Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டுப்பாடல்கள் -கிழக்கிலங்கையின் பொக்கிஷம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுப்பாடல்கள் -கிழக்கிலங்கையின் பொக்கிஷம்

பண்டு தொட்டு வாழ்ந்து மறைந்த மனிதர்களிடையே காணப்பட்ட பண்பாடு, வாழ்க்கை முறைமைகள் என்பன அவர்களது இலக்கியம் தோன்ற வழி வகுத்தது எனலாம். அவ்வக் காலங்களில் வாழ்ந்தவர்களது வாழ்க்கைப் பண்புகள் அவற்றைப் பிரதிபலிக்கின்றன. அப்பொழுது அவ்விலக்கியங்கள் செய்யுள் வடிவிலேயே அமைந்திருந்தன. வள்ளுவர் காலத்திலும் செய்யுள் வடிவிலேயே அவை இருந்தமையினால் சாதாரண படிப்பில்லாத மக்கள் அவற்றை விளங்கிக்கொள்ளக் கூடினமாகக் காணப்பட்டது.

படித்தறிந்த பண்டிதர்கள் மாத்திரம்தான் அவற்றைப் புரிந்துகொள்ள முடியும். அவற்றைப் ‘பண்டிதர் இலக்கியம்’ என்று சொன்னால் கூட பிழையிருக்காது. ஏனைய மக்கள் அவற்றைப் படித்து அறிந்து அதன் தன்மைகளைப் புரிந்துகொள்வதாயிருந்தால் அக்காலத்து அகராதியைப் புரட்ட வேண்டியதுதான்.

இதன் காரணமாக படித்தவர்கள் ஒரு புறமும், கல்வியறிவற்ற பாமரர்கள் மறுபுறமுமாக இயங்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதன் பயனாகவே வாய்மொழி இலக்கியமான கிராமியப் பாடல்கள் அல்லது நாட்டுப் பாடல்கள் எழலாயின. காரணம் மக்கள் மனங்களில் தோன்றக் கூடிய கருத்துக்களை கவிதைகளாக “Porlk Songs” அமைத்துப் பாடி மகிழ்ந்தனர். நாட்டாரிலக்கியத்தில் பல ரகங்கள் காணப்பட்டன. நாட்டுப் பாடல்கள் கிராமியக் கதைகள், நாட்டுக் கூத்துக்கள், நடனங்கள், நாடகங்கள் எனப் பல வகை.

இவற்றில் நாட்டுப் பாடல்கள் இனிமை பயப்பன; கவிதை நயம் கொண்டன, கிராமிய மக்களாலும் அவற்றில் இலக்கியச் சுவையைப் பிழிந்து பருகத்தரும் பாரசம் கொண்ட கவிதைகள் காணப்படுகின்றன. அவற்றில் கேலியும் கிண்டலும் மிளிர்கின்றன. சோகமும் வீரமும் பிரதிபலிக்கின்றன. காதலும் மோதலும் காணப்படுகின்றன; ஏன் கிலேடைகள் கூட உள்ளன.

நாட்டுப் பாடல்கள் எப்பொழுது தோன்றின. எப்படித் தோன்றின. கவிஞர்கள் யார், பாடகர்கள் யார் என்று பார்த்தால் விடை காணுவது கடினமாக இருக்கிறது. கிழக்கிலங்கையில் நாட்டுப் பாடல்கள் பிரபல்யம் பெற்றுத் திகழ்ந்திருக்கிறது. பாடப்பட்டிருக்கிறது என்பதை அறிய முடியுமாக இருந்தாலும், யாரால் பாடப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இவை வாய் மொழி இலக்கியமாக காணப்படுவதனால் கவிஞர்கள் பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை. நாட்டுப் பாடல்களில் சங்கப் பாடல்களை ஒத்த அதன் கருத்துக்களைப் பிரதிபலிக்கக் கூடிய அல்லது ஒரே நிகழ்ச்சியைச் சித்திரிக்கக் கூடிய பாடல்கள் இடம்பெற்றிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் பார்க்கும் போது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அவை வழக்கில் இருந்திருக்கிறது அல்லது அதற்குப் பின்னர் அவற்றைப் பின்பற்றிப் பாடப் பட்டவையாக இருக்க வேண்டும் என்றும் எண்ண இடம் இருக்கிறது. இக்கட்டுரைத் தொடரின் இறுதியில் சங்கப் பாடல்களையும் சேர்த்திருக்கிறேன் வாசகர்கள் தொடர்ந்து இதனைப் படித்து வந்தால் கண்டு பிடித்துவிடலாம்.

