Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனேடிய கடற்பரப்பை அடையுமுன் கப்பலைச் சுற்றிவளைக்கத் திட்டம் அமெரிக்க , கனேடிய கரையோரக் காவல்படை உஷார் நிலையில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய கடற்பரப்பை அடையுமுன் கப்பலைச் சுற்றிவளைக்கத் திட்டம் அமெரிக்க , கனேடிய கரையோரக் காவல்படை உஷார் நிலையில்

திகதி: 28.07.2010,

இலங்கை அகதிகள் 219 பேருடன் கன டாவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் தாய்லாந்து சரக்குக் கப்பலான "எம்.வீ. சன்.சீ.', கனேடிய கடற்பரப்பை அடைவ தற்கு முன் அமெரிக்க அல்லது கனேடிய கடலோர காவற்படையினரால் சுற்றிவளைக் கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரு நாடுகளின் அதிகாரிகளும் கப்பலை மிகவும் உன்னிப்பாக அவதா னித்துக்கொண்டு இருக்கின்றனர் என்று வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் இந்தக் கப்பல் குறித்த தகவல்களை வெளியிடக்கூடாது என்ற உத்தரவுக்கு இணங்க, இது தொடர்பில் தகவல் வழங்க முடியாதுள்ளது என்று அமெரிக்க கடற்றுறை அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், கடந்த வெள்ளிக்கிழமை குறித்த கப்பல் தாய்லாந்துக் கொடியுடன் பிரிட்டிஷ் கொலம்பியா துறைமுகம் நோக்கி வருகின்றமையை அமெரிக்க கடற்றுறை அதிகாரி எடம் ஸ்டன்டொன் உறுதிப்படுத்தியிருந்தார்.

sankathi

உலகின் பார்வையை திருப்பிய அகதிக்கப்பல் [ உதயன் ] - [ Jul 30, 2010 04:00 GMT ]

உலகின் பார்வையைத் தன் பக்கம் திருப்பி கடந்த நான்கு மாதங்களாக சர்வதேசக் கடலில் சஞ் சரித்துக்கொண்டிருக்கிறது எம்.வி.சன் சீ கப்பல்.

200 இலங்கை அகதிகளுடன் சென்றுகொண் டிருக்கும் இந்தக் கப்பல் அங்கே நிற்கிறது, இங்கே நிற்கிறது என்று ஊடகங்களின் நேரடி வர்ணனை கள் இடம்பெற்றுவரும் இவ்வேளையில் புலம் பெயர் தமிழர்களும், ஈழத் தமிழர்களும் இதனை ஏக்கத்து டன் அவதானித்துக்கொண்டிருக்கின்ற னர். மனித உரிமை ஆர்வலர்களின் கவனத்தைப் பெரும் அள வில் ஈர்த்துள்ள இந்தக் கப்பல் எந்நேரமும் அமெரிக்க அல்லது கனேடியக் கரையை அடையலாம் என்று ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இந்தக் கப்பல் விவகாரத்தை அடுத்து இலங்கை யின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச மட்டத்தில் குரல் எழுப்பப்பட்டு வருவதால் கன டாவிலும் அமெரிக்காவிலும் உள்ள மனித உரிமை கள் அமைப்புகள் இந்த விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கப்பல் விவகாரம் தொடர்பான விசாரணை யில் பல நாடுகள் பங்களிப்புச் செய்து இக்கப்பலின் பயணத்தைக் கண்காணித்து வருவதுடன், தமிழர் களின் வரலாற்றிலேயே இவ்வாறு ஏற்கனவே அடை யாளம் காணப்பட்ட ஒரு கப்பல் இவ்வளவு அகதி களுடன் பயணிப்பது இதுவே முதல் தடவை.

