Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுமாத்தளன் பகுதியில் அப்பாவி மக்கள் மீதும் கொத்துக் குண்டுகளையும், பொஸ்பரஸ் குண்டுகளையும் வீசினர்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போரின் இறுதிக்கட்டத்தில் புதுமாத்தளன் பகுதியில் புலிகள் மீது வீசுவதாக நினைத்து, அப்பாவி மக்கள் மீதும் இலங்கை இராணுவத்தினர் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும், பொஸ்பரஸ் குண்டுகளையும் வீசினர். இவ்வாறு மக்கள் அனுபவித்த அவலங்களை பூநகரி வாசியான கமநல உத்தியோகத்தர் ந.சுந்தரமூர்த்தி நல்லிணக்க ஆணைக்குழுவிடம் விவரித்தார்.

அவர் வழங்கிய சாட்சியம்:போரின் இறுதிக்கட்டத்தில் புதுமாத்தளன் பகுதியில் புலிகள் மீது வீசுவதாக நினைத்து, அப்பாவி மக்கள் மீதும் இலங்கை இராணுவத்தினர் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும் (கிளஸ்ரர்), பொஸ்பரஸ் குண்டுகளையும் வீசினர். அதன் மூலம் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நாளொன்றுக்கு 400 முதல் 600 பேர் வரையில் பலியாகினர், 1,000 பேர் வரையில் காயமடையவும் நேரிட்டது.

இதேவேளை, பாதுகாப்பு வலயத்தில் இருந்து படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்ல முயற்சித்தபோது நாம் வெளியேறுவதைத் தடுப்பதற்காகப் புலிகள் பச்சை மட்டைகளால் அடித்தனர். அச்சுறுத்துவதற்காக வானத்தை நோக்கிச் சுட்டனர்.

இவ்வாறு போரின் இறுதிக்கட்டத்தில் இரண்டு தரப்புகளாலும் மக்கள் அனுபவித்த அவலங்களை பூநகரி வாசியான கமநல உத்தி யோகத்தர் ந.சுந்தரமூர்த்தி விவரித்தார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழு தனது விசாரணைகளை பூநகரி பிரதேச செயலகத்தில் நேற்று நடத்தியது. அவ்வேளை ந. சுந்தரமூர்த்தி தமது சாட்சியத்தில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்ததாவது:மனித நேய இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் மன்னாரில் இருந்து கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை நோக்கி நகர்ந்தது. யுத்தம் இடைவிடாது நிகழ்ந்ததால் மக்களும் தொடர்ச்சியாக இடம்பெயர்ந்துகொண்டே இருந்தனர். மன்னாரில் இடம்பெயரத் தொடங்கிய மக்கள் முள்ளிவாய்க்கால் வரை நகரவேண்டியிருந்தது. அதன்போது மக்கள் சந்தித்த அவலங்கள் கொஞசம் நஞ்சமல்ல. இந்த அவலங்களுக்கு போரில் ஈடுபட்ட இருதரப்புக்களுமே காரணமாக இருந்திருந்தன.பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் மக்களை ஓரிடத்தில் தஞ்சம் அடைய வைத்ததன் மூலம் புலிகள் தமது ஆளணியை இலகுவாகத் திரட்டவும் ஆயுதங்களை வைத்து இயக்குவதற்கு தளங்களை அமைக்கவும் அரசே வழிசமைத்துக் கொடுத்தது. அரசாங்கம் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தாவிட்டால் எமக்குரிய பாதுகாப்பான இடங்களை நாமே தேர்ந்தெடுத்து அழிவுகளை ஓரளவுக்கு குறைத்திருப்போம்.

பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்த போது உயிர் இழப்புக்களையும் அழிவுகளையும் நாம் சந்திக்க நேர்ந்தே இருந்தது. மக்களை அரணாக வைத்து படையினர் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தி விட்டு புலிகள் நகர்ந்ததும் அவ்விடத்தில் படையினரின் சரமாரியான எறிகணை வீச்சும் விமானக் குண்டுத்தாக்குதலும் நிகழும். இதனால் தினமும் 200பேர் வரையில் பொதுமக்களை இழக்கவேண்டியிருந்தது.