எப்படியிருந்த போதும் இத்தகைய கிராமியப் பாடல்கள் அல்லது நாட்டுப் பாடல்கள் நாட்டார் இலக்கியம் என எப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டாலும் ஒரே விடயத்தை உள்ளடக்கியதாகவே உள்ளது.

அநேகமாக இவை கிழக்கிலங்கையில் வாழ்ந்த மக்கள் மத்தியில் எழுந்தவை என்று ஏற்கனவே குறிப்பிட்டேன். முக்கியமாக தமிழ் முஸ்லிம் மக்களிடையே பிறந்து வளர்ந்து இன்றும் இலக்கிய ஆய்வாளர்களாலும், ஆர்வலர்களாலும் போற்றப்படுகின்றன. முக்கியமாக தமிழ் முஸ்லிம் மக்களிடையே காணப்பட்ட வாழ்க்கை முறை இவற்றைப் பிரதிபலிக்கின்றன. இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழும் முஸ்லிம்களிடையே இவை காணப்படாமை ஓரு குறிப்பிட்ட வலையத்துக்குள்ளேயே தோன்றியதே எனலாம். ஏனைய பகுதிகளில் அவை பாடப்படுவது, போற்றப்படுவது என்னவோ உண்மையாயினும் அவை ஆவணப்படுத்தப்படவோ, அலசப்படவோ இல்லை.

அதற்கு முஸ்லிம்கள் இலங்கையிலேயே செறிந்து வாழ்வது கிழக்கிலங்கையில் என்பது ஒரு காரணமாகவும் இருக்கலாம். ஏனைய பகுதிகளில் காலப்பின மக்களாக அதாவது சிங்களம், தமிழர் என ஒன்றாகக் கலந்து வாழ்வதால் அத்தகைய இலக்கியம் எழ சந்தர்ப்பம் அற்றுப் போனது துரதிஷ்டமே.

பொதுவாக நாட்டுப் பாடல்கள் குளக்கரை, ஆற்றங் கரை, மணற் கரை, கிணற்றடி, மரத்தடி என பல பொது இடங்களில் பாடப் பட்டிருப்பதை அறிய முடிகிறது.

நாட்டுப் பாடல் என்றவுடன் முதலில் மனங்களை மகிழ்விப்பது களவொழுக்கம் அதாவது காதல் ஒழுக்கம்.

காதல் இல்லாது வாழ்க்கை இல்லை. இந்தக் காதல் என்பதுபேச முடியாத ஜீவனுக்கும் பேசப்படக் கூடிய மனிதனுக்கும் பொதுவானது.

‘காதல் கொள்ளடா

கிழவிமேல் காதல் கொள்ளடா

அவ்வைக் கிழவிமேல்

காதல் கொள்ளடா’

என்று ஒரு பாடல். இது ஒளவையார் மீது பற்றுக் கொள்ளச் சொல்வதாய் அமைகிறது.

‘காதல் இல்லாது

ஆனந்தம் ஏது

கனியாத பருவம்

இனிமை தராது’

பூத்துக் குலுங்கும் பருவத்தில் காதல் வராவிட்டால் இனிமை இருக்காது காதல் இல்லாத வாழ்க்கையில் ஆனந்தம் இல்லவே இல்லை என்பதை உணர்த்தும் ஒரு பாடல்,

‘காதல் காதல் காதல்

காதல் போயில்

சாதல் சாதல் சாதல்’

என்று ஒரு பாரதியார் பாடல்

இதைவிட காதலின் ஆழத்தைக் கூறும் பாடல்கள் உள்ளன. அவற்றை வேரோர் தலைப்பின் கீழ் நோக்கலாம். தற்போதைக்கு நாட்டுக்குள் நுழைந்து நாட்டுப்புற மக்களின் காதல் வாழ்க்கைப் பாடல்களைப் பார்க்கலாம.

