Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திண்ணைக்குக் காத்திருந்த வீரர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திண்ணைக்குக் காத்திருந்த வீரர்கள்

GTNற்காக ஆனந்தத் தாண்டவன்:‐

நன்றி சிரச ரீவி:‐ வீடியோ கிளிப்

வீடியோ கிளிப்பில் உள்ள உரைகளின் தமிழாக்கம்:‐

முல்லைத் தீவு புதுக்குடியிருப்புப் பிரதேசத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீரங்கா விஜயம் செய்திருந்தார். அவர் பங்கு கொண்ட நிகழ்வென்றில் ஆற்றிய உரைகள் இங்கு தரப்படுகிறது. இந்த உரை சிரச தொலைக்காட்சிச் சேவையின் செய்தியில் இருந்து பெறப்பட்டது. அதன் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.

எஸ்.பீதாம்பரம்‐ அதிபர் சிதம்பரப்புரம் அரச தமிழ் பாடசாலை

எமது புதுக்குடியிருப்பு எல்லைக்குள் ஒருமுறை காலடி எடுத்து வைத்து பாருங்கள், பிரதேசம் மயானத்தை விட கேவலமாக இருக்கிறது. பாலைவனத்தை விட மோசமான நிலையில் காணப்படுகிறது. ஒரு இடத்தில் சடலம், ஒரு இடத்தில் மக்கள் உணவை உண்ணுகின்றனர். சடலத்தை புதைக்க மண்னை தோண்டும் போது, மற்றுமொரு சடலம் மண்ணுக்குள் இருக்கின்றது. இவ்வாறுதான் நாங்கள், முள்ளிவாய்க்கால், பொக்கனை பிரதேசங்களில் வசித்து வந்தோம். எம்மை காப்பாற்றுவார்கள் என நம்பியிருந்தோம். எவரும் வரவில்லை. உடைந்து போயுள்ள எமது வீடுகளை மீண்டும் நிர்மாணித்து வாழ எமக்கு விருப்பம். நல்ல முறையில் வாழ்ந்து எமது பிள்ளைகளுக்கு கற்பிக்க நாங்கள் ஆசையுடன் இருக்கின்றோம்.

எஸ் . சண்முகம் ‐ ஓய்வுப்பெற்ற ஆசிரியர்.

இன்னும் பெரியாக்கள் வந்து எங்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கின்றனர். அவர்களின் பிள்ளைகள் இங்கு இல்லை இந்தியாவில் இருக்கின்றனர், இங்கிலாந்திற்கு சென்று கல்விக் கற்கின்றனர். இங்கு வந்து சம்பந்தன் உள்ளிட்ட அனைவரும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். நான் உங்களை தொலைக்காட்சியில் பார்த்திருக்கின்றேன், உங்கள் நிகழ்ச்சிகளை பார்த்திருக்கின்றேன், அந்த நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்பவர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது திக்குக்காடி போகின்றனர். நீங்கள் புத்திசாலித்தனமான இளைஞர்.

ஸ்ரீரங்கா ‐நாடாளுமன்ற உறுப்பினர் ‐ ஐக்கிய தேசியக் கட்சி (தற்போது நாடாளுமன்றில் தனித்து இயங்குவதாக அறிவித்துள்ளார்)

புதுக்குடியிருப்பாக இருக்கலாம் அல்லது வவுனியாவாக இருக்கலாம். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. தம்மிடத்திற்கு வரும் அனைவரையும் நன்றாக வாழவைக்கும் சமூக

சூழ்நிலையில் தான் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தனர். விவசாயம் உள்ளிட்ட ஏனைய தொழில்களும் முன்னேற்றகரமாக இருந்த வந்தது. நெல் மூட்டைகள் குவிந்து கிடந்தன. வழியில் செல்வோரைக் கூட அழைத்து உணவை வழங்கும் மக்களே இந்த பிரதேசங்களில் வாழ்ந்து வந்தனர். தற்போது இந்த பிரதேசங்களில் உள்ள பிள்ளைகள் காலையில் உணவுக்கு எதுவுமில்லாது, பரீட்சை நிலையங்களில் மயங்கி விழும் நிலைமை காணப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்

அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என்று தமிழில் ஒரு பழ மொழி இருக்கிறது. அண்மைய நிகழ்வுகள் பலவற்றைப் பார்க்கிற போது அந்தப் பழமொழி அடிக்கடிஞாபகத்திற்கு வந்து தொலைப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

திண்ணையிலிருந்த அண்ணன் சரியாக இருந்திருந்தால் இப்படி தமிழ் மக்கள் அல்லற்பட்டிருக்க வேண்டியிருந்திருக்காது என்பது வேறு விடயம்.

