Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க் குற்றவியல் நீதி மன்றத்தில் குற்றவாளிகளை நிறுத்த வேண்டும்! பாகம் 11

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர்க் குற்றவியல் நீதி மன்றத்தில் குற்றவாளிகளை நிறுத்த வேண்டும்! பாகம் 11 – அரசியல் ஆய்வாளர் க. வீமன்

* இவ் விடயம் 04. 08. 2010, (வெள்ளி), தமிழீழ நேரம் 16:05க்கு பதிவு செய்யப்பட்டது கட்டுரைகள்

சிங்களவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் நீதி மன்றங்ககள் தமிழர்களுக்கு அநீதி இழைத்து வருகின்றன நியாயம் இன அடிப்படையில் வழங்கப்படுகிறது தமிழர்கள் பிரிந்து சென்று தனி நாடு அமைக்கத் தீர்மானித்ததிற்கு சிறிலங்கா நீதி மன்றங்களில் அவர்கள் கொண்ட வெறுப்பு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைகிறது.

இரணைப்பாலையில் இனிமேலும் தங்க இயலாது என்ற நிலை தோன்றியவுடன் மீண்டும் எமது நெடிய பயணம் தொடர்ந்து இரணைப்பாலைக்கு சற்றுத் தொலைவில் இருக்கும் தொழிற் பேட்டைக் கிராமமான ஆனந்தபுரம் வான் தாக்குதல் ஆட்டிலறி பல்குழல் எறிகணை வீச்சு கொத்துக் குண்டு என்பனவற்றால் முற்றாக அழிக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டோம்.

ஆனந்தபுரத்தில் உயிரிழப்பு மிக அதிகமாக இருந்தது இதுவரை ஆனந்தபுரம் உயிரிழப்புகள் பற்றிய துல்லியமான விவரங்கள் கிடைக்கவில்லை ஆனால் தப்பியோட முடியாமல் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டதாம் என்ற விவரம் மாத்திரம் எமக்கு கிடைத்தது.

ஆனந்தபுரத்தில் பெருந்;திரளான மக்கள் பதுங்கி வாழ்கிறார்கள் என்ற தகவல் எதிரிக்கு கிடைத்துள்ளது இந்தத் தகவலைத் தரையில் இருந்து யாரோ வழங்கி உள்ளனர் என்பது மாத்திம் உறுதியாகத் தெரிய வருகிறது.

இந்திய றோ உளவுத்துறையினர் ஐம்பது பேர் வன்னியில் மக்களோடு மக்களாக உலாவியுள்ளனர் இது எப்படித் தெரிய வந்ததென்று பார்ப்போம்.

வன்னியில் உலாவிய றோ அமைப்பினர் தொடக்கத்தில் சிறிலங்கா அரசிற்குத் தெரியாமல் நிலை எடுத்தனர் இது இராணுவத்தினருக்குத் தெரிய வந்தவுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சு றோ உளவாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படி சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சிற்கு அழுத்தம் கொடுத்தது.

இந்த ஐம்பது றோ அமைப்பினர்கள் நன்றாகத் தமிழ்ப் பேசும் தமிழ்ப் பேசும் தமிழ் நாட்டவர்களாக இருந்தனர் அவர்களுடைய கட்டளை அதிகாரிகள் மாத்திரம் தமிழ் பேசும் வட இந்;தியர்களாக இடம் பெற்றனர்.

சிறிலங்கா அரசின் அனுமதியுடன் றோ உளவுத்துறையினர் இலங்கைத்தீவின் பல பாகங்;களில் ஊடுருவியுள்ளனர். இந்த ஊடுருவலை அழைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு என்று ஒரு சிங்கள அரசியல் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவின் இறைமைப்பற்றிப் பெருங்குரலில் பேசித்திரிந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் வவுனியா நகரி;ல் றோ அலுவலகம் திறப்பதற்கு அனுமதி அளித்திருந்தார்.

ராஜீவ் காந்தி காலத்தில் ஈழத் தமிழர்களுக்கு இந்தியா வழங்கும் உணவு என்று சொல்லிச் சில அரிசி மற்றும் பருப்பு மூட்டைகளை விமானம் மூலம் இந்திய அரசு தமிழர் தாயகத்தின் தரை மீது போட்டது நினைவிருக்கலாம்.

