Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. வரும் ராஜபக்சாவை அமெரிக்கா கைது செய்ய முடியுமா என அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் பிரதம நீதியரசரிடம் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கருத்து கேட்டுள்ளது.

Featured Replies

ஐ.நா. வரும் ராஜபக்சாவை அமெரிக்கா கைது செய்ய முடியுமா என அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் பிரதம நீதியரசரிடம் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கருத்து கேட்டுள்ளது.

அமெரிக்கத்தமிழர் அரசியல் குழுவான ஒபாமாவுக்கான தமிழர்கள் அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் திரு.ஜோன் ரெபேட்ஸ் அவர்களிடம், அமெரிக்காவுக்கு பயணம் செய்ய இருக்கும் ராஜபக்சாவை (ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியும் அந்நாட்டின் உள்ளாட்டுப்போரில் போர்க்குற்றங்களின் சூத்திரதாரியுமான ) கைது செய்யமுடியுமா என கருத்துகளைக் கேட்டுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற இருக்கும் ஐக்கிய நாடுகளின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள அந்நாட்டிற்கு வருகைதரும் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சாவைக் கைது செய்ய முடியுமா என ஒபாமாவுக்கான தமிழர்கள் எனும் அமைப்பு அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் பிரதம நீதியரசருக்கு எழுதிய குறிப்பில் கேட்டுள்ளது.

“போர்க்குற்றம் புரிந்தனர் எனக் குற்றம் சாட்டப்பட்ட பலரை அமெரிக்கா முன்னைநாட்களில் கைது செய்து நாடுகடத்தியுள்ளது” எனக்குறிப்பிடும் ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்[பின் பேச்சாளர் “ எமது நாடு நாசிக்கள் என குற்றம் சாட்டப்ப்ட்ட பலரை அக்குற்றம் நிகழ்ந்த்தாகக் கூறப்பட்ட காலகட்டத்தின் பின்னர் பல பத்தாண்டுகள் கழிந்த நிலையில் கூட கைது செய்திருந்தது, எனவே இவ்வாறான கைதுகள் முன்னுதாரணமற்றவை அல்ல” என்றார்.

“எனினும் இது வித்தியாசமானது ஏனெனில் இப்போர்க்குற்றச் சாட்டுகளானது நீதிமன்றம் ஒன்றினால் முன்வைக்கப்படுவதல்ல மாறாக சர்வதேச மக்கள் அமைப்புகளான- சர்வதேச நெருக்கடிக் குழு, சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமை ஆணையம் போன்றவற்றால் முன்வைக்கப்படுவனவாகும். ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சாவின் கட்டளையின் கீழ் இயங்கும் ராணுவத்தினரால் போர்க்குற்றங்கள் புரியப்பட்டதற்கான பல ஆதாரங்கள் உள்ளன என இவ்வமைப்புகள் கூறுகின்றன.

”அகதிகளுக்கான பாதுகாப்பான பிரதேசங்கள், மருத்துவ நிலையங்களின் மேல் வலிந்து குண்டுகள் வீசுதல், மனிதாபிமான உதவிகள் செய்யும் நிறுவனங்களின் மீதான வன்முறைத்தாக்குதல் போன்றவை அனேகமாக எல்லோராலும் எவ் வகையான வரைவிலக்கணங்களின் கீழும் போர்க்குற்றங்களாக கருதப்படும்” என்றார் அப்பேச்சாளர்.

அவர் மேலும் தெரிவிக்கையில் “சிறைப்பிடிக்கப்பட்டோர் எதுவித விசாரணைகளுமில்லாமல் கொலைசெய்யப்பட்டதற்கு ஆதாரங்கள் உண்டு. இவ்வாதாரங்கள் எந்த நீதிமன்றத்தினாலும் இதுவரை விசாரணை செய்யப்படவில்லை, ஆனால் அமெரிக்க நீதிமன்று ஒன்று அவற்றைப் பார்வைக்கு எடுக்க விரும்பும் என நாம் நினைக்கிறோம்” என்றார்.