தண்ணீர் துறை தனிலே தன் மனங்கவர்ந்த மன்மதனை சந்தித்து மனம் விட்டுப்பேச வேண்டும் குழாவ வேண்டும், காதல் மொழி பேசி கனிவாய் முத்திட வேண்டும் என்றெல்லாம் கற்பனைக் களஞ்சியத்தை மனதுக்குள் அடக்கி வைத்துக்கொண்டு வீட்டில் தன் தாயை சாக்குப் போக்குச் சொல்லி ஏமாற்றிவிட்டு வெளியில் வரக் காரணம் தேடிக்கொண்டாள் தலைவி. பெண் பிள்ளைகளின் விடயத்தில் பெற்றோர் எப்பொழுதும் ஒரு கண்ணாயிருப்பர் என்பது அவளுக்குத் தெரியாது. என்றாலும், கன்னிப் பருவம் கனதூரம் சிந்திப்பதற்கு சிந்தனையில்லை அதிரடியாய் காரியத்தில் இறங்கிவிட்டாள். தன் எண்ணம் கொண்ட காரணத்தைத் தன் தாயிடம் சொல்லி அவளின் சம்மதத்தைப் பெற்று விடுகிறாள்.

‘ஆற்றுக்கு அக்கரையால்

ஆசை குழல் ஊதுதம்மா

தங்குதில்லை தரிக்குதில்லை

நான் தண்ணிக்குப் போய் வரட்டா’

என்று கேட்கிறாள். தலைவன் அக்கரையில் இருக்கிறான் போலும், அவன் ஏதோ சைகை செய்திருக்க வேண்டும். அதனால்தான் அவள் ஆசை குழல் ஊதுதம்மா என்றும், சுணங்க முடியாது அவசரமாய்ப் போக வேண்டும் எனவும் பதைக்கிறாள்.

இங்கே ‘ஆசை குழல்’ என்று வந்தது ஒரு வேளை ‘ஆலை குழல்’ ஊதுதம்மா என்றும் இருக்கலாம். தவறுதலாக கவிதையில் பிழை ஏற்பட்டிருக்கலாம் ஏனெனில் அக்காலம் ஆலைகளில் மணி ஒலிப்பதற்குப் பதிலாக ஆலையில் வேலை ஆரம்பிக்கும் போதும், இடைவேளையின் போதும், பின்னர் வேலை முடியும் போதும் நேரத்தை அறிவிப்பதற்கு ஆலையில் சங்குமுழங்குவதும், அல்லது ஊது குழல் ஊதப்படுவது வழக்கம். அப்படியாயின் அதனால்தானோ என்னவோ நேரம் சென்று விட்டதாகத் துடிக்கிறாள்.

மகளின் அவசரம் புரியாதா அவளைப் பெற்றெடுத்த தாயிக்கு? அந்தத் தாயும் அவள் வயதைத் தாண்டியவள் தானே! அதனால் -

‘தண்ணிக்குப் போ மகளே

தரியாமல் வா மகளே!

கண்ணுக்கு உயர்ந்தவரை

கடைக் கண்ணாலும் பாராதே கா’

என்று அறிவுரை கூறி அனுமதி வழங்குகின்றாள். ‘நீ தண்ணீர் கொண்டு வரப் போவதில் ஒன்றும் பிரச்சினை இல்லை, ஆனால் நிற்காமல் சுணங்காமல் உடனே வந்து விடு கண்ணுக்குத் தெரிபடக் கூடியவர்களைக் கடைக்கண்ணாலும் பார்த்துவிடாதே’ என்று அறிவுரை பகருகின்றாள்.

vதன்னிக் குடமெடுத்து

தனி வழியே போற கண்ணே

கவிதையில் வரும் “கா” என்ற சொல் ஒரு மரியாதைக்காக, அல்லது அக்கால பேச்சு வழக்காக இருக்கலாம். இப்படியான “கா” வை பல பாடல்கனில் காண முடிகிறது.

மறுகணம்-

கன்னியவள் பொற்குடம் ஏந்தி நடை பயில, இடை நடைக்கேற்ப தாளமிட, அழகாக நடந்து வரும் அன்ன நடையாளை தூரத்து நின்றவன் துணிவோடு ரசித்த வண்ணம் அவள் கிட்ட வருமட்டும் காத்திருந்தான். இதோ வந்து விட்டாள் அவள் என் செய்வாள்.

“அன்புக் களஞ்சியமே

அழகொழுகும் சித்திரமே

கற்புக்கணிகலமே உன்னைக்

காண வென்று காத்திருந்தேன்”

எனத் தனது ஆதங்கத்தையும்,

“காத்திருந்தால் வருவேன்

நிலாவினில் பாங்கியுடன்”

என்று பாரதியாரின் காத்து நிற்றல் போல சொல்லி வைத்தான்.

அது மாத்திரமா?

“அந்திபட்ட நேரம் ஆறு மணி வேளையில் `

அரண்ட நடை நடந்து, மலர்ந்த துகிலுடுத்தி நடந்த

நடையழகை நான்

நாள் முழுதும் பார்த்திருந்தேன்”

என்று கூறுகின்றான்.