தமிழ் மக்கள் என்ற கப்பலைக் கட்டியிழுத்து வந்து சோமாலியாக் கடலில் விட்டது போல இருக்கின்றது இன்றைய தமிழ் மக்களின் நிலைமை என்று யாரோ ஒருவர் எங்கோ சொல்லியிருந்தார்.

எவ்வளவு யதார்த்தமான வரிகள். தமிழ் மக்களுடைய நிலங்களும் வளங்களும் ராஜபக்ச சகோதரர்களால் நாளாந்தம் கொள்ளையிடப்பட ஆரம்பிக்கப்பட்டு விட்டது.. தமிழ் தேசியக்கூட்டமைபின் செய்தியாளர் மாநாட்டில் முல்லைத்தீவிலும் கிளிநொச்சியிலுமாக ஏறத்தாழ பத்தாயிரம் ஏக்கர் நிலங்களிலிருந்து தமிழ் மக்கள் நிரந்தரமாக விரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ ஒரு இலட்சம் இராணுவத்தினருக்கான குடியிருப்பு வசதிகள் அங்கு உருவாக்கப்படுவதற்கான வேலைகள் அங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிப்பாயும் மiனைவி இருகுழந்தைகள் என சராசரியாக நால்வர் கொண்ட குடும்பத்தினரைக் கணக்கிட்டாலே நான்கு இலட்சம் பேர் வடக்கில் மாத்திரம் குடியமர்த்தப்படவுள்ளனர். இது தவிர அவர்களுக்கான பாடசாலை, வங்கி, அரச அலுவலகங்கள், வைத்தியசாலைகள் என எல்லாவற்றிலும் பணியாற்றுபவர்களுமாகச் சேர்த்து இன்னும் ஒரு இலட்சம் பேரைக் கணக்கிட்டால் மொத்தமாக ஐந்து இலட்சம் பேர் குடியமர்த்தப்படவுள்ளனர்.

வடக்கில் தற்போதுள்ள தமிழர்களின் மொத்த சனத்தொகையே பத்து இலட்சம் தான் ஆக, சரி அரைவாசியான ஐந்து இலட்சம் பேர் குடியமர்த்தப்பட்டதும் வடக்கின் இனப்பரம்பல் முற்றாக மாறிவிடும்.

இலங்கையில் சிறுபான்மை இன மக்களான தமிழர்கள் முஸ்லிம்கள் மலையக மக்கள் என அனைவரதும் இனப்பரம்பரை முற்றாக மாற்றியமைத்து அவர்களைச் செறிவான பலமுள்ள ஒரு அரசியல் சக்தியாக இல்லாமற் செய்வதில் இலங்கை சுதந்திரமடைவதற்குச் சற்று முன்பிருந்தே சிங்கள்பௌத்த பேரினவாதிகள் முனைப்புடன் செயற்பட்டு வந்தார்கள்.

விளைவாக அம்பாறை, மாவட்டம் திகாமடுல்ல என்ற பெயரில் முழுச் சிங்கள மாவட்டமாகவே மாறிவிட்டது. அங்கு பெரும்பான்மையினராக இருந்த முஸ்லிம்கள் சிறுபான்மையினராக்கப்பட்டு விட்டார்கள்.

திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்கள் எவ்வாறு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறித்து தொடர்ச்சியாக குரல் கொடுக்கப்பட்டு வருகின்றது.

1984இல் முல்லைத் தீவின் கொக்கிளாய் நாயாறு பிரதேசங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் மக்கள் மீளக் குடியேற்றப்படுவது குறித்து அதன் பின்னர் வந்த இலங்கை இந்திய ஒப்பந்தம் உட்பட எவையும் அக்கறைப்படவில்லை.