இதனால் பல தடவைகள் பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேறி படையினரின் கட்டுப்பாட்டுக்குப் பகுதிக்கு செல்ல முயற்சித்தோம். இதன்போது வெளியேற விடாது பச்சைமட்டைகளால் புலிகள் எங்களைத் தாக்கினர். எம்மை எச்சரிப்பதற்காக வானத்தை நோக்கிச் சுடவும் செய்தனர்.அதேவேளை தமது கட்டுப்பாட்டு பகுதி நோக்கி வரும் மக்கள் மீது படையினரும் துப்பாக்கி சூட்டை நடத்தினர். அதனால் தொடர்ந்தும் நாம் பாதுகாப்பு வலயத்துக்குள்ளேயே முடங்க வேண்டி ஏற்பட்டது. புதுமாத்தளன், சுதந்திரபுரம், அம்பலவன் பொக்கணை, வலைப்பாடு, வலைஞர்மடம் போன்ற பகுதிகளுக்குள்லேயே தொடர்ந்தும் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒருமுறை பாதுகாப்பு வலயத்துக்குள் படையினர் நடத்திய எறிகணை வீச்சில் 17 பெண்களும் 6 குழந்தைகளும் அவ்விடத்திலேயே உயிர் இழந்தனர்.

அவை முழுவதும் புலிகளின் கைகளுக்கே சென்றுவிடும். எனினும் தமது கையிருப்பில் இருந்த உணவுப் பொருட்களை நிவாரணமாக மக்களுக்குப் புலிகள் பகிர்ந்து வழங்கினர்.

தேங்காய் முதலான பொருட்களுக்கு பலத்த தட்டுப்பாடு நிலவியதால் ஒருசிலர் அயலில் உள்ள பகுதிகளுக்குச் சென்று தேங்காய் பிடுங்கி வருவார்கள். அவ்வாறு செல்பவர்கள் படையினரின் ஆழ ஊடுருவும் படையணியால் கொல்லப்பட்டார்கள்.

ஒருமுறை நாங்கள் தறப்பாளால் கட்டியிருந்த கூடாரத்தைச் சுற்றி விடியற்காலையில் சிறுகுழிகளில் உயிர் இழந்தவர்களின் சடலங்கள் புதைந்து கிடந்தன. அவர்கள் புலிகளின் தாக்குதலிலோ அல்லது படையினரின் எறிகணை வீச்சிலோ தான் கொல்லப்பட்டிருக்க வேண்டும். அங்கு பரவலாகக் காணப்பட்ட குழிகள் படையினரின் எறிகணை வீச்சிலேயே அவர்கள் பலியாகி இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தின.

பாதுகாப்பு வலயங்களில் தாக்குதலில் ஈடுபடும் விமானங்கள் மீது புலிகளும் எதிர்த்தாக்குதல் நடத்தினர். இதற்கும் பதிலடியாகப் புலிகள் மீது தடைசெய்யப்பட்ட கொத்துக்குண்டுகளையும்(கிளஸ்ரர் குண்டுகள்) , பொஸ்பரசு குண்டுகளையும் படையினர் வீசினர். இதன்மூலம் பொதுமக்களுக்கு பேரழிவு ஏற்பட்டது.

ஏறக்குறைய தினமும் 400 தொடக்கம் 600 பேர் வரை பலியாகவும் ஆயிரம் பேர் வரை காயமடையும் அளவுக்கு நிலைமை மோசமாகிப் போனது. அதன்பின்னர் மிகுந்த கஷ்டத்தின் மத்தியில் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து சேர்ந்தோம்.

இங்கேயும் நீண்டகாலம் நலன்புரி நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டும் தற்போது தான் மீளக்குடியேறியுள்ளோம். ஆனாலும் எங்கள் வீடுகளில் உள்ள எல்லாப் பொருட்களுமே சூறையாடப்பட்டுவிட்டன. நாங்கள் வந்தபோது இருந்த பல பொருட்கள் கூட அடுத்தநாள் சென்று பார்க்கும்போது மாயமாகிவிட்டன. மக்களின் வீடுகளில் இருந்த ஓடுகள் எல்லாம் இப்போது படையினரின் காவலரண்களில் இருக்கின்றன.

நடந்த கொடுமைகள் தொலைந்து இனியாவது மக்களுக்கு நன்மையே நடக்க வேண்டும். இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் எதுவுமே ஆக்கபூர்வமான நிலையை ஏற்படுத்தவில்லை. அவ்வாறில்லாமல் இந்த ஆணைக் குழு மூலமாவது மக்களுக்கு விடிவு கிடைக்கும் என நம்புகிறோம் என்றார் அவர்.

