டது. மக்களோ பல இழப்புக்களை சந்தித்து விட்டார்கள். விரக்தியும் துயரும் படிந்த கடல் மக்கள் முதலில் தங்கள் கடலூருக்குத் திரும்ப வேண்டும்.

விபரணக் கட்டுரை மற்றும் புகைப்படங்கள் ‐ குளேபல் தமிழ் செய்திகளுக்காக நவராஜ் பார்த்தீபன்

www.globaltamilnews.net

மூலம்: globaltamilnews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.