அகதிகள் இப்படிக் கப்பலில் வெளியேறுவது இது முதல் தடவை அல்ல. இப்படி ஆஸ்திரேலியா வுக்குச் சென்று அகதிகள் அந்தஸ்துக் கோரியோர் ஆயி ரத்துக்கும் அதிகம் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஒரு நாட்டில் யுத்தம் நடைபெற்றுக்கொண் டிருக்கும்போது அல்லது யுத்தம் முடிவடைந்த பின்பு வெற்றி பெற்ற தரப்பினரால் பழி வாங்கப் படலாம் என்ற அச்சம் ஏற்படும் போது இந்த வெளி யேற்றம் இடம்பெறுவது தவிர்க்க முடியாததாகிறது.

1975ஆம் ஆண்டு வியட்நாம் யுத்தம் முடிவ டைந்த பின்பும் மக்கள் அகதிகளாக வெளியேறி னார்கள். அப்பொழுது ஆணிச்t கஞுணிணீடூஞு என்ற சொற் பதம் சர்வதேச அரங்கில் பிரபல்யம் பெற்றிருந் தது. நூயன்வான் தியூவின் அரசு வீழ்ச்சி அடைந்து வியட்நாமின் வியட்கொங் கெரில்லாக்கள் ஆட்சி யைக் கைப்பற்றி இரு வியட்நாம்களும் இணைந்த சமயம் ஆயிரக்கணக்கானோர் படகுகளிலும் கப்பல்களிலும் வெளியேறினார்கள்.

அப்பொழுது பல நாடுகள் இந்த அகதிகளுக்கு அரசியல் தஞ்சம் வழங்கின. ஆனால் இலங்கை யில் இருந்து வெளியேறும் அகதிகள் சர்வதேச நாடுகளின் அனுதாபத்தைப் பெறமுடியாது இருப் பது மிகவும் துரதிஷ்டமானது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம், இலங்கை அரசு மீதான யுத்தக் குற்ற விசாரணை கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றைச் சாட் டாக வைத்துக்கொண்டு வெளிநாடுகளில் குடி யேறும் நோக்கத்துடனேயே இப்படியான கப்பல் பயணங்கள் இடம்பெறுகின்றன என்று இலங்கை குற்றஞ்சாட்டுகிறது.

ஆனால் ஏற்கனவே இப்படிப் புறப்பட்ட கப் பல்கள் கவிழ்ந்து உயிர்ச்சேதம் ஏற்பட்ட நிலை யிலும் இந்த மக்கள் உயிரைத் துச்சமாக மதித்து ஏன் வெளியேறுகிறார்கள் என்பதை இலங்கை அர சும் சர்வதேசமும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஆப்கானிஸ்தானில் தற்பொழுது யுத்தம் நடை பெறுகிறது. தனால் ஆப்கானிஸ்தான் மக்கள் இப்படிக் கப்பல்களிலும் படகுகளிலும் அகதிக ளாக வெளியேறுகின்றனர். இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஒருவருடம் கழிந்துவிட்டது. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் இன்னும் நம்பிக்கை பிறக்க வில்லை.

அரசாங்கம் தமிழ் மக்களின் அபிலா ஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய எந்த ஒரு தீர்வு யோசனையையும் முன்வைக்க மாட்டாது என்றே பெரும்பாலான தமிழர்கள் நம்புகின்றனர். இதன் காரணமாக இன்றில்லாவிட்டாலும் இன்னும் ஒரு காலத்தில் நாடு அமைதி இழக்கலாம் என்ற அச்சம் இருந்து வருகிறது.

அகதிகள் வெளியேற்றத்தை அரசு தடுத்து நிறுத்த வேண்டுமானால், இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படக்கூடிய அரசமைப்பு சீர்திருத்தத்தை ஏற்படுத்த வேண்டும். அரசு தனது பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்தி தீர்வு ஏற்படுத்துமானால் நாட்டில் நிரந்தர அமைதி ஏற்படும். இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் இப்படியான கப்பல் பயணங்களும் நின்றுவிடும்.

பிந்திய கட்டுரை ( கனேடிய தேசிய பத்திரிகை )

http://www.theglobeandmail.com/news/national/british-columbia/migrant-ship-not-yet-in-canadian-waters/article1656503/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.