இதன்போது மேலும் சிலரும் வாய்மொழிமூல சாட்சியங்களை பதிவு செய்தனர். காணாமற்போனோரின் உறவினர்கள் பலரும் கடிதங்களையும் ஆணைக்குழுவினரிடம் சமர்ப்பித்திருந்தனர்.http://www.tharavu.com/2010/09/blog-post_261.html

ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு முன் சாட்சியமளிக்கும் நிகழ்வு இன்று மூன்றாவது நாளாக முல்லைத்தீவு நகரத்தில் இடம்பெற்றுகிறது. முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள் நடைபெற்ற சாட்சியமளிப்புக்களில் பெருந்துயர் மிக்க வார்த்தைகளும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. காணாமல்போன உறவுகள் குறித்தும் இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பிலும் துயர்மிக்க சம்பவங்கள் சாட்சிகளாக விபரிக்கப்பட்டுள்ளன.

எங்கள் உறவுகளை எங்களிடம் தாருங்கள் என்று கண்ணீரும் கம்பலையுமாக நேற் றுக் கிளிநொச்சியில் கரைச்சிப்பிரதேச சபை அலுவலகத்தில் நடைபெற்ற கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முன் சாட்சியம் அளித்த 350 இற்கும் மேற் பட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அவர்களில் பலர் கைது செய்யப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங் களையும், உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களையும் கைகளில் ஏந்தியவாறு சாட்சியம் அளிக்க வந்திருந்தனர்.

போரின் இறுதிக்கட்டத்தில் புதுமாத்தளன் பகுதியில் புலிகள் மீது வீசுவதாக நினைத்து, அப்பாவி மக்கள் மீதும் இலங்கை இராணுவத் தினர் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும் (கிளஸ்ரர்), பொஸ் பரஸ் குண்டுகளையும் வீசினர். அதன் மூலம் மக்களுக்கு பெரும் பாதிப்பு போரின் இறுதிக்கட்டத்தில் புதுமாத்தளவில் கோரம்., பொஸ்பரஸ், கொத்துக் குண்டுகளுக்கு தினமும் 300 முதல் 600 பொதுமக்கள் பலி! புலிகள் வானத்தை நோக்கிச் சுட்டு எங்களை எச்சரித்தனர் இரு தரப்பினராலும் மக்கள் பட்ட அவலங்களை விவரித்தார் சாட்சி.

போரின் இறுதிக்கட்டத்தில் புதுமாத்தளன் பகுதியில் புலிகள் மீது வீசுவதாக நினைத்து, அப்பாவி மக்கள் மீதும் இலங்கை இராணுவத் தினர் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும் (கிளஸ்ரர்), பொஸ் பரஸ் குண்டுகளையும் வீசினர். அதன் மூலம் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நாளொன்றுக்கு 400 முதல் 600 பேர் வரையில் பலியாகினர், 1,000 பேர் வரையில் காயமடையவும் நேரிட்டது.

இதேவேளை, பாதுகாப்பு வலயத்தில் இருந்து படையினரின் கட்டுப்பாட் டுப் பகுதிக்குச் செல்ல முயற்சித்தபோது நாம் வெளியேறுவதைத் தடுப்பதற் காகப் புலிகள் பச்சை மட்டைகளால் அடித்தனர். அச்சுறுத்துவதற்காக வானத்தை நோக்கிச் சுட்டனர். இவ்வாறு போரின் இறுதிக்கட்டத்தில் இரண்டு தரப்புகளாலும் மக்கள் அனுபவித்த அவலங்களை பூநகரி வாசியான கமநல உத்தி யோகத்தர் ந.சுந்தரமூர்த்தி விவரித்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழு தனது விசாரணைகளை பூநகரி பிரதேச செயலகத்தில் நேற்று நடத் தியது. அவ்வேளை ந. சுந்தரமூர்த்தி தமது சாட்சியத்தில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரண டைந்த மற்றும் பிடிபட்ட போராளிகளை யும் ஏற்றி 16 பஸ்களில் கொண்டு சென்றார்கள்