ஆனால் 1980களின் இறுதியில் வடக்கிலிருந்து வெளியேறிய பின்னர் வெளியேற்றவும்பட்ட சிங்கள மக்களை மீளக் குடியேற்றுவது பற்றி அரசம் சிங்களப் பேரினவாதிகளான சம்பிக்க ரணவக போன்ற பலரும் பேச ஆரம்பித்து விட்டது மட்டுமன்றி அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட ஆரம்பித்து விட்டார்கள்.

துரதிர்அதிஸ்டவசமாக தமிழில் இது குறித்து பேச எவரும் அற்ற நிலை என்றாகி விட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டும் தான் தற்போது இந்தத் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைப் பற்றி கொஞசமாவது குரல் கொடுக்கிறது. ஆனால், கிழக்கின் முதல்வர் சந்திரகாந்தனோ காலத்திற்கொவ்வாததைப் பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேசுகின்றதென்கிறார்.

தமிழ் மக்களுடைய அரசியற் கோரிக்கைகளை மழுங்கடிக்க அரசால் உரமூட்டி வளர்க்கப்பட்ட கும்பல்களுள் ஒன்று தான் இந்த பிள்ளையான் கோஸ்டியும். இதற்கு கிழக்கின் மண்வாசம் பூச புலம் பெயர்ந்த தமிழர் சிலர் முயன்று தோற்றுப் போயினர்.

மற்றையது டக்ளஸ் தேவானந்தா. அவருடைய இணக்கப்பாட்டு அரசியல் சுயமாக அவரது கட்சி தனது சின்னத்திலேயே போட்டியிட முடியாதது வரை கொண்டு வந்து விட்டுள்ளது. தனக்கு கோவணம் போனாலும் மானமிருக்கிறது என்று சொல்கிற பிரகிருதி அவர்.

கிளிநொச்சியில் ஏ9 வீதிக்கப்பால் இருக்கிற நான்காயிரம் ஏக்கர் காணியை படையினர் சுவீகரித்துள்ளனர். அதன் ஒரு பகுதியில் அரசாங்க அதிபரால் குடியேற்றப்பட்ட மக்களையும் கலைத்து விட்டு படையினர் சுவீகரித்துள்ளனரே என்று பிபிஸி அவரிடம் கேட்ட போது அவர் அப்படி ஒரு தகவலும் எனக்குக் கிடைக்கவில்லை. இப்போது தான் அறிகிறேன். விசாரித்து அப்படி நடந்தால் உடன் நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னவர்.

மீள்குடியேற்றத்திற்காகக் கிளிநொச்சி கொண்டு போகப்பட்ட மக்கள் தமது நிலங்களில் குடியேற்றப்படாமல் பாடசாலைகளில் தடுத்து வைக்கப்பட்டது தொடர்பாக தொடர்ந்து குரல் எழுப்பி வந்திருக்கிறார்கள். ஊடகங்கள் தொடர்ந்து அதனைச் சுட்டிக்காட்டி வந்தன. அப்படி இருந்தும் அவர் இது குறித்து பிபிஸி கேட்கும் வரை எதுவும் அறியாதிருந்திருக்கிறார் என்றால் அதனை எப்படி வர்ணிப்பது? மக்களின் அடிப்படையான பிரச்சினை பற்றி அறியாத ஒருவரை எவ்வாறு மக்கள் பிரதிநிதி என்று சொல்ல முடியும்? தமிழ் மக்களில் ஒரு சாரார் இதனை அரசாங்கத்தின் கூலிப்படை என்று சொல்வதை மறுக்க ஏதாவது காரணங்களிருக்க முடியுமா?

மற்றையவர் கருணா. ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக மாறி வருபவர். நோகாமல் அடிக்கிறேன் ஓயாமல் அழு என்று சொல்வதைப் போல அரசாங்கம் தனியார் காணிகளை எடுக்க அனுமதியேன். அரசாங்கத்திற்கு வேண்டுமானால் அங்குள்ள அரச காணிகளை எடுக்கட்டும். ஆனால் தனியார் காணிகளை எடுக்க அனுமதிக்க முடியாது. இது குறித்து அரசாங்கத்துடன் பேசி தகுந்த நடவடிக்கை எடுப்பேன் என்று பல நேர்காணல்களில் சொல்லி வந்தவர். அந்த நேர்காணல்கள் வெளியாகியே மாதக்கணக்கில் ஆகிவிட்டது. ஆனால் அவரால் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை. கேட்டால் இன்னொரு நேர்காணலிலும் அவர் இதே பதிலைச் சொல்லக் கூடும்.

