Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைத் தமிழருக்காக அசின் வடிக்கும் நீலிக் கண்ணீர்.

Featured Replies

post-7835-066952900 1279137016_thumb.jpgஇலங்கை பிரச்சனையில், என்மீது வேண்டும் என்றே சர்ச்சையை கிளப்புகிறவர்களைப்பற்றி எனக்கு கவலை இல்லை, என்று அசின் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழர்கள் இனப்படுகொலை காரணமாக, தென்னிந்தியத் திரைப்பட கூட்டமைப்பு, நடிகர், நடிகைகள் யாரும் இலங்கைகு செல்ல கூடாது என தடை விதித்திருந்தது. இந்நிலையில், நடிகை அசின் ‘ரெடி’ என்ற இந்திப் படப்பிடிப்புக்காக இலங்கை சென்றுள்ளார்.

இதனால், தமிழ்த்திரையுலகில் பெரும் சர்ச்சை நிலவிவருகிறது. தென்னிந்தியத் திரைப்பட கூட்டமைப்பு விதித்திருந்த தடையை மீறி, இலங்கைச் சென்ற அசின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என்று நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி கூறியுள்ளார். இதற்கு பதில் கூறும் விதமாக, அசின் அளித்துள்ள பேட்டியில்,

post-7835-017598200 1279137055_thumb.jpgநான் இலங்கை சென்றது, அந்த நாட்டின் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அல்ல. என் வேலைக்காக தான் நான் இலங்கை சென்றேன். ‘ரெடி’நான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படம்.அந்தப் படத்தின் படப்பிடிப்பை இலங்கையில் நடத்தியது என் கையில் இல்லை. அது, தயாரிப்பாளரும், டைரக்டரும் முடிவு செய்த விஷயம்.

இலங்கை சென்றபின், அங்குள்ள தமிழர்கள் படும் துயரங்களை கேட்டறிந்து, அவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்தேன்.தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியும், விடுதலைப் புலிகள் அதிகம் இருந்த இடமுமான யாழ்ப்பாணத்திற்கு தைரியமாக சென்றேன். கடந்த 32 வருடங்களாக அந்தப் பகுதிக்கு எந்த ஒரு முக்கிய பிரமுகரும் செல்லவில்லை. ஆனால், ஒரு பெண்ணாக இருந்தும் நான் துணிச்சலாக போனேன்.

யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவமனையில் நோயினால் பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பார்த்து கண்கலங்கினேன்.அவர்களுக்கு உதவுவதற்காக ஒரு அறக்கட்டளை தொடங்கி இருக்கிறேன். அதன் மூலம் இலவச கண் சிச்சை நடத்தி, 300க்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு என் சொந்த செலவில் ஆபரேஷன் நட்த்தினேன். இந்தியாவில் இருந்து கண் மருத்துவத்தில் புகழ்பெற்ற 5 மருத்துவர்களை என் சொந்த செலவில் வரவழைத்து இந்தகண்சிகிச்சை முகாமை நடத்தினேன். ஒரு நோயாளிக்கான லென்சின் விலை 5000 ரூபாய். நான் 10,000 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை நடத்த திட்டமிட்டு இருக்கிறேன். இப்படி, இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்வது தவறா? என் மீது எதற்காக நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்?

post-7835-070739800 1279137064_thumb.jpgநான் இலங்கைத் தமிழர்களுக்கு உதவியதற்காகவா?. இலஙகையில் நடந்த போரில், பெற்றோரை இழந்த ஒருவயது முதல் 16 வயது வரை உள்ள 150 பெண்களை தத்தெடுத்து இருக்கிறேன். இது தவறா?. என்மீது வேண்டும் என்றே சர்ச்சையை கிளப்பி விடுகிறார்கள். தமிழ் நாட்டில் இருந்து கொண்டே சும்மா பேசுவதை விட, அறிக்கை விடுவதை விட இலங்கைக்கு வந்து இங்குள்ள தமிழர்களுக்கு உதவலாமே.

யாழ்ப்பாணத்தில் உள்ள, தமிழர்கள், “அக்கா தமிழ்நாட்டில் இருந்து யாரும் எங்களை பார்க்க வராதது ஏன்” என்று கேட்கிறார்கள். மேலும் அவர்கள், “விஜய் அண்ணாவையும், சூர்யா அண்ணாவையும் வரச்சொல்லுங்கள் அக்கா” என்றும் கேட்கிறார்கள். ஒரு சிலர் என்மீது வேண்டும் என்றே சர்ச்சையை கிளப்பி விடுகிறார்கள்.அது பற்றி எனக்கு கவலை இல்லை. எனக்கு சரி என்று தோன்றியதைத் தான் நான் செய்கிறேன்” என்று அசின் கூறினார்.

