Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளம்பெண்கள் குடும்பப் பாரத்தை சுமக்கும் நிலை: ஐ.நா. பிரதிநிதி நீல் புனே.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியில் இடம்பெற்ற போரினால் ஏற்பட்ட தாக்கமானது நினைத்துப் பார்க்க முடியாதளவிற்கு பாரிய எண்ணிக்கையிலான இளம் வயதுப் பெண்களை குடும்பத்தைப் பராமரிக்கும் நிலைமைக்குத் தள்ளிவிட்டிருப்பதாக ஐ.நா. இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் புனே தெரிவித்தார். சர்வதேச சமாதான தின நிகழ்வுகள் கொழும்பிலுள்ள ஐ.நா.அலுவலக வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபொழுது உரையாற்றிய நீல் புனே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்; கடந்த வாரம் புத்தளம், அநுராதபுரம், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளுக்கான விஜயமொன்றை நான் மேற்கொண்டிருந்தேன். வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மாணவர்கள், இளைய தலைமுறைகள் பாடசாலைகளுக்குச் செல்வதை அவதானிக்க முடிந்தது. போரினால் பாதிக்கப்பட்ட நிலையிலும் இச்சிறுவர்கள் பாடசாலைகளுக்கு செல்கின்றனர். கடந்த பல வருடங்களாக நடைபெற்ற மோதலினால் வடக்கு, கிழக்குப் பகுதிகளிலுள்ள இளம் சமுதாயத்தினர் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருந்தனர். இளம் சமுதாயத்தினர் பலவந்தமாக மோதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். போரினால் காயமடைந்தனர்.

இடம்பெயர்வுகளால் சமூக மற்றும் உளவியல் பாதிப்புக்கு உள்ளானதுடன் குடும்ப உறுப்பினர்களை இழந்து சொத்துகளை இழந்து பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்பட்டனர். அதேவேளை, போரினால் ஏற்பட்ட தாக்கமானது நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பாரியளவிலான எண்ணிக்கையுடைய இளம் வயதுப்பெண்களை குடும்பத் தலைவர்களாகக் கொண்ட பல குடும்பங்கள் உருவாகியுள்ளன.

இளம் வயதுப் பெற்றோர் மீது ஏற்பட்டுள்ள தாக்கத்தினை குறைப்பது பாரிய சவாலாக உள்ள நிலையில் அத்தாக்கத்தினை குறைப்பதற்கு ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புகளின் ஆதரவுடன் அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

சரியான கொள்கைகள் மற்றும் திட்டங்களின் மூலம்தான் மக்கள் சக்தி மிக்கவர்களாகவும் பொறுப்பு மிக்கவர்களாகவும் மாறமுடியும். அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் சரியான ஆதரவுதான் அவர்களை போரின் தாக்கத்திலிருந்து மீட்சிபெற வைக்கும். அத்துடன், வலுவான குடும்பங்களையும் வலுவான சமாதானமுள்ள சமூகத்தையும் கட்டியெழுப்ப மக்கள் தமது வல்லமையைப் பயன்படுத்தவேண்டும். சமூகப் பிரிவினைகளை இல்லாதொழிக்க இளம் சமூகத்தினரிற்கு உதவுவதற்கு இதுவே சிறந்த தருணமாகும். இதனை இலங்கையில் நான் சந்தித்த பல பிரமுகர்கள் கருதுகின்றனர். இதேவேளை, மொழிப்பயிற்சி மற்றும் கொள்கை வடிவமைப்புகளினூடு மொழி ரீதியாக உள்ள தடையைக் குறைக்க முடியும்.ஐ.நா. கடந்த 60 வருடங்களாக இலங்கையுடன் உறவைப் பேணிவரும் நிலையில் தற்போதுள்ள நெருக்கடியான சவால்களுக்கு தொடர்ந்தும் ஆதரவாக இருக்குமெனத் தெரிவித்தார்.http://www.tharavu.com/2010/09/blog-post_8071.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.