Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதாக புதிய வரவு செலவுத் திட்டம் இருக்காது எதிர்வு கூறுகிறது ஐ.தே.க.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதாக புதிய வரவு செலவுத் திட்டம் இருக்காது எதிர்வு கூறுகிறது ஐ.தே.க.

சிறீலங்கா அரசு இம்முறை சமர்பிக்கவிருக்கும் வரவுசெலவுத்திட்டமும் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைகளை நிறைவேற்றும் ஒன்றாகவே இருக்கும் எனத் தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மக்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுத் தரும் பட்ஜெட்டாக அது இருக்காது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

அன்று தனியார்மயப்படுத்தலை எதிர்த்தவர்கள் இன்று அரசுடமையாக்கப்பட்டிருக்கும் அனைத்து துறைகளையும் படிப்படியாக தனியாருக்கும் வெளிநாடுகளுக்கும் விலைபேசிக் கொண்டிருப்பதாகவும் ஐ.தே.க.சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

தனிநபர் மீது 10 ஆயிரம் ரூபா வரியை விதித்து விட்டு 2500 ரூபா சம்பள அதிகரிப்புச் செய்யும் கேலிக்கூத்தை அரங்கேற்றாமல் வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்க வேண்டுமென நாம் வலியுறுத்துகின்றோம்.

நாட்டுமக்கள் இன்று பாரியதொரு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர்.வருமானத்தை மிஞ்சிய செலவையே ஒவ்வொரு குடும்பமும் எதிர்கொண்ட வண்ணமிருக்கின்றன.அத்தியாவசியப் பொருட்கள் அனைத்துமே யானை விலை,குதிரைவிலையாக அதிகரித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் 22 இல் சமர்ப்பிக்கப்படவிருக்கும் வரவு செலவுத்திட்டமும் சர்வதேச நாணயநிதியத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைவான பட்ஜெட்டே ஆகும். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மீறிச் செயற்பட முடியாத நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு எந்த நிவாரணமும் இந்த பட்ஜெட்டில் கிடைக்கப்போவதில்லை.

அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றது.இன்று ஐக்கிய தேசியக் கட்சி அரசு தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்க முற்பட்டபோது எம்மை துரோகியென வர்ணித்து மக்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொண்டனர்.இன்று இந்த அரசு அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் படிப்படியாக தனியாருக்கும் வெளிநாடுகளுக்கும் தாரை வார்க்கப்பார்க்கின்றது.நாம் செய்ய முற்பட்டது தேசத்துரோகம் இன்று அவர்கள் செய்யப்போவது தேசப்பற்று மிக்க செயலா? எனக் கேட்க விரும்புகிறோம்.

துல்ஹிரிய ஆடைத் தொழிற்சாலையை தனியார் நிறுவனமொன்றுக்கு 140 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ததை நாம் நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக அறிவித்திருக்கின்றோம். இப்போது ஹிங்குரானை சீனி ஆலை தனியார் துறைக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கை விமான சேவையின் பங்குகளை சிங்கப்பூர் தனியார் நிறுவனங்களிரண்டுக்கு விலை பேசப்பட்டு வருகின்றது.

அரசாங்கம் சொல்வது போன்று ரூபாவின் மதிப்பு அதிகரித்து பணவீக்கம் குறைவடைந்திருக்குமானால் பால்மா உட்பட ஏனைய அத்தியாவசிய பாவனைப் பொருட்களின் விலைகள் ஏன் பலமடங்காக அதிகரித்துள்ளது என்ற கேள்விக்கு அரசு பதிலளிக்குமா? என்றும் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பினார்.

http://meenakam.com/2010/10/21/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.