Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறக்காத முகங்கள்: சிதம்பரம் ஜெயராமன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மறக்காத முகங்கள்: சிதம்பரம் ஜெயராமன்

“எம்.ஆர். ராதாவுக்காக கடைசியில் நான் பாடிய பாட்டு” “சங்கீத சௌபாக்யமே...” என்று சம்பூர்ணராமாயணக்’ குரல் வளைய வந்தபோது ரொம்ப சுகமாய்த் தலையாட்டியவர்கள் நிறையபேர். “ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே...” கேட்டு, “காவியமா... ஓவியமா...” கேட்டு ஒன்றிப் போய் சிலாகித்தவர்கள் அநேகம் பேர்.

நெறுநெறுவென்ற குரல். நல்ல உச்சிக்குப் போய் சாவகாசமாக கீழிறங்கும் ராக ஒழுக்கு. வயதாகியும் குரல் உடையாமலிருக்கிற சிதம்பரம் ஜெயராமனைப் பார்த்தோம். ஒடிசலான வீட்டின் முன் அறை. அடிக்கடி வெற்றிலையும், சீவலையும் மென்று கொண்டு உற்சாகமாகப் பேசுகிறார்.

செழிப்பான தஞ்சை மாவட்டத்தின் திருவிடை மருதூர். பாரம்பரியமான சங்கீதக் குடும்பத்தில் மூன்று ஆண்பிள்ளைகளில் ஒருவன் ஜெயராமன். சின்ன வயசிலேயே ஜெயராமனுக்கு குரல் குறுகுறுக்க ஆரம்பித்துவிட்டது. தகப்பனார் “பாட்டக” சுந்தரம்பிள்ளை பக்கத்தில் உட்கார்த்தி வைத்து அதட்டிச் சொல்லிக் கொடுக்கிறார். மூத்த சகோதரனும் திருந்துகிறான். பையன் மூணேமுக்கால் வயசிலேயே ஸ்வரம் பாட ஆரம்பித்துவிட்டான். ஒன்பது வயதுவரை இடைவிடாமல் பயிற்சி.

1934ம் வருஷத்தில் டைரக்டர் பி.வி.ராவ் கிருஷ்ணலீலாவுக்காக, கிருஷ்ணனைத் தேடிக் கொண்டிருந்ததில் அகப்பட்ட ‘பாடத் தெரிந்த கிருஷ்ணன்’ ஜெயராமன். சென்னையில் ஸ்டுடியோ ஒன்றுமில்லை. கிளம்பிவிட்டார்கள் கல்கத்தாவிற்கு. பயோனியர் ஸ்டுடியோவில் ஷுட்டிங். முதல் படத்திலேயே 64 பாடல்கள். அதில் இருபதுக்கு மேற்பட்ட பாடல்கள் பாடியிருக்கிறான் 16 வயதான ஜெயராமன். ஆர்மோனியம், மிருதங்கம் இரண்டும்தான் வாத்தியம். வெயிலில் நின்று கொண்டு நடித்துக் கொண்டே பாட வேண்டும். ஒரு அட்டையில் சிகரெட்டின் ஜிகினாக் காகிதத்தை ஒட்டி அதுதான் ‘ரிப்ளெக்டர்’. கூடவே நடித்தவர்கள் எம்.எஸ். முத்துக் கிருஷ்ணனும், பந்துலுவும்.

“எல்லோருக்கும் என்மேலே எப்பேர்பட்ட அன்பு. அப்ப ஜாதி, மதம் எதுவும் தெரியாம அப்படிப் பழகுவோம். ஒருநாள் ஷுட்டிங் நடந்து முடிஞ்சிருக்கு.. மரத்தடியிலே வயசானவர் ஒருத்தர் வந்து பாடச் சொன்னார். பாடினேன். கிட்டே வந்து தட்டிக் கொடுத்தார். ஆசீர்வாதம் பண்ணினார். சின்னப் பையன் நான் கூசிப் போனேன். போன பிறகுதான் சொன்னாங்க அவர் ரவீந்திரநாத்தாகூர்னு...” பழைய ஞாபகத்திற்குப் போய்விடும்போது குரல் நெகிழ்ந்து போய்விடுகிறது ஜெயராமனுக்கு. தொடர்ந்து நல்லதங்காள், துருவா என்று வரிசையாய்ச் சில படங்கள். பதினெட்டு வயது வரை நடித்துத் திரும்பவும் இடைவெளி.

