Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் அமைச்சரவை: சிறிலங்காவின் காயங்களை ஆற்றுமா?

Featured Replies

தமிழர்களது அரசியல் அவாக்களை தீர்க்கும் வகையிலான அரசியல் தீர்வு எதுவும் முன்வைக்கப்படாமல், போரினால் ஏற்பட்ட வடுக்களைப் போக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற எந்த நல்லிணக்க முயற்சியும் முழுமையான வெற்றியினைத் தரப்போவதில்லை என அரசியல் ஆய்வாளர்களும் அரசியல்வாதிகளும் கருதுகிறார்கள்.

இவ்வாறு வளைகுடா நாடான அபு-துபாயில் இருந்து வெளிவரும் The National நாளேட்டில் அதன் வெளிநாட்டு செய்தியாளர் Feizal Samath தனது செய்தி ஆய்வில் எழுதியுள்ளார்.

அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்த இனப்போரின்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கிளிநொச்சி நகரத்தில் சிறிலங்காவினது அமைச்சரவை கூடியது.

பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போரினால் ஏற்பட்ட வடுக்களைப் போக்கும் ஒரு முனைப்பாக தலைநகருக்கு வெளியே வரலாற்றில் முதற்தடவையாக கிளிநொச்சியில் அமைச்சரவை கூட்டப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்த நாட்டினது இனப்போரின் போது கற்றுக்கொண்ட பாடங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான மேலதிக தகவல்கள் வெளிவந்த அதேநேரம் வடக்கு நகரான கிளிநொச்சியில் அமைச்சரவை கூடியிருக்கிறது.

எவ்வாறிருப்பினும் தமிழர்களது அரசியல் அவாக்களை தீர்க்கும் வகையிலான அரசியல் தீர்வு எதுவும் முன்வைக்கப்படாமல், போரினால் ஏற்பட்ட வடுக்களைப் போக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற எந்த நல்லிணக்க முயற்சியும் முழுமையான வெற்றியினைத் தரப்போவதில்லை என அரசியல் ஆய்வாளர்களும் அரசியல்வாதிகளும் கருதுகிறார்கள்.

போரின் இறுதி மாதங்களில் பொதுமக்களுக்கு எதிராக சிறிலங்காவினது அரச படையினர் புரிந்த அட்டூழியங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மேற்கு நாடுகள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றன.

இவற்றை அமைதிப்படுத்தும் ஒரு முனைப்பாகவே சிறிலங்காவில் நல்லிணக்க ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் இந்த ஆணைக்குழு காத்திரமான தாக்கம் எதனையும் ஏற்படுத்தாது என்றும் ஏனையோர் வாதிடுகிறார்கள்.

பெப்ரவரி 2002 தொடக்கம் மே 2009 வரையான காலப்பகுதியில் போர் முன்னெடுக்கப்பட்ட முறைமை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவதற்காக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை கடந்த மே மாதம் சிறிலங்காவினது குடியரசு அதிபர் மகிந்த ராஜபக்ச நியமித்திருந்தார்.

குறிப்பிட்ட இந்தக் காலப்பகுதியில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கு "தனிப்பட்ட ஒருவரோ அல்லது குழுவோ அல்லது நிறுவனமோ நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ காரணமாக இருந்திருக்கிறதா" என்பதைக் கண்டறியும் பொறுப்பு சிறிலங்காவினது முன்னாள் சட்டமா அதிபர் சீ.ஆர் டீ சில்வா தலைமையிலான எட்டுப் பேர் அடங்கிய இந்த ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்டிருக்கிறது.

எதிர்காலத்தில் இனங்களுக்கிடையிலான மோதலோ அன்றி இயல்பின்மையோ ஏற்படுவதைத் தடுப்பதோடு தேசிய ஒருமைப்பாட்டினை கட்டி வளர்க்கும் வகையில் எத்தகைய முனைப்புக்களை முன்னெடுக்கப்படவேண்டும் என்பது தொடர்பிலும் இந்த ஆணைக்குழு பரிந்துரைகளை மேற்கொள்ளும்.

அடுத்த மாதமளவில் ஆணைக்குழுவின் பொது அமர்வுகள் இடம்பெறும் என்றும் இதன்போது போர்க் குற்றங்கள் தொடர்பான ஆதாரணங்களைக் காணொலிப் பேழைகளாகச் சாட்சிகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கு வழிசெய்யப்படும் என்றும் திரு டீ சில்வா கூறுகிறார்.

"மோதலுக்கு வழிவகுத்த காரணங்கள் எவையென ஆராய்வதோடு இதுபோன்றதொரு மோதல் நிலை இந்த நாட்டில் மீண்டுமொருமுறை ஏற்படுவதைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை மேற்கொள்வதுதான் எமக்கு வழங்கப்பட்டிருக்கும் பணி" என்றார் அவர்.