இன்றும் கூடச் சிங்களவர்கள் இந்த அத்து மீறல் பற்றிப் பொருமிக் கொண்டிருக்கிறார்கள் அரிசி பருப்பு மூட்டைகள் வீசப்பட்ட சம்பவம் இன்றும் கடும் விமர்சனத்திற்கும் கண்டனத்திற்கும் உட்படுகின்றது.

அப்படியான சிங்;கள விமர்சகர்கள் இந்திய வேவு விமானங்களும் றோ அதிகாரிகளுக்கு உணவுப் போடும் விமானங்களும் சிறிலங்கா வான்பரப்பில் சுதந்திரமாகப் பறந்து திரிவது பற்றி மூச்சு விடுவதில்லை.

கிளிநொச்சி வீழ்ச்சிக்குப் பின்பு றோ அதிகாரிகள் அடங்;கிய விமானம் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு கிளிநொச்சிக்கு மேலால் பல முறை பறந்துள்ளது வட பகுதி முழுவதையும் இந்த விமானம் கண்காணித்துள்ளது.

இது சிறிலங்கா அரசிற்கும் எதிர்கட்சியினருக்கும் நன்றாக தெரியும் விடயம் தமிழர்களுக்குச் சில அரிசி பருப்பு மூட்டைகளை போட்டால் அவர்களுக்கு கோவம் வரும் ஆனால் தமிழின அழிப்பிற்காப் பறந்து வரும் இந்திய விமானங்களை அவர்கள் வர வேற்கிறார்கள்.

விடுதலைப் புலிகள் இரணைமடுக் குளத்திற்கு பின்புறமாகவுள்ள தரைப் பரப்பில் ஒரு விமான ஓடு பாதை இந்திய உலங்கு வானூர்திகள் விமானங்கள் என்பனவற்றால் பயன்படுத்தப்படுகிறது.

இந்த வகையில் இந்திய-சிறிலங்கா இரு தரப்பு ஒத்துழைப்பு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. இந்திய உயர்மட்ட அரசியல் தலைவர்கள் சிறிலங்கா இனப்பிரச்சினைக்குத் தீர்வாகப் பாடும் பல்லவியை எம்மால் மறக்க முடிய வில்லை.

பிளவுபடாத தீவுக்குள் எல்லா இனங்களும் ஏற்கும் அரசியல் தீர்வை நாம் விரும்புகிறோம் இது தான் நாம் கேட்டு அலுத்துப் போன பல்லவி. பிளவு படாத தீவு பற்றிப் பேசும் இந்தியா பாக்கிஸ்தான் நாட்டைப் பிளவு படுத்த எடுக்கும் முயற்சிகள் பற்றி அறிந்தால் இந்திய அரசின் கபட எண்ணங்கள் பற்றி அறிய உதவியாக இருக்கும்.

பாக்கிஸ்தானுக்குச் சொந்தமான பலுச்சிஸ்தான் மாநிலத்தில் மக்கள் ஆதரவைப் பெருமளவில் பெறாத பிரிவினை இயக்கம் 1950 தொடக்கம் இயங்கி வருகிறது. அண்மைக் காலமாக பலுச்சிஸ்தான பிரிவினை இயக்கம் முனைப்புப் பெற்றுள்ளது இதற்குப் பின்னணியில் இந்தியா பல துணைத் தூதரகங்களைத் திறந்துள்ளது.

புpரிவினைக்குத் தூபமிடும் இந்தத் துணைத் தூதரகங்கள் பலுச்சிஸ்தான் போராளிகளுக்குப் பணம் மற்றும் ஆயுதங்களை வழங்குகிறது இது இந்தியாவுக்குப் பழகிப் போன இராசதந்திரம் என்பதில் ஐயமில்லை.

இந்தியாவின் செல்லப்பிள்ளையான பலுச்சிஸ்தான் விடுதலை இயக்கத் தலைவர் நவாப் அக்பர் பக்தி 2006ம் ஆண்டில் பாக்கிஸ்தான் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் காஷ்மீரில் பாக்கிஸ்தானின் ஊடுருவல் இருப்பது உண்மைதான் காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப் படாமல் இருக்கும் வரை பாக்கிஸ்தான்-இந்தியா உறவுகள் கொதிநிலையில் இருக்கும்.

இரணைப்பாலையில் இருந்து புறப்பட்ட மக்கள் கூட்டம் சிறிது தூரம் சென்ற பின் இரு கூறுகளாகப் பிரிந்து ஒரு தொகுதி மக்கள் மாத்தளன் நோக்கிச் சென்றனர் அடுத்த தொகுதியினர் இரட்டைவாய்க்கால் நோக்கிச் சென்றனர்.

