Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடுப்புக்காவலில் உள்ள போராளிகளின் விபரங்கள் இணையத்தில்: இன்று வெளியிடுகிறது சிறிலங்கா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தடுப்புக்காவலில் உள்ள போராளிகளின் விபரங்கள் இணையத்தில்: இன்று வெளியிடுகிறது சிறிலங்கா

[ சனி, 23.10.2010 03:01 GMT ]

தடுப்பு முகாம்கள், சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் பற்றிய விபரங்கள் இன்று இணையத்தில் வெளியிப்படவுள்ளன.

தடுப்புக்காவலில் உள்ள போராளிகளின் விபரங்கள் இணையத்தில்: இன்று வெளியிடுகிறது சிறிலங்கா

http://www.puthinappalakai.org/view.php?20101023102338

  • கருத்துக்கள உறவுகள்

தடுப்புக்காவலில் உள்ள போராளிகளின் விபரங்கள் - இணையத்தில் இன்று வெளியிடுகிறது சிறிலங்கா

[ சனிக்கிழமை, 23 ஒக்ரோபர் 2010, 03:01 GMT ] [ யாழ்ப்பாணச் செய்தியாளர் ]

தடுப்பு முகாம்கள், சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் பற்றிய விபரங்கள் இன்று இணையத்தில் வெளியிப்படவுள்ளதாக சிறிலங்காவின் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிவின் இணையத்தளத்தை நேற்று யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டியூ.குணசேகர ஆரம்பித்து வைத்தார்.

யாழ்.அரசசெயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் டியூ.குணச்சேகர, “இன்று சனிக்கிழமை தொடக்கம் இணையத்தளத்தில் தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள், புனர்வாழ்வு பெறுவார், சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளின் விபரங்களைப் பார்வையிட முடியும்“ என்று தெரிவித்தார்.

http://www.bcgrsrilanka.com என்ற இணையத்தளத்திலேயே இந்த விபரங்கள் வெளியிடப்படவுள்ளதாக அவர் அறிவித்தார்.

தடுப்புமுகாம்கள், சிறைச்சாலைகளில் உள்ள தமிழர்களின் விபரங்களை வெளியிடுமாறு சிறிலங்கா அரசுக்கு அண்மைக்காலமாக அழுத்தங்கள் அதிகரித்து வந்த நிலையலேயே அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இதனிடையே, நேற்று யாழ்.செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசியபோது. அரசியல் கைதிகளின் விபரமும் இந்த இணையத்தில் வெளியிடப்படவுள்ளதாக அமைச்சர் டியூ.குணசேகர கூறியிருந்தார்.

ஆனால் சில நாட்களுக்கு முன்னர் நடாளுமன்றத்தில் அவர் பேசும் போது சிறிலங்காவில் சிறைகளில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடையவர்கள் தான் உள்ளனர் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.