பரந்துபட்ட அதிகாரங்களையும் ஆணையினையும் தன்னகத்தே கொண்டிருந்த தென்னாபிரிக்காவில் அமைக்கப்பட்ட உண்மை அறியும் ஆணைக்குழுவினைப் போலல்லாமல், சிறிலங்காவில் மீண்டும் போர் மூழுவதற்குக் காரணமானவர்கள் யாரோ அவர்கள் இனங்காணப்பட்டாலும்கூட குறிப்பிட்ட நபர்கள் அல்லது குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இந்த ஆணைக்குழுவிடம் இல்லை என அவர் தொடர்ந்து கூறினார்.

நாட்டினது வடக்குக் கிழக்குப் பகுதிகளிலுள்ள சாட்சியங்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு ஆணைக்குழுவினது அமர்வுகள் வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களிலுள்ள மாவட்டங்களில் மாறி மாறி இடம்பெறும் என்றார் ஆணைக்குழுவின் தலைவர்.

சிறிலங்காவினது வரலாற்றில் முன்னர் ஏற்படுத்தப்பட்ட ஒரு டசினுக்கும் அதிகமான உழுத்துப்போன குடியரசு அதிபர் ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளைப் போலவே இந்த ஆணைக்குழுவும் இருக்கும் என்றே நாட்டு மக்கள் கருதுகிறார்கள்.

கடந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஆணைக்குழுக்களின் கண்டறிதல்கள் மற்றும் பரிந்துரைகளுக்கு அமைவாக குற்றமிழைத்தவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் பீடத்தின் பேராசிரியர் கீத பொன்கலன் கூறுகிறார்.

"குறிப்பிட்டதொரு சம்பவத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்கிறது என ஆணைக்குழு தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது" என அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்கினைத் திருப்திப்படுத்துவதற்கும் அவர்களைச் சாந்தப்படுத்துவதற்குமாக முன்னெடுக்கப்படும் ஒரு முனைப்பே இந்த ஆணைக்குழுவின் உருவாக்கம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல தமிழ் நாழிதளான 'உதயன்' வெளியீட்டாளருமான சரவணபவான் கூறுகிறார்.

"இந்த ஆணைக்குழுவின் செயற்பாட்டினால் எதுவும் கிடைத்துவிடப்போவதில்லை. உதாரணமாக யாழ்ப்பாணத்தினை எடுத்துக்கொண்டால் அரசாங்க அரசியல்வாதிகளின் ஆயுதம் தாங்கிய போராளிகள் குடாநாட்டில் இன்னமும் சுதந்திரமாக உலாவருகின்ற ஒரு சூழமைவில் பொதுமக்கள் இந்த ஆணைக்குழுவில் சென்று முறையிடுவார்கள் என எவ்வாறு நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்" என்கிறார் அவர்.

"உண்மை அறியும் ஆணைக்குழுவினை அமைப்பது சிறந்ததொரு செயற்பாடே. ஆனால் சிறிலங்காவினைப் பொறுத்தவரையில் இந்த ஆணைக்குழு முறையான, அதற்குத் தேவையான அதிகாரங்களுடன் அமைக்கப்படவில்லை" என சரவணபவான் தொடர்ந்து கருத்துத் தெரிவித்தார்.

அப்போது ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக்கட்சிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட 2002ம் ஆண்டு முதல் இடம்பெற்ற சம்பவங்களை விசாரிப்பதற்கான ஆணையே இந்த ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டிருப்பதும் சந்தேகத்தினையும் கேள்வியினையும் எழுப்புகிறது.

போர் நிறுத்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களை மிகவும் முக்கியமான நபர்களாகக் கருதி (ஏஐPள) அவர்களுக்கான வெளிநாட்டுப் பயண ஒழுங்குகளை அப்போதைய அரசாங்கம் செய்திருந்தமை தொடர்பாகவும் முறைப்பாடுகள் முன்வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

போர் நிறுத்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்குத் தேவையான ஆயுத தளபாடங்களை ஏற்றிய கப்பல்கள் தங்குதடையின்றிப் பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

"இது தெளிவாக இல்லை. போரின் போது உண்மையில் நடந்தது என்ன என்பதைக் கண்டறிவதற்குப் பதிலாக, ஐக்கிய நாடுகள் சபை வல்லுநர்கள் குழுவினை அமைப்பதைத் தடுப்பதற்கான ஓர் ஏற்பாட்டுச் சீர்குலைப்பு நடவடிக்கையாகவே அரசு இந்த ஆணைக்குழுவினை அமைத்திருப்பதாகத் தெரிகிறது" எனக் கூறுகிறார் கொழும்பிலிருந்து வெளியாகும் 'டெய்லி மிறர்' பத்திரிகையின் ஊடகவியலாளரான முகமட் அயூப்.