டக்ளஸிலிருந்து கருணா பிள்ளையான் ஈறாக இவர்கள் எல்லோரையும் புலிகள் சொன்னது போல துரோகிகள் என்று நாங்கள் சொல்லப் போவதில்லை. ஆனால், இவர்கள் சொல்வதும் செய்வதும் தமிழ் மக்களுடைய அரசியல் வரலாற்றில் ஒன்றும் புதிதல்லவே.

காலத்திற்குக் காலம் தமிழரசுக்கட்சியிலிருந்தும் தமிழ் காங்கிரஸிலிருந்தும் தமிழர் விடுதலைபக் கூட்டணியிலிருந்தும் ஆளும் அரசாங்கங்கள் ஓரிருவரைப் பிடுங்கி எடுத்துவிடும். பின்னர் அவர்களைப் பாவித்து தமிழ் மக்களுடைய அரசியற் கோரிக்கைகளையும் அரசியல் அபிலாசைகளையும் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும். இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இற்றை வரை அது தான் தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது.

இந்தப்பட்டியலில் இப்போது கடைசியாக வந்து சேர்ந்திருக்கிறார் ரங்கா. கொழும்பு பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்ததோடு அப்போது மீன்பிடித்துறை அமைச்சராக இருந்த மஹிந்த ராஜபக்சவின் அமைச்சின் கீழ் ஒரு இணைப்பாளராகப் பதவி ஏற்றார். அதிலிருந்து தொலைக்காட்சி ஊடகத்திற்கு வந்தார். அயோக்கியர்களின் புகலிடம் அரசியல் என்பதாகத் தான் நினைவு. இனி தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சி என்றும் சேர்த்துச் சொல்லலாம்.

அவர் தொலைக்காட்சியில் இணைந்ததும் ஒரு அரசியல் நிகழ்ச்சியை ஆரம்பித்தார். அந்த நிகழ்ச்சி தமிழ் முஸ்லிம் மற்றும் மலையக மக்களுடைய அரசியல் நிலவரங்கள் பற்றி பேசுவது போலத் தோன்றினாலும் அதன் சாராம்சம் வேறாக இருந்தது. அது ஒவ்வொரு இனக்குழும அரசியல் பிரதிநிதித்துவத்திற்குமிடையே மோதல்களைத் தூண்டி விடுவதனூடாக அவர்களைப் பிரித்தாளும் பேரினவாத சூழ்ச்சிக்கு வழிகோலியது. ஆக்கபூர்வமான அரசியல் முன்னெடுப்புக்கு அது வழிகோலியதாக ஒரு போதும் இருக்கவில்லை. மாறாக ஒரு வெகுஜனத் தொலைக்காட்சிக்குத் தேவையான "கொசிப்" அரசியலை வளர்த்தெடுத்தது. அதனை மிகத் தந்திரோபாயமாகக் கையாண்டது. உதாரணமாக மலையகத்தில் இதொகா மற்றும மலையக மக்கள் முன்னணியின் நடவடிக்கைகள் நிலைப்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை கிளப்பிய இந்நிகழ்ச்சி மலையக மக்கள் தொடர்பில் ஆளும் அரசாங்கம் எடுத்துவரும் நிலைப்பாடுகள் குறித்து அதே கடுமையுடன் விமர்சனங்களை மேற்கொண்டதாகப் பதிவில்லை.

அந்த வகையில் பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்குப் பெரும் பணியாற்றியிருக்கிறார் ரங்கா. அதன் விளைவு தான் அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஆசனம்; வழங்கப்பட்டதும்.

ஐக்கிய தேசியக்கட்சியில் ஆளுமை செலுத்தும் பிரபல வர்த்தக நிறுவனம் மற்றும் முக்கியஸ்த்தர்கள் ஊடாக கொடுக்கப்பட்ட அழுத்தம் ரங்காவிற்கு நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஆசனம் வழங காரணமாயிற்று.