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரண டைந்த மற்றும் பிடிபட்ட போராளிகளை யும் ஏற்றி 16 பஸ்களில் கொண்டு சென் றார்கள். இன்றுவரை அவர்களின் கதி என்ன வென்று தெரியாது. இவ்வாறு முன்னாள் போராளி ஒருவரின் தாயார் நல்லிணக்க ஆணைக்குழுமுன் நேற்று சாட்சியம் அளிக் கும் போது., சரணடைந்த போராளிகள் அனைவரையும் படையினர் 16 பஸ்களில் ஏற்றிச் சென்றனர் அவர்களின் கதி தெரியவில்லை எனத் தாயார் ஒருவர் சாட்சியம்

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரண டைந்த மற்றும் பிடிபட்ட போராளிகளை யும் ஏற்றி 16 பஸ்களில் கொண்டு சென் றார்கள். இன்றுவரை அவர்களின் கதி என்ன வென்று தெரியாது. இவ்வாறு முன்னாள் போராளி ஒருவரின் தாயார் நல்லிணக்க ஆணைக்குழுமுன் நேற்று சாட்சியம் அளிக் கும் போது தெரிவித்தார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லி ணக்கத்துக்கான ஆணைக்குழு கண்டா வளை பிரதேச செயலகத்தில் நேற்று நடத் திய அமர்வில் சாட்சியம் அளிக்கையி லேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து முதலில் சரணடைந்த போராளி ஒருவரே எமது பிள்ளைகளைக் காட்டிக்கொடுத்தார். எமது பிள்ளைகள் வலுக்கட்டாயமாகவே விடுதலைப்புலிகளினால் அழைத்துச்செல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து தப்பிவந்து இறுதி யுத்தத்தின்போது இராணுவப் பகுதிகளை நோக்கிச்சென்றபோது இராணுவத் தரப்புடன் நின்றிருந்த குறித்த போராளி எமது பிள்ளைகளை இராணுவத்துக்குக் காட்டிக்கொடுத்தார். இராணுவம் எமது பிள்ளைகளைப் பிடிக்கும் போது பணம் தந்தால் விட்டுவிடுவதாகக் கூறினார்கள். நாங்கள் இரண்டு லட்சம் ரூபாவைக் கட்டினோம். தாங்கள் எமது பிள்ளைகளை விசாரணையின் பின் மூன்று நாள்களில் விடுவதாகக் கூறி அழைத்துச் சென்றார்கள்.

இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டவர்களும் சரணடைந்தவர்களும் ஒரு கூடாரம் போன்ற அறையில் வைக்கப்பட்டிருந்தார்கள். அதனுள் சென்று பார்க்க எமக்கு அனுமதி தரப்படவில்லை.

சரணடைபவர்களை மூன்று நாள்களில் விடுவிப்பதாக படையினர் அறிவித்ததை அடுத்து ஜோசப் பிரான்லின், ரெஜினோல்ட் ஆகிய பங்குத்தந்தையர் அவர்களிடம் பெற்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் போராளிகள் பலரும் கையளிக்கப்பட்டார்கள்.

அவ்வாறு கையளிக்கப்பட்டவர்கள் 16 பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர். இதுவரை அவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை. உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? என்றுகூடத் தெரியாத நிலைமையில் நாங்கள் இருக்கிறோம்.

எமது சொத்துக்கள் யுத்தத்தில் அழிவடைந்தாலும் பரவாயில்லை. பிள்ளைகளை எம்மிடம் ஒப்படையுங்கள் அவர்களுடன் மரநிழலின் கீழாவது சந்தோசமாக வாழ்வோம் அவர்களை எவ்வளவு கஸ்டத்தின் மத்தியில் வளத்தோம் என்பது எமக்குத்தான் தெரியும். இந்த வயதிலும் (வயது 53) நாம் உழைத்துக் கஷ்டப்படுகிறோம். எமது பிள்ளைகள் இருந்திருந்தால் இந்த நிலைமை எமக்குத் தோன்றியிராது என்றார்.