தலைவிக்கு நாணம் மேனியிலே சீரோடியது தலை கவிழ்ந்தாள், புன் முறுவல் பூத்தவளாய் பூமி தனில் பெரு விரலால் Xறலுற்றாள். பேசா மடந்தையிடம் கேட்கின்றான் இவ்வாறு,

“வாழைப் பழமே

வலது கையிற் சர்க்கரையே

லங்கராம்பே உன்னை

என்ன சொல்லிக் கூப்பிடட்டும்?”

“மாமி மகளே

மருதங்கினி வங்கிசமே

ஏலங்காராம்பே உன்னை

என்ன சொல்லிக் கூப்பிடட்டும்?”

என்று திரும்பத் திரும்பக் கேட்கின்றான். அத்தை மகளானாலும் பெற்றவள் வேறன்றோ, துணிந்து பேச அவனுக்குத் திராணியில்லை. அவளை எப்படி அழைப்பது? மாமி மகள்தான் மதினி என்பதா? மச்சாள் என்பதா, அல்லது மச்சி என்பதா மச்சின் என்பதா ஒன்றும் புரியாமல், “உன்னை என்ன சொல்லி நான் அழைப்பேன்?” எனக் கேட்கின்றான். இஸ்லாத்தில் சாதித்தரங்கள் இல்லாததால் அவள் கிராமத்தில் மதிப்பும் மரியாதையும் உள்ள குடும்பத்துப் பெண் போலும். அதனால்தான் “மருதங்கினி வங்கிசமே” என உவமையோடு உவக்கின்றான். ஏலங்கராம்பே என்கின்றான் சக்கரை, வாழைப்பழம் என்கின்றான். அப்பப்பா எத்தனை ஒப்பீடுகள். அது மாத்திரமா?

“தண்ணிக் குடமெடுத்து

தனி வழியே போற கண்ணே

தண்ணி குடத்தினுள்ளே

தழும்புதடி என் மனசு”

என்று பாடுகின்றான். இதே கவிதையை அடியொட்டி திரை இசைப்பாடல் ஒன்றையும் ஆக்கியிரு க்கிறார்கள். இதோ அந்தப் பாடல்

“தண்ணி குடம் கக்கத்திலே கண்ணம்மா

தாகத்துக்கு தண்ணி தந்தால் என்னம்மா?”

என்று அவன் கெஞ்ச

“தண்ணி குடம் கக்கத்திலே செல்லையா

கண்டவங்க தாகத்துக்கு இல்லையா”

என்று அவள் மறுத்துரைக்க காதல் நாடகம் அரங்கேறுகிறது. இனி முன்னைய பாடலைப் பார்ப்போம்.

அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் இடை அசைவுக்கேற்ப குடத்திலுள்ள தண்cரும் சலக்... சலக்... எனத் ததும்புகிறது. அது போல தனது மனசும் தழும்புகிறது. ஏக்கம் கொள்கிறது என்பதை உணர்த்துகின்றான். போதாக் குறைக்கு எங்கிருந்தோ அவனுக்குத் தாகம் வேறு வந்து விடுகிறது. அது அவளை வலிய வம்புக்கு இழுக்க வேண்டும், பேச வேண்டும் என்பதற்காக ஏற்படுகின்ற போலித்தாகம்.

“சட்டை போட்டு பொட்டெழுதி தண்ணி கொண்டு போற கண்டார்

சட்டை போட்ட கையாலே

கொஞ்சந் தண்ணி தா கண்மணியே” என்கிறான். சட்டை போடாமல் வெறும் மேனியுடனா வந்திருப்பாள்? இல்லை வெறும் பேச்சுக்காகச் சொல்லுகின்றான். பொட்டிட்ட சட்டை போட்டவள் என்பதால் அந்தக் கையால் தண்cர் வேண்டும் என்கிறான்.

இதே கருத்துடன் இன்னொரு பாடலும் உள்ளது

“சட்டை போட்டு மார் பிதுங்கி

தண்ணி சுமக்கும் மச்சி- உன்

சட்டை போட்ட கையாலே

தண்ணி தந்தால் ஆகாதா?”

அவள் அணிந்திருக்கும் சட்டை மிகவும் இறுக்கமாக இருக்க வேண்டும் அதனால் மார் பிதுங்கியிருக்கிறது என்று சொல்லுகின்றான்.

