Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாமலின் ஆதரவாளராக நடித்தவரால் இளம் யுவதி பாலியல் வல்லுறவு

Featured Replies

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரும்-அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸவின் ஆதரவாளர் என்கிற போர்வையில் 24 வயதுடைய இளம் யுவதி ஒருவரை ஏமாற்றி, கடத்தி, பாலியல் வல்லுறவு , கட்டாய திருமணம் செய்துகொண்ட நபரை ஒருவரை மாத்தறைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் இன்று கைது செய்துள்ளார்கள்.

இன்னொரு சகா மூலமாக இளம் யுவதிக்கு இப்பேர்வழி அறிமுகம் ஆகி இருந்தார். நாமல் ராஜபக்ஸ எம்.பி மூலமாக வேலை பெற்றுத் தருவார் என்று உறுதிமொழி வழங்கி இருந்தார். நாமல் ராஜபக்ஸ எம்.பியிடம் இருந்து சிபாரிசுக் கடிதம் ஒன்றை பெறுகின்றமைக்காக அக்குரஸ்ஸ பிரதேசத்துக்கு வர வேண்டும் என்று கேட்டிருந்தார்.

இளம் யுவதி கடந்த செவ்வாய்க்கிழமை அக்குரஸ்ஸவுக்கு சென்றிருக்கின்றார். இளம் யுவதியை ஏமாற்றுப் பேர்வழி அம்பலாந்தோட்டைக்கு அழைத்துச் சென்று கற்பழித்தார். பின் மிரட்டி பலாத்காரமாக திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் ஒருவாறு இப்பேர்வழியிடம் இருந்து தப்பி வந்த இளம்யுவதி மாத்தறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டு விட்டார். இதையடுத்தே ஏமாற்றுப் பேர்வழி கைது செய்யப்பட்டார்.

இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் இவருக்கும் நாமல் ராஜபக்ஸ எவ்வித தொடர்பும் கிடையாது என்றும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட இளம் யுவதி மாத்தறை வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=10060:2010-09-09-11-57-06&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

Edited by நிழலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.