“பொஸ்னியாவில் போர்க்குற்றங்கள் நிகழ்ந்த்தாக அறிக்கைகள் தெரிவித்தபோது அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகள் தலையிட்டன என்பதனையும் நாம் குறிப்பிடோம்” எனவும் ”இராணுவத் தலையீடானது சட்டரீதியான தலையீட்டைப்போல் அவசியமானது எனவும் நாம் நினைக்கிறோம்” எனவும் குறிப்பிட்டார்.

“நாம் சட்டவல்லுனர்கள் அல்லர், பிரதம நீதியரசருக்கான எமது கடிதமானது அவரின் கருத்தைக்கேட்கும் முகமாகவே எழுதப்பட்டது. இது மிகவும் சிக்கலான விடயம் ,எனவே உயர்-சட்ட அறிவு தேவை. திரு.ரொபேட்ஸ் தனது கருத்தை எம்முடன் பகிர்ந்து கொள்வார் என எதிர்பார்க்கிறோம்” என்றார் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் பேச்சாளர்.

“இவ்விடயம் பொதுக்கருத்தாடல் ஒன்றுக்கு இட்டுச்செல்லும் என நாம் மேலும் எதிர்பார்க்கிறோம். சட்டத்தரணிகளும் நீதிபதிகளும் இதுபற்றி பேசும் நிலை வருமானால் இது ஒரு சரியான திசைக்கு இட்டுச்செல்லும்” எனச் சொன்ன அவர்

இவ்வகையான கடிதங்கள் அமெரிக்க சட்டமா அதிபர் எரிக் ஹோல்டர், உச்ச நீதிமன்ற நீதியரசர் திருமதி எலனா கேகன், நியூ யோர்க் மாநில சட்டமா அதிபர் அண்ட்ரூ கோமோ, செனட்டர் பற்றிக் லேஹி (நீதித்துறைக்கான செனற்குழுவின் தலைவர்) மற்றும் ஏழு உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் ஆகியோருக்கு எழுதப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பானது அரசியல்நடவடிக்கையில் ஈடுபடும் தமிழ் அமெரிக்கர்களின் அமைப்பாகும். எதோ ஒருவகையான அரசியல் ரீதியான பிரிவு ஒன்றை உள்ளடக்கிய திட்டம் ஒன்றே பெரும்பான்மைச் சிங்களவர்களின் மேலாதிக்கத்தின் கீழ்வாழும் இலங்லைத்தமிழர்களின் இனப்போராட்டத்துக்கான உயர் தீர்வாக இருக்குமென இவ்வமைப்பு நம்புகிறது.

தமிழர்கள் ஸ்ரீலங்காவின் வடகிழக்குப்பகுதியிலும் தென்இந்தியாவிலும் வாழும் இனப்பிரிவினர். ஐ.நாவின் அறிக்கைகளின் படி உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்காலத்தில் வாரத்துக்கு சராசரியாக 1,000தமிழர்களும், 2009 முழுவதுமாக அண்ணளவாக 40,000 தமிழர்களும் ஸ்ரீலங்கா அரசினால் கொல்லப்பட்டனர்.

உள்நாட்டு யுத்தத்தில் படுமோசமான பாதிப்புக்குள்ளான தமிழ்மக்கள் இவற்றை ஒரு மானிடப்படுகொலையாகவே பார்க்கிறார்கள். மூன்றில் ஒருபங்கு தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாடுகளில் குறிப்பிடத்தக்க அளவு புலம்பெயர் சமூகங்களைத் தோற்றுவித்துள்ளனர். ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு இவ்வ்வாறு புலம்பெயர்ந்து அமெரிக்காவில் குடியேறிய மற்றும் அமெரிக்காவில் பிறந்த தமிழர்களைக் கொண்டது.

(617) 765- 4394 தொலைபேசி எண்ணில் ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பின் ஊடகத்தொடர்பாளரிடம் தொடர்புகொள்ளலாம்

வெறும் பகல் கனவுதான்.

மகிந்தவுக்கு செங்கம்பள வரவேற்பு கிடைத்தாலும் கிடைக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.