“ஓடையிலே போற தண்ணி

தும்பி விழும் தூசி விழும்

வீட்டுக்கு வாங்க மச்சான்

வெந்த தண்ணி நான் தருவேன்”

அப்பாடா இப்பொழுதுதான் அவள் வாய் திறக்கிறாள். “இது ஓடையிலே ஓடுகின்ற தண்cர், அதிலே தூசி விழுந்திருக்கும், தும்பி விழுந்திருக்கும், அசுத்தப்பட்டு இருக்கும் பருகுவதற்கு ஆகாது வீட்டுக்கு வாருங்கள் நான் வெந்த தண்c தருகிறேன்” என்று சொல்லுகின்றாள். இங்கு ‘வெந்த தண்ணி’ என்று சொன்னது சுட்டு ஆநிய `ராக இருக்க வேண்டும். வெந்`ர் என்பது பொருள் பாருங்கள். அக்காலத்திலேயே சுகாதாரம் பேணப்பட்டிருக்கிறது.

மக்கள் கொதித்தாறுய `ரைத்தான் பருகியிருக்கிறார்கள் என்பது இதன் மூலம் புலனாகிறது.

ஆம் அவள் சம்மதித்து விட்டாள், எப்படி அவள் வீட்டுக்குச் செல்வது என சிந்தனை செய்து பார்த்தான். சிந்தையிலே ஒன்றும் தட்டுப்படவில்லை. பின் தலைவியைக் கேட்கிறான்.

“உந்தன் வீடு எங்குளதோ நானநியேன் எவ்வாறு வந்திடுவேன் வழிவேறு தெரியாதே!”

எனத் திண்டாடுகிறான்.

வழியைச் சொல்லுகிறாள். குநிப்புகளையும் முன்வைக்கிறாள் கூடவே உள்ள தடைகளையும் சொல்லி வைக்கிறாள் “அப்பாடா அப்படியா?” என வியக்கின்றான்,

“` சொல்வதைப் பார்த்தால்,..”

“சுற்நிவர வேலி

சுழல வர முள் வேலி

எங்கும் ஒரே வேலி

நான் எங்கால வந்திடட்டும்”

எனக் குழப்பிப் போகின்றான். அவள் குடியிருக்கும் வீட்டைச் சுற்நிவர முள்வேலி போடப் பட்டிருப்பதால்” எவ்வாறு வந்திடலாம்?” என வினவுகின்றான்.

அதற்கவள், வழியைச் சொல்லிக் கொடுத்து அவன் அவளைச் சந்திப்பதற்கு காரணமும் சொல்லிக் கொடுக்கின்றாள் எவ்வாறு?

வெத்திலையைக் கைப்பிடித்து

வெறும் பிளவை வாயிற்போட்டு

சுண்ணாம்பு தேடி `ங்க

சுற்நி வாங்க மச்சானே!” என்கிறாள்.

அதாவது வெறும் வெற்நிலையைக் கையில் பிடித்து சுண்ணாம்பு தேடும் சாக்கில் வேலியைச் சுற்நி வாருங்கள் இலகுவில் வந்து விடலாம் என்பதனைச் சொல்ல வைக்கிறாள், என்றாலும் அவனுக்கு உள்ளூரப் பயம். அவன் கேள்விப் பட்டதில் அவளது அண்ணன் மார் பொல்லாதவர்களாம். அவர்களது கைகனில் அகப்பட்டுவிட்டால் தன் கதி அதோகதிதான் என்று எண்ணி

“தெருவாலே போக வொண்ணா

தேன் போல மணக்கிறது

உறவாட நான் வருவேன்

உங்கள அண்ணன் மார்

காவலாமே!”

என்று அவனிடம் வியப்புடன் கேட்கின்றான்.

காதலுக்கு துணிச்சல் ஒரு கேடயம். எத்தனை எதிர்ப்பு அம்புகள் வந்த போதும் அவற்றைத் துணவுக் கேடயத்தின் மூலம் தடுத்திடலாம் என்பது துணவு கொண்ட காதலர்க்கு ஒரு தைரியம். இதனை அவள் நன்கு அநிவாள். அதனால் அவனை வீர மூட்டுகின்றாள். எத்தகைய கோழையும் அக்கணத்தில் வீறுகொண்டு எழுந்திடுவான் அதனால் அவள்,

“காவலரனோ மச்சான்

கள்ளனுக்கு முள்ளரனோ

வேலியரனோ வேணுமென்ற

கள்ளனுக்கு

கடப்படியில் வந்து நின்று காளை கனைக்கு மென்றால்

எங்கிருந்த போதும் நாகு

எழுந்து வர மாட்டாதோ’

என்று பாடுகின்றாள்.