மேலும், படப்பிடிப்பைத் தவிர வேறு அத்தனை வேலைகளையும் செய்ய ஆரம்பித்தார். ஏற்கெனவே ராஜபக்சே குடும்பத்தின் சிவப்புக் கம்பள வரவேற்பு பெற்று, ராஜ விருந்தாளியாக இருந்து வரும் அவர், அதிபர் மனைவி ஷிராந்தி மற்றும் சில முக்கிய சிங்கள பெண்மணிகள் சகிதமாக வவுனியா, யாழ்ப்பாணம் என நகர்வலம் கிளம்பினார்.

இந்த நகர்வலம் எதற்கு?

“இலங்கை ஒரு அருமையான நாடு. இங்கு தமிழர்கள் அனைவரையும் அத்தனை சிரத்தையுடன் பார்த்துக் கொள்கிறது ராஜபக்சே அரசு. சர்வதேச தரத்தில் இங்கு வைத்திய வசதிகள் தரப்படுகின்றன. தமிழர்களுக்கு ராஜ வைத்தியம் அளிக்கப்படுகிறது. இங்குள்ள தமிழர்களுக்கு சுதந்திரமோ சுயாட்சியோ முக்கியமில்லை.. ‘வாழ்க்கையில் ஒரு முறையாவது சினிமா நட்சத்திரங்களைப் பார்த்துவிட்டால் கதிமோட்சம் பெற்று விடுவோம்’ என்ற ஆவலாதியுடன் அலைகிறார்கள்,”

இவ்வாறு கூறும் அசினின் வாதம் எந்த அளவுக்கு நம்பகத்தனமையுடையது என்று சற்று பார்ப்போம். அங்குள்ள தமிழர்க்ளின் நிலையைப் பார்த்து கண்ணீர் விட்டேன் என்று கூறுகிறார் அசின். ஆனால் மேலே உள்ள் அவரது சிரிப்புடன் கூடிய படங்களைப் பார்த்தாலே தெரியும், அவரது கூற்று எந்தளவுக்கு உண்மை எஎன்று. இன்னும் சற்று ஆராய்ந்தால், அவர் தமிழர்க்ளுக்காக செலவழித்த பணமெல்லாம் உண்மையில் அவருடையுதுதானா, அல்லது ராஜபக்சே கொடுத்த பணமா என்பது போகப்போக தெரியும்.

யாரும் போகாத யாழ்ப்பாணத்திற்கு நான் தைரியமாக சென்றேன் என்று கூறுகிறார். ஆனால் அவர் தனியாகவா சென்றார், இலங்கை அதிபரின் மனைவியோடுதானே சென்றார். பலத்த பாதுகாப்புடன் அல்லவா சென்றுள்ளார்.

post-7835-049157200 1279137620_thumb.jpg

இதேபோல நாம் தமிழர் இயக்கத்தினரை ராஜபக்ஷே இலங்கைக்குள் விடுவாரா? தனது மனைவியை சீமான் அல்லது திருமாவளவனோடு அனுப்பி வைப்பாரா?

அப்படி செய்தால், நாம் தமிழர் அனைவரும் அங்கு சென்று அவதிபட்டிருக்கும் தமிழர்களுக்கு உதவி செய்ய முடியும். மருத்துவ வசதி செய்ய முடியும், வீடுகள் கட்டி தரப்படும். நேரடியாக ஒரு தமிழனையும் ஸ்ரீலங்கா உதவி செய்ய விடாது. அசின் மட்டும் எப்படி உதவி செய்ய முடியும். இது ராஜபக்ஷேவின் சதி வேலை நடிகர்கர்களை எப்பொழுதுமே நம்ப கூடாது.. நம்பினால் நிச்சயம் ஆப்புதான்.

post-7835-070412000 1279137542_thumb.jpg

இவ்வளவு நாளாக இலங்கைக்கு நடிகர், நடிகைகள் சென்று சேவை புரிய வேண்டும் என்று தோன்றாத சரத்குமாருக்கு அசின் சென்றதும் புதிதாக ஞானோதயம் பிறந்துள்ளது. இலங்கைத் தமிழருக்கு சிறிதும் உதவாத கருணாநிதியை சந்தித்த பின் சரத்குமார் இவ்வாறு கூறுவது, சரத்குமாரின் நன்பகத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது.

தமிழ்நாட்டு நடிகர்கள் மற்றும் வட இந்திய நடிகர்களின் ஆதரவைப் பெற்று, தனது போர்க் குற்றங்களை மறைக்க நினைக்கும் ராஜபக்சேயின் சதிக்கு நமது திரையுலகினர் இரையாகிடக் கூடாது என்பதே தமிழர்களின் ஒட்டுமொத்த கருத்தாக அமைகிறது.

எனவே அசின், ரெடி படத்தில் நடிக்க மட்டும் இலங்கை போகவில்லை, ராஜபக்சேயின் கபட நாடகத்திலும் நடிக்கிறார் என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

நன்றி:

http://www.thedipaar.com/news/news.php?id=16010#

Edited by easyjobs

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.