Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட பிராந்திய மக்களின் மனங்களில் விடுதலைப் புலிகள் தொடர்பில் இன்னமும் ஆதரவு உள்ளது: -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட பிராந்திய மக்களின் மனங்களில் விடுதலைப் புலிகள் தொடர்பில் இன்னமும் ஆதரவு உள்ளது: - கோத்தபாய -

திகதி:18.08.2010,

வடபகுதி வாழ் மக்கள் மீது அரசாங்கத்துக்கு அதிகபட்சமான சந்தேகம் உண்டு. எனது நிலைப்பாடும் அதுவே. அந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த மக்களின் மனங்களில் விடு தலைப் புலிகள் தொடர்பில் இன்னமும் அனு தாபம் உள்ளது.

வடபகுதியைச் சேர்ந்த மக்கள் மத்தியில் சரண் அடையாத விடுதலைப் புலிகள் இன் னும் எத்தனை பேர் உள்ளனர் என்றோ, அடையாளம் காணப்படாதவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்றோ எமக்குத் தெரியாது. அவர்களில் பலர் பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகளின் கொள்கைகளுக்கு ஆதரவாக மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள். அவர்களே மிக மோசமானவர்கள். அவர்கள் தொடர்ந்தும் புலிகளுக்கு ஆதரவளிப்பார்கள் என்பது சர்வ நிச்சயம்.

இவ்வாறு தெரிவித்திருக்கிறார் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு முன்னால் நேற்று சாட்சியம் அளிக்கையிலேயே பாதுகாப்புச் செயலாளர் இதனைத் தெரிவித்தார். இந்த ஆணைக்குழுவின் விசாரணை நேற்று ஆறாவது நாளாக நடைபெற்றது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற விசார ணைகளின் போது கோத்தபாய ராஜபக்ஷ மேலும் தெரிவித்தவை வருமாறு:

புலிகளின் கொள்கைக்கு ஆதரவாக மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் இன் னும் வடக்கில் உள்ளனர். அவர்களின் மன தில் புலிகள் தொடர்பில் அனுதாபம் இன் னும் உள்ளது. இவர்கள் தான் நாட்டுக்கு அச்சுறுத்தலானவர்கள். எனவே தான் வடக்கு மக்கள் மீது அரசு சந்தேசம் கொண் டுள்ளது.

போரின் இறுதிக் கட்டத்தில் 6,000 இரா ணுவத்தினர் கொல்லப்பட்டனர். 30,000 இற்கு மேற்பட்ட இராணுவத்தினர் காயமடைந்

தனர். இதே எண்ணிக்கையில் புலிகளும் கொல்லப்பட்டிருக்கலாம் என நான் நம்புகின்றேன்.

போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் சில குழுக்கள் தங்களைப் புலிகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக ஆயுதங்களை வைத்திருந்தனர். அவர்கள் அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளை ஆதரித்தனர்.

ஆனால் போர் முடிந்த பின்னர் அத்தகைய ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டுவிட்டன.

தங்களைப் பாதுகாப்பதற்காக போர்க் காலத்தில் கருணா, பிள்ளையான் அணிகளும் ஈ.பி.டி.பி.யினரும், புளொட்டும் ஆயுதங்களை வைத்திருந்தன.

இதேவேளை இலங்கை அரசை விமர்சிப்பவர்கள் புலிகளின் இழப்பையும், பொதுமக்களின் இழப்பையும் ஒன்றாக்கிக் குழப்பிக்கொள்கின்றனர். பொதுமக்களின் உயிரிழப்பைக் குறைப்பதற்கு இராணுவம் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் விடுதலைப் புலிகள் தான் தமது கட்டுப்பாட்டில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரமுயன்ற அப்பாவிப் பொதுமக்களை சுட்டுக்கொன்றனர்.

வடக்கு மக்களின் மனதில் புலிகள் தொடர்பில் இன்னமும் அனுதாபம் உள்ளது. முன்ளாள் புலிகள் எனச் சந்தேகிக்கப்படும் 12,000 பேர் சரணடைந்துள்ளனர். அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் மக்கள் மத்தியில் சரணடையாத புலிகள் எத்தனை பேர் உள்ளனர் என்றோ, அடையாளம் காணப்படாதவர்கள் எத்தனைபேர் உள்ளனர் என்றோ, எமக்குத் தெரியாது. அவர்களில் பலர் பல ஆண்டுகளாக புலிகளின் கொள்கைக்கு ஆதரவாக மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள். அவர்கள்தான் மிக மோசமான வகையினர். அவர்கள் தொடர்ந்தும் புலிகள் ஆதரவளிப்பவர்கள்.

அவர்களில் சிலர் அரச உத்தியோகத்தர்களாகவும் இருக்கலாம்; அது மிகவும் ஆபத்தானது. அத்தகையவர்கள் அரசுடன் முழுமையாக இணைந்து செயற்படமாட்டார்கள். பல்வேறு திட்டங்களுக்கு அரசு அளிக்கும் நிதியை அவர்கள் சரியாகக் கையாளாமல் போகலாம். இப்படி அரசிடம் சரணடையாதவர்களே தான் தொடர்ந்தும் நாட்டுக்கு ஆபத்தானவர்கள்.

வடக்கில் இராணுவத்தினரை நிலைகொள்ளச் செய்வது மிக அவசியம்

விடுதலைப் புலிகள் மீண்டும் வடக்கில் தலையெடுத்து அணி சேருவதற்கு இடம் கொடுக்காமல் இருப்பதன் பொருட்டு, கணிசமான எண்ணிக்கையான இராணுவத்தினரை வடக்கில் கடமையில் ஈடுபடுத்த வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடந்தும் கட்டுக்குலையாமல் செயற்படுகிறது. அதனாலும் வடக்கில் இராணுவத்தினரை நிலைகொள்ள வைக்கும் தேவை உருவாகியுள்ளது.

இதேவேளை வன்னியில் கடமையில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினருக்கு தங்குமிட வசதிகளே செய்துகொடுக்கப்படுகின்றன. அது சிங்களக் குடியேற்றங்களோ, இராணுவக் குடியேற்றங்களோ அல்ல என்றார் கோத்தபாய ராஜபக்ஷ.

போர் நடைபெற்ற வேளையில் விடுதலைப் புலிகள் பல சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அணியும் உடைகளை அணிந்து கொண்டே களத்தில் போராடினார்கள் அதனால் விடுதலைப் புலிகளையும் பொதுமக்களையும் வித்தியாசப்படுத்திக் காணமுடியாத நிலை பல சந்தர்ப்பங்களில் ஏற்பட்டது.

சங்கதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.