எனது கணவன் எழிலனைத் தேடித் தாருங்கள் படையினரிடம் சரணடைவதை நான் கண்டேன் ஆணைக்குழுவிடம் அவரது மனைவி ஆனந்தி கோரிக்கை

விடுதலைப்புலிகளின் முன்னாள் திரு கோணமலை அரசியல்துறைப் பொறுப்பா ளர் எழிலனைத் தேடிப் பிடித்து ஒப்படைக் குமாறு அவரது மனைவி ஆனந்தி சசிதரன் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லி ணக்க ஆணைக்குழு முன் பிரசன்னமாகி கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று கிளிநொச்சியில் நடந்த ஆணைக் குவின் அமர்வில் சாட்சியம் அளிக்கையி லேயே மேற்கண்டவாறு அவர் கோரியுள்ளார்.

தமது கணவன் இலங்கை இராணுவத் தினரிடம் சரணடைவதை தான் நேரில் கண்டதாகவும் அதன் பின் அவர் குறித்து எவ்வித தகவலும் இல்லை என்றும் அவர் சாட்சியத்தில் குறிப்பிட்டார். அதேபோன்று இன்னும் பல நூறு போராளிகள் படையினரிடம் சரணடைந் தனர். அவர்களையும் தமது கணவரையும் தேடித்தருமாறு ஆனந்தி குழுவிடம் தெரி வித்தார்.

சரணடைந்த எனது மகள் குடும்பம் காணாமல் போயுள்ளது! ‐ ஆணைக்குழு முன் தாய் சாட்சியம்.

ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு முன் நேற்று இரண்டாவது நாளாக கிளி நொச்சியில் மக்கள் சாட்சியம் அளித்துள்ள னர். ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி யம் அளித்த பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள தனது பிள்ளைகள் விடுதலை செய்யப்பட வேண் டும் என்றும் காணாமல் போயுள்ளவர்களை கண்டுபிடித்துத்தரவேண்டும் என்றும் கோரினார்.

இங்கு சாட்சியமளித்த 58 வயதான கந்த சாமி பொன்னம்மா என்ற தாய் இறுதிப் போரின்போது இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினராகிய தனது மரு மகனும் தனது மகளும் அவர்களது இரண்டு குழந்தைகளும் காணாமல் போயுள்ளதாக கூறினார்.

அத்துடன் மல்லாவி பல நோக்கு கூட்டுற வுச்சங்கத்தில் பணியாற்றிய தனது மகன் ஒருவர் 2006ஆம் ஆண்டு வவுனியாவுக்கு சென்றிருந்தபோது காணாமல் போனதாக வும் அந்தத்தாய் தெரிவித்தார்.போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நட வடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கண்டா வளையைச் சேர்ந்த காசிப்பிள்ளை பாலேஸ் வரன் என்பவர் ஆணைக்குழுவினரிடம் வலியுறுத்தியுள்ளார்.

பார்வை இழந்துள்ள இவர் போரினால் பாதிக்கப்பட்டு உடல் வலுவிழந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார். படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இன்று முல்லைத்தீவு நகருக்குச் சென்று அந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்களின் சாட்சியங்களை பதிவுசெய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் போராளிகளுடன் 16 பஸ்களில் ஏற்றப்பட்ட எனது பிள்ளைகளின் கதி என்ன புதுவை இரத்தினதுரை, யோகியும் உடனிருந்ததாக நல்லணிக்க ஆணைக்குழு முன் தாயொருவர் சாட்சியம்

முன்னாள் போராளிகள் 16 பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டபோது என்னுடைய பிள்ளைகளும் அதில் இருந்தனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் இருப்பதாகக் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக தாய் ஒருவர் சாட்சியமளிக்கையில் தெரிவித்தார்.

கண்டாவளை பிரதேச செயலகத்தில் இரண்டாவது நாளாக ஆணைக்குழுவின் சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றபோது, விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களான புதுவை இரத்தினதுரை, யோகி போன்றவர்களோடு சேர்த்து 16 பஸ்களில் அனுப்பப்பட்ட முன்னாள் போராளிகளோடு இருந்த தனது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியாமல் இருப்பதாக அத்தாய் கூறினார்.

என்னுடையை மகள், அவருடைய கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளும் வட்டுவாகலில் ஐந்தாம் மாதம் வண. பிரான்சிஸ், றெஜினோல்ட் ஆகிய இருபாதிரியார்களின் வேண்டுகோளுக்கிணங்க இராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள்.பின்னர் அவர்கள் அனைவரும் வட்டுவாகலில் இருந்து முல்லைத்தீவு வீதியால் பதினாறு பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர். இதை நான் நேரடியாகவும் பார்த்தேன். இன்று அவர்கள் எங்கேயென்று தெரியாது. சகல தடுப்பு முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகளிலும் தேடிப்பார்த்தேன்.