19 வயசிலிருந்து ஜெகன்னாதய்யர் கம்பெனியில் சேர்ந்து நடிப்பிற்காக நாடகக் குழுவுடன் ஊர் ஊராய் அலைச்சல். கூட இருந்த நடிகர்கள் எம்.ஆர்.ராதாவும் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையும். நாடகத்தில் ஜெயராமனுக்கு ஹீரோயின் வேஷம். ஆறுமாசம் சம்பளம் கிடையாது. பிறகு சம்பளம் மாதத்திற்கு மூன்று ரூபாய்.

பிறகு என்.எஸ்.கே.யுடன் பழக்கம் ஏற்பட்டு விட்டது. கூடவே ஜெயராமன்தான் மூன்று வருஷம் ‘கேரம்’ விளையாட்டுச் சாம்பியன். ஒரு நாள் என்.எஸ்.கே. வாட்டசாட்டமான நபரைக் கூட்டிக் கொண்டு வந்து அறிமுகப் படுத்தியிருக்கிறார். வந்த வாலிபரும் ஜெயராமனுமாக கேரம் போர்டு அடிக்கடி விளையாட ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படி வந்த வாலிபர் எம்.ஜி.ஆர்.

40ல் கிருஷ்ணபக்தி படத்தில் நாரதராக ஜெயராமன். கூட நடித்தவர் பி.யு.சின்னப்பா. அந்த சமயத்தில் தியாகராஜபாகவதர் பிரபலமாயிருந்த நேரம். வயதில் ஜெயராமன் சின்னவராக இருந்தாலும் ஜெயராமனிடம் மூன்று வருஷம் சங்கீதம் படித்திருக்கிறார் தியாகராஜபாகவதர்.

“திருச்சியிலே அவர் இருந்தார். அங்கேதான் போய்ச் சொல்லிக் கொடுப்பேன். குரு-சிஷ்ய உறவு மாதிரி இருந்தது எங்ககிட்டே இருந்த உறவு... எவ்வளவு இனிமையானது அவர் குரல்...”

சிதம்பரம் ஜெயராமனின் திருமணத்தில் வாழ்த்திப் பேசும் என்.எஸ்.கிருஷ்ணன்.

47ல் இரண்டாவது கல்யாணம் ஜெயராமனுக்கு. கல்யாணச் செலவுகளையெல்லாம் சொந்தத்துடன் தானே ஏற்றுக் கொண்டு நடத்தினார் பி.யு.சின்னப்பா. தலைமை தாங்கியவர் என்.எஸ்.கிருஷ்ணன். நகைச்சுவையாகப் பேசியிருக்கிறார். “ஜெயராமன் என்னுடைய தம்பி. தம்பீனா சாதாரணமான தம்பி இல்லே ... தம்ம்ம்பீ...” திரும்பவும் சினிமாவுலகம். பாடல்கள் பின்னணி பாடத் தொடங்கியிருக்கிறார்.

பராசக்தியில் சிவாஜிக்குப் பின்னணி. பாடல் பிரபலமடைந்து விட்டது. தொடர்ந்து சிவாஜிக்கு சில படங்கள் பின்னணி. “அப்போ ... ரிக்கார்டிங் நடந்துக்கிட்டிருக்கும். சிவாஜி தூரத்திலே ஒரு மூலையிலே நின்னு வாயசைப்பையே கவனிச்சுக்கிட்டிருப்பார். ஒரு வார்த்தை கூட பேச மாட்டார். அவ்வளவு மரியாதை...”