துணிவு கொண்ட கள்வனுக்கு தன்னை உரிமை கொள்ள உள்ளவ னுக்கு காவல் அரண் ஒன்றும் அவ்வ ளவு பெரிய தடையல்ல கல்லரண் முள்லரண் எல்லாம் ஒரு தடையல்ல தைரியமாய் வந்து விடு எப்படி?

“ஊரு மடங்கின பின்

ஒரு சாமமாயின பின்

வாப்பா உறங்கினபின்

வந்தழைத்தால் நான் வருவேன்”

“ஊரு சனம் அடங்கிய பின்னால் ஒரு சாமம் கடந்த பின்னர் மெதுவாக வந்துவிடு அப்பொழுது வாப்பா ஆழ்ந்த நித்திரையில் இருப்பார் இந்த நேரம் பார்த்து காளை கனைப்பது போல் கனைத்து என்னை அழைத்து விடு அப்பொழுது பசு வெளியே வருவது போல் நான் வருவேன்” என்று என்ன மாதிரியான உபாயங்களைச் சொல்லிக் கொடுக்கிறாள்.

அதேவேளை தன்னை அந்தி மயங்கும் வேளையிலே சந்திப்பதாயிருந்தால் கிணற்றடிக்கு வந்து விடுங்கள் என்று ஊருக்கு வெளியே உள்ள சந்தன மரத்தை அடையாளமாகச் சொல்லுகின்றார்.

“சந்தன மரத்தை மச்சான்

சந்திக்க வேண்டு மென்றால்

பூவடிக்கு மச்சான்

பொழுது பட வந்திடுங்கோ”

என்று சொல்லுகின்றாள். “இரவிலே வருவதாயிருந்தால் தான் சொன்ன குறிப்புகளை வைத்து வாப்பா உறங்கினதற்குப் பின்னால் வந்து விடுங்கள்” என்கிறாள். அண்ணன் மார் ஒரு புறம் பொல்லாதவர்கள், அதனைவிட வாப்பா வம்புக்காரர் போல் தெரிகிறது. வாப்பா கள்ளக் காதலை அறிந்தால் வெட்டிப் போட மாட்டாரா என்ன?

இரவு வருவதென்றால் காதலர்களுக்கு ஒருபுறம் மகிழ்ச்சி மறுபுறம் வேதனைதான். ஊண் செல்லாது உறக்கம் கொள்ளாது கண் துஞ்சாது கண்கள் கனவு காணத் தொடங்கிவிடும், தனக்குள் சிரித்து தனக்குள் பேசிக் கொள்ளும் ஒரு வகை உணர்வு ஏற்பட்டு விடும். கண்ணுறங்கினாலும் பல வண்ண வண்ணக் கனவுகள் வந்து போகும். இது தவிர்க்க முடியாத ஒன்று.

தலைவனும், தலைவியும், கனவு காணத் தொடங்கி விடுகின்றனர். தலைவியின் வதனம் தெளிந்த நீர் போல அவன் கண்களுக்குத் தெரிகிறது. அவளது வட்ட முகம், வளைந்த நெற்றி, முத்துப் போன்ற பல் வரிசை, சங்குக்களுத்து இவ்வாறெல்லாம் அங்க லட்சணங்கள் தோன்றி மறையும் அவன் பாடுகின்றான்.

“குஞ்சி முகமும் உன்ற

கூர் விழுந்த முக்காடும்

நெற்றி இளம் பிறையும்

என்ர நித்திரையில் தோணுதுகா”

இங்கே அவள் முகாடிட்டு முஸ்லிம் பண்பாட்டைக் காப்பாற்றி இருக்கிறாள் என்பதை விளக்குகிறது அந்தப் பாடல்.

அவளும் சும்மா இருப்பாளா? இப்படிப் பாட்டுக்குப் பாடெடுக்கிறாள்.

“நித்திரைக் கண்ணிலேயும்

நினைவிலையும் தோணுறது

கலிமா விரலும் மச்சான்

கல் பதித்த மோதிரமும்”

தன் தலைவனின் அழகிய உருவம் கண்முன் தோன்றுகிறது. அவன் கலிமா விரலும் அதில் அணிந்திருக்கும் கல்பதித்த மோதிரமும் கூட தெரிகிறது.