எங்குமே இல்லையெனப் பதிலளிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரோடு ஏற்றிவிட்ட பாதிரியார்களும் இன்று எங்கேயெனத் தெரியாதென அவர்களது குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.இதேவேளை, கிருஷ்ணபாலன் ஜெயபாரதி என்ற தாயொருவர் இடையில் கூறுகையில்;

தமக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் குறித்த இரு பாதிரியார்களின் வேண்டுகோளுக்கிணங்க புதுவை இரத்தினதுரை, யோகி ஆகியோருடன் தன்னுடைய கணவரும் இராணுவத்திடம் சரணடைந்ததாகவும் அவரும் இப்போது எங்கிருக்கின்றார் எனத் தெரியாதெனவும் கூறினார். இதற்கு ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவரும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களா என வினவினர். இதற்கு அவர் ஆம் என்று பதிலளித்ததைத் தொடர்ந்து இது தொடர்பாக தாம் கவனத்தில் கொள்வதாக ஆணைக்குழு தெரிவித்தது.

இது இவ்வாறிருக்க இலங்கை வரலாற்றில் காலத்திற்கு காலம் இடம்பெற்ற இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களுடைய உணர்வுகளின் வெளிப்பாடே நடந்து முடிந்த ஆயுதப் போராட்டம் எனவும் இதில் இரு தரப்புகளுக்கும் இழப்புகள் உண்டு என்றும் எனவே எமது அடுத்த சந்ததியும் ஆயுதம் ஏந்தாத வகையில் தமிழ் மக்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என கிளிநொச்சி மாவட்ட மக்கள் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கையில் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நேற்று சாட்சியமளித்தனர்.ஒவ்வொரு காலப்பகுதியிலும் இன ரீதியிலான முரண்பாடுகளின் அடிப்படையில் தமிழ் சமூகத்தின் மீதான கலவரங்கள், வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் தீர்வு தேடும் வகையில் தமிழ் மக்களின் போராட்டம் நடைபெற்றது. எனினும் அந்தப் போராட்டம் இன்று முற்றுப்பெற்ற நிலையில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு எட்டப்படவேண்டும். மீள்குடியேற்றம் என்ற பெயரில் மக்கள் தமது சொந்த இடங்களில் கொண்டு சென்று விடப்படுகின்றனர். ஆயினும் முன்னர் போன்று சுமுகமான வாழ்க்கை முறைக்கு மக்கள் இன்றுவரை திரும்பியிருபக்கவில்லை. காணிப் பிரச்சினைகள், போரினால் இறந்துபோன, காணாமல்போன குடும்பங்களின் வாழ்வாதார நிலைமைகள் இன்று வரை கவனிக்கப்படாமல் இருக்கின்றன. எனவே காணமல்போனோர், தடுத்து வைக்கப்பட்டோர் தொடர்பில் என்ன நிலைப்பாட்டை அரசு கொண்டுள்ளதென்பதைத் தெளிவுபடுத்தவேண்டும்.

எங்களுடைய பிள்ளைகள் இருக்கின்றார்களா? இல்லையா? என்பதையாவது கூறவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

ஆணைக்குழு முன் சாட்சியமளித்த அப்பாக்குட்டி ஐயம்பிள்ளை என்பவர் கூறுகையில்; நாங்கள் 2009 ஆம் ஆண்டு மாசி மாதம் இராணுவத்தினரிடம் சரணடைந்த போது எங்களுடைய வீடுகளும் வாகனங்களும் முழுமையாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருந்தது. ஆனால் இப்போது வாகனங்கள் எங்கேயென்று தெரியாது. வீடு முற்றாகச் சேதமடைந்துள்ளது. இதற்கு யார் பொறுப்பாளிகள் என்பது தெளிவுபடுத்தப்பட்டு எமக்கான நஷ்ட ஈடுகள் கொடுக்கப்படவேண்டும் என்றார்.

தொடர்ந்து நீங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வரும்போது புலிகள் உங்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்தினார்களா? என ஆணைக்குழு கேட்டதற்குப் புலிகள் மக்களைப் பின் நிறுத்திவிட்டு முன்னால் நின்று சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள் என்றார்.