பாவை விளக்கு, தெய்வப்பிறவி, புதையல் என்று படம் வர வர ‘சிதம்பரம் ஜெயராமன்’ என்கிற பெயர் பரவ ஆரம்பித்தது. தெய்வப்பிறவி ரிக்கார்டிங். “அன்பாலே தேடிய என்...” பாட்டின் இடையில் ‘ஹம்மிங்’ பண்ண தேவை ஒரு பெண்குரல். பலர் வந்திருக்கிறார்கள். ஒல்லியான பெண் ஒருவரும் வந்திருக்கிறார். குரல் சரியில்லை என்று அனுப்பி விட்டார்கள். ஜெயராமன் தடுத்து ‘ஹம்மிங்’ பாட வைத்திருக்கிறார். அப்படி ‘ஹம்மிங்’கில் ஆரம்பித்துப் பிரபலமானவர் பின்னணிப் பாடகி ஜானகி.

எம்.ஜி.ஆருக்கு ‘புதுமைப்பித்தன்’ உட்பட மூன்று படங்களின் பின்னணி பாடியிருக்கிறார். பின்னர் இசையமைப்பாளரானது பத்து படங்களுக்கு. அதில் ஒரு படம் ரத்தக் கண்ணீர். குறைந்த ஆர்ட்டிஸ்டுகள்தான். அப்போது ஒரு பாடலுக்கு மியூசிக் அமைக்க இவர் வாங்கின தொகை 750 ரூபாய். ரத்தக் கண்ணீருக்கு பின்னணி இசை பாடல் அனைத்துக்கும் வாங்கின மொத்தத் தொகையே 11 ஆயிரம் ரூபாய்தான்.

“அதிலே ... குற்றம் புரிந்தவன்னு ... ஒரு பாட்டு. பாட்டு இடையிலே ராதாவோட குரல். இடையிலே வசனமா வரும்... ஆரம்பத்திலே இப்படிச் செய்யலாமான்னு நினைச்சப்ப பலர் மலைச்சாங்க.. பிறகு பாடல் நல்ல ‘ஹிட்டாயிடுச்சு...’ இப்ப பலரும் அந்த மாதிரி நிறைய பண்றாங்க.

53ம் வருஷத்திலே கன்னடத்தில் ‘பேதரக் கண்ணப்பா’ படத்தில் கன்னட சூப்பர் ஸ்டாரான ராஜ்குமாருக்கு பின்னணி பாட முதல் படமே அவார்டு வாங்கியிருக்கிறது. சில மாற்றங்களுக்குப் பிறகு ‘சிதம்பரம் ஜெயராமன்’ கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடிக்கப்பட்டு விட்டார்.

வெளிக் கச்சேரிகள் அதிகம் போக ஆரம்பித்திருக்கிறார். சிதம்பரம் கோயில் விசேஷத்தின்போது பதினொன்றரை மணி நேரம் தொடர்ந்து பாடியிருக்கின்றார். ராத்திரி கேட்க வருகிறவர்கள் விடியும்போது கேட்டுக் கொண்டே பல்துலக்கிக் கொண்டிருப்பார்களாம். அதன் பிறகு இவர் அதிகம் பாடியது நடிகர் தங்கவேலு வீட்டு நவராத்திரி விசேஷத்தில். பாடிய நேரம் எட்டே முக்கால் மணிநேரம்.

எழுபதை நெருங்குகிற வயதில் நாக்குளறப் பேசுகிறார். உடம்பு தளர்ந்து போயிருக்கிறது. இடையில் சங்கீத நாடக அகாடமி அவார்டு கிடைத்திருக்கிறது. ஏழு வருஷங்களாக தமிழகத்தில் உள்ள இசைக் கல்லூரிகளுக்கு இவர்தான் கௌரவ ஆலோசகர். இதற்கெல்லாம் காரணமான எம்.ஜி.ஆரை நினைவு கூறும்போது நன்றியுடன் உணர்ச்சிவசப்பட்டுக் கொள்கிறார்.