இங்கே “கலிமா விரல்” என்று சொல்லப்படுவது பெரு விரலுக்கு அடுத்த விரல். பொதுவாக கலிமா விரலில் எவரும் மோதிரம் அணிவதில்லை. நடுவிரலில் அல்லது அதற்கு அடுத்த விரலில்தான் அணிவது வழக்கம். இங்கே வரக்கூடிய தலைவன் அந்த விரலில் மோதிரம் அணிந்திருந்தானோ என்னவோ.

தலைவனுக்கு ஆசைகள் பல. தனது தலைவியிடம் கேட்டுப் பெறுவதில் என்ன சுகம், என்ன சுகம்...? தன் காதலியைத் தாலிக் கொடி என்கிறான், தாய் மாமன் பெற்ற கண்ணே என்கிறான், மாமிக்கு ஒரு மகள் என்பதால் தனது வேண்டுதலை மறுத்து விடாதே என்கிறான் என்ன வேண்டுதல்?

“தாலிக் கொடியே எண்ட

தாய் மாமன் ஈண்ட கண்ணே

மாமிக்கொரு மகளே

மச்சி மறுதலை பண்ணாதே கா..”

என்று அவள் தலையில் ஐஸ் வைத்து விட்டு

“கன்னி விராலே எண்ட

கற்பழியா நங்கணமே

தங்க முலாக் கோப்பையாலே

மச்சி தானருந்தத் தந்தாலென்ன”

என்றும் கேட்கின்றான். கற்பைக்காத்து நிற்கும் கன்னியே உனது கரங்களால் பிடித்து தங்க முலாம் பூசப்பட்ட கோப்பையாலே எனக்குத் தண்ணீர் தந்து, தான் அருந்தச் செய்வாயா? என்று கேட்கின்றான்.

அவளோ, “தரலாம், ஆனால் தங்கமுலாக் கோப்பையாலே தண்ணீர் தந்தால் தனது மானம் மரியாதை கெட்டு விடுமோ என்று அஞ்சுகிறேன்” அதனால்,

“தங்க முலாக் கோப்பையாலே மச்சான்

தானருந்தத் தந்தேனென்றால்

மானம் எனும் கண்ணாடி

மங்கிடுமோ நானறியேன்”

என்று கேட்டுகிறாள்.

“அப்படியேதும் நடந்திடாது பயப்படாதே, நான் உன்னை எனது மனைவியாக்கியே தீருவேன்” என்று தைரிய மூட்டுகின்றான். அவளது சந்தேகத்தைப் போக்குகின்றான்.

“கைவிடுவேன் என்று சொல்லி

கவலைப்பட வேணாங்கிளி

அல்லார் அறிய உன்னை

யடயாட்டிக் காட்டுப் பள்ளி”

மேலும் சொல்லுகின்றான் ஊரார் அறிய உன்னை மணம் முடித்துக் கொள்வேன் அப்படி உன்னை அடைய முடியாவிட்டால் உயிரைப் போக்கிக் கொள்வேன் என்கிறான். இங்கே காட்டுப்பள்ளி என்ற சொல் அதனைத்தான் உணர்த்துகிறது. ‘காட்டுப்பள்ளி’ என்பதை “பள்ளிக்காடு” என்று கொள்ள வேண்டும். ஏனென்றால் மனிதன் மரணித்ததன் பின்னால் பள்ளியை +qநியிருக்கும், அல்லது பள்ளிவாசலுக்குச் சொந்தமான காட்டில்தான் கொண்டு சென்று அடக்கம் செய்வார்கள். இப்பொழுதெல்லாம் பள்ளிக்காடு என்று எங்குமில்லை மையவாடிகள் எல்லாம் பூஞ்சோலையாகப் பராமரிக்கப்படுகின்றன.

தலைவனின் வர்ணணைகளைச் சொல்வதாயிருந்தாள் அவனது அழகையும், அறிவையும், வீரத்தையும் தான் சொல்லிச் சொல்லி காலம் கடத்த வேண்டும். ஆனால் தலைவிக்கு அப்படியல்ல அவன் தலைவியை எவ்வாறெல்லாம் ரசித்து மகிழ்கின்றான் என்பதைப் பின் வரும் பாடல்கள் விளக்குகின்றன.

“வட்ட முகம் வடிவில்

உயர் மூக்கும்

கட்டு உடலும் என்னைக்

கனவிலேயும் வாட்டுது கா”

என்று புலம்புகின்றான். அது மாத்திரமல்லாம் நீண்ட நாட்களாக அவளைச் சந்திக்கவோ, காணவோ இல்லை என்ற ஏக்கந் தன்னை

“நெற்றிக்கு நேரே நிலாக்

கிளம்பி வாறது போல்

வேலிக்கு மேலே மச்சிட

வெள்ளமுகம் காண்பதெப்போ?”