மாத்தளன் கடலோரக் கிராமம் மிகவும் ஒடுங்கலான தரைப்பரப்பைக் கொண்டது ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் அங்கு குழுமி விட்டனர் இனப் படுகொலை செய்வதற்கு மிகவும் வசதியான இடமாக மாத்தளன் அமைந்தது.

படையினர் மும்முனைத் தாக்குதல்களை இந்த மக்கள் மீது நடத்தற் தொடங்கினர் தரை வான் கடல் தாக்குதல்கள் மக்களுக்குப் பேரிழவை ஏற்படுத்தின இராணுவத்தினர் பொக்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் முற்றுகைப் போர் முறையைத் தொடங்கினர்.

நாலாபுறமும் சுற்றி நின்று மக்களை தப்பியோட விடாமல் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் நிறுத்தித் தாக்குதல் நடத்தும் போர்முறை பொக்ஸ் எனப்படும் வழமையாக இது எதிரி இராணுவத்திற்கு எதிராக நடத்தப்படும் போர் முறையாகும் இங்கு அப்பாவி மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டது.

கடற்கரை முழுவதும் தமிழர்களின் பிணங்கள் என்று பிரபல இலண்டன் பத்திரிக்கையான ரைம்ஸ் இது பற்றிச் செய்தி வெளியிட்டது.

அதே பத்திரிகை மாத்தளன் படுகொலைகள் பற்றி மேலும் குறிப்பிடுகையில் தமது இராணுவ நடவடிக்கையில் தமிழ்ப் பொதுமக்கள் ஒருவராவது கொல்லப்படவில்லை என்ற அரசின் கூற்றை மாத்தளன் மறுதலிக்கிறது என்று பதிவு செய்துள்ளது.

மாத்தளன் மிகவும் ஆபத்தான இடம் என்பதை முன் கூட்டியே நான் அனுமானித்தேன் எனது சொல்லைக் கேட்கக் கூடிய சிலருடன் நான் வேறு இடம் செல்லத் தீர்மானித்தேன்.

இஸ்ரேயில் தயாரிப்பு டுவோரா அதிவேகத் தாக்குதல் படகுகள் தென்கொரியா வழங்கிய பீரங்கிக் கப்பல்கள் இந்தியாவின் கடற்கலங்கள் தாக்குதலுக்குத் தயாராக நின்றன உயிர்தப்புவது கடினம் என்பதை நான் உணர்ந்தேன்.

குடும்ப பந்தங்கள் மூட்டை முடிச்சுக்கள் அடங்கிய பாவனைப் பொருள்கள் ஒன்றுமே என்னிடம் இருக்கவில்லை இதனால் இஷ்டம் போல் என்னால் நகர முடிந்தது என்னுடைய துணி மணிகள் புத்தகங்கள் குறிப்பேடுகள் அனைத்தையும் நான் இழந்து விட்டேன்.

இரண்டு சேட்டு இரண்டு சாரம் முகம் துடைக்கும் துணி போர்த்துக்கொண்டு படுக்கும் சாயம் போன போர்வை என்பன என்னுடைய சொத்துக்களாக இருந்தன கையை மடக்கி தலைக்குக் கீழ் வைத்தபடி வெறும் தரையில் படுத்து உறங்க நான் கற்றுக்கொண்டேன்.

இரணைப்பாலையில் கண்ட கொடிய காட்சிகளை நான் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன் இன்னும் சில இருக்கின்றன பெற்றோர்களை இழந்த சிறுவர்களுக்காகத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் நிறுவிய செஞ்சோலை வளாகத்தின் மீது விமானப் படையின் கிபீர் விமானங்கள் நடத்திய தாக்குதல்கள் நினைவு இருக்கலாம்.

அதே வளாகத்தில் வன்னியில் இருக்கும் கல்லூரிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவிகள் முதலுதவிப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்தக் குண்டு வீச்சு நடத்தப் பட்டது இதில் 65 மாணவிகள் உடல் சிதறிப் பலியாகினர் பலர் படுகாயம் அடைந்தனர்.

இப்போது நல்ல பிள்ளையாக நடித்துக் கொண்டிருக்கும் அப்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேக்கா குண்டு வீச்சுக்குப் பின் என்ன சொன்னார் தெரியுமா? கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது 300 மாணவிகளைக் கொல்ல நாம் திட்டமிட்டோம்.

தொடரும்.

http://www.nerudal.com/nerudal.18152.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.