Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாய்லாந்து ஏதிலிகளை காக்கக்கோரி சென்னை UNHCR அலுவலகத்தில் நாளை மனு: இயக்குநர் புகழேந்தி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாய்லாந்து ஏதிலிகளை காக்கக்கோரி சென்னை UNHCR அலுவலகத்தில் இன்று மனு: இயக்குநர் புகழேந்தி

தாய்லாந்து ஏதிலிகளுடன் “காற்றுக்கென்ன வேலி” திரைப்பட இயக்குநர் புகழேந்தி அவர்கள் மீனகம் வழியாக உரையாற்றினார். நாளை சென்னையிலுள்ள UNHCR இல் அனைத்து அமைப்பினருடன் சென்று மனு கொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் மொத்தம் எத்தனை பேர்?

281

பெண்கள் : 80

குழந்தைகள் ; 40

நிறைமாத கற்பிணி பெண்கள் : 6

நீங்களெல்லாம் எத்தனை வருடங்களாக இருந்தவர்கள் அங்கு?

நான் இங்கு வந்து நான்கு வருடங்கள். இங்கு பிடிபட்டவர்கள் பல மாதிரி இருக்கிறார்கள் மூன்று வருடங்களிலிருந்து ஏழு வருடங்கள் வரை இருக்கிறார்கள்.

எந்த சிறையில் இருக்கிறார்கள்?

பாங்கொங் சீலம் என்ற இடத்திலுள்ள ஐடிபி சிறைச்சாலை

புகழேந்தி : சரி விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவதற்கான போராட்டம் நேற்று தான் முடிவடைந்தது. சென்னையில் ஐநாவிற்கான அகதிகள் அமைப்பு பெசன் நகரில் இருக்கின்றது. அங்கு மூன்று மணியளவில் சென்று முதலில் ஒரு கடிதம் கொடுக்கப்போகின்றோம். கொடுத்த பின்னர் பத்திரிகைகளைச் சந்தித்து பேசலாம் என்றிருக்கின்றோம்.

அதன் பின்னர் போராட்டம் செய்வதற்கு மூன்று நாட்களாவது அவகாசம் வேண்டும். காவற்துறையினரிடம் ஐந்து நாட்களிற்கு முன்னர் கேட்டால் தான் அனுமதி கொடுப்பார்கள்.

ஏதிலி ; அய்யா முக்கியமாக இதில் கற்பிணி பெண்கள் 6 பேர் இருக்கிறார்கள்.

புகழேந்தி : முதியவர்கள் இருக்கிறார்களா?

ஆமாம். முதியவர்கள், இறுதிப் போரில் கை முறிந்து எலும்பில்லாம் இருப்பவர்கள் தலையில் குண்டு துளைத்தவர்கள், உளநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்ளிட்டவர்கள் என்ன செய்வதெண்டு தெரியாதிருக்கிறார்கள். மருந்து இல்லை சாப்பாடு இல்லை. குளிக்க ஏன் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை.

புகழேந்தி : சித்திரவதைகள் ஏதேனும் இருக்கின்றதா?

கையடக்க தொலைபேசி யாரும் வைச்சிருக்க முடியாது. படுப்பதற்கான இடம் போதாது. அரைவாசிப்பேர் பகல் நித்திரையும் அரைவாசிப்பேர் இரவு நித்திரையும் தான் கொள்கிறார்கள்.

புகழேந்தி : கடிதம் கொடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்து உங்களிற்கு நடக்கும் சித்திரவதைகளை தெரிவித்துவிட்டு காவற்துறை அனுமதியளித்தவுடன் போராட்டத்தையும் செய்கிறேன்.

ஏதிலி : நன்றி அய்யா. எங்களின் இந்த ஏதிலிகளிற்காக நீங்கள் தமிழனாக இருந்தாலும் உங்களை நான் வரவேற்கின்றேன். ஏனென்றால், விடுதலைக்காக யார் குரல் கொடுக்கிறார்களோ அவர்கள் தான் இப்ப எங்களிற்கு தெய்வம் அய்யா. எங்களிற்காக குரல் கொடுக்கிறாதிற்கு தாய்லாந்தில் அய்யா எந்தவொரு அமைப்பும் இல்லை. அழுகை வருகிறது எனக்கு. குழந்தைகளிற்கு பால் மா இல்லை. கோழிகளின் கீழ் காலின் தண்ணீர் தான் குழந்தைகளிற்கு பால் மாவாக கொடுக்கப்படுகிறது.

புகழேந்தி: கைது நடவடிக்கை ஆரம்பித்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டது? எத்தனை நாட்கள் சிறையில் இருக்கின்றீர்கள்?

ஏதிலி : கைது நடவடிக்கை ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. ஆனால், இந்த வருடம் 11.10.2010 இல் ஒரே தடவை 136 ஏதிலிகளை கைது செய்திருக்கிறார்கள். கனேடிய சிறிலங்கா அரசாங்கத்தின் உதவியுடனேயே இந்த கைது நடைபெற்றிருக்கின்றது. எப்படியென்றால், கைது செய்ய வந்த இடத்தில் ஆறு வெள்ளைக்காரர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களை குடிவரவு திணைக்களம் கனேடிய காவற்துறை என்று சொல்லியிருக்கிறார்கள். கனேடிய காவற்துறை தாய்லாந்தில் இருப்பவர்களை கைது செய்ய சட்டமில்லை. இல்லையென்றால் அவர்கள் இன்ரப்போல் என்கின்ற சர்வதேச காவற்துறையாக இருக்கவேண்டும். மற்றது வந்தவர்களில் தமிழர்களும் இருக்கிறார்கள். கைது செய்ததை UN க்கு அறிவிக்கப்போகிறோம் என்று சொல்ல அதில் வந்தவர் தமிழில் உங்களை கைது செய்யச்சொல்லி சொன்னதே UN தான் என்று சொல்கிறார். உண்மையில் இது UN ஆல் சொல்லப்பட்டதா என்பது எங்களிர்கு தெரியாது.

உண்மையில் சிறிலங்கா அரசாங்கமும் இருக்கின்றது. இங்கு அரசாங்கத்திற்கு சார்பாக செய்திகள் வெளியிடப்படுகின்றன. உதாரணத்திற்கு சொல்வதென்றால் தமிழ்வின் அரசாங்கத்திற்கு சார்பான செய்திகளை வெளியிடுகிறதே தவிர ஏதிலிகள் தொடர்பான செய்திகளை வெளியிடுவதில்லை. மற்றது சங்கதிக்கும் நிறைய செய்திகள் அனுப்பியிருக்கின்றோம். அவர்களும் வெளியிடவில்லை. நிச்சயமாக சங்கதி எங்களிற்கு விரோதமாக செயற்படுகின்றது. தமிழ்வின் என்று போடுவதற்கு சிங்களவின் என்று போடலாம். நாங்கள் என்ன இயக்கம் எந்த கட்சி எதுவுமில்லாத ஏதிலிகள் எங்களின் செய்திகளை வெளியிடுவதில் என்ன இருக்கின்றது?

புகழேந்தி ; உங்களை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்றோ விடுதலைப்புலிகளென்றோ அரசாங்கம் சந்தேகிக்கின்றதா?

ஏதிலி ; அய்யா நான் ஒரு தமிழன்.

புகழேந்தி : இதை நாங்கள் எங்கள் பிரச்சனையாக எடுத்து என்ன செய்ய முடியுமோ அதை செய்கின்றோம்.

ஏதிலி : நன்றி அய்யா உங்களை நான் வரவேற்கின்றேன்.

http://meenakam.com/2010/10/20/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.