என்று தவியாய்த் தவிக்கிறான் அது மாத்திரமா?

“ஆசைக்கிளியே எண்ட

ஆசியத்து உம்மாவே

ஓசைக் குரலாலே உங்க

உம்மாவைக் கூப்பிடுங்க”

மேற்கண்ட பாடல்களில் முகவடிவு, மூக்கழகு, கட்டுடல் அழகு, குரல் இனிமை என்பனவற்றைப் பாடிய தலைவன், அவளது மேனியின் அழகினையும் கூரத் தவரவில்லை.

“கொச்சிப் பழத்தை

குறுக்காலை வெட்டினாற் போல்

பச்சவடச் சேலை உண்ட

பால்முலைக்கு ஏற்றதுதான்”

ன்றும் இன்னொரு பாடலிலே

“இஞ்சி மணங்கா புள்ளை

இலாமிச்சம்வேர் மணங்கா

மஞ்சள் மணங்கா புள்ளை

பால் மணங்கா உன்சோடி முலை”

அதாவது, இஞ்சி மணக்கிறது. இலாமிச்சம் வேர் மணக்கிறது, மஞ்சல் மணக்கிறது, உன்னுடைய சோடி முலை பால் மணக்கிறது என்றும்,

“வட்ட முகவழகி

வண்டு பாடும் குழலழகி

இட்ட முலையழகி யுன்னை

என்ன சொல்லிக் கூப்பிடட்டும்?”

என்ற பாடல் மூலமாக அவளது மார்பழகையும் “வண்டு பாடும்” குழலழகி என்று கூந்தலையும் வர்ணிக்கின்றான்.

இப்படியான வருணனைகள், விரசம் கலந்த வார்த்தை யாடல்கள் என்பனவற்றை நேரம் போவதே தெரியாமல் தலைவியும், தலைவனும் பேசி மகிழ்ந்து கொண்டிருப்பதனால் பொழுது போவதே தெரியாது. பிரிந்து செல்லும் நேரம் வந்த பொழுது தலைவன்,

“தங்கக் குடமே நடை தத்தி

யொடு நங்கணமே

செக்கலுக்கு நான் வருவேன்

திண்ணையிலே காத்திருப்பாய்”

என்று உறுதி மொழி கூறி அனுப்புகின்றான். என்றாலும் பிரிய மனமின்றி அவள்,

“வந்து வழி பண்ணிடுங்கோ

வம்புக்கிடம் வையாதிங்கோ

பூத்த மரங் காய்க்கு மென்றால்

இந்தப் பூவலன்றோ கைதருகும்”

அதாவது நெடு நாட்களாக இப்படியே எவருக்கும் தெரியாமல் கூடுவதும், பிரிவதும், எதிர்காலத்தைப் பற்றித் திட்டங்கள் தீட்டுவதும், சட்டங்கள் போட்டு சரிப்பார்ப்பதுமாக இருந்தால் நாம் எவ்வாறு வாழ்க்கையில் இணைவது எனவே,

“இப்படி சந்தித்து சந்திசிரிப்பதற்கு முன்னால் என் வீட்டுக்கு வந்து முறைப்படி பெற்றோரிடம் என்னைப் பெண் கேட்டு உங்கள் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள். வம்புக்கு இடம் வைக்காமல் வந்து வகை செய்திடுங்கள். பூத்த மரம் காய்க்குமென்றால் இந்தப் பெண்ணை பெற்றோர் வேறு எவருக்கும் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். அப்பொழுது நான் உங்கள் கை நழுவிப் போய் விடுவேன்” என்று சொல்லுகின்றாள்.

களவொழுக்கத்தில் ஈடுபடும் இருவரம் நெடுநேரம் பேசிக் கதைத்துக் கொண்டு உறவாடும் வேளையிலே இடைக்கிடையே நாசுக்கான பேச்சுக்களும் இடம்பெறுவது வழக்கம். அப்பொழுது இப்படிச் சொல்லி வைப்பான் தலைவன்.

“வாழைப் பழத்தை வயிர்

நிறையத் திண்டாலும்

தேனொருகால் தின்னாட்டி

தியக்கிறல்ல என்மனது”

நன்றி :தினகரன்

எம். எம். மன்ஸ¤ர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.