“பள்ளிக் கூடம் கறுப்பா ... சிவப்பான்னு கூடத் தெரியாது. சங்கீதம்தான் படிச்சது. சங்கீதம்தான் சோறு போடுது. வாழ வைக்கிறது. இப்ப உங்களைக்கூட அதுதானே கூட்டிக்கிட்டு வந்து இருக்கு. அப்போ பாட்டுக்கிடையில் அதிகம் இடைவெளியாக சங்கீதம் இருக்காது. சாகித்யம் கருத்துக்குத்தான் முக்கியம். இப்போது கருவிகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இப்போ சிலேடைப்பாடல்கள், இரண்டு அர்த்தம் வருகிற மாதிரி பாடல்கள் பாடறாங்க. இப்படிப்பட்ட பாடல்களையெல்லாம் என்னால் பாடமுடியாது. கலையை நாம கௌரவப்படுத்தணும். அப்பதான் அது நம்மையும் கௌரவப்படுத்தும்”. கரகரத்தத் தொண்டையில் முதிர்ச்சியாகச் சொல்கிறார் இதை.

தியாகராஜ பாகவதரின் குரலை வியந்து பாராட்டுகிறார். டி.ஆர்.மகாலிங்கத்தின் ‘கணீர்’ குரலை சிநேகிதத்துடன் அலசுகிறார். என்.எஸ்.கிருஷ்ணனை, பி.யு.சின்னப்பாவை மிகவும் அரவணைத்துப் பேசுகிறார். பழைய காலத்தை அலசும்போது என்ன அலாதியான முகபாவம்?

வீட்டில் பிள்ளைகள் சங்கீதத்துடன் சம்பந்தமே இல்லாதது மாதிரி நகர்ந்து போகிறார்கள். ‘ச்சு ... என்று சலிப்புடன் அலுத்துக் கொள்கிறார் கலைஞர் கருணாநிதியின் மைத்துனரும் சம்பந்தியுமான ‘ப்ளட் ப்ரஷரில் சற்று அவதிப்பட்டுக் கொண்டிருந்தவருமான ஜெயராமன்.

கடைசியில் பாடின பாட்டு ஏதாவது?

79ல் ‘தர்மங்கள் சிரிக்கின்றன’ படத்தில் அதில் நடிக்கும் எம்.ஆர்.ராதா அன்புடன் வீட்டிற்கு வந்து “நீ பாடியே ஆகணும்” என்று சொல்லிக் கூட்டிக் கொண்டு போய்த் தனக்குப் பின்னணி பாடவைத்திருக்கிறார். படம் வெளிவரவே இல்லை. பாடல் மட்டும் வெளி வந்து விட்டது.

“போடா ... உலகத்தைப் புரிஞ்சுக்க ...

புத்தியிருந்தாப் புழைச்சுக்க ...”

கடைசியாகப் பாடின திரைப்படப் பாடல் என்றாலும் எவ்வளவு வாஸ்தவமான பாட்டு?

(1984ல் எடுக்கப்பட்ட பேட்டி)

http://www.natpu.in/Pakudhikal/Manaa%20Pakkankal/sithambaram.php#HCB_comment_box

கடைசியில் பாடின பாட்டு ஏதாவது?

79ல் ‘தர்மங்கள் சிரிக்கின்றன’ படத்தில் அதில் நடிக்கும் எம்.ஆர்.ராதா அன்புடன் வீட்டிற்கு வந்து “நீ பாடியே ஆகணும்” என்று சொல்லிக் கூட்டிக் கொண்டு போய்த் தனக்குப் பின்னணி பாடவைத்திருக்கிறார். படம் வெளிவரவே இல்லை. பாடல் மட்டும் வெளி வந்து விட்டது.

“போடா ... உலகத்தைப் புரிஞ்சுக்க ...

புத்தியிருந்தாப் புழைச்சுக்க ...”

கடைசியாகப் பாடின திரைப்படப்

போடா உலகத்த புரிஞ்சுக்க பாடல் 70வதாம் ஆண்டளவில் வந்ததாக அறிந்தேன் எனவே

எந்தவருடம் வந்த திரைப்படம் என அறிவதற்காக 70 முதல் 80 ம் ஆண்டுவரையிலான படப்பட்டியலில் தேடிப்பார்த்தேன்

காணக்கிடைக்கவே இல்லை இந்தக்கட்டுரைமூலம்தான் அறிந்துகொண்டேன் தர்மங்கள் சிரிக்கின்றன திரைப்படம்

வெளிவரவேயில்லை என்பதை பதிவுக்கு நன்றி நுணாவிலான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.