மகிந்தவுடனும் மகிந்த குடும்பத்துடனும் நல்லுறவுள்ள ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பது இவர்களது வியாபார நோக்கங்களுக்கு வசதியானது என்பதை அவர்கள் அறியாதவர்கள் அல்ல.

பாராளுமன்றப் பிரதிநிதியாகிய ரங்கா முதலில் செய்தது தனது அரசியலுக்கு வசதியாக தான் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இருக்காது நடுநிலையாக(?) இருக்கப் போவதாக அறிவித்தது தான்.

srirangawithnamal3.jpg

மலையகத்திலும் முஸ்லிம் தலைமைத்துவங்கள் மத்தியிலும் சிதைவுகளை ஏற்படுத்தப் பாவித்த ரங்காவை தற்போது வடக்கு நோக்கித் திருப்பியிருக்கிறது பேரினவாத அரசு. அவர்களுடைய தற்போதைய இலக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு .

கடந்த வாரம் தனது பரிவாரங்களுடன் வன்னிக்கு விஜயம் செய்த அவர் அந்த மக்களைப் பார்த்து முதலைக்கண்ணீர் வடித்திருக்கிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான குரல் எழ ஆரம்பித்திருக்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிதானத்துடன் மக்களுடைய பிரச்சினைகளைக் கையிலெடுத்துக் கொண்டு முனைப்புடன் செயலாற்ற வேண்டிய காலமிது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லையேல் இந்த முதலைக் கண்ணீர் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அடித்துச் சென்று விடும்.

மறுபுறத்தில் ரங்கா உண்மையிலேயே வன்னி மக்களுக்காக வருந்துவாரென்றால் அவர் மிக நெருக்கமாக உள்ள ஜனாதிபதியிடம் உண்மை நிலவரங்களை எடுத்தக்கூறி அந்த மக்களின் மீள் குடியேற்றத்திற்கு உதவும் வகையில் அந்த மக்களுடைய காணிகளை படையினர் எடுப்பதைத் தடை செய்யலாமே? அதை விடுத்து அந்த மக்களின் வலியிலும் துயரிலும் குளிர்காய நினைப்பதென்ன?

இவரும் திண்ணைக்குக் காத்திருந்த வீரரோ?

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=28045&cat=1

Edited by nunavilan

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒழுங்காக செயற்பட்டால் ஏன் மற்றவர்கள் உள்ளே புகப்போகிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்போ டக்ளசோ கேபியோ கருணாவோ யார் மக்களுக்கு சேவை செய்கிறார்களோ அவர்களின் பின்னால் மக்கள் அணிதிரள்வர்கள்.

விடுதலைப்புலிகளின் பின்னால் மக்கள் திரண்டதற்கு காரணம் அவர்கள் வாய் வீரத்தை விட்டு செய்து காட்டினார்கள். இதுவரையும் புலிகளின் பெயரை சொல்லி மக்களின் மேல் சவாரிசெய்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இனியும் நாற்காலிக்கு பாரமாக இருப்பார்களாயின் மக்கள் வேறு தெரிவுகளைத்தான் நாடுவார்கள்.

ரங்காவினது மருமகன் திரு.ரவீந்திரன் பேபிசாந்தன், அண்மையில் கருநாயுடனும் கோத்தபாயயுடனும் எடுத்த புகைப்படம்... இவர் யாழில் இருந்தபோது விடுதலைப்புலிகளின் ஆதரவாளராகவும், கொளும்பு சென்று கருநாயின் ஆதரவாளராகவும், தான் படித்த யாழ் இந்துக்கல்லூரியை தோமஸ் கல்லூரியாகவும் மாற்றி இருக்கின்றார்.... ரங்காவின் குடும்பத்தார்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போது மாறுவதுஎன்பது சுலபமான ஒருசெயல்...

post-6898-083297100%201280981444_thumb.jpg

post-6898-005462600%201280981460_thumb.jpg

post-6898-083297100 1280981444_thumb.jpg

post-6898-005462600 1280981460_thumb.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெபிஸ்கந் அவர்களை நீண்ட நாட்களாக எனக்கு தெரியும் அவர் ஒருபொழுதும் விடுதலைப்புலிகள் ஆதரவாளராக இருந்ததில்லை......அனால் அவர் ஒரு சந்தர்ப்பவாதி என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.......................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.