"வடக்கினது மக்களின் மனங்களை வெல்லும்" ஒரு முனைப்பாக பெற்றோல் மற்றும் மண்ணெய் ஆகியன குடாநாட்டில் மூன்று ரூபாயினால் குறைக்கப்படும் என கிளிநொச்சியில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் குடியரசு அதிபர் ராஜபக்ச அறிவித்திருந்தார்.

கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளின் மத்தியில் முன்னர் விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமையகம் அமைந்திருந்த கிளிநொச்சி நகரிலுள்ள படைத் தலைமையகத்தில் இந்த அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றிருந்தது.

நாட்டினது ஒவ்வொரு அமைச்சர்களும் ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள அபிவிருத்திசார் தேவைகளை நேரடியாக அறிந்துகொள்வதற்கு வழிசெய்யும் வகையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அமைச்சரவைக் கூட்டத்தினை நடாத்துவது என்ற முடிவினை கடந்த யூன் 24ம் திகதி அரசாங்கம் எடுத்திருந்தது என அதிபர் செயலகத்தினைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆனால் அரசாங்கத்தின் இந்த முனைப்பானது பெரும்பான்மையினச் சிங்களவர்களுக்கும் சிறபான்மையினத் தமிழர்களுக்கும் இடையில் இன நல்லிணக்கம் ஏற்படுவதற்கு வழிசெய்யப்போவதுமில்லை, இலங்கைத் தீவில் இன முரண்பாடு முளைவிடுவதற்கான காரணங்களைத் தீர்க்கப்போவதுமில்லை என்கிறார் அரசியல் ஆய்வாளரான கீத பொன்கலன்.

தொழில்வாய்ப்பு, காணி மற்றும் கல்வி ஆகிய விடயங்களில் தாம் பாரபட்சமாக நடத்தப்படுவதாகக் கூறிய தமிழர்கள் தாம்வாழும் பிரதேசங்களில் தமக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என 1983ம் ஆண்டுக்கு முன்னரே கோரிக்கை விடுத்தனர்.

தமிழ்ச் சமூகத்தினருக்கு அதிகளவிலான சமூக மற்றும் அரசியல் உரிமைகள் வழங்கப்படவேண்டும் என விடுதலைப் புலிகள் கோரிவந்தார்கள்.

மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தங்களது சொத்துக்களையும் நிலங்களையும் இழந்தார்கள். ஆயிரக்கணக்கான தமிழர்கள் காயமடைந்ததோடு துன்புறுத்தலுக்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தார்கள்.

மேலும் பலர் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டார்கள். இந்த நிலையில் "தமிழர்களது பிரச்சினைக்கு அரசியல் வழிமூலத் தீர்வு வழங்கப்பட்ட பின்னரே பொருத்தமானதும் வினைத்திறன் கொண்டதுமான இன நல்லிணக்க முனைப்புக்களை மேற்கொள்ளமுடியும்" என்கிறார் கீதபொன்கலன்.

"அரசாங்கம் இன நல்லிணக்க ஆணைக்குழுவினை அமைத்திருப்பதானது அனைத்துலக சமூகத்தினைச் சாந்தப்படுத்தும் வகையிலான இன்னொரு முனைப்பேயன்றி வேறெதுவும் இல்லை."

போரின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற போதெல்லாம் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என மேற்கு நாடுகள் அழைப்பு விடுக்க, கண்துடைப்பு நடவடிக்கையாக இதுபோன்ற உழுத்துப்போன ஆணைக்குழுக்களை அரசாங்கம் முன்னரும் அமைத்திருந்தது.

சனவரி 2009 தொடக்கம் மே 2009 வரையிலான காலப்பகுதியில் சிறிலங்காவில் மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்கிறது எனக் கூறி அமெரிக்காவின் உட்துறைத் திணைக்களம் ஒக்ரோபர் 2009ல் அறிக்கை ஒன்றை வெளியிட, இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக அதிபர் ராஜபக்ச அப்போதொரு ஆணைக்குழுவினை அமைத்திருந்தார்.

இந்த ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை இன்னமும் வெளியிடப்படவில்லை.

இது இவ்வாறிருக்க, கடந்த மாதம் சிறிலங்காவின் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புச்சொல்லும் தன்மை தொடர்பில் ஐ.நாவின் செயலாளர் நாயகம் பன் கீ மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அவர் மூவர் அடங்கிய வல்லுநர்கள் குழுவினை அமைத்திருந்தார்.

செயலாளர் நாயகத்தின் இந்த முனைப்புக்குப் பதிலளிக்கும் வகையிலேயே சிறிலங்கா அரசாங்கம் 'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினைத்' தற்போது அமைத்திருக்கிறது.

http://www.puthinappalakai.com/view.php?20100716101507

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.