சுதந்திரபுரம் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட போதும் அப்பகுதியில் தொடர்ந்தும் மக்கள் மீது ஷெல்வீச்சுத் தாக்குதல்கள் நடந்துகொண்டிருந்ததாகச் சொன்னார். அதனைத் தொடர்ந்து சுமார் 75 ஆயிரம் மக்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தோம் என்றார்.

தொடர்ந்து தேவரூபன் சுசீலாதேவி என்பவர் சாட்சியமளிக்கையில்; 2009 ஆம் ஆண்டு 3 ஆம் மாதம் கட்டாய ஆட்சேர்ப்பு என்ற பெயரில் என்னுடைய 19 வயது மகனைப் புலிகள் பிடித்துச் சென்றனர். இரண்டு முறை அவர் புலிகளிடம் இருந்து தப்பி வந்து வீட்டில் நின்ற போதும் 3 ஆம் முறை பிடித்துச் சென்று ஆனந்தபுரம் சண்டையில் விட்டுவிட்டதாகக் கேள்விப்பட்டேன். இன்று என்னுடைய மகன் எங்கே இருக்கிறார், அவருக்கு என்ன ஆனது என்பது போன்ற தகவல்கள் எதுவுமே தெரியாத நிலையில் நான் இருக்கிறேன். என்னுடைய பிள்ளையை மீட்டுத் தாருங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை கடந்த காலத்தில் இத்தகைய அழிவுகள், அவலங்களுக்கு என்ன காரணம்? எதிர்காலத்தில் இவ்வாறான அழிவுகள், அவலங்கள் ஏற்படாத வகையில் எவ்வாறு தடுக்கலாம்? என ஆணைக்குழு மக்களிடம் வினவிய போது பதிலளித்த மக்கள்;

இனி ஒருபோதும் ஆயுத வழியிலான போராட்டத்திற்குத் தாம் தயார் இல்லை எனவும் எமது அடிப்படை வசதிகள் முதற்கொண்டு இனப்பிரச்சினை வரை சகலவற்றுக்குமான ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். கடந்த காலத்தைப் போல் மக்களை அரசியல் பகடைக்காய்களாகப் பாவிக்காது பெருந்தன்மையோடு இவ்விடயத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்கள்.

இந்தச் சந்திப்பில் காணாமல்போனோர், தடுத்து வைக்கப்பட்டோர் மற்றும் விதவைகள் தொடர்பான விடயங்களை, மீள்குடியேற்றம் தொடர்பான சமகால நிலைமைகள் தொடர்பாக மக்களுடைய கடிதங்களை ஆணைக்குழு பெற்றுக்கொண்டது.

கிளிநொச்சியில் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது அதிகளவிலான பெண்கள் தமது பிள்ளைகள் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை :

கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலகத்தில் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நேற்று இரண்டாவது நாளாக விசாரணைகளை நடத்தியது.

ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த பெரும் எண்ணிக்கையிலான பெண்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் காணாமல் போயுள்ளவர்களைக் கண்டு பிடித்துத் தர வேண்டும் என்றும் கோரினர்.

இங்கு சாட்சியமளித்த 58 வயதான கந்தசாமி பொன்னம்மா என்பவர் தெரிவிக்கையில், இறுதிப் போரின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினராகிய தனது மருமகனும் தனது மகளும் அவர்களது இரண்டு குழந்தைகளும் காணாமல் போயுள்ளதாக கூறியுள்ளார்.

அத்துடன் மல்லாவி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றிய தனது மகன் ஒருவர், 2006 ஆம் ஆண்டில் வவுனியாவுக்குச் சென்றிருந்தபோது காணாமல் போனதாகவும் அந்த தாய் தெரிவித்தார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கண்டாவளையைச் சேர்ந்த காசிப்பிள்ளை பாலேஸ்வரன் என்பவர் ஆணைக்குழுவினரிடம் வலியுறுத்தியுள்ளார்.

பார்வையிழந்துள்ள இவர், போரினால் பாதிக்கப்பட்டு உடல் வலுவிழந்தவர்களுக்கு முன்னுமை அடிப்படையில் புனர் வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இன்று முல்லைத்தீவு நகருக்குச் சென்று அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களின் சாட்சியங்களைப் பதிவு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

GTN

Edited by நிழலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.