Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே.பி. மீதான அடிப்படை விசாரணை இன்னரும் பூர்த்தியடையவில்லை அரசாங்கம் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கே.பி. மீதான அடிப்படை விசாரணை இன்னரும் பூர்த்தியடையவில்லை அரசாங்கம் அறிவிப்பு

விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியஸ்தரான கே.பி. அல்லது குமரன் பத்மநாதன் மீதான அடிப்படை விசாரணை இன்னும் முடிவடையவில்லை என நேற்று புதன்கிழமை சபைக்கு அறிவித்துள்ளஅரசாங்கம், கே.பி. உட்பட கைதான விடுதலைப்புலி சர்வதேச செயற்பாட்டாளர்கள்,

வன்னிப் படை நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட முக்கிய ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை முடக்கி அவ்வமைப்பிற்கு சொந்தமான சொத்துகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட எம்.பி.தயாசிறி ஜயசேகர எழுப்பியிருந்த கேள்விகளுக்கு ஆளுந்தரப்பு பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த பதில்களிலேயே இது பற்றிய விபரங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

இவற்றில் கே.பி. கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட திகதி, அவருக்கெதிரான குற்றச்சாட்டுகள், அவர் எங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் போன்ற விபரங்கள் சம்பந்தமாக அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த பதிலில் கூறியிருப்பதாவது;

கே.பி. கைது செய்யப்பட்டு 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். அவர் சம்பந்தப்பட்ட அடிப்படை விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த விசாரணைகள் முடிவடைந்த பின்னர் அவர் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை விசாரணைகள் முடிவடையும் வரை கே.பி. பாதுகாப்புத் தரப்பின் பொறுப்பில் வைக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் கே.பி. அண்மைய தினமொன்றில் வன்னி பிரதேசத்துக்கான விஜயமொன்றுக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்தாரா என்ற கேள்விக்கு பதிலளித்த தினேஷ் குணவர்தன, அடிப்படை விசாரணைகளின் போது முன்வைக்கப்பட்ட விடயங்களை உறுதி செய்து கொள்வதற்கென அவர் வன்னிப் பிரதேசத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்ததாகக் கூறினார்.

அத்துடன் கே.பி. தடுத்து வைக்கப்பட்டிருப்பது நீதிமன்ற உத்தரவின் பேரிலா அல்லது பாதுகாப்புச் செயலாளரின் தடுப்புக் காவல் உத்தரவின் பேரிலா என்று தயாசிறி ஜயசேகர எழுப்பிய இடையீட்டுக் கேள்விக்கு பதிலிளித்த தினேஷ் குணவர்தன, ஆராய்ந்து பார்த்து பதிலளிப்பதாகக் கூறினார்.

அது மட்டுமல்லாது கே.பி. வன்னிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் இலங்கைப் பிரஜையா அல்லது இல்லையா என்று கேள்வி எழுப்பப்பட்ட போது இது விடயம் தொடர்பில் பிறிதொரு கேள்வியை சமர்ப்பிக்குமாறு தினேஷ் குணவர்தன தெரிவித்து விட்டார்.

இதேநேரம் கே.பி.யினால் நிர்வகிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சர்வதேச சொத்துகள், அவற்றின் பெறுமதி, அவற்றில் அரசுடமையாக்கப்பட்ட சொத்துகள் பற்றி தயாசிறி ஜயசேகர எழுப்பியிருந்த கேள்விக்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்திருந்த பதிலில்;

விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையினுள் யுத்த ரீதியில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டாலும் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்னும் அவ்விதமே செயற்பட்டு வருகிறது. அத்துடன் விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் இலங்கையினுள் கட்டியெழுப்புவதற்கு முயற்சித்தும் கொண்டிருக்கிறது.

இவ்வாறான பின்னணியில் பாதுகாப்பு அமைச்சு இந்த சர்வதேச வலையமைப்பின் செயற்பாடுகளை முடக்குவதற்கு திட்டங்களை மேற்கொண்டதோடு அதன் பயனாக குமரன் பத்மநாதன் உட்பட சில பிரதான விடுதலைப் புலி வெளிநாட்டு செயற்பாட்டாளர்களை கைது செய்ய அரசுக்கு முடிந்தது.

அத்துடன் இவ்வாறு கைதான முக்கிய விடுதலைப் புலி செயற்பாட்டாளர்களின் விபரங்களையும் வன்னி மனிதாபிமான நடவடிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாடுகள் பற்றிய முக்கிய பல ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டும் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை முடக்கி அவ்வமைப்பிற்குரிய சொத்துகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் குறிப்பாக விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுள்ள சில நாடுகளுடனும் அந்நாடுகளின் புலனாய்வுப் பிரிவுகளுடனும் இலங்கை புலனாய்வு சேவைப் பிரிவினர் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் ஏற்கனவே விடுதலைப் புலிகளின் சர்வதேச சட்டவிரோத செயற்பாட்டாளர்கள் பலர் அந்த நாடுகளினுள்ளேயே கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனையோரையும் கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இச் செயற்பாடுகள் மூலமாக விடுதலைப் புலிகளின் சில சொத்துகளை அரசுக்கு சவீகரித்துக் கொள்ள முடிந்துள்ளது.

இவ்வாறான நிலைமையில் இவ் விடயம் தொடர்புபட்ட மேலதிக விபரங்களை வெளியிடுவது தேசிய பாதுகாப்புக்கு மட்டுமல்லாது சர்வதேச புலனாய்வுப் பிரிவுகளும் உள்நாட்டு புலனாய்வுத் துறையினரும் இணைந்து மேற்கொண்டு வரும் புலனாய்வு நடவடிக்கைகளின் இரகசிய தன்மைக்கு இடையூறாக அமைந்து விடும்.

எவ்வாறிருப்பினும் சில சந்தர்ப்பங்களில் இவ்வாறு கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி தலைவர்கள், விடுதலைப் புலிகளின் சொத்துகள் பற்றிய தகவல்கள் எதிர்கால நடவடிக்கைகளுக்கு இடையூறாகாத வகையில் அரசாங்கத்தினால் அவ்வப்போது வெளியிடப்பட்டிருக்கின்றன. இவ்வாறான விடயங்களில் பாதுகாப்பு அமைச்சு பொறுப்புடன் செயற்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் விடுதலைப் புலிகளின் சொத்துகள் சுவீகரிக்கப்பட்ட நாடுகளின் விபரங்களையும் தேசிய பாதுகாப்பின் நிமித்தம் வெளியிட முடியாதென்று அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறி விட்டார்.

http://meenakam.com